Blog Archive

Thursday, November 17, 2011

"எங்கள் ப்ளாக்" சவுடால் போட்டியின் இரண்டாம், இறுதி பாகம்

ராஜகுமாரன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 ஜோசியர் அலறிய அலறலில், தூங்கிக் கொண்டிருந்த அரசனும் விழித்துக் கொண்டு ஓடிவந்தான்,.
என்ன  ஆச்சு. கண்டுபிடிச்சீட்டீங்களா  வழியை என்றவனைப்
பார்த்துக் கண்ட கொடூர கனவைச் சொன்னார்.

நிற்கிற பாம்பா...ஓ  சோனா? என்ன ரொம்பக் குழப்பமா இருக்கே.
நம் விஞ்ஞானக் கூட  தலைவரைக் கேட்கணும் என்றபடி
அவரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.

நரைத்த தலைமுடி, அதைவிட நரைத்த தாடி கணக்கிட முடியாத வயது இந்த வித லட்சணங்களுடன்
விஞ்ஞானியும் வந்தார்.

விவரம் கேட்டதும் அடடா பாகவதத்தில் சொன்ன விஷயமெல்லாம் நடக்கிறதே.
ராஜன், மழையில்லாத நேரத்தி மழை, வெணும் நேரம் பெய்யாமல் இருப்பது,
கடும் வெய்யில்,கடும் குளிர் எல்லாத்துக்கும் இந்த ஓசோனே
தான்  காரணம்.
அது தற்போது சில இடங்களில் கிழிந்த சர்க்கஸ் கூடாரத் துணி
போல இருக்கிறது.
அதையும் தாண்டி இந்த ராக்ஷசன் அந்த ராஜகுமாரனைக் கொண்டு
போயிருக்கிறான் என்றால் வேற்றுக்கிரக மனிதனாகத் தான்  இருக்கணும்.

ஏன் ஜோசியரே அந்தப் பாம்புக்குக் கால் இருந்ததா பார்த்தீரா என்றார்.

ஓ! இருந்ததே கால்கள் மேல்தான் அது நின்று கொண்டிருந்தது."

அரசனுக்கு விபரீதமாகப் பயம் தொற்றிக் கொண்டது.
பாம்புக் கிரகமா.
அங்கே எப்படிப் போவது.நம் குதிரைகள் பறக்காதே
என்று  காதைச்  சொறிந்து லொண்டான்.
காதில்தான் அத்தனை அறிவுசம்பந்தப்பட்ட நரம்புகளும்
இருப்பதாக விஞ்ஞானி ஏற்கனவே சொல்லி இருந்தார்.

உடனே  கிடைத்த யோசனையும் அதை நிரூபித்தது.
ராஜாதி  ராஜ புங்கவர்மன்
அந்தஇத்தாலிய வியாபாரி கொடுத்த பெகாசஸ்  குதிரை இருக்கே. அவன் சொன்ன விலைக்கு
மறுபேச்சில்லாமல்  பதினாறாயிரம் பொற்காசுகளைக் கொடுத்தோமே.
அது பறக்குமா பறக்காதா என்று  பரிசோதனை கூடச்  செய்யவில்லையே!!


ஆஹா  அது மட்டும் நடந்துவிட்டால் என்று துள்ளிக் குதித்தான்.
கொண்டு வாருங்கள் அந்தக் குதிரையை. உடனே பறக்கவேண்டும் என்று

கட்டளையிட ,பெகாஸஸ் குதிரையும் வந்தது.
சந்திரலேகா பட  ரஞ்சன் போலத் தாவிக் குதித்து ஏறினான்
நம் மன்னன்.
மன்னன் ஏறிய அடுத்த நிமிடம் வான் நோக்கிப் பறந்தது பெகாஸஸ்.
வாயுமனோவேகத்தில் ஒசோன் லேயரைக் கடந்து

பாம்புக் கிரகத்தை அடைந்தது.
அது கீழே இறங்கிய வேகத்தில் அங்கு சுருண்டிருந்த ஊர்வன எல்லாம் விலகின.

