About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, May 01, 2012

பதின்ம வயதில் ஒரு சின்னக் காதல் 2

அடுக்கு மல்லி இன்று லக்ஷ்மிக்கு சமர்ப்பணம்
சங்கும் புஷ்பமும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அம்மா  இருந்த இடத்திலிருந்து எழுந்து வந்து , பெண்ணைக் கண்டிக்க ஆரம்பித்தாள்.எப்பப் பார்த்தாலும் சாந்தா சாந்தான்னு ஓட வேண்டியது. ஆடிட்டருக்குத்தான் வெளியே  போகவே சரிய இருக்கு. மைலி(மைதிலி)க்கும்
கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா. இன்னோருத்தராத்துப் பெண்ணைக் கூப்பிடறோமேனு  கொஞ்சம் கூட    தோணலியே.
அதுவும் சின்ன வயசா.
ஜாடை மாடையாக் கிணத்தடில சொல்ல்வேண்டியது. என்னடி சீவு

எங்காத்து ஜானிக்கும் உங்க நீலாக்கும் உயரம் எவ்வளவு பொருத்தம் பார்த்தியா.
என்னவோ யாருக்கு எங்க போட்டு வச்சிருக்கோ.
அப்டீனு  ஒரு கேள்வி.
பக்கத்திலியே இது மொட்டு மாதிரி நின்னு கேட்டுக் கொண்டிருக்கும்.
மனசில ஆசைவர வயசில்லையா.
நாம   பள்ளிக்கூடம் பக்கத்தில வீடு மாத்திப் போயிடலாம்னா.
எல்லாவிதத்திலியும் சௌகர்யமா இருக்கும். உங்களுக்கு டவுன்
ல தானே தாலுகாபீஸ் இருக்கு.

என்று  பொரிந்துவிட்டு  உட்கார்ந்து கொண்டாள்.
இதெல்லாம் கேட்க  நீலா அங்கே இருந்தால் தானே.

சாப்பிடாமக் கூட ஓடிப் போயிடுத்தே.
அதான் கார்த்தாலை கோபாலன்  வீட்டு மெஸ்ஸில  நிறைய இட்லி
சட்டினி எல்லாம் வங்கி வைச்சுட்டேனேமா.
நீ  சாப்பிடு. உடம்பு தள்ளாது. இவ்வளவு கோபம் உடம்பு தாங்காது
என்றவாறு இட்லி சட்டினியை அவளருகில்   கொண்டு வைத்தார்.

மாட்டினி  ஷோ மா. மத்தியானம் வந்துடுவாள் .கவலைப் படாமப் படுத்துக்கோ.
  உங்களுக்கு ஒண்ணும் புரிகிறதில்லை. இப்போ தெரிகிறதா ,வாசல்ல பார்த்த பெயருக்கு
அர்த்தம். ஜானகி நீலா தான் சேர்ந்து ஜாநீலா ஆகியிருக்கு. என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டாள் சீவு.

வெளியிலிருந்து குட்டிமாவும் கண்ணனும்  வந்து காரம்போர்டை எடுத்துவைத்துக்   கொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

காயினும் ஸ்ட்ரைக்கரும் மோதும் சத்தம் கேட்டு அம்மா எழுந்து உர்ட்கார்ந்து கொண்டாள்.
நேரம் என்னடா  ஆச்சு கண்ணா.
ஒண்ணும் ஆகிறதுமா.
எப்போ சினிமா விடும்.
இண்டர்வெல்லோடு சேர்த்து மூணரை மணி.
ஆகக் கூடி   மூணு மணியாகும்மா.
இது குட்டிம்மா:)

சரி வெய்யில்ல எங்கயும் போகாதீங்கோ. நான் குளித்துவிட்டு வருகிறேன்.
முற்றமெல்லாம்  சுண்ணாம்பு பூசி வைத்திருக்கிறேன். அந்தப் பக்கம் வரவேண்டாம். பாத்ரூம் போகணும்னால் வீட்டைச் சுற்றி வாங்கோ.
என்றபடி கையில் புடவை துணிமணிகள் சகிதம் பின்புறம் சென்றாள்.

மாதவன் ,சீவு சொன்னதின்  செய்திச் சுருக்கத்தை அலசிக் கொண்டிருந்தார்.
இப்படியும் இருக்குமா.  ஒன்பதாவது படிக்கும் பெண்ணுக்கு இதெல்லாம் எப்படித்தெரியும்.

நிறைய  புத்தகங்கள் படிக்கிறாள்.
எப்படியடி காதலிப்பது  என்று வேறு ஒரு புத்தகம். காதலித்தால் போதுமா என்று ஒரு புத்தகம்.அதெல்லாம்  இருபது வயதுகளில் நடக்கும் சம்பவம் இல்லையோ.

அதுதான்   இந்தப் பெண் அவர்கள்    வீட்டிலேயே பழி கிடக்கிறதா.

சரி இதை மெதுவாகத் தான்  சரி செய்யணும்.

