About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, April 17, 2012

ஆநந்தம் ஆநந்தம் ஆநந்தமே புது மலர்ச்சி இறுதிப் பகுதி

ஆநந்த வெளி
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
புத்தகத்தின் முதல் பக்கம் திரு சுரேஷ் பத்மநாபனின் கையெழுத்தே லிமரிக்ஸ் பாணியில் சந்தோஷம்,முன்னேற்றம்,வாழ்வின் அற்புதங்கள் எல்லாவற்றையும் சொல்வதாக எனக்குத் தோன்றியது. நன்றி திரு சுரேஷ் பத்மநாபன்,ஷான் சவான்.      

 நாவல்  ஆரம்பத்திலியே கதநாயகி மாயா   கனவும்  விழிப்பும் கலந்த ஒரு நிலையில்   கண் விழிக்கிறாள்.
யாரோ ஒருவர் சந்நியாசியா    யோகியா  என்று யூகிக்க முடியாத தோற்றத்தில் அவளைக் கை அசைத்துக் கூப்பிடுவது போல உணர்கிறாள்.

இந்த இடத்தில் வரும்   பகுதியை மட்டும் சொல்கிறேன்.(சாரி கணேஷ்)
  உடலின் அவசரம் கனவிலும் பிரதிபலிப்பது சிரிப்பை வரவழைக்கிறது.
இதையும் மீறி விழித்துக் கொண்டு ,தூக்கக் கலக்கத்தைப் போக்க காப்பியை நாடுகிறாள்.
அவள் கேட்கும் சத்தங்கள் என் வாழ்விலும் உண்டு:)
வேலைசெய்பவர் பாத்திரங்களைத் தடல் படால் பண்ணும் சப்தம். வேளுக்குடி  கிருஷ்ணன் சாரின்  பாரதத்தில்  தர்மம்,
வாரபலன்கள் ஒரு டிவியில், மஹாநதி ஷோபனா இன்னோரு தொலைக்காட்சியில் சௌந்தர்ய லஹரி   இப்படியான கூட்டுக் கலவை ஒலிகள். .

இன்னோரு பாரா காஃபி பற்றியது. சிக்கரிபோட்ட காஃபி தனக்குப் பிடிப்பதையும்,நுரௌயில்லாத காஃபி தன் அம்மாவுக்குப் பிடிப்பதையும் நினைக்கிறாள்.
 உடனெ   எனக்கு மாயாவைப் பிடித்துவிட்டது,.:)

அவள் வாழ்க்கையில் சந்தித்த ஏமாற்றங்களிலிருந்து விடுபட  உதவிக்கரமாக நிற்கும் ஜோதி.
இவர்கள் இருவரும் இணைந்து சந்திக்கும் குருஜி...அதுவும் ஜீன்ஸ் போட்டவர்:)

அவரது சஹஜமான அணுகு முறையில் தன்னைத்தானே விடுவித்துக் கொள்ளும் கலையைக் கற்றுக்கொள்ளும் பாங்கு.

எனக்கே இந்தக் குருஜியைப் பார்க்க ஆவலாக இருக்கிறது!


நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்று விளக்க ஒரு கதை சொல்கிறார்.
பலவித பறவைகளைக் கடவுள் பார்க்க விரும்புகிறர்
வண்ணமயில், பாடும் குயில், பச்சைக்கிளி
என்று விதவிதமாகப் பறவைகள் வருகின்றன.
அங்கு வந்து சேரும் காகத்துக்குத் தன்னைப் பார்த்துச் சோகமாகி விடுகிறது

வேஷம் போட்டுக் கொள்கிறது ...ஒவ்வொரு வண்ணப்பறவையிடமிருந்தும்
ஒரு ஒரு இறகை வாங்கி த் தன் உடம்பில் சொருகிக்கொள்ளுகிறது.

