Blog Archive

Sunday, November 27, 2011

அழகு ஆறு(மீள் பதிவு)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 http://i113.photobucket.com/albums/n229/revathi-n/araguaiensis.jpg < head>

நாச்சியார்

கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.
My Photo
Name:
Location: CHENNAI, TAMILNADU, India
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, April 05, 2007


அழகே அழகு அழகா?

 


























அழகைப் பற்றி கேள்வி வருமென்றே தெரியாது.






ஒருவேளை முதுமையே அழகுனு பதில் வரும் என்று கொத்தனார் எதிர்பார்த்தாரோ?


எப்படியோ எங்களைப் பேரும் போட்டுக் கைக்கடிதாசு வேற அனுப்பிட்டார்.




எனக்குத் தெரிந்த அழகை எழுதுகிறென்.


ஆளழகா, மனதழகா எது நம்மைக் கவருகிறது?


முதலில் முகம் தான்.


நம்மைப் பார்த்து சந்தோஷப்படும் முகமே


அழகு முகம்.


முன்பெல்லாம் சினிமா பத்திரிகைகளில் அப்போது பிரபலமாக இருந்த நடிகர் படம்


ஒரு வாரப்பத்திரிகையின் முகப்பில் வந்தது.


15 வயதில் அவர் முகமே மனதில் பதிந்து


நிறைய நாளுக்கு இந்த முகம் மனதில் மிதந்து


கொண்டு இருந்தது.


அப்போது அதைப் பற்றி சொல்லமுடியாது இல்லையா. இப்போ சொல்லலாம்;-0)


பிறகு ஒரு தனியார் கம்பனியின் செய்திப் பத்திரிகையில


ஒரு நியூஸ்.


விபத்து நடந்து, ரத்தம் இழந்தவர்க்கு இரத்ததானம் செய்தவர்


போட்டொ.
'உயிர் காத்த உத்தமர்' என்று தலைப்பு கொடுத்த சிரித்த முகமாக ஒரு இளைஞர் படம்.


அவ்வளவுதான் மனதிலிருந்த நடிகர் மறைந்தார்.


அப்போது இடம் பிடித்த நபர்தான் இன்னும் வீட்டுக்காரர்


என்ற பெயரில் சற்றே வயதேறிய முகத்தோடு,பற்களை மாற்றிக் கொண்டு, எதிரேயும்


மனசிலும் இருக்கிறார்.:-0)








பிடித்த அழகான இடம்
---------------------------------------

வேற ஏது ? ஏடு கொண்டலவாடா வெங்கடரமணா
என்று அழைத்துக் கொண்டு மலையேறும் போதே

வா வா என்று அழைக்கும் என் அப்பன் பாலாஜி
இருக்கும் இடம்.

திருப்பதி...திருமலா.வீட்டை விட்டுக் கிளம்புவதிலிருந்து திரும்பி வந்து சேரும் வரை நீக்கமற நிறைந்து,
போவதற்கு முன்னால் ஆர்வம், வந்தபின்னால் அவனைத் தரிசித்த வைபவம் பற்றிய பேச்சு,நினைவு

அங்கு இருக்கும் ஒவ்வொரு அணுவும் அவனைப்
பாடுவது.மற்றும் வளையல் கடைகள்வுட்லாண்ட்ஸ்,மாயுரா ,பத்மாவதி தங்குமிடம்

கடைத்தெரு,கோவிலுக்குள் நுழையும் முன்னர் காலை வருடும் வெதுவெதுத் தண்ணீர்,
கொடிமரம், அதில் ஆடும் மணிகள்

சுற்றிநகரும் வரிசையின் சுவரில்,ப்ரகாரத்தில் தென்படும் எழுத்துகள், வாகனங்கள்
ஒவ்வொன்றையும் தடவிப் பார்த்து, அவன் அருளே

படர்வதுபோல நம் மேல் வீசும் காற்று,
கடைசியில் அத்தனை கும்பல் கூட்டத்துக்கு நடுவில் ,அந்த மேட்டில் ஏறி அவனுடைய முதல் தரிசனம் கிடைத்ததும் கண்களில் பெருகும் நீர்.

கோவிந்தா'என்று நிறையும் மனம்.

