Blog Archive

Sunday, April 08, 2012

பங்குனியின் பௌர்ணமி

மழை வருமோ,சுற்றிலும் மேகம்
நீல நிலா
மரக்கிளைகளோட உறவாடும்நிலா
ஈஸ்டர் நிலவோ
திருமலை  நிலா
இந்தத் தடவையும்  நிலவு இரண்டாகத் தெரியுமோ என்ற
சந்தேகத்தோடுதான் காமிராவை எடுத்தேன்.நிலவு  இரண்டாக இல்லை. கொஞ்சம் திரையிட்ட நிலாவாகத் தெரிந்தது.

பார்த்தால் மேகங்கள் சூழ ஆரம்பித்திருந்தன.
விளையாட்டு நிலா. மேகங்கள் விரைந்தனவா...இல்லை நிலா
ஓடி மறைந்தாளா தெரியாது.
கிடைத்ததில்  சிதையாத சில நிலாக்களை அளிக்கிறேன்.:)


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

30 comments:

பால கணேஷ் said...

நீங்கள் புகைப்படக் கருவியால் சிறைப்பிடித்த நிலவு அழகோ அழகு!

வெங்கட் நாகராஜ் said...

நிலா நிலா ஓடி வா...
நில்லாமல் ஓடி வா....

அழகிய நிலா படங்கள்....

பகிர்வுக்கு நன்றிம்மா...

வல்லிசிம்ஹன் said...

நன்றி கணேஷ். மின்வெட்டு சொல்லாமலும் வந்துவிடுகிறது. நிலவு அப்படியில்லை.நான் நிற்கிறேன் உனக்கு ஒளி கொடுக்க என்று. இந்த தடவை நிலவு ஆடவில்லை. காமிராவும் ஆடவில்லை. வருகைக்கும் வார்த்தைக்கும் மிக நன்றி.

துளசி கோபால் said...

ஆஹா..............

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட்.
வலைச்சர வாரம் முடிகிறதா.அழகான வார்த்தைகளை உபயோகித்துச் சரம் தொடுத்திருக்கிறீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள். பவுர்ணமிக்கு அடுத்த நாள் நிலா இது.

பாச மலர் / Paasa Malar said...

அருமையான அழ்கு நிலவு..அழகான படங்கள் வல்லிமா...சமீபத்திய பயணத்தின் போது அஸ்தமன வெள்ளைச் சூரியன் படம் எடுத்ததை..என் வலைப்பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறேன்..அந்தச் சூரியனும் இந்த நிலவும் ஒன்று போலவே...

ஸ்ரீராம். said...

மழை வரவில்லை...ஆனால் புழுக்கம்!
படங்கள் நன்றாக வந்திருக்கின்றன.

ஸ்ரீராம். said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்புஸ்ரீராம்,உங்களுக்கு எப்படி தெரியும்!!!
எங்கள் முதன் முதலாக வாழ்த்தினான்.
இப்போது நீங்கள். என்ன சொல்வதென்றே சொல்வதில்லை. இந்த அன்புக்கு மிகவும் நன்றினு சொன்னால் போதாது. மனமார்ந்த ஆசிகள்.

ஸ்ரீராம். said...

நன்றி மேடம்...கீதா மேடம் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

அப்பாதுரை said...

படங்கள் அழகு.
பிறந்தநாள் வாழ்த்துக்கள். (விஷயம் கீதா சாம்பசிவம் உபயம்)

(ரெண்டு நிலவு தெரியணும்னா கேமராவுல ஒரு சொட்டு விஸ்கி விட்டுப் பாருங்க :)

கோமதி அரசு said...

அன்பு அக்கா, இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

என்றும் நலமுடன் வாழ இறைவன் அருள்புரிவார்.

வாழக வளமுடன், வாழக நலமுடன்.

கோமதி அரசு said...

பங்குனியின் பெளர்ணமியில் நீங்கள் எடுத்த நிலா படங்கள் அழகு.

வெங்கட் நாகராஜ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லிம்மா!

கௌதமன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னும் நூறாண்டுகாலம் வாழ்க! உங்கள் பிறந்தநாள் பரிசாக, உங்களுக்கு சி சி சி பட்டம் கொடுத்திருக்கிறோம், எங்கள் 'வாசகர்களுக்கு மூன்று கேள்விகள், படப்புதிர்' பதிவில்!!

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வல்லிம்மா:)!

நிலவு மகள் படங்கள் அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, நன்றி. விஸ்கிக்கு எங்க போறது.
என் கை ஏற்கனவே ஆடுகிறது. விஸ்கியும் போட்டால் கேட்கவே வேண்டாம். நிலவு நடனமாகிவிடும்.
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. 64 வயதுக்கு 65 வாழ்த்துகள் இதுவரை வந்துவிட்டன:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மலர் உங்கள் பதிவை வந்து பார்க்கிறேன்.
இரண்டு சூரியன் என்பதா இரண்டு நிலவு என்பதா.பாலைவனங்களில் இரண்டையும் ஒன்றாஆகப் பார்க்கலாம். அந்திவானத்தில்.கிழக்கில் ஒன்று மேற்கில் ஒன்று.

துளசி கோபால் said...

அதெல்லாம் முந்தியே பய ப்ராந்தியில் விஸ்கி விஸ்கி அழுதாச்சு கேட்டோ:-)))))))

இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை இங்கேயும் சொல்லிக்கறேன்.

நோய் நொடி இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் நீடூழி வாழ்க!!!!!

ADHI VENKAT said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
தொலைபேசி அழைப்புக்கும் ,வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றிமா. ஆரோக்கியம் அவசியமாகிப் போன வேளையில் உங்கள் வாழ்த்துகள் பலிக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி, மிகவும் நன்றி. நீங்களூம் கணவரும் குழந்தையும் பரம சௌக்கியமாக இருக்க என் ஆசிகள்.

பால கணேஷ் said...

கீதா மேடம் பதிவை இன்றுதான் கவனித்தேன். சற்றே தாமதமாக வந்தாலும் என் இதயம் நிறைந்த பிறந்த தின நல்வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் நோய் நொடியின்றி, கவலைகள் இன்றி மகிழ்வுடன் நீங்கள் வாழ பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.

அப்பாதுரை said...

விஸ்கி கேமராவுக்கு :)
துளசி கோபால் கமெந்ட் கலக்குது :)
உங்க உடல்நலம் சிறக்க வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. சீக்கிரமே நல்ல படங்கள் எடுக்கலாம்னு உங்க வாழ்த்துகள் சொல்கின்றன:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி வாழ்த்துகளுக்கும் பூங்கொத்துக்கும் மனம் நிறைந்த நன்றி மா.இணையம் என்னை அரவணைப்பது வெகு இதமாக இருக்கிறது. மீண்டும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அப்பாதுரை,
காமிராவுக்க்ய் விஸ்கி கிடைக்கவில்லை.லென்ஸுக்கு துடைக்கும் டிஷ்யூ கிடைத்தது. மகனுடைய பரிசு.:)
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கௌதமன், இந்தப் பதிவே ஆனந்ததிலிருந்து வந்த கால் ஆகிவிட்டது:)
நன்றி சிசிசி பட்டத்துக்கு. :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கணேஷ், எப்பொழுது சொன்னால் என்ன. ஒவ்வொரு வாழ்த்திலும் மீண்டும் பிறந்ததாக உணர்கிறேன். மிக மிக நன்றி மா.