கடவுள் பறவைகளின் அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டே வரும்போது
காகத்தின் அருகே வந்து குழப்பத்துடன் பார்த்துவிட்டு, ஒரு ஏளனச் சிரிப்போடு போகிறார்.
வந்த பறவைகள் அனைத்தும் வெற்றிபெற்ற தாக அறிவிப்பவர் வேஷம் போட்டக் காகத்தை அடையாளம் காடி, இவர் தோற்கிறார்.
கோமாளித்தனமாக இருக்கிறது அவரது தோற்றம் என்றதும் காகம் அழுகிறது
ஆத்திரத்தில் தான் ஒட்டிக் கொண்ட இறகுகளைப் பிய்த்து எறிகிறது.
இப்பொழுது உண்மையான காக வடிவத்தில் அதைப் பார்த்த கடவுள், காகமும் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்.

அண்டா  நிறைய பாயசத்தில் இந்தப் பாரா  ஒரு கப்தான்.

எனக்கு இந்தப் புத்தகத்தைக் கொடுக்கவேண்டும் என்று தோன்றிய எங்கள் ப்ளாகிற்கு  மனம் நிறைந்த மகிழ்ச்சியான  நன்றி.
எழுதிய திரு சுரேஷ் பத்மநாபன், ஷான் சவான், அருமையாகப் பெயரும் சூட்டித் தமிழாக்கமும் செய்திருக்கும் திரு கேஜி ஜவர்லால்,
வெளியிட்டு இருக்கும் கிழக்குப் பதிப்பத்தகத்தார் அனைவருக்கும் இந்த சந்தோஷத் தருணங்களைச் சமர்ப்பிக்கிறேன்.


12 comments:

பாச மலர் / Paasa Malar said...

அனைவருக்கும் வாழ்த்துகள்...உங்களுக்கு விசேஷமாய் வாழ்த்துகள்..நல்லதொரு பகிர்வுக்கு..

kg gouthaman said...

இப்போதான் பதிவு கண்ணுக்குத் தெரிகின்றது. நல்ல விமரிசனம்; எங்கள் நன்றி.

தக்குடு said...

பரிசுக்கு வாழ்த்துக்கள் வல்லிம்மா! காக்கா கதையும் அருமையா இருந்தது!

கோவை2தில்லி said...

நன்றாக இருந்ததும்மா. காகத்தின் கதை நல்லதொரு நீதியை சொல்கிறது.

கோமதி அரசு said...

அண்டா நிறைய பாயசத்தில் இந்தப் பாரா ஒரு கப்தான்.//

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.

அது போல் காக்கா கதை அருமை.

நல்ல பகிர்வுக்கு நன்றி அக்கா.

மாதேவி said...

பகிர்வு நன்றாக இருக்கின்றது. படிக்கும் ஆவலைத்தூண்டுகின்றது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மலர், வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிமா.உங்களுக்கும் இந்தப் புத்தகம் படிக்கக் கிடைத்தால் மகிழ்வேன்.

வல்லிசிம்ஹன் said...

எங்களுக்கு என் நன்றிகள் அருமையான் கோணத்தில் வாழ்க்கையை அணுக இன்னோரு வாய்ப்பு இந்தப் புத்தகம் எனக்குக் கொடுத்திருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தக்குடு.

வேஷமில்ல்லாத வாழ்க்கையைச் சொல்கிறது.
நீங்க அருமையா தங்கத்தவளைப் பெண்ணே எழுதி இருப்பீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா ஆதி.தவறாமல் வந்து படிப்பதே பெரிய ஊக்கம்.

வல்லிசிம்ஹன் said...

நீங்களும் படித்தால் நான் சந்தோஷ்ப்படுவேன் கோமதி. உங்களுக்குபிடித்த சப்ஜெக்ட்.மகிழ்ச்சியுடன் இருக்க ஒரு பயிற்சி இந்தப் புத்தகம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. எங்கள் ப்ளாகிற்குத்தான் என் நன்றியைச் சொல்லணும்.