Blog Archive

Sunday, December 25, 2011

கண்ணே என் கணினியே!

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 ஐந்து  நாட்களுக்கு முன் மதியம் 12 மணிக்கு என்  கணினி பூரண ஓய்வு எடுத்துக் கொண்டது.
சட சடவென்று ஜன்னல்கள்  மூடின. சைரன் ஒலிக்காத குறையாக
கறுப்பு பின்புலத்தில்
வெள்ளை எழுத்துகள்  கணினியை நிறுத்து. குறுந்தட்டைப் போட்டு
. எஃப் 8  நம்பரைத்தட்டு.
இல்லாவிட்டால் உன் கணீனிதயாரிப்பாளர
களைக் கூப்பிடு
என்றெல்லாம்  கட்டளைகள் வந்த வண்ணம் இருந்தன.

அப்போதுதான் ஒரு பதிவு எழுதி முடித்திருந்தேன்.

இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடவே  பத்து நிமிடங்கள்  ஆயின எனக்கு:(
அடுத்து என்ன செய்ய.
தேடு. பழுது பார்ப்பவரை. மூளையின் கட்டளை.
அப்புறம் நிதானித்தேன்.

ஒண்ணும் வேண்டாம். இன்று விடுமுறை. மற்ற வேலைகளைப் பார்க்கலாம்.
இந்த முடிவு எடுத்த இரண்டே நிமிடங்களில்
கணினிதானே நமக்கு தொடர்பு சாசதனம். நான் பெற்ற செல்வங்கள்
எங்களைத் தொடர்பு கொள்ள உபயோகிக்கும் சாதனம்!!

சரி சுற்று அந்த எண்ணை.
சுற்றியாச்சு.
அவர் உடனே உதவி செய்வதாக  உறுதி அளித்தார்..
ஆனால் இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளும்படியும், ஊரெல்லாம் சுற்றும் காய்ச்சல் தன் கம்பெனியையும் பிடித்திருப்பதாகச் சொன்னார்.
இதென்னடா சனிப் பெயர்ச்சி இப்படி விளையாடுகிறதே.
முதலில் மைக்ரோவேவ், பிறகு தண்ணீர்  பில்ட்டர்
,இப்பொழுது  இது.

இரண்டு நாட்களும்
புத்தகங்களும், சினிமாக்களும் ,கச்செரிக்களுமாகக்   கழிந்தன.

என்ன செய்தாலும் அம்மாவைத் தேடும் குழந்தை போல(!)
கை தானாகக் கீபோர்ட் பக்கம் போகும் விந்தைதான் வேடிக்கையாக இருந்தது

இதோ நேற்று  வந்து  ஹார்ட்  டிஸ்கிக் கழட்டிவிட்டுப் புதிது போட்டுவிட்டு
இணைய  இணைப்புக் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போனார்  கணினி ரிப்பேர் செய்பவர்.
பிறகு தட்டுத் தடுமாறி இணையுமும் வந்தது.

பதிவெழுத விஷயமும் கிடைத்தது.
நஷ்டம் என்று சொல்லப் போனால் ,நூசி  பூகம்பம் பற்றித் தெரிந்த பொது துளசியுடன் பேசமுடியாமல் போனதுதான்.
 இப்பொழுது எல்லாம் நலம்.
கலப்பைதான் கிடைக்கவில்லை.
அழகிதான் இருக்கிறாளே:)

அனைவருக்கும்  இனிய விழாக்கால வாழ்த்துகளும், புத்தாண்டு வாழ்த்துகளும்.



Saturday, December 17, 2011

மார்கழிப்பூக்கள் கண்ணனுக்கு

ஸ்ரீராம் கேட்ட வேண்பொங்கல்  கூகிளார்  கொடுத்தது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
 மல்லாண்ட  திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித் திருக்காப்பு
.
அந்தச் சேவடிகளுக்கு  மலர் தூவி உன் தோழியும் பத்தினியும் ஆன ஸ்ரீஆண்டாளின்  செம்பஞ்சுப் பாதங்களுக்கும் பல்லாண்டு பாடி மார்கழியின் ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும்
பாவைப் பாட்டுகளை ப் பாடி உய்யுமாறு அருள்வாய்.

