Blog Archive

Thursday, April 12, 2012

நம்ம ஊரு பூமியாட்டம்.!!

வ்
சுனாமி வருமோ.....
வீடு நோக்கி விரையும்  நம்மையே.....
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

நேற்று மதியம் உண்ட மயக்கத்தில் உறக்கம்.

அந்த உறக்கத்திலும் ஏதோ நகருவது போலவும்  அலார்ம் அடிக்கிற மாதிரியும் தோன்றுகிறது. கஷ்டப்பட்டுக் கண்ணை விழித்தால்
உறவினர் ஒருவர் தொலைபேசுகிறார்.
அக்கா  இங்க எல்லாம் நாங்க ஆஃபீசுக்கு வெளியே நிற்கிறொம்.

நீங்க என்ன பண்றீங்க.  எர்த் க்வேக்!!!! ட்ரெயினெல்லாம் ஓடலை.
ஒரே பயம்.'
சாதாரண நாளிலியே நமக்கு மத்தவங்க பேசுவது புரிய  சிறிதே
நேரம் பிடிக்கும்.
 இரவுத் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நேற்று பகலில் தூங்கிச் சமன் செய்யலாம் என்றால் இதென்னடா பூகம்ப பூதம் வந்ததே.
உடனே   சமாளித்துக் கொண்டு  தட்டிக் கொண்டிருந்த தச்சர் சிங்கத்திடம்
விரைந்தேன். விசாலி போன். ஏர்த்க்வேக் சுனாமி . பையன் எங்க. என்று மூச்சு வாங்கினேன்.
என்ன உளருகிறாய்.
கொஞ்சம் நிதானப் படுத்திக்கோ.
கையில என்ன.
மருந்துப்பொட்டியும், கைப்பை,கைபேசி

எங்க கிளம்பறே.
வீட்டுக்குள்ள இருக்கக் கூடாதே வெளில வாங்க. பையன் எங்க.??????

அவன் இப்பதான் ஏதோ வேலையா ராதாகிருஷ்ணன் சாலைக்குப் போனான்.
அடடா உடனே கூப்பிடணுமே.

டயல் டயல் டயல்.
இல்ல ஒரு நம்பரும் கிடைக்கலை. பக்கத்துவீட்டு நம்பர் கூடக் கிடைக்கலை.

சரி நான் போய்ப் பார்த்து அழைத்துவரேன். நீ டிவி பார்த்து என்னன்னு கேளு.
இவளுக்குன்னு ஏதாவது பயம்.
எனக்குத் தெரியாம  என்ன நில நடுக்கம்  என்று முணுமுணுத்தபடி நகர்ந்தவரை
வேகமாகச் சென்று பிடித்தேன்.
அப்புறம் உங்களைத் தேட முடியாது என்னால்.

ஏம்மா  நார்மலாகவே இருக்க மாட்டியா ரோட்ல பாரு அவரவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு என்றபடி திரும்பிப் பார்த்தார். சாலையில் வாகனங்கள் விரைந்து ஓடிக்கொண்டிருந்தன.
எதிர்த்த வீட்டு வாட்ச்மேன். இன்னா சார் பூமி நடுங்கித்தே. அல்லாம் வீட்டுக்குப் போறாங்க  சார்.
ஓ. நீ சொல்றது நிஜம்தானா.
சரி வா. அதற்காகச் சொத்து பூராக் கொண்டுவரவேண்டாம். ரேடியோல  நியூஸ் கேட்கலாம் என்றபடி  எங்க வாக்னாரைக் கிளப்பினார்.

நாங்கள் போகும் நேரம்   வழியெங்கும் நெரிசல் .பீதி. பாதி சிரிப்பு பாதி.
மகன் சென்ற அலுவலகத்துக்குப் பக்கம் அனைவரும் வெளியே நிற்கிறார்கள்..

எங்களைப் பார்த்துவிட்ட மகன்.
அம்மா உன்னைக் கூப்பிட்டேன் . ரிங் போகலை..
சரி இங்க வேலையை முடித்து வரலாம்னு நினைத்தேன் என்கிறான். நாங்களும் இங்கயே நிக்கறோம்பா. நீ பேசிட்டு வா  என்றேன்..

அவன் கிளம்பி வண்டியில் ஏறிக் கொண்டதும் காய்கறி இதர பொரொட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரவும் மின்சாரம் நிற்கவும் சரியாக இருந்தது.

 நல்லவேளை சிலநிமிடங்களில் வந்துவிட்டது. எப்பவும் இருக்கும் மின்வெட்டு நேற்று இல்லை.
வீட்டுக் கூடத்தில் எண்டிடிவி அலற,
என் அறையில் சன் டிவி கதற பூகம்ப மஹாத்மியம் 6 மணி அள்வில் ஓய்ந்தது.