ராஜகுமாரனும் தெரிந்தான். அடுத்த நொடியில் நம் வீர தீர ராஜராஜ சிவாஜி மன்னன்
அவனை அலேக்காகத் தூக்கிக்
குதிரையில் வைத்துக் கொண்டு  பூமியை நோக்கிப் பறந்தான்.

அவர்கள் இறங்குவதற்கும்  பாம்பு மனிதன்  தங்கத் தவளையைப் பிடிக்க வருவதற்கும்
சரியாக இருந்தது.

ராஜராஜ சிவாஜியின் வீரவாள் பாம்புமனிதன் கழுத்தில் விழ
அவன் உயிர் பிரிந்தது.

ராஜகுமாரனும் ராஜகுமாரியும் இணைந்து
வணங்கினார்கள் அவரை.!!

24 comments:

கௌதமன் said...

நல்லா இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

உண்மையாவா இதற்கு சவுடால் எக்ஸ்ப்ரஸ்னு பேரு வைக்கணும் கௌதமன்:)
இத்தனை அளவுக்கு மீறின கற்பனை!!!!
நன்றி மா.

rajamelaiyur said...

ரகளை

rajamelaiyur said...

இன்று என் வலையில்

தூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?

Madhavan Srinivasagopalan said...

எவரை ?

சும்மா கேட்டேன். கதை ரொம்ப சூப்பர்.. இருந்தாலும் ரெண்டாவது பார்ட் express வேகத்துல போயிடுத்து..

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யம்:)! ‘அவரை’ சவுடால் உட்பட அருமையா வந்திருக்கு. நானும் அறிவிப்பைப் பார்த்ததும் கடைசி வரிகள் மட்டும் இப்படிதான் நினைத்தேன்:)! வெற்றிக்கு வாழ்த்துக்கள் வல்லிம்மா.

அப்பாதுரை said...

அட்டகாசம் போங்க. ராஜா புங்கவர்மன் படம் பிரமாதம். (ஆமா, தொடர்கதை எல்லாம் கூடாதுனு ரூல்ஸ் போட்டிருந்தாங்களே? exemptஆ?)
ரசித்துப் படித்தேன். ஓசோனுக்கு போட்ட முடிச்சும் பாம்புக் கிரகமும் (?) சுவாரசியம்.
வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

ராஜா, ரகளையா வந்துவிட்டதா. .எங்க பேரன் பேத்திகளை நினைத்துக் கொண்டு எழுதினேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதவன்.முத்லில் இரண்டு பாகம் எழுதி இருக்கக் கூடாது.
அதை ஈடு கட்ட ஜெட் வேகத்தில இரண்டாவது பகுதியை எழுதிட்டேன்.
பாவம் அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
இதுக்குத்தான் கேள்விகளைப் பார்க்காமல் பதில் எழுதும் நோய் னு பேரு:(

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி! அம்புலிமாமாக்கு அனுப்பி இருக்கணுமோ;)
நன்றிப்பா. அந்த அவரை'' தானா வந்து விழுந்துட்டது.உங்க கதை எப்ப?
காத்திருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. எனக்கு எக்சம்ப்ஷன் நானே எடுத்துக் கொண்டது.
ரூல்ஸ் சரியாகப் படிக்கவில்லை. ஒரே இம்பல்சிவா எழுதியாச்சு. ஒண்ணு செய்யலாம் ரெண்டு பாகத்தையும் சேர்த்த்துத் தைத்து வெளியிடலாம் இல்லையா.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் வரதே இல்லை எனக்கு.:(
மார்ஷியன் என்பதற்குப் பதிலா பாம்புக்கிரகமாக்கிட்டேன். நோ லாஜிக்!!

ராஜி said...

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு

ராஜி said...

ரொம்ப நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராஜி. உங