Friday, December 16, 2011

பழைய கதை சில

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எழுபதுகளில்   காரைக்குடி   இனிமையான ஊராகவே இருந்தது.
நாங்கள்   வசித்தது  தபால் அலுவலகக்  கட்டிடத்தில் .
'
அப்பா   போஸ்ட் மாஸ்டராக  , ராமேஸ்வரத்திலிருந்து இந்த அழகப்பநகர்  மாற்றலில் வந்தபோது. ,
தபால் அலுவலகம் பெரியதாகத் தான் இருந்தது..
அதை ஒட்டிய இடம், போஸ்ட்மாஸ்டரின் குடும்பத்துக்கு ஒதுக்கப் பட்டது.
ஒரு  புதர் மண்டிய தோட்டம்.
வீட்டிற்கும் தண்ணீர்க் கிணற்றுக்கும் நடக்க வேண்டிய
தூரம்  அரைப் பர்லாங்காவது இருக்கும்.
நடுவில் ஊர்வன  வம்சம் நிறைய இருக்கும்.  செம்மண் பூமியாச்சே.
ஆளுயர கரையான் புற்றுகளும்  இருக்கும்.
அப்பாவும் தம்பியும்  வீட்டைச்  சுத்தம் செய்துவிட்டு எங்களுக்குக் கடிதம் போட்டார்கள். அம்மா என்னுடைய இரண்டாவது பிரசவத்துக்காகச் சேலத்திற்கு  உதவியாக வந்திருந்தார்.
என் மகன் பெரியவனுக்கு   ஒண்ணரை வயது. சவலை.

பாட்டியுடனே ஒட்டிக் கொள்வான்.அவனையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அம்மா சமையல் வேலை செய்து, எனக்கு முறை தவறாமல்  தலைக்கு  எண்ணெய் வைத்து  விறகடுப்பில்  பெரிய தவலையில் தண்ணீர் கொதிக்க வைத்துக்  குளிப்பாட்டிவிடுவார்.
பிறகு சின்னப் பாப்பா குளியல். மாமியாரும் உதவிக்கு வந்தார்.

குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே  சிங்கம் எங்களை  தன் பிரிய ஃபியட் வண்டியில் மனமில்லாத மனத்தோடு  காரைக் குடியில் கொண்டு விட்டார்.

அம்மாவுக்கு வண்டியைவிட்டு இறங்கியதும் அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். மிகச் சிறிய வீடு. மூங்கில்
அழி போட்ட வராந்தா. ஒரே ஒரு ஆறுதல் பெரிய வேப்ப மரம் கப்பும் கிளையுமாகச்  சுகத் தென்றல் வீசிக் கொண்டிருந்தது.
அதற்கப்புறம் ஒரு குட்டி ஹால். ஹாலை ஒட்டி வெளி வராண்டா. பாத்திரம் தேய்க்க, குளிக்க.
அதை ஒட்டி  ஒரு படுக்கை அறை.
இந்தப் பக்கம்   ஒரு சிறிய சமையலறை.
எங்களுக்கு முந்தி இருந்தவர்களுக்கும் சுத்தத் திற்கும் சம்பந்தம் இல்லை போல.
சுவரெல்லாம் கரி.
விளக்கெண்ணெய் போட்டுத்   தடவி குழந்தைக்குத் திருஷ்டிப் பொட்டு வைக்கலாம்ம்மா என்று நான் சொன்னதை அம்மா
ரசிக்கவில்லை.

தரையெல்லம் பெயர்ந்திருந்தது.
ஒரு பூரானை வேறு பார்த்துவிட்டாள்.
கேட்கவேண்டுமா.
நீயும் குழந்தைகளும் கட்டிலில் ஏறி உட்காருங்கள் முதலில்.நிறையப்
பூச்சிகள் வருகின்றன.
டேய் ரங்கா, ....................................
 முதல்ல இங்க வா.
குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த சின்னத்தம்பி வந்தான்.
 சைக்கிள்ள  காத்து இருக்காடா.
 இருக்குமா. நல்ல ஜலம்  குடிக்கிறதுக்கு எங்க எடுக்கணும்னு அப்பாகிட்ட கேள். அப்படியே போய்க்  குடத்தில்  எடுத்துக் கொண்டுவா,.

