Blog Archive

Monday, April 30, 2012

அன்னையர் தினத்துக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இந்த  மே மாதம் வந்தாலே   மூளையைக் கசிக்கக்   கொள்ள வேண்டி இருக்கிறது.

நிறைய நபர்கள் பிறந்திருக்கிறார்கள்.
நிறைய நபர்கள் திருமணம் செய்திருக்கிறார்கள்.

நடுவில அம்மாக்கள் தினம் வேறு வருகிறது.
மத்தவங்களுக்கெல்லாம் வாழ்த்துகள் சொல்லிடலாம்.

என் பெண் என்னமா வேணும்.வாங்கிக் கொண்டு வருகிறேன் என்றதும்.
பழைய   ஆங்கிலப்படம் டிவிடி கேட்டிருக்கிறேன்.
ராசிபுரத்தில வெண்ணெய் நல்லா இருக்குன்னால் வரவங்கள்ட்ட சொல்லி வாங்கற கதைதான்.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு அம்மா   நோய்வாய்ப்பட்டு சிறிது சிறிதாக  மீண்டு வருகிறார்கள்.
அவர்கள் பெயர்  திருமதி கணவதி ராசநாராயணன்.
ஆமாம்   நம் கி.ரா. அவ்ர்களின் துணைவியார்தான்.
எப்போது தொலைபேசினாலும் எப்படி இருக்கப்பா கண்ணு'என்னும் போது

மனம் எங்கியோ கசிகிறது.
ஐய்யாவிடம் அவர்களை வந்து பார்க்கலாமா என்று கேட்டால்  இப்போதைக்கு வேண்டாம். அவள் நிலைமை சரியாகட்டும்.

மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கும்போது வாருங்கள். உங்களை நாங்கள் உபசரிக்கத் தோதுவாக இருக்கும்.  என்கிறார்.

மேன்மக்கள்.

திருமதி கணவதி அம்மாவுக்குப் பரிசாகக் கடவுளை நான் வேண்டுவது
உடல்நலம் சுருக்க  நிகழவேண்டும்,கிடைக்கவேண்டும் என்பதே.

அவரது நகைச்சுவை உணர்வுக்கு ஒரு  துளி.
என்னிடம் ஆராய்ச்சிக் கேள்வி கேட்டார்
வில்லிபுத்தூர் ஆண்டாள். நாச்சியார் கறுப்பா சிவப்பா  என்பதுதான்.
நான் சொன்னேன்  அவள் கறுப்பாக இருந்தால்தான் அரங்கனுக்கு
இணையான ஜோடியாக அமைந்திருக்கும் என்று!!!

அந்த ஜோடியைப் போல இந்த ஜோடியும் நலமே வாழ  வேண்டும்.

19 comments:

பால கணேஷ் said...

திருமதி கி.ரா. அவர்கள் நலமே வாழ உங்களுடன் சேர்ந்து நானும் இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

துளசி கோபால் said...

கணவதி அம்மா விரைவில் உடல்நலம் பெற மனதார எம்பெருமாளை வேண்டிக் கொள்கின்றேன்.

அதெப்படி ஆண்டாளம்மாவை கருப்பின்னு சொல்லப்போச்சு? பச்சரிசியும் கறுப்புளுந்துமா இல்லே 'அந்த'ரெண்டுபேர் ஜோடி இருந்துருக்கும்!!!!

Unknown said...

திரு கி.ரா அவர்களும் அவர் துணைவியாரும் நலமுற வாழ வேங்கடவன் அருள் புரிவார் சா இராமாநுசம்

ADHI VENKAT said...

கணவதியம்மா விரைவில் உடல் நலம் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன்.

பால கணேஷ் said...

நேற்று மயிலாப்பூரில் கடுகு ஸாருககு பாராட்டு விழா நடந்தது. நீங்கள் வருவதாகச் சொல்லியிருந்தீர்களாம். கலந்து கொண்டீர்களா என்பதை கடுகு ஸார் என்னிடம் கேட்டார். உஙகளைப் பார்த்திராததால் ‌தெரியலையே ஸார் என்று விட்டேன். நீங்கள் வந்திருந்தீர்களா? நான் அந்த ஃபங்ஷனை பதிவாகப் போட்டிருக்கிறேன். இயலும்போது வருகை தரவும்.

http://www.minnalvarigal.blogspot.com/2012/04/blog-post_787.html

வெங்கட் நாகராஜ் said...

திருமதி கி.ரா. அவர்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்லவனிடம் பிரார்த்திக்கிறேன்...

அன்னையர் தினத்திற்கு என்ன பரிசு கொடுக்கலாம்? எனக்குள்ளும் கேள்வி எழுந்து விட்டது.....

ஸ்ரீராம். said...

திருமதி கி.ரா அவர்கள் நலம் பெற எங்கள் பிரார்த்தனைகளும்.எங்கள் உறவு வட்டத்திலும் கூட இந்த மாதம் பிறந்த நாள்கள் அதிகம் உண்டு!