நோட்டுப் புத்தகத்தைப் பிரித்துவைத்துக் கொண்டு 
ஸ்ரீராமஜயம் எழுத  ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் கழிந்தது. குழந்தைகளைச் சாப்பிடக் கூப்பிட்டார்.
வரட் வரட்டென்று முற்றத்துப் பாசியைத் தேய்த்துக் கொண்டிருந்த சீவுவையும்  ,போதும்மா  வா. முதுகுவலிக்கப் போகிறது' என்று அழைத்தார்.

அவளுக்கும் அலுத்திருக்கவேண்டும்.
கொஞ்சம் அந்த விசிறிய இந்தப் பக்கம் தள்ளுங்கோ. நான் விகடன் படிக்கிறேன். நீங்க எல்லாம் சாப்பிட்டுவிட்டு

எனக்கு  தையல் இலை கொடுங்கோ என்றபடி அந்தவாரத்தொடரில் ஆழ்ந்தாள்.
ஒரு மணி நேரம் கழிந்தது. சாந்தாவின் குரல் சத்தமாகக் கேட்டது.

கூடவே  நீலாவின்  குரலும் கம்மியாகக் கேட்டது.
 அதெப்படி   வைஃப்  இருக்கும்போது இன்னோருத்தியை
சிவாஜி கல்யாணம் பண்ணிக்கலாம்
இது சாந்தா.
ஏய் அதான் போனால் போகட்டும் போடா பாட்டும்போதே  சரோஜா தேவி போயிட்டாள்னு தெரிகிறது.
அதற்கப்புறம்  தன் நன்றிக்கடன்  தெரிவிக்கணும்னு   தான் சவுக்கார் ஜானகியைக் கல்யாணம்  செய்துக்கிறார்.
அவா  ஒரு டூயட் கூடப் பாடலை பாரு இது   நீலா.

வாசல் கதவைத் திறக்கும் போது
நீலா 'டேய் கண்ணா நான் எழுதினதை ஏண்டா அழிச்சே.
என்று அவன் மேல பாய.
அடடா என்னம்மா நீ குழந்தையாட்டாம்  கண்ட இடத்தில
கிறுக்கிற வழக்கம்.
அப்புறம் யாரது ஜாநீலா?

ஓ!அது ஜாமீலாப்பா. சின்ன எம்   போட்டுதானெ  எழுதி இருந்தேன்.
நீ  ஜாநீலான்னு படிச்சயான்னு, சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

சே என் இங்க்லீஷ் எழுத்து  இன்னும்  சரியா இல்லைன்னு ஹாண்ட் ரைட்டிங் மிஸ் சொல்வது சரிதான்.
என்று நாசூக்காகத் தலையில் தட்டிக் கொண்டாள்.

உடனே  மற்றப்  பசங்கள் எல்லாம் அவளைச்   சுற்றி
கும்மியடிக்க ஆரம்பித்தார்கள்
ஜாஆஆஅ நீல்லா
ஜாமீஈல்ல்லாஆ
என்று கைதட்டவும் அவள் முகம் சிவக்க ஆரம்பித்தது.
அம்மா  அந்த விசிறியை இங்க போடு
எனக்கே பசிக்கிறது.இவர்களோட  ஆட்டத்தைப் பாரேன்.
ஆளுக்கு  முதுகில் ரெண்டு கொடுக்கிறேன்!!
அப்பா அடுத்தவாரம் நாமெல்லாம் மணப்பந்தல் போலாமாப்பா. அப்போதான் நான் சாப்பிடுவேன் போ''
என்று பொத்தென்று கீழே உட்கார்ந்த பெண்ணைப் பார்த்துக் கொண்டே
இருந்தார்.

சீவு தலையை நிமிரவே இல்லை.

ஏய் சாந்தா நீ மட்டும் வா என்ன. ஜானகி,,அம்மால்லாம் வந்தால் நாம் ஜாலியாப் பேச முடியாது.........7 comments:

துளசி கோபால் said...

காதல் வந்துட்டா..... என்னமா சிந்திக்கறது பாரேன்!!!!!

மொட்டாட்டம் கேட்டுண்டு இருந்தது ரொம்பப் பிடிச்சது:-))))

கோவை2தில்லி said...

காதல் வந்துட்டா உலகமே மறந்துடுமோ....

சுவாரசியமாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பொய் சொல்ல ஆரம்பிக்கறதே அந்த நேரம்தானே.அந்த அப்பாவுக்கு ஊர் மாறியதும் அந்தக் குழந்தைகளின் உலகமும் மாறிவிட்டது.இன்னமும் சீவு மாமியின் குழம்பின முகம் நினைவு இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

உலகம் நிறைய மறக்கவில்லை ஆதி. அதோட டைமென்ஷந்தான் மாறிக்கொண்டு இருந்தது.பெண்களின் கற்பனா சக்திக்கு ஏற்ப:)

அப்பாதுரை said...

subtle and beautiful.

வல்லிசிம்ஹன் said...

நன்றி துரை.உங்கள் பின்னூட்டமும் அழகாக இருக்கிறது.

கோமதி அரசு said...

ஓ!அது ஜாமீலாப்பா. சின்ன எம் போட்டுதானெ எழுதி இருந்தேன்.
நீ ஜாநீலான்னு படிச்சயான்னு, சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.//

என்ன அழகான சாமாளிப்பு!