பதினாறு வயது கூட நிரம்பாத சின்னவன் எல்லா வேலைகளையும் தோளில் போட்டுக் கொண்டான்.
நல்ல  பாங்கான     உடல்.
 அவனுக்கு. வேலை செய்ய அசர மாட்டான்.
புதிதாக அழகப்பா காலேஜில் சேர்ந்த பெருமை வேற. பியுசி யில் புதுத் தோழர்கள் வேற கிடைத்திருந்தார்கள். ஒரே உற்சாகம்.
அம்மா சொன்னதற்கெல்லாம் தலையாட்டினான்.

முத்ல்ல கிணற்றிலேருந்து தண்ணீர் கொண்டுவா
. ரெண்டு ட்ரம்  ரொம்பினதும்.செக்காலை  ஹோட்டலிலிருந்து இரண்டு  சாப்பாடு வாங்கிண்டு வந்துடு. சாதம் கரியடுப்பில் வைத்துவிடுகிறேன்.  இது அம்மா.

 அன்றிலிருந்து 30 நாளே ஆன என் பெண்ணை நான் கவனிக்கப் பெரியவனை
அவன் பார்த்துக் கொண்டான்.
அப்பாவோடு  சேர்ந்து சுற்றியிருந்த இடங்களை மண்வெ ட்டி,  கத்திகள் இவைகளை வைத்துக் கொண்டு சீர் செய்தான். ஆடுமாடுகள் நுழையாமல்  மூங்கில் படல் செய்து போட்டான்.

எங்க இருந்தோ   கட்டாந்த்தரையாக இருந்த வாசலில்  சினியா   Ziniya  பூச்செடிகள் கொண்ட   தொட்டிகளைக் கொண்டுவந்து வைத்தான்.

இரண்டு  மாதங்கள் கழித்துப் புகுந்த வீட்டுக்குக் கிளம்பிய என்னையும் என் குழந்தைகளையும்,   ரயில்  பயணமாகக் கூடவந்து  சேலம் கொண்டுவந்து சேர்த்தான்.


இன்று இருந்தாலும்    ஏதாவது  வழியில் உதவிக் கொண்டுதான் இருப்பான்.
எங்கிருந்தோ வந்தான் ரங்கன். கண்ணனைப் பார்க்கப் போய்விட்டான் ஒரு மார்கழி மாதம்.




Wednesday, December 14, 2011

பேசியது கிளியா.

பச்சை ஒட்டகச் சிவிங்கி:)
Add caption
பயணத்தின் போது போஸ்  கொடுத்த ஒற்றைக் கிளி


கிளி பேசுவது அழகு. அதன்  குரல்  கிறீச்சிட்டால் பக்கத்தில் ஏதோ பூனை வந்துவிட்டது   என்று அர்த்தம். மற்றபடி சாடுவாக கண்ணை  அப்படியும் இப்படியும் உருட்டியபடி கூடுக்குள் தத்தித் தத்தி அது நடக்கும் அழகே தனி.
இந்தக் கிளியை  என் தோழி  வளர்த்து வந்தாள்.
"  அக்கா,  பிசெட்(பிஸ்கட்) "

இதெல்லாம் மட்டும் சொல்லும்.
மூக்கின்  சிவப்பு  சொல்லி  முடியாது.
அந்தப் பச்சையும் சிவப்பும் இன்னும் என் எண்ணங்களை ஆக்கிரமிப்பதால் தான்  வாங்கும் அத்தனை உடைகளும் அதே வண்ணத்தில் அமைகின்றனவோ என்று ஒரு ச்சின்ன  சந்தேகம்  கூட  எனக்கு உண்டு.:)

அந்தக் கிளிக்கு ஒரு நாள் தோழி ,  ஒரு பயங்கர சிகித்சை செய்தாள். யாரோ சொன்னார்கள் என்று அந்தக் குட்டிக்கிளியின்  சிறகுகளை   ஒரு அங்குலம்    அளவுக்குக்  கத்திரிக்கோலால்      நீக்கிவிட்டாள்.
அய்யோ  அதுக்கு வலிக்கப் போகிறதே  என்று  நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே  அதைச் செய்து முடித்துவிட்டாள்.
அதுவோ காச் மூச்னு  சத்தம் போட்டது.
அச்சுஅசல்  திட்டு வார்த்தைகள் போலத்  தோன்றியது.
கிளியை வாங்குவானேன்  இப்படி இறைக்கைகளைச்  சிதைப்பானேன் என்று கேட்டேன்.
உனக்கு   ஒண்ணும் தெரியாதுடி.
கட் செய்யலைனால் பறந்து போய்விடும்.

