About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, March 10, 2012

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம:) மாசி மாத நிலா.

 
மாசியும் மார்ச்சும் வந்தது.
பவுர்ணமியும் வந்தது.

புதிதாகக் கிடைத்த  லென்ஸ்  வழியாகப் பார்த்தால் நிலவு
இன்னும் அழகாகத் தெரியுமோ. ஆவலோடு ஓடி

ஓடிப் பார்த்தால் நிலவுகள் இரண்டு தெரிகின்றன.
நிலவின்   இரண்டு பாகங்கள் மிதக்கின்றன.
ஆஹா நீயுமான்னு  துக்கம் தொண்டையை அடைத்தது.

ஒரு வாரம் ஆனால் பார்வை தெளிவாகிவிடும் என்றாரே வைத்தியர்.
சிங்கத்தை அழைத்து  நிலா  சரியாகத் தான் இருக்கிறதான்னு கேட்டால்

லூசா  நீ'ன்னு கேக்கலை. எப்பவும் மாதிரி வெள்ளையா அழகா ரவுண்டாதான் இருக்கு.
கொஞ்சம் உள்ள வரியா;ன்னுட்டுப் போய்விட்டார்.

அடுத்தநாள் காமிராவோட போனபோது  
காமிராக் கண்ணுக்கு முழுவட்டம் தெரிந்தது.

பார்வை மாறினால் உலகம் மாறுமா என்ன.
அடுத்த மாதம் திருந்திய பார்வையோடு 
உன்னைப் பார்க்கிறேன். என்று   தீர்மானம் இயற்றிவிட்டு
உள்ளே வந்துப் பதிவிலும் போட்டாச்சு.:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

17 comments:

ராமலக்ஷ்மி said...

நிலவுக்கு உங்கள் மேல் கோபம் வருமா என்ன? விளையாட்டு காண்பித்திருக்கிறது:)! படங்கள் 3, 4 செடிகளின் ஊடே நிலவு தெரிவது அழகு.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... உங்க மேலே நிலவுக்கு கோபம் வராது நிச்சயமா...

kg gouthaman said...

கண் ஆப்பரரேஷனுக்குப் பிறகு கண்களுக்கு, மருத்துவர் சிபாரிசு செய்யும் அளவுக்கு ஓய்வு தேவை. ஓய்வு வேண்டிய அளவு கண்களுக்குக் கொடுங்கள்.

மூன்றாவது படம் மிகவும் அழகாக உள்ளது.

கணேஷ் said...

மீண்டும் நிலவு வரும். நிறையப் படங்கள் நீங்கள் எடுக்கலாம். அதுவரை பொறு மனமே...

பாச மலர் / Paasa Malar said...

ஓய்வு எடுங்கள் முடிந்தவரை....எங்கள் வீட்டுப் பெரியவர்களின் அனுபவங்கள் வாயிலாகக் கண்டது...முதலில் கலக்கமாய் இருந்து மீண்டும் தெளிவாகக் கிடைக்கும் பார்வை...

அமைதிச்சாரல் said...

அழகா வந்திருக்குது நிலவு..

கோவை2தில்லி said...

நிலவுக்கு உங்க மேல் என்ன கோபம் இருந்து விடப் போகிறது அம்மா......

கண்களுக்கு நன்றாக ஓய்வு கொடுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி, இந்த ஒரு பாட்டு ,நிலாவுக்காகப் போடாமல் இருந்தேன்.
காமிராவுக்குக் கண் இருப்பது நல்லதாகிவிட்டது.
எனக்கும் நிலாவை மரங்கள்,இல்லை மாற்றுப் பொருட்களோடவோ படம் பிடிக்கப் பிடிக்கும்.குளிர் நிலாவுக்குக் கோபம் வருமா என்ன:)

வல்லிசிம்ஹன் said...

நல்லதாப் போச்சு வெங்கட்.
அதற்கு எல்லோரையும் சந்தோஷப் படுத்தத்தான் தெரியும்.
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் :)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கௌதமன். உண்மைதான்.கணினி நேரம் ,தொலைக்காட்சி நேரம், புத்தக நேரம் எல்லாம் குறைத்துவிட்டேன்.
ரேடியோ நேரம் அதிகம்.
பொறுமை இன்னு கொஞ்சம் தேவை. மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கணேஷ். அடுத்த தலைப்பு ஆயிரம் நிலவே வா:)

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா மலர். நான் சந்தித்தவர்கள் எல்லாரும் இரண்டு நாட்களில் கண்ணில் தெளிவாகத் தெரிவதாகச் சொன்னதும் எனக்குக் கவலையாகிவிட்டது.
நீங்கள் சொல்வது நல்ல மருந்து.மனம் நிறைந்த நன்றிமா.

ஸ்ரீராம். said...

நிலவை விட மலர் அழகு!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
உண்மைதான்.
ஆல்மண்டா பூ எப்பவுமே அழகு.
வீட்ட்ல சொல்றேன்:0)
நன்றிமா.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகாக உள்ளது ! வாழ்த்துக்கள் !

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். விடாமல் தரும் வருகைக்கும் மிக நன்றி.

மாதேவி said...

நிலவை தூங்கவிடாமல் துரத்தித் துரத்திப் பிடித்தால் கண்ணாம்மூஞ்சி காட்டித்தான் விளையாடும்.:)))

சிறிதுநாள் பொறுத்திருங்கள்.