இதைவிட அழகாக இந்தப் பூமியில் வேறு இடம் கிடையாது எனக்கு.
பிறந்த வீட்டில் இருக்கும்போது மதியத்
தூக்கம் போடும் சாப்பாட்டுஅறையைத் தவிர.;-)






அடுத்த அழகு நிகழ்ந்தது.
**********************************8

எதைச் சொல்ல,எதை விட என்று சொல்லித் தப்பிக்க முடியாது.
கடந்த வருடம் ஏப்ரல் தான்.
காலை வாசலில்  கோலம்  போடும் நேரம் தண்ணீர் வழுக்கிக்

கீழே விழுந்துவிட்டேன். எழுப்ப யாருமில்லை. சமயத்துக்கு உதவியாக வந்த கீரை கொண்டுவரும் பெண் ஒரு பள்ளி மாணவி.என்னைக் கைத்தாங்கலாகப் பிடித்து உள்ளெ உட்காரவைத்துக் குடிக்கத் தண்ணீரும் கொடுத்தாள்.

அது கூடப் பரவாயில்லை.




மறுநாள் தொடங்கி அடுத்த பத்து நாட்களுக்கு கீரையைக் கழுவி, அரிந்து கொண்டுவந்த கொடுத்த அருமைதான் என்னை மிகவும் நெகிழ வைத்தது. சின்னப் பெண்.


12 வயதுதான் ஆகிறது.(நான் அவளை உதவி கேட்கவும் இல்லை). மகா சுட்டி.


அழகுப் பரிசு

இதே பங்குனித் தேரடி மஞ்சளும்,குங்குமமும்
மருதாணியும்(கபாலீஸ்வரர் திருவிழா
பச்சை சிகப்புக் கண்ணாடி வளையல்களும் வாங்கி வந்து கொடுத்தாளே பார்க்கணும்!!அவள் மனதின் அழகுக்கு ஏது ஈடு.

என்னை மிகவும் அழகாக உணர வைத்த பரிசுகளில்முக்கியமானது. இதுவும் ஒன்று.



குறும்பு.......
..ஒரு கண்ணன் பிறந்த நாள்.

சமையலறையில் நான் படு மும்முரம்.
மேடைமேலே காஸ் அடுப்பு சீடை அப்பம்
, கீழே திரி ஸ்டவ் . பட்சணங்கள்.
தயார் செய்து கொண்டிருந்தேன்.

கடைந்த வெண்ணை அவல்,சுக்கு வெல்லம்
எல்லாவற்றையும் தரையில் கோலமிட்டு ஒரு பெரிய தட்டில் வைத்துவிட்டு   இந்தப் பக்கம் வைத்துவிட்டேன்.

சின்னவன் பள்ளியில் இன்னும் சேரவில்லை.
அதுக்கு ஒரே பசி. எதையோ உடைக்கிற சத்தம் கேட்கிறதே என்று பார்த்தால் தட்டும் தம்ளருமாக

ஐயா தாளம் போட்டுக் கொண்டு இருக்கிறார்.


கீழே எல்லாம் இறைந்து கிடக்கிறது.கண்ணன் படம் பின்னால் சாய்ந்து ரெஸ்ட் எடுக்கிறது :-)
என்னடா பையா பண்னினே?னு கேட்டா    பதிலில்லை.......

ஏன் வாயைத் திறப்பார்.!! அதான் வெண்ணையெல்லாம் அங்கே போய்விட்டதே:)


ஒரே கோபம் வந்தாலும்,
அப்புறம் நினைத்து சிரிப்போம்.இப்பக் கூட அவன் பெண்டாட்டியிடம் சொல்லி விடுவது.

'அம்மா , வெண்ணை ஜாக்கிரதை என்றூ:-) 
இல்லாத அழகு?
******************
ஒற்றுமை இல்லாத,அன்பு இல்லாத,சுத்தம் இல்லாதசில இடங்கள் இருக்கின்றன.

மற்றபடி சுதந்திரம் இருக்கு என்று நம்மை
இன்னும் இருத்திவைத்து இருக்கும் ஊர் நம்ம

ஊருதான்.


அந்த சத்தம்,தமிழ் எல்லாவற்றையும் விட்டு விட்டு இருப்பது கடினம்.:-)
கொத்ஸ் பின்னிய வலையில்

வந்து சேருமாறு நான் கேட்பது
இவர்களை,நாகை சிவா
,வெட்டிப்பயல்...பாலாஜி
முத்துலட்சுமி.



இன்னும்


யாருக்கு இன்னும் அழைப்பு வரலியோ அவர்களும் ,இல்லைனால் எல்லோரும் எழுதவேண்டும்னு நினைக்கிறேன்.

வேற ஒண்ணும் இல்ல, சாய்ஸ் கொடுக்கலாமேனுட்டுத் தான்.:_)




நன்றி கொத்ஸ்.
எல்லோரும் ஜோரா எழுதிடுங்க.
அடுத்து ' அன்பு ' பத்தி கூட எழுதலாமே.
கருத்து சொல்லுங்கள்.







































 


26 Comments:

Blogger வல்லிசிம்ஹன் said...
பதிவு ரொம்ப இடைவெளிகளோடு வந்துவிட்டது. கொத்ஸ் சரியா இருக்கானு நீங்கதான் சொல்லணும்.
5:38 PM  
Blogger அபி அப்பா said...
வல்லியம்மா! நீங்க சொன்ன ஒவ்வொன்னும் மகா அழகு தான், அதிலும் உங்க சரி பாதி, கீரைப்பெண், உங்க சின்ன பையன் குறும்ம்பு எல்லாம் சூப்பர் அழகு:-))
6:20 PM  
Blogger மதுரையம்பதி said...
விகல்பமில்லாது எழுதியுள்ளீர்கள்....
6:22 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...
அபி அப்பா, உங்க பேரையும் போட்டுட்டென். அப்புறம் மூணு தானே இலக்கணம்:-) அதனாலே எடுத்துவிட்டேன். பொறுமையா படிச்சதுக்கு நன்றி. சொல்லாம விட்ட அழகு பதிவுலக நட்பு. நன்றிப்பா.
6:32 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...
வரணும் மௌலி. உங்களுக்குப் பதிவு சரியாகப் பட்டது பற்றி சந்தோஷம்.
6:37 PM  
Blogger இராம் said...
உங்க அடைபலகையிலே ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறேன்... மயில் அனுப்புங்க :)
7:05 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...
வல்லியம்மா, நம்மளை மதிச்சு எழுதினதுக்கு ரொம்ப நன்றி. உங்க பார்வையில் எது அழகுன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கூப்பிட்டேன். ரொம்ப அழகா எழுதிட்டீங்க. அந்த நடிகர் யாருங்கிற மாபெரும் உண்மையை மறைச்சுட்டீங்களே!!! உங்க ஹீரோ பத்தின கடைசி வரி சூப்பர். அந்த கீரைக்கார பெண் செய்தது அந்த சமயத்தில் ரொம்ப வேண்டி இருந்த விஷயம் என்பதால் எப்படி உங்கள் மனதிலேயே இருக்கிறது இல்லையா? அப்படிப் பட்ட நிகழ்வுகளை நாமும் அடுத்தவர்களுக்குத் தர வேண்டும் என நினைத்து நம்மாலான சிறு உதவிகள் செய்து வருவோம். என்ன சொல்லறீங்க. எளிமையான பரிசுகள்தாங்க என்னிக்குமே மனதில் நிற்பது. எவ்வளவு விலை கொடுத்து வாங்கின பொருளை விட நம்ம பசங்க சின்ன வயதில் கன்னாப் பின்னான்னு கிறுக்கி To Dad, To Mom என்று எழுதி தருகிற படம்தானே நமக்கு உசத்தி. நல்ல ஹெவி வெயிட் பார்ட்டிங்களைத்தான் கூப்பிட்டு இருக்கீங்க. ஆறு அமைதியா ஓடப் போகுதா இல்லை அட்டகாசமா, ஆரவாரமா போகப் போகுதான்னு பார்க்கலாம். :)
7:13 PM  
Blogger வடுவூர் குமார் said...
ஒரு பக்கம் நம்ம தம்பி சூப்பராக போட்றிருக்கார்,இங்க வந்தா அப்படியே மெதுவாக காதுக்குப் பக்கத்தில் யாரோ சொல்வது போல் அழகாக சொல்லியுள்ளீர்கள். நான் கண்ணை மூடி யோசித்தால் எல்லாம் ஜல்லி மணல் என்று வருகிறது. பக்கத்துல பெண்டாட்டியில்லை..அதனால் தைரியமாக எழுதலாம்.:-)))
8:02 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...
வேற யாரு, ஒரு தேவ் ஆனந்த், ஒரு ஜெய்ஷன்கர். அவ்வளவுதான் கொத்ஸ். உங்களுக்கு ஒரு வாய்ஸ் மெயில் கூடக் கொடுத்தேன். வந்துதோ வரலியோ!! எப்படி ஓடினாலும் அது தாமிரபரணி மாதிரி அழகா இருக்கும்:-) ரொம்ப முக்கியமான பரிசு நீங்க இப்போ என்னை எழுதச் சொன்னது. எல்லோரையும் கூப்பிடணும்னு தான் ஆசை. செயின் ஃபார்மேஷன் சரியா வரணுமெ. ரொம்ப நன்றி கொத்ஸ்.
8:35 PM  
Blogger முத்துலெட்சுமி said...
ஹீரோ பேரு போடலயே..ஏமாத்திட்டீங்களே!! பச்சை சிவப்பு கண்ணாடி வளையல் அழகு இல்ல... எங்க ஆச்சி , அம்மா எல்லாரும் போடுவாங்க.. என்னைக்கூப்பிட்டதுக்கு நன்றி..வல்லி.
8:39 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...
ஜல்லியும் மணலும் வரதா? தேவைதான். குமார். சரியா இல்லயே. தங்கமணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ கொஞ்சம் வலைப்பக்கம் வாங்கோ. மனசு நிறைவா இருக்க்கு உங்க வார்த்தைகளைப் பார்த்து. ரோம்ப நன்றி.
8:39 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...
வரணும் ராம். டெம்ப்ளேட் சரியா இல்லையா. உங்க மெயில் ஐடி தெரியாதே. சரி பாக்கலாம்.
8:41 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...
முத்துலட்சுமி, வந்து, பார்த்து சரின்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. கிழமை மறக்கும் வியர்டூவை இப்பதான் பார்த்தேன். அதெப்படி இப்படி எல்லோரும் ஒரே மாதிரி இருக்கோம்னு அதிசயமா இருக்கு.
9:41 PM  
Blogger காட்டாறு said...
வல்லியம்மா, ரொம்ப அழகா, குமார் சொன்ன மாதிரி, காது பக்கத்துல இருந்து சொல்வது போல சொல்லியிருக்கீங்க. அழகு அழகா இருக்கு. அதுலயும் உங்க சின்னப் பையன் குறும்பு பத்தி சொன்ன அழகு.... ரொம்ப அழகு!
10:48 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...
வரணும் காட்டாறு. நல்லா இருந்ததா படிக்க? இன்னும் ஒரு ரௌண்ட் சுறுசுறுப்பாகப் பொகும் என்று நம்புகிறேன். இத்தனை பேரோட அழகான பார்வைகளை எதிர்பார்த்து இருக்கிறேன்.
1:40 AM  
Blogger துளசி கோபால் said...
எல்லா அழகையும் வல்லியே எடுத்துக்கிட்டதாலே எனக்கு எழுத ஒண்ணுமே இல்லை...........உஊஊஊஊஊஊம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அந்தக் கீரைக்காரப் பொண்ணு இப்ப எங்கே? நானும் அவ முன்னாலெ விழணும் :-)))) ( தரையில்தான்)
2:44 AM  
Blogger வல்லிசிம்ஹன் said...
முத்துலட்சுமி இன்னும் இரண்டு ஹீரோ விட்டுப் போச்சு. கிரிகரி பெக் அண்ட் ஜான் வெயின்:-) எனக்கு எங்க அப்பா கூப்பிடுகிற மாதிரி மணிமேகலை,வளைபதி என்றேல்லாம் பேர் வைக்கும் அளவுக்கு கண்கூசும் அளவுக்கு மாட்டிப்பேன். சரீரமும் பார்வையாக இருப்ப்பதால்:-) மகன் அம்மா காவிக் கலர் புடவை மட்டும் கட்டாதே. அப்புறம் மாதாஜினு யாரவது வந்துடப் போறாங்கனு நிஜமாவே பயப் படுவான்.!!
4:34 AM  
Blogger வல்லிசிம்ஹன் said...
அடுக்குமா துளசி.:-) எங்கேயாவது நீங்க அழகு செய்தப்புறம் நாம பதிவு போட்டா ஒண்ணும் கிடைக்கதுனுதான் அவசரமா போட்டேன். நீங்க வேற,. கீரைப் பொண்ணு பேரு சௌம்யா. மந்தைவெளி கார்பரேஷன் ஸ்கூலில் படிக்கிறது. இந்த ஜூனுக்கு நான் வந்துடுவேனு எதிர் பார்த்துட்டு இருக்கும்.
4:39 AM  
Blogger ambi said...
அழகாக எங்கள் தாமிரபரணி நதி கால்களை வருடி கொண்டு ஓடி வருவதை போல இருந்தது உங்கள் அழகு பதிவு. அந்த கீரைகார பெண், பையனின் குறும்பு மிக அழகு! :) //எப்படி ஓடினாலும் அது தாமிரபரணி மாதிரி அழகா இருக்கும்// அப்படி சொல்லுங்க அம்மா! ;)
3:19 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...
அப்படிச் சொல்லுங்க அம்பி. நம்ம ஊருத் தண்ணி மகிமைதான் நம்மளை இப்படி யோசிக்க வைக்கிறது.:-)
5:40 PM  
Blogger செல்லி said...
வல்லி ஆகா அழகு, என்ன அழகு! நல்லாயிருக்கே இந்த ஐடியா. தொடரட்டும் மென்மேலும் அழகு. பகிர்ந்தமைக்கு நன்றி, வல்லி
6:00 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...
வரணும் செல்லி. அரிசி களைஞ்சு நல்லா உலத்தி இருக்கீங்க. அதுவும் ஒரு அழகுதான். ரசிக்கிற பக்குவம் இருக்கும்போது அழகுகளுக்கு ஏது குறைவு. நன்றீப்பா.
6:50 PM  
Blogger இராம் said...
//வரணும் ராம். டெம்ப்ளேட் சரியா இல்லையா. உங்க மெயில் ஐடி தெரியாதே. சரி பாக்கலாம்.// அம்மா, மயிலின் முகவரி raam.tamil@gmail.com
7:43 PM  
Blogger கோபிநாத் said...
வணக்கம் வல்லி அம்மா ;-) இது தான் முதல் தடவை உங்க பக்கத்துக்கு வரேன். அழகுகள் ஆறும் அழகாக எழுதியிருக்கீங்க. அதுவும் அந்த கீரைப்பெண்னும், உங்கள் சின்ன பையன் குறும்பும் மேலும் அழகு.
3:27 PM  
Blogger வல்லிசிம்ஹன் said...
வாங்க கோபிநாத், ரொம்ப நன்றி. அந்தச் சின்னபொண்ணு ரொம்ப நல்லது.விசாரிக்கிறதுல எல்லாம் பெரிய மனுஷி மாதிரி நடந்துப்பா. ஊருக்கு போகும்போது அடுத்த நிமிஷம் வீட்டுக்கு வந்துடுவாள்.
7:46 PM  
Blogger நாகை சிவா said...
என்னை அழைத்தற்கு மிக்க நன்றி. சில காரணங்களால் உடனே வர முடியவில்லை. சீக்கிரமே போட்டு விட்டு கூறுகின்றேன்.
1:09 PM  
Subscribe to Post Comments [Atom]

Links to this post:

Tamil Blogs Traffic Ranking

5 comments:

வல்லிசிம்ஹன் said...

பதிவுக்குள் பதிவு.:)

ஸ்ரீராம். said...

புதிய முயற்சி!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். ஏற்கனவே இந்தப் பதிவைப் படித்துவிட்டீர்களா.

ராமலக்ஷ்மி said...

பதிவுக்குள் பதிவு எப்படி வந்தது? அருமை.

அழகு பற்றி சொன்னது அழகு.

லேபிள் ஒரு அழகு.

அத்தனை பின்னூட்டங்களும் சுவாரஸ்யம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி இத்தனை அழகாக உங்களால் தான் பின்னூட்டம் இட முடியும்.
நன்றிமா. பதிவு எழுதினது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில்.
அது 2007 ஆம் ஆண்டு. இப்போது மீள் பதிவிட்டது
நெருப்பு நரியில்.
இது ஒரு காரண்மாக இருக்கலாம்:)