என்ற பதிலை வீசினாள்.
பூனை  வந்தால் அதனால் நகர முடியாதே அப்ப என்ன பண்ணும் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
 என்ன  ஆச்சோ அந்தக் கிளிக்கு.தெரியவில்லை. அடுத்தமாதம் திண்டுக்கல் ,  ஊர் மாற்றல் .

இப்ப எதுக்குக் கிளி  கதை  என்று பார்க்கிறீர்கள்.

மங்கையர் உலகம்  ஒளிபரப்பில்  எழுத்தாளர் சிவசங்கரி
   ஒரு கதை சொன்னார். நல்ல பேச்சுத் திறமை கொண்ட கிளி   ஒன்றை  ஒருவர் வாங்கினாராம்.  என்ன சொன்னாலும் சலிக்காமல்  திருப்பிச்  சொல்லுமாம். எந்த   சத்தத்தையும்  அதே போலே  கத்திக் காட்டுமாம்.  ஒரு நாள்  இந்தக் கிளி  நிற்காமல்  இரும  ஆரம்பித்ததாம்.
தேன் கொடுத்துப் பார்த்தாராம். பால் கொடுத்தாலும்
பயன் இல்லையாம்.

சரின்னுட்டு ஒரு வெடரினரி  வைத்தியர்  இடம் கிளியை  அழைத்துக் கொண்டு போனாராம்.
அவர் முன்னாடியும் இந்தக் கிளி இருமிக் கொண்டே இருந்ததாம்.
கொஞ்ச நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் முகத்தில் சிறிய புன்னகை தோன்றியதாம்.
''ஏன் சார் நீங்கள் புகை பிடிப்பவரா''  என்று வந்தவரைக் கேட்டாராம்.  ''ஆமாம் சார்  இருபது சிகரெட்டாவது பிடிப்பேன் ''என்றாராம் கிளிக்காரர்.
ஒரு வைத்தியம் சொல்கிறேன். அதைச் செய்தால் இருமல் நின்றுடும் என்றாராம் வைத்தியர்,.  கட்டாயம் செய்கிறேன்  என்று உறுதி கொடுத்தார்  இவர்.
நீங்கள் ஒரு பதினைந்து நாட்களுக்குப் புகைபிடிக்காமல் இருங்க என்றாராம்.
   கிளி இருமலுக்கும்  என்  சிகரெட்டுக்கும் என்ன சார் சம்பந்தம் என்றாராம்  கிளிக்காரர்:)
நான் சொல்றபடி செய்யுங்க. 15  நாட்கள் கழித்துவாருங்கள் என்றாராம்.
கிளிக்காக  இவரும் புகை பிடிக்காமல் இருந்தாராம். நிறுத்தின இரண்டு நாட்களிலியே  கிளி இருமுவதை நிறுத்திவிட்டதாம்.
அதிசயமான அதிசயம்    புகைப்பவருக்கு.

எடுத்துக் கொண்டு ஓடினாராம்.  வைத்தியரிடம். என் சிகரெட்டுக்கும் கிளி இருமலுக்கும் என்னய்யா சம்பந்தம் என்று அவசரமாகக் கேட்டாராம்.

சிகரெட்டுக்கும் உமக்கும் உம்மோட இருமலுக்கும் தான் சம்பந்தம்  சார். நீங்க புகைபிடிச்சு  இருமறீங்க.
அந்தச் சத்தத்தை  அது செய்து காட்டுது.
இன்னும் கொஞ்ச நாளானால்  சிகரெட்டைக் கூடக் கேட்டு இருக்கலாம்:)
என்று நகைத்தாராம் டாக்டர்.
நீங்கள் இருமுவதை நிறுத்தியதும் அதுவும் நிறுத்திவிட்டது. அவ்வளவுதான்.
எப்படியோ புத்திசாலி   வைத்தியர்கள் இருப்பதால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டன!
செய்திக்கு திருமதி சிவசங்கரிக்கு நன்றி சொல்கிறேன்.




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Tuesday, December 13, 2011

கிளியே கிளியே மார்கழிக்கிளியே!

ரங்கா  ரங்கா  மார்கழி வந்துவிட்டது
காத்திருக்கும்  கிளி. இந்தக் கிளிக்குத்தான் எத்தனை ஏற்றம்.
பாவையர் தலைவியின் தோளேறி அவள்
வாய் மொழியும் கண்ணன்  திரு நாமங்களையும்,
பாவையைப் பாடும் அரையர்  கூத்தினைப் பார்க்கவும்,
அவள்  சூடும்மாலைவாசம் அனுபவிக்கவும்,
ரங்கனுக்கும் அவளுக்கும் ரகசியத் தூது செல்லவும்
கொடுத்துவைத்திருக்கிறதே.
பச்சைக்கிளியே, தினம் தினம் பிறக்கும் புதுக்கிளியே
நீ என்றென்றும் வாழ்க.

உன்னைத் தோளில் ஏந்திய  நோன்புப்பாவை வாழி.
அவள் கைத்தலம் பற்றிய மன்னன் கோவிந்தனும் வாழி.
திருப்பாவை முப்பதையும் நாங்கள் பாட எங்களுக்கு நல் எண்ணமும்,நல் மொழியும்,தரிசனம் கிடைக்க நல்ல கண்களும்,
நல்மொழிகள் கேட்க   செவிகளும் வேண்டி நமஸ்கரிக்கிறோம்.




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

Friday, December 09, 2011

ஸ்ரீரங்கம் சொக்கப்பனை, கார்த்திகை நாள்.

சொக்கப்பனை  ஏற்றியாகிவிட்டது.ஸ்ரீரங்கா  அங்குதான் வரமுடியவில்லை. உன்னை எப்போதும் நினைக்கும் மனமும் வணங்கும் சிரமும்  இதோ  ஒளிர்விட்டுக் கொண்டிருக்கும்  சொக்கப்பனை எங்கள் துன்பங்களை ஒழித்து  எங்கள் வாழ்வில் ஆத்ம ஒளி ஏற்றட்டும்.
திருமண் காப்பு வடிவில்     விளக்குகள்
தோளுக்கினியானில்  மனதுக்கினியான் சொக்கப்பனையைப் பார்வையிட  ஏளுகிறான்.
சட சடவென்று  பரவப் போகும் அக்னிஅதைப் பார்க்க வரும் இறைவன்.
அனைவருக்கும்  கார்த்திகைத் திருநாள்   வாழ்த்துகள்.
இதைக் காணக் கொடுத்து வைத்தது ஒரு அதிசயம். விஜய் தொலைக்காட்சியில் திரு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் காலை உரையில் இன்று பெருமாளையும்,சொக்கப்பனையையும் கண்டேன்.
உரை தந்தவருக்கும் ஒளிக்காட்சி கொடுத்தவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Posted by Picasa

Thursday, December 08, 2011

அண்ணாமலை ஈசனடிகள் சரணம்

பக்தர்கள்
கோவில்
கிளியுடன் அம்பாள்
பரணிதீபம் சரியாக மாலை ஆறுமணிக்குக் கார்த்திகை தீபம் ஆகிறது.
அம்மையும் அப்பனும்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்
கோவில் தீபம்
அண்ணாமலைக்கு  அரோகரா



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இன்று  வீட்டிலிருதபடியே அண்ணாமலையார்  ஜோதியைக் காணும் பாக்கியம் கிடைத்தது.
கூடவே  திருமதி சுதா சேஷையனுடைய  பக்தி உணர்ச்சி நிரம்பிய விளக்கங்களோடு திருவண்ணாமலை ஸ்தல மகிமையைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கண்கொள்ளாக் காட்சியாக எனக்குக் கிடைத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
அனைவருக்கும்   கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள். தீப ஒளி எங்கும் நிறைந்து எல்லோர் வாழ்விலும்  ஆநந்தம் பெருகட்டும். ஓம் நமசிவாய.

Posted by Picasa

பிட் போட்டி டிசம்பர் மாதத்துக்குப் படங்கள்

நொத்ரெதாம்  கோபுரங்கள் பாரீஸ்
வீட்டுக் கடிகாரப் பெண்டுலங்கள்
செம்பருத்தி இறைவனுக்கு
கொலுவுக்கு வாங்கிய  யானைகள்
மஞ்சள் செம்பருத்திப் பூ.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa