Blog Archive

Wednesday, February 08, 2012

தேன்கிண்ணம் வழங்கும் கயல்விழிக்கு இசைப் பரிசு

இசைகேட்டால்   புவி  அசைந்தாடும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அன்பு கயல்விழி செய்து வரும் இசைச் சேவை எல்லோருக்கும் தெரிந்ததே.
சிறுமுயற்சியைச் சொல்லவில்லை.
பெரிய தேன்கிண்ணத்தைச் சொல்கிறேன்.

எங்கிருந்தெல்லாமோ தேடிதேடி  முத்துக்களோ ரத்தினங்களோ என்று வர்ணிக்கத் தகுந்த   தேன் சொட்டும் பாடல்களை தன்  ''தேன்கிண்ணம்''
பதிவில் கொடுத்துவருகிறார்.
செய்நன்றி அறிதல்  முக்கியமல்லவா.
அதுவும்   என் விஷயத்தில் கண் அறுவை சிகித்சை
முடிந்த பிறகு, கண்களை மூடிக் கொண்டு காதைத் திறக்கச் சொல்லி வைத்தியர் சொன்ன அறிவுரையை
நான் ஏற்றுக் கொண்டாலும்,
கடைப் பிடிப்பது மிகவும்   சிரமமாக இருந்த போதுதான், கூகிள் ப்ளஸ்ஸில்

நம் கயல் ஒரு லின்க்,பழைய பாடல் ,கண்டசாலா  பாடினதைப் பதிந்திருந்தார்.

இந்த இன்பத்தை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்
இந்த மகிமை.
நானும் பலபாடல்களை கூல்டோட்  தளத்தில்  சென்று தேடி
தரவிறக்கம் செய்து அனுபவித்திருக்கிறேன்.
ஆனால் கயல்விழி முத்துலட்சுமி

கொடுத்த ஒரு லின்க் எனக்கு ஒரு தங்கச் சுரங்கத்தையே திறந்து
கொடுத்தது போல  இருந்தது.
அரசியோ அரசனாகவோ இருந்தால் பொற்கிழி  கொடுக்கலாம்.
நாமெல்லாம்  பதிவர்கள் தானே. அதனால்
இசைக்கான  சிம்பல்  ஒரு ''இசை நோட்'' தான்.
கூகிளில் கிடைத்த   படம் ஒன்றை இன்று  நம் கயல் முத்துவுக்கு
அளிக்கிறேன்.
மனமுவந்து ஏற்றுக் கொள்ளவேண்டும்.
இசைக்கு  கோடி நன்றி  கயல்விழி முத்துலக்ஷ்மி.



25 comments:

ராமலக்ஷ்மி said...

/இசைகேட்டால் புவி அசைந்தாடும் /

ஆம்:)! முத்துலெட்சுமிக்கு என் வாழ்த்துகள்!

சாந்தி மாரியப்பன் said...

இசையின்பத்துக்கு ஈடு இணையுண்டோ !!

pudugaithendral said...

முத்துலெட்சுமிக்கு என் வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா .. அது ஒரு குழுப்பதிவு வல்லி..இருந்தாலும் நான் தேர்ந்தெடுத்து ஒலிபரப்பும் பாடல்களைமுதல் ஆளாக வந்து அது பழசோ புதுசோ நீங்கள் அனுபவித்துப் பாராட்டும் போது என் பகிர்வுக்கும் ஒரு அர்த்தம் வந்து சேரும்.. நன்றி நன்றி..:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,

நான் மட்டும் இல்லை எல்லாருமே ரசித்துக் கேட்பது பாடல்களைத் தான். அந்த வழியில் கயலை,அவரது உழைப்பை நான் மிகவும் மதிக்கிறேன்.
பழைய பாடல்களை:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், உண்மைதான்
ஒரு நொடியில் நம் மனதைக் குளிரவைக்கும் சக்தி இசைக்கு மட்டுமே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தென்றல்.என் மாதிரி சிறிதே(!!!) வயது முதிர்ந்தவர்களுக்கு தேன்கிண்ணம் அமிர்தம் மாதிரி.உற்சாக பானம்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் கயல்.

மத்தவங்களை மறக்கலைமா.
உங்களை முதன்மைப் படுத்திவிட்டேன்.
தப்பில்லை என்று நம்புகிறேன்.
நீங்கள் இந்த விருதுக்கு உரியவர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.:)

கோமதி அரசு said...

/இசைகேட்டால் புவி அசைந்தாடும் /

இசை கேட்கும் அனுபவம் ஒரு வரப்பிரசாதம்.

கயல்விழி முத்துலெட்சுமிக்கு வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said...

இசையை ரசிப்பவன் நான். நீங்கள் சொல்லும் தளத்தின் லிங்க் கொடுத்தால் கயல்விழி வழங்கும் இசையை நானும் ரசித்து மகிழ்வேனே. நல்லதொரு பகிர்விற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கணேஷ், இதோ லின்க்.
எங்க காலத்துப் பாட்டிலிருந்து இன்னித்துப் பாட்டு வரை கேட்கலாம்.

http://thenkinnam.blogspot.in/

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, கயல்விழிமுத்துலட்சுமிக்கு வாழ்த்துகளை அனுப்பிடலாம்:)

ஸ்ரீராம். said...

கூல்டோட் தளத்தில் நிறையப் பாடல்கள் குவாலிட்டி வான்டட்! நானும் நிறைய கிடைக்காத பாடல்கள் அங்கிருந்து எடுத்ததுண்டு. 'தேன் கிண்ணம்' பக்கத்தை புக்மார்க் செய்து விட்டேன் என்று சொல்லவும் வேண்டுமோ...!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.கூல்டோட்,ஸ்மாஷ்ஹிட்ஸ் ,டிஎமெஃப் ஒன்றையும் விட்டுவைப்பதில்லை.யாஹூ மியூசிக் ஆங்கில பாப் இசைக்கு இருக்கவே இருக்கு;)

ADHI VENKAT said...

நல்ல இசையை கேட்டாலே நம் மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கும்.....

முத்துலெட்சுமிக்கு வாழ்த்துகள்...

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஆதி,
முதல் வருகைக்கு மிகநன்றி. இப்பதான் உங்கள் கல்யாணக் கதை படித்தேன்.
நல்ல ஜோடி!!மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

மாதேவி said...

முத்துலெட்சுமிக்கு வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

தேன்கிண்ணம் வருஷக்கணக்கில் ரசித்து வரும் பிலாக். நல்ல அங்கீகாரம்.

வெங்கட் நாகராஜ் said...

அட விருது... :)

விருது பெற்ற முத்துலெட்சுமிக்கு வாழ்த்துகள்.. தேன்கிண்ணம் குழுவினர் அனைவருக்கும் சேர்த்துதான்...

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி. இசைக்கு என்றும் உலகளாவிய பாசம் உண்டு இல்லையாமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.நீங்களுமா.உண்மையில் அங்கு கொடுக்கப்படும் பாடல்வரிகளையும் நான் ரொம்ப ரசிப்பேன். நாமெல்லாம் என்ன தமிழ் கற்றோம் என்று வெட்கப்பட வைக்கும் நல்ல பாடல்கள்.அந்தவகையில் தேன்கிண்ணம் சார்ந்த எல்லோருக்கும் நம் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட், தேன்கிண்ணம் ஒரு குழு என்பதே பதிவை பப்ளிஷ் செய்தபிறகே நினைவு வந்தது. இருந்தாலும் தேன்கிண்ணம் பதிவுக்குத் தானெ விருது கொடுக்கிறோம்.
ஏதோ ஒரு மயில்வாகனனாருக்கோ,திருமதி ராஜேஸ்வரி அம்மையாருக்கோ கொடுக்கத்தான் முடியவில்லை. நம்காலத்துக்கு இவர்கள் செய்யும் சேவை பிடித்திருக்கிறது.நெடு நாளைய எண்ணம்.

Yaathoramani.blogspot.com said...

ஒரு அருமையான பதிவரை பதிவினை
அறிமுகம் செய்தமைக்கு நன்றி
நானும் அந்த இசை வண்டியில்
ஏறிவிட்டேன்.
பகிர்வுக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரமணன் சார். உங்கள் எழுத்தைப் படிக்கும்போதும் எனக்குஇந்த நினைவு வரும். மனதில் தோன்றும் நல் எண்ணங்களை உடனே பதிந்து விடவேண்டும் என்ற நுணுக்கத்தை நன்றாகச் செயல் படுத்தி வருகிறீர்கள்.

இதே விஷயத்தை நான் மூன்று வாரங்கள் முன்பே செய்திருக்கவேண்டும். இப்பவாவது செய்தேனெ என்று ஆறுதல் பட்டுக்கொள்ளணும்.இந்த இசைத்தேர் நன்றாக பவனி வரட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !