Blog Archive

Sunday, December 25, 2011

கண்ணே என் கணினியே!

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 ஐந்து  நாட்களுக்கு முன் மதியம் 12 மணிக்கு என்  கணினி பூரண ஓய்வு எடுத்துக் கொண்டது.
சட சடவென்று ஜன்னல்கள்  மூடின. சைரன் ஒலிக்காத குறையாக
கறுப்பு பின்புலத்தில்
வெள்ளை எழுத்துகள்  கணினியை நிறுத்து. குறுந்தட்டைப் போட்டு
. எஃப் 8  நம்பரைத்தட்டு.
இல்லாவிட்டால் உன் கணீனிதயாரிப்பாளர
களைக் கூப்பிடு
என்றெல்லாம்  கட்டளைகள் வந்த வண்ணம் இருந்தன.

அப்போதுதான் ஒரு பதிவு எழுதி முடித்திருந்தேன்.

இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடவே  பத்து நிமிடங்கள்  ஆயின எனக்கு:(
அடுத்து என்ன செய்ய.
தேடு. பழுது பார்ப்பவரை. மூளையின் கட்டளை.
அப்புறம் நிதானித்தேன்.

ஒண்ணும் வேண்டாம். இன்று விடுமுறை. மற்ற வேலைகளைப் பார்க்கலாம்.
இந்த முடிவு எடுத்த இரண்டே நிமிடங்களில்
கணினிதானே நமக்கு தொடர்பு சாசதனம். நான் பெற்ற செல்வங்கள்
எங்களைத் தொடர்பு கொள்ள உபயோகிக்கும் சாதனம்!!

சரி சுற்று அந்த எண்ணை.
சுற்றியாச்சு.
அவர் உடனே உதவி செய்வதாக  உறுதி அளித்தார்..
ஆனால் இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளும்படியும், ஊரெல்லாம் சுற்றும் காய்ச்சல் தன் கம்பெனியையும் பிடித்திருப்பதாகச் சொன்னார்.
இதென்னடா சனிப் பெயர்ச்சி இப்படி விளையாடுகிறதே.
முதலில் மைக்ரோவேவ், பிறகு தண்ணீர்  பில்ட்டர்
,இப்பொழுது  இது.

இரண்டு நாட்களும்
புத்தகங்களும், சினிமாக்களும் ,கச்செரிக்களுமாகக்   கழிந்தன.

என்ன செய்தாலும் அம்மாவைத் தேடும் குழந்தை போல(!)
கை தானாகக் கீபோர்ட் பக்கம் போகும் விந்தைதான் வேடிக்கையாக இருந்தது

இதோ நேற்று  வந்து  ஹார்ட்  டிஸ்கிக் கழட்டிவிட்டுப் புதிது போட்டுவிட்டு
இணைய  இணைப்புக் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போனார்  கணினி ரிப்பேர் செய்பவர்.
பிறகு தட்டுத் தடுமாறி இணையுமும் வந்தது.

பதிவெழுத விஷயமும் கிடைத்தது.
நஷ்டம் என்று சொல்லப் போனால் ,நூசி  பூகம்பம் பற்றித் தெரிந்த பொது துளசியுடன் பேசமுடியாமல் போனதுதான்.
 இப்பொழுது எல்லாம் நலம்.
கலப்பைதான் கிடைக்கவில்லை.
அழகிதான் இருக்கிறாளே:)

அனைவருக்கும்  இனிய விழாக்கால வாழ்த்துகளும், புத்தாண்டு வாழ்த்துகளும்.



24 comments:

ஸ்ரீராம். said...

ஸோ....மீண்டு வந்து விட்டீர்கள்.... கண் செக்கிங் முடிச்சாச்சா...

ராமலக்ஷ்மி said...

எல்லாம் சரியானதில் மகிழ்ச்சி. தடங்கல்கள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. மீண்டு மீண்டும் வருவோம்.

வெங்கட் நாகராஜ் said...

சரியானதில் மகிழ்ச்சி.....

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்,
கண் செக்கிங்க் முடிஞ்ச்சாச்சு.
நான் தான் தை பிறக்கட்டும்னு தள்ளி வைத்தேன்.
சொட்டு மருந்து மூன்று வேளைகள் . உதவியாக இருக்கிறது..
கண்ணுக்கு ஓய்வு தேவை என்று என் கணினிக்குத் தெரிந்து ஓய்வு கொடுத்துவிட்டது
என்று நினைக்கிறேன்:) நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி.

மீண்டும் மீண்டும் வரும்படிச் செய்துவிடுகிறது.
இந்தப் பழக்கம்.கிட்டத்தட்ட 14 வருடப் பழக்கம்.
நட்பு ஆக்கிரமிப்புச் செய்துவிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.சரியாகிவிட்டது. இன்னும் இந்த வெப்காமிரா அதெல்லாம் சரியாக்கணும்.செய்துடலாம்.:)

Geetha Sambasivam said...

கணினி சரியானதில் மகிழ்ச்சி. இம்மாதிரித் தடங்கல்கள் சகஜம் தானே. இணையம் பிரச்னையா அங்கே? :((

கண்ணுக்கும் அவ்வப்போது ஓய்வு கொடுத்துக்கொள்ளவும்.

மாதேவி said...

மகிழ்ச்சி.

கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

கீதா இணையத்தில தப்பு இல்லை. உங்க உதவியால் அறிமுகமானவர் தான் வந்து இரண்டு நாட்களில் புது விண்டோஸ் 7 மாற்றிவிட்டுப் போனார்.
இணைய கனெக்ஷன் கிடைக்க கொஞ்ச நேரம் ஆயிற்று.
இந்த இணையத்திலிருந்து விலகி இருக்க ஒரு சந்தர்ப்பம்
கிடைத்தது.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. புத்தாண்டு எல்லாருக்கும் நல்லதே நடக்கட்டும்.

Geetha Sambasivam said...

வல்லி, இ கலப்பையை இங்கே நேரடியாகச் சென்று டவுன்லோடு செய்துகொள்ளுங்கள். வின்டோஸ் 7 புதியதில் நன்றாகவே வேலை செய்கிறது. மேலும் கிரந்த எழுத்துக்களும் சரியாக வருகிறது. க்ஷ, ஷ, ௐ,௳,௴ போன்றவை நன்றாகப் போடமுடியும்

http://thamizha.com/ekalappai-anjal

E kalappai 3.0.1 version

ஹுஸைனம்மா said...

கீழேயிருந்து ரெண்டாவது படத்தில் இருக்கும் பூ என்ன பூ? Desert Rose-ஆ? துபாயிலிருந்து கொண்டுபோனதா?

//அப்போதுதான் ஒரு பதிவு எழுதி முடித்திருந்தேன். இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடவே பத்து நிமிடங்கள் ஆயின//

ஆமாம். கஷ்டப்பட்டு டைப்பிய பின் காணாமல் போனால், அதிர்ச்சிதான். ஒண்ணும் ஓடாது.

ஹுஸைனம்மா said...
This comment has been removed by a blog administrator.
திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் மனம் அந்த சமயத்தில் என்ன வேலை செய்தாலும் சரியாக செய்ய முடியாது. நானும் அனுபவப்பட்டுளேன். சரியானதில் மகிழ்ச்சி! பூக்கள், தீபங்கள், பூஜையறை - அனைத்தும் அருமை! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
படிச்சிங்களா?:
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

வல்லிசிம்ஹன் said...

வாங்க்கப்பா ஹுசைனம்மா. அது டெசர்ட் ரோஸ் தான்.ஆனால் எங்க்க ஊர்ல சுட்டது:)
பெற்றோல் பங்க் ஓரமா கிடந்தது. அதை எடுத்துவந்து வளர்த்தது.நல்லாப் பெரிசாகிவிட்டது.

கணினி இல்லைன்னால் கஷ்டம்தான் பா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Asiya Omar said...

தலைப்பும் பகிர்வும் பொருத்தம்.சில சமயம் இப்படி நடந்து,மீண்டு வரும் பொழுது அப்பாடான்னு இருக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

கணினி கபால்ன்னு மண்டையப் போட்டுவிடும் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்லதான் நாம கணினிக்கு எவ்ளோ அடிமைப் பட்டுக் கிடக்கிறோம்னு புரியுது.. இல்லையா வல்லிம்மா :-)

பால கணேஷ் said...

-அடடே... கை அனிச்சைச் செயலா கீ போர்டுப் பக்கம் போகுது -இந்த மாதிரி நானும் அனுபவப் பட்டிருக்கேன். ஒரு சின்ன ரெஸட்டுக்கப்புறம் கணினிக்கு அருகில் வரும்போது இன்னும் ஃப்ரெஷ்ஷா ஒரு ஃபீல் வருமே... வந்ததா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் மிகவும் நன்றி சரியான புரிதல்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆசியா ஒமர்,
உண்மைதான். எனக்கு இணையம் இல்லாவிட்டால் வெளினாட்டில் இருக்கும்
குழந்தைகளுடன் பேசுவது சிரமம் ஆகிவிடுகிறது. அதுதான் சிரமமாகிவிடுகிறது.

காலத்தின் மாற்றம்.:(

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கணேஷ்,
கட்டாய ஒய்வு ஐந்து நாளைக்கு:)
கதா காலட்சேபம் கேட்க முடிந்தது. புத்தக அலமாரியை தூசி தட்டி அடுக்க முடிந்தது:0)

அப்பாதுரை said...

[புத்தாண்டு வாழ்த்துக்கள்]

இணையம் பிரச்னையா அங்கே? :((

இதானே? :)

வல்லிசிம்ஹன் said...

புத்தாண்டு வாழ்த்துகள் துரை. இணையமும் என்று சேர்த்துக் கொள்ளவேண்டும். :)
இப்போது கணினியும் சரியாகிவிட்டது.
நேரம் தான் சுருங்கிவிட்டது.மார்கழியில் செய்ய வேலையா இல்லை..
தானே புயலும் சேர்ந்து கொண்டது.