சுனாமிவந்தால் எப்படி இருக்கும் என்று   பார்க்கப் போகிறோம் என்ற கும்பலை நினைத்துதான்  மனதுக்கு உறுத்தலாக இருந்தது.
உண்மையில் வந்திருந்தால்????.

புதுவருடம்  நாளை நல்லபடியாகப் பிறக்கட்டும். நந்தன வருடம் நம் ஊரை அமைதியான  நந்தனமாக   இந்த வருடம் ஒளிரட்டும்.


அனைவருக்கும் இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

21 comments:

ராமலக்ஷ்மி said...

ஆம், பார்ப்பதற்கென கூடிய கூட்டம் உறுத்தல்தான். இயற்கை அன்னையின் கருணைக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி .சென்சேஷன் என்றால் உயிர்ப்பயம் கூடப் போய் விடுமா. கசப்பான நிஜம். தலைக்கு வந்தது கதைதான் நேற்று. உங்களூரிலும் நடுக்கம் இருந்தது என்று என் கணவரின் தமக்கை கூறினார்.
ஜெய்மஹால் பக்கம் இருக்கிறார். உயர்ந்த கட்டிடங்களில் அதிர்வு நிறையத் தெரியும் என்று நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

இங்கே முதல் மாடியில் இருக்கோம்; அதனாலோ என்னவோ எனக்கு நன்றாகவே தெரிந்தது. மூங்கில் சோபாவிலே தான் உட்கார்ந்திருந்தேன். சோபாவோடு ஆட, எனக்குத் தான் என்னமோ ஆயிடுத்துனு நான் நினைக்க, கடைசியில் கீழே இருந்து உறவுக்காரப் பெண் வந்து சொன்னதும் தான் புரிஞ்சது இதான் பூமி அதிர்வு என. :))))) அப்புறமாச் சாயங்காலம் மறுபடி லேசா, லேசா, கொஞ்சமே கொஞ்சமா ஆட, ஒரு மாதிரிப் பழகிண்டாச்சு. :))))))

ஸ்ரீராம். said...

வெளியில் சென்றிருந்த சகோதரியை அலைபேசியில் பிடிக்க முயற்சி செய்து, தொடர்புக்கே போகாததால், செக் செய்ய அருகிலேயே இருந்த மனைவி அலைபேசி நம்பரை டயல் செய்ய, அதுவும் போகவில்லை. அப்புறம் மறுபடி மறுபடி ரீ டயலில் மனைவி நம்பரையே முயற்சித்திருக்கிறேன் என்பது சற்று நேரம் கழித்தே புரிந்தது! செய்திச் சேனல்களுக்கு நேற்று கொண்டாட்டம்!

வல்லிசிம்ஹன் said...

அடப்பாவமே கீதா.வெய்யிலில் வெளியே போகக் கூட முடியாதே. இங்கே பக்கத்தில பழையா வீட்டில் விரிசல் கூட வந்திருக்கு என்றார்கள்.
நான் நம் வீட்டில் ப்புதிதாய்க் கட்டின அறையிலியே வந்திருக்கும் விரிசலை நினைத்துக் கொண்டேன்.
மனிதர்களின் தவறுகளுக்கு பூமி என்ன செய்யும்.இத்துடன் போச்சேனு நன்றியுடன் இருக்கவேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். எல்லாம் ஜாம் ஆகிவிட்டதாம்.சும்மாவே கைபேசி காதைவிட்டு நகருவதில்லை. இந்த மாதிரி நெருக்கடி என்றால் கேட்கவே வேண்டாம்.
அப்புறம் பத்திரமாகத் திரும்பி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஸ்ரீராம். said...

அதெல்லாம் பத்திரமா வீடு சேர்ந்திடுவாங்கன்னு தெரியும்....ஆனால் அலைபேசாட்டா 'கொஞ்சமாவது அக்கறை இருந்துதா உனக்கு'ன்னு அப்புறம் திட்டு வாங்கணும்! :))))

ADHI VENKAT said...

இங்கு தில்லியில் பூமி அதிர்வு என்பது மிகவும் சகஜம். சென்ற மாதம் கூட வந்ததே. எனக்குத் தான் அந்த நடுக்கம் போகவே சிறிது நாட்கள் ஆனது....:)

நேற்று கூட இங்கு இருந்தது. ஆனால் என்னால் உணர முடியவில்லை.

நேற்றெல்லாம் டீவியில் செய்தி பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டும்., சுனாமி வரக்கூடாதென்றும் வேண்டிக் கொண்டிருந்தேன். நல்லவேளை....

என் கணவர் சொல்கிறார்....இதற்கு ஏன் புலம்பி தவிக்கிறே....வந்தால் உன்னால பிடித்து நிறுத்த முடியுமாவென்று! என்ன இருந்தாலும் யாராக இருந்தாலும் மனது அடித்துக் கொள்கிறதே....

நான் என்று தான் எல்லா விஷயங்களையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போகிறேனோ.....:)

பாச மலர் / Paasa Malar said...

ஆட்டம் காட்டி அடங்கிய பூமிக்கு நன்றி சொல்லுவோம்.

கோமதி அரசு said...

சுனாமிவந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்கப் போகிறோம் என்ற கும்பலை நினைத்துதான் மனதுக்கு உறுத்தலாக இருந்தது.
உண்மையில் வந்திருந்தால்????//

நல்ல வேளை கடவுள் காப்பாற்றினார்.

நேற்று சென்னையில் உள்ள உறவினர்களுக்கு எல்லாம் போன் செய்து கேட்டேன். உங்களை நேற்று நெட்டில் பார்க்கவில்லை விசாரிக்கலாம் என்றால்.
எல்லோரும் நலமுடன் வாழ பிராத்தனை செய்து கொண்டேன்.

அப்பாதுரை said...

sumatran fault 2000 கிமீடர் என்கிறார்கள். ஆந்திரா தமிழ்நாடு இலங்கை எல்லாம் இந்த அடுக்கில் இருப்பதால் டேஞ்சர் தான். அடுத்த ஐம்பது வருடங்களில் அதிகமான நில அதிர்ச்சியும் கிழக்கிலே தான் என்கிறார்கள்.

பூகம்பத்தினால் பெரும் அழிவு ஏற்படக்கூடிய 10 உலக நகரங்களில் தில்லிக்கு மூன்றாவது இடம் தெரியுமோ?

எல்லாருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் குடுகுடு.

சாந்தி மாரியப்பன் said...

அடுக்கு மாடிகள்ல இருக்கற எங்களைப்போன்றவர்களுக்கு வெளியே ஓடி வரக்கூட இந்த பூகம்பம் நேரம் கொடுக்குமான்னு சந்தேகம்தான்.

அசம்பாவிதம் எதுவும் நடக்காம கடவுள்தான் காப்பாத்தணும்.

வெங்கட் நாகராஜ் said...

//சுனாமிவந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்கப் போகிறோம் என்ற கும்பலை நினைத்துதான் மனதுக்கு உறுத்தலாக இருந்தது.
உண்மையில் வந்திருந்தால்????.//

வந்திருந்தால் பார்த்திருப்பார்கள் :))) ஆனால் மற்றவர்களிடம் அனுபவத்தினைப் பகிர்ந்திருக்க முடியாது! அவ்வளவு தான்... என்ன ஆசையோ!

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இங்கும் இருதடவை சிறிது ஆட்டம் இருந்தது. பாரதூரம் வராமல் காத்த இயற்கைக்கு நன்றி கூறுவோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி,
கவலைப் படாமல் இருக்க முடியுமா.இல்லாவிட்டால் நாம் மனிதர்களே இல்லை.
உலகசக்தியே இந்த ஒருமித்த பிரார்த்தனைதான்.என்று நான் நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆட்டம்போட்டால் நாம் பூமியையே மதிக்கிறோமோ மலர்?அப்பப்போ நான் இருக்கிறேன் என்று காட்டிகொடுக்கிறது. இருந்தும் வயல்களை அழிப்பதில் காட்டும் ஆர்வம் அதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்ற நினைப்பே இல்லை.

வல்லிசிம்ஹன் said...

இதையே நானும் டில்லியில் உம்
லேசாக இருந்தது என்று கேட்டதும்
என் மருமகளுக்குப் போன் செய்தேன். மழைதான் பயங்கரமாக இருக்கிறது என்றார்.
எதோ ஒரு விதத்தில் அவஸ்தை. இறைவன் நம்மைக் காக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் துரை. குடுகுடுப்பாண்டி என்ன இப்படிச் சொல்கிறார்;)
நிலம் நகராமல் கீழே விழுந்திருந்தால் சுனாமி வந்திருக்கும் ....இது அப்புறமாக வந்த நியூஸ். அதனால் என்ன நடக்கும் எதிர்காலத்தில் என்பது
பொறுத்திருந்துதான் ....பார்க்கணும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல். நேற்று உங்க ஊரிலும் பூமிஅதிர்ந்ததாகச் செய்தி வந்ததே,.
யாரையும் விடுவதாக இல்லை.
பொறுத்துதான் பூமியை ஆளவேண்டும் போலிருக்கிறது. புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வெங்கட்.ஒரு தடவை
அனுபவம் இருக்கும்போதே இந்த அசட்டுத்தைரியத்தை என்ன செய்வது. எல்லாமே ஃபன் தான். அவர்களுக்கு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. இறைவன் புதிய நந்தன வருடத்தில் இடர்களை அகற்றி
ஆநந்தத்தை மட்டும் கொடுக்கட்டும்.