Blog Archive

Saturday, January 21, 2012

மின்சாரம் கையைக் கடிக்கும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 மின் அளவி(!) நின்றுவிட்டது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை மீட்டர் படிக்கறவர்.எழுதறவர்:)
உடனே புது மீட்டர் வைக்கும்படி ஒரு மனு எழுதி நாற்பத்தைந்துபடி ஏறிக் கொடுத்துவிட்டுவந்தோம்.
ஒருநடவடிக்கையும் இல்ல்லை.
ஓடாத நாட்களுக்கு என்ன அபராதம் வருமோ என்ற கவலையில் தலைவலித்ததுதான் மிச்சம்
ஒருமாதம் ஆகி, தெரிந்த மின்வாரியத் தொழிலாளரைப் பிடித்தார் சிங்கம்.அவர் 1500 வாங்கிக் கொண்டு புது மீட்டர் வைத்தார்.
கணக்குப் போர்ட்டுச் சொல்லுங்க என்று எங்கள் இபி மேலாளரிடம் மீண்டும் கேட்டுக் கொண்டோம். ஆறுமாதங்கள் ஊரில் இல்லை என்பதையும் தெரிவித்தோம்.
அவரோ போட்டுவைக்கிற்றேன்.நாளைக்கு வரீங்களா என்றுசொல்லி விட்டார்


.மீண்டும் படியேறிப் போனால், பழைய ரிகார்டுகள் படி எங்கள் ஆவரேஜ் பார்த்து இவ்வளவு வருகிறது என்றார்.

ஒருவருடமாக மீட்டர் ரிப்பேராம்!! மாதாமாதம் பணம் கட்டினோமே அப்ப ஏன் சொல்லவில்லை என்றால், அவங்களுக்கு 200 வீட்டுக்குப் போகணும்மா. நினைவு இருக்காது என்றார்.
வேண்டுமானால் நான் அட்ஜஸ்ட் செய்து தருகிறேன். கொஞ்சம் கவனியுங்கள் என்றிருக்கார்!!!
.நம் டெபாசிட் பணத்தில் கழித்துக் கொண்டுவந்தாங்களாம்.
.இணைய வழியாகப் பணம் கட்டுவத்ற்கு ஒரு நண்பர் உதவி செய்ததால் தான் நாங்கள் வெளிநாடுக்குக் கிளம்பினோம்.:((

ஒருவழியாக நேற்று சமரசம் செய்து நேற்றுதான் முடித்தது. அவங்களைக் கேட்டால் இந்த வரிசையில் எல்லோருக்கும் அதே பிரச்சினைதான். நிற்பவர்கள் எல்லாம் 17000 வரை கொடுக்கணும்.
ஒண்ணும்சொல்கிறதுக்கு இல்லை.:(


:

13 comments:

ஸ்ரீராம். said...

உண்மையிலேயே மின்சார வாரியத்துடனான அனுபவம் மிகக் கொடுமையானது. அதிலும் இந்த டெபாசிட் மேட்டர் இருக்கே அது இன்னும் கொடுமை...அதே போல இந்த ஆவரேஜ் மேட்டர்...எங்களுக்கும் அனுபவம் உண்டு.

வெங்கட் நாகராஜ் said...

இங்கே தில்லியில் நிலைமை இன்னும் மோசம்மா...

நிறைய பேர் மின்சாரக் கட்டணம் கட்டுவதே இல்லை... எல்லாம் இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட் தான்...

ஒழுங்காகக் கட்டுபவர்கள் பாடுதான் திண்டாட்டம்.....

ராமலக்ஷ்மி said...

அரசு அலுவலகங்களின் மெத்தனப் போக்கு என்றுதான் மாறுமா? இங்கேயும் மின்சார வாரியத்தின் செயல்பாடு இங்கும் அப்படியே. அந்த வகையில் BSNL -லின் செயல்பாடுகள் கடந்த பத்து வருடங்களாகவே மிகச் சிறப்பு. பொதுமக்களை அவர்கள் அணுகும் முறையை மற்ற அரசு அலுவலகங்களூம் கடைபிடித்தால் நன்றாக இருக்குமென ஒரு பதிவு போட எண்ணீயுள்ளேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்ஸ்ரீராம். என்ன கூலாக கவனிங்கன்னு சொன்னாங்க;'!!! எனக்கு வந்த சங்கடத்தைச் சொல்ல முடியாது. அவங்க வேலையைச் செய்ய ஊக்கப்பணமா. என்னமோ நடந்தால் சரிங்கற விரக்திதான்.முதல்தடவை இப்படிச் செய்ய நேர்ந்ததேன்னு வருத்தம்.

வல்லிசிம்ஹன் said...

தலைநகரிலேயே இப்படியா வெங்கட்.

எப்படித்தான் கட்டாம இருப்பங்களோ. மனம் உறுத்தாதோ.

அதுவும் ஒழுங்காக ரசீதுகளையும் சரியாக வைத்துக் கொண்டு அவர்களிடம் காண்பித்தால் , ஹையஸ்ட் அமவுண்டைக் காண்பித்து இதை நாங்க ஆவரேஜா வைத்துக் கொள்ள முடியுமான்னு கேட்டால் எப்படி இருக்கும்:((

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.இதே வார்த்தையைத்தான் எல்லோரும் கேட்கிறார்கள் .அட அசடேன்னு என்னைப் பார்க்கிறார்கள். தெரிந்த விஷயம்தானே என்பதுதான்
ரி யாக்ஷன்!!!!

அப்பாதுரை said...

கஷ்டம்! எப்படியோ என்னவோ செஞ்சுட்டுப் நம்ம பாட்டுக்கு போக வேண்டியிருக்கு பாருங்க!

சமீபத்துல ஒரு industry லைசென்சும் ட்ரேட்மார்க் பாதுகாப்பும் வாங்குறதுக்காக அப்ளை பண்ணியிருந்தேன்.. கிட்டத்தட்ட ஆறு மாசத்துக்கு மேலே ஆகுது.. ஒரு இஞ்சு கூட நகரலை.. சம்திங் குடுத்தாத்தான் பேச்சே பேசறாங்க.. லஞ்சம் கொடுக்காம வேறே வழியே இல்லை.

அப்பாதுரை said...

ஆமா.. எம்ஜிஆர் கனவு சீன் மாதிரி டெம்ப்லேட் மாறிகிட்டே இருக்கே? ஜமாய்ங்க.

அப்பாதுரை said...

ஏவரேஜ் நல்லது தானே? இங்கேயும் அப்படித்தான். வருஷத்துல ஒரு தடவையோ ரெண்டு தடவையோ ரீடிங் எடுத்தா போதும்.

மாதேவி said...

இப்படியாகிவிட்டதே :((

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.,வம்ம ஊருக்கு எத்தனை மஹாத்மாக்கள் வந்தாலும் போதாது.
ஒரு எண்ணிக்கை சொல்லி போதுமான்னு கேட்டால் மூணு மடங்க்கௌ கேட்கிறார்..

உங்களுக்கும் இது போல அனுபவமா:(
ஆவரேஜ்னு அவங்க சொல்றது ஒருஆகஸ்ட் மாத பில். வீட்டில் விருந்தாளிகள் குமிந்து எல்லா விளக்குகள்,மின் விசிறிகள்
எல்லாம் நிற்காமல் சுற்றின காலம்.
மாக்சிமம் அமவுண்ட். காண்பித்தது.
அதை பனிரண்டால் பெருக்கினால் என்னால் கட்ட முடியாத தொகையாகப் போய் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மாதேவி. நல்லா இருக்கீங்களா. இதுதான் உலகம்.என்ன செய்யலாம்.

நெல்லைத் தமிழன் said...

இன்றைக்குத்தான் படித்தேன். உங்களுக்கும் 17ஆயிரம் பில் போட்டார்களா? என்னிடம், மொத்தம் 25 ஆயிரம் ஆகும், 18 வருமாறு செய்கிறேன், எனக்கு 5 ஆயிரம் கொடுங்க என்று சொன்னார்கள். இப்போ, இன்னும் ஜாஸ்தியாகும் அப்படிங்கறாங்க. இதுலவேற, 6 மாதத்திலேயே மீட்டரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். இந்த அநியாயத்தை எங்க போய்ச் சொல்றது?