Blog Archive

Friday, December 09, 2011

ஸ்ரீரங்கம் சொக்கப்பனை, கார்த்திகை நாள்.

சொக்கப்பனை  ஏற்றியாகிவிட்டது.ஸ்ரீரங்கா  அங்குதான் வரமுடியவில்லை. உன்னை எப்போதும் நினைக்கும் மனமும் வணங்கும் சிரமும்  இதோ  ஒளிர்விட்டுக் கொண்டிருக்கும்  சொக்கப்பனை எங்கள் துன்பங்களை ஒழித்து  எங்கள் வாழ்வில் ஆத்ம ஒளி ஏற்றட்டும்.
திருமண் காப்பு வடிவில்     விளக்குகள்
தோளுக்கினியானில்  மனதுக்கினியான் சொக்கப்பனையைப் பார்வையிட  ஏளுகிறான்.
சட சடவென்று  பரவப் போகும் அக்னிஅதைப் பார்க்க வரும் இறைவன்.
அனைவருக்கும்  கார்த்திகைத் திருநாள்   வாழ்த்துகள்.
இதைக் காணக் கொடுத்து வைத்தது ஒரு அதிசயம். விஜய் தொலைக்காட்சியில் திரு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் காலை உரையில் இன்று பெருமாளையும்,சொக்கப்பனையையும் கண்டேன்.
உரை தந்தவருக்கும் ஒளிக்காட்சி கொடுத்தவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Posted by Picasa

13 comments:

Geetha Sambasivam said...

இன்று வரை கிடைக்காத ஒன்று இன்று உங்கள் தயவால் கிடைத்தது. நன்றி வல்லி.

வெங்கட் நாகராஜ் said...

மிக அருமையான படங்கள்... பகிர்வுக்கு நன்றி.

உங்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள்....

ஷைலஜா said...

ஸ்ரீரங்கம் சொக்கப்பனை ரொம்ப அற்புதமா இருக்கும் வல்லிமா. எப்போதோ பார்த்தது.கல்யாணமாகி பெங்களூர் வந்தபின் கார்த்திகைமாதம் சொக்கப்பனை பார்க்க மட்டும் அங்கே போக வேளைவரவில்லை உங்க பதிவு கண்டதும் மனசில் ஜோதி!

Unknown said...

வல்லியம்மா, இதை மிஸ் பண்ணிட்டேனே, படம் காட்டியதற்கு நன்றியோ நன்றி. மாலை US-Time இல் வருதான்னு பார்க்கிறேன், வேளுக்குடி பேச்சு ரொம்பவே பிடிக்கும். நன்றி.

Unknown said...

For follow-up.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,நானும் என் பத்துவயதில் பார்த்ததுதான்.திருவல்லிக்கேணியில் ஏற்றுவார்கள் என்று எங்கள் மருமகள் சொல்வாள்.

நேற்று இந்தக் காட்சி கிடைத்தது அதிசயம்.அவர் பேசும்பொழுது எதிர்பார்க்காமல் இந்தக் காட்சி வந்ததும் ,காமிராவை எடுக்க மறந்து ஆ'என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.பிறகே எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளலாமே என்று படங்கள் பிடித்தேன்.உஷாராக எடுத்திருக்கவேண்டும். பெரியவார்த்தைகள் எல்லாம் வேண்டாம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். கிளியராக இல்லை. இருந்தாலும் செய்தியைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது என்றே நம்புகிறேன்.
இன்றுதான் எங்களுக்கெல்லாம் கார்த்திகை தீபம். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஷைல்ஸ், நம் பால்யபருவம் எத்தனை மகிழ்ச்சிகளை விட்டுச் சென்றிருக்கிறது.
அதை மீட்டெடுப்பது போல நேற்று ஸ்ரீரங்கன் வந்தான். இந்த ஜோதி என்றும் நம்மைக் காக்கும்.

வல்லிசிம்ஹன் said...

விஜய் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். நானே உங்க ஊருக்கு வந்த போது பார்த்திருக்கேன். கெ.பி.
கட்டாயம் பாருங்கள்.திருநாள் வாழ்த்துகள்.

பால கணேஷ் said...

அடடே... படங்கள் மூலமா ஜோதி தரிசனம் கிடைக்கச் செஞ்சுட்டீங்க. மிக்க நன்றி வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

வாங்க கணேஷ், நீங்கள் கூடப் பார்த்திருப்பீர்களோ என்னவோ.
தோன்றியதை உடனே பதிவிட்டுவிட வேண்டும் என்ற ஆசைதான்.:)
நன்றிமா.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை...
பகிர்விற்கு நன்றி அம்மா!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

சாந்தி மாரியப்பன் said...

அருமையா இருக்கு வல்லிம்மா.. அறியத் தந்தமைக்கு நன்றி.