//"அன்னையர் தினத்துக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?"//

வேறென்ன....

எங்கள் நமஸ்காரங்களை ஏற்று எங்களுக்கெல்லாம் ஆசீர்வாதம்தான்!! :)))

வல்லிசிம்ஹன் said...

அவருக்கும் இந்த செப்டம்பரில் 90 வயதாகப் போகிறது. இந்தவயதிலும் தன் மனைவியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ளுகிறார்.
அவரது மருமகளும்நன்றாகக் கவனித்துக் கொள்ளுகிறார்கள்.இத்தகைய ஆதர்ச தன்பதிகள் காண்பது அரிது கணேஷ். கட்டாயம் நலம் பெற்று மீண்டுவிடுவார்கள். மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி, இரண்டு மூன்று தடவை பேசினதலேயே கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது.
போய்ப் பார்க்க ஆவல்தான்.
அவர் வரக்கூடாது அந்து அன்பு உத்தரவு போட்டிருக்கிறார்.
உணர்கிறேன். தொந்தரவுதான் இல்லையா நிறைய விசிட்டர்கள் வந்தால்.

நான் கறுப்பு என்று சொன்னது ,அவர் எதிர்ப்பார்க்கும் பதிலைத் தரக் கூடாது என்பதற்காக்.:)
ஆண்டாளைக் கண்டதார். கோவிலில் கறுப்பாகத்தானே தனியாக நிற்கிறாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு புலவர் ஐய்யா,நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தால் அம்மா விரைவில் குணம் பெற்றுவிடுவார். மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நம் பிரார்த்தனைகள் பலிக்கும் ஆதி.நல்வளம் பெறட்டும்.

துளசி கோபால் said...

//ஆண்டாளைக் கண்டதார். கோவிலில் கறுப்பாகத்தானே தனியாக நிற்கிறாள். //

அது அவள் அழகு வெளியாருக்குத் தெரியவேண்டாம் என்று 'யாரோ' முகம் முழுக்க பூசிவச்ச மை.

நான் பார்த்தப்ப நல்லா பளிச்சுன்னு வெண்ணையா இருந்தாள்! இல்லேன்னா கண்ணன் போய் ஈஷிப்பானோ:-)))))))

வல்லிசிம்ஹன் said...

முழுமனதோடு வருவதாகத்தான் நினைத்திருந்தேன். இருட்டில் தனியாக்த் திரும்பி வரவேண்டுமே என்கிற பயம்தான்.
என் மாதிரி பிரகிருதிகளும் இருக்கிறோம். சாரிடம் மன்னிப்புச் சொல்லுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், அம்மாக்களுக்கு நம் சந்தோஷம் தான் வேண்டும். என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
மனம் நிறைந்த ஆசிகள் குழந்தைகளுக்கு எப்பவும் உண்டு.
ஆதியிடம் சொன்னது போல நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அதே அதே சபாபதே.சாஷ்டாங்க நமஸ்காரம் போதும். இல்லை கோவிலுக்கு அழைத்துச் செல்லுங்கள். அதுபோதும் எல்லா அம்மாவுக்கும்:)
கணவதி அம்மா உறுதியானவர் . நலம் பெறுவார்.

வல்லிசிம்ஹன் said...

நல்ல வேளை துளசி. எங்க அம்மா இல்லை. இந்த மாதிரிச் சொன்னதற்கே தன் பெண்ணைச் சொன்ன மாதிரி வருத்தப் படுவார்.
அத்தனை பிரியம் ஸ்ரீவில்லிபுத்தூர் அம்மாவிடம்.
ஐய்யா கேட்டது. அந்தக் குழந்தை கண்டெடுக்கப்பட்டதுதானே. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று என் அறிவு எவ்வளவு யோசிக்கிறது என்று அறிய விட்ட சாலஞ்ச்:)

கோமதி அரசு said...

திருமதி கணவதி ராசநாராயணன் அவர்கள் இறைவன் அருளால் மிக விரைவில் நலம் பெற வேண்டும்.
நலம் பெற பிராத்திக்கிறேன். வாழ்த்துக்கள்.

நானும் உங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை இப்போதே சொல்லிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

முதல் வாரத்தில் நான் சில ஊருகளுக்கு போகிறேன், இந்த மாதக்கடைசியில் மகள் குழந்தைகளுடன் வருகிறாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி அன்பான அன்னையர் அனைவர் என்றுமே நன்றாக இருக்கணுனு நாம் பிரார்த்திக்கொள்ளலாம். மகள் வருவது ஜூன் மாதச் சிறப்பு.அதற்கும் வாழ்த்துகள்.:)
எங்கள் வீட்டிலும் அதே தான்.!!!

சாந்தி மாரியப்பன் said...

அத்தனை அன்னையரும் நலமுடன் வாழப் பிரார்த்திக்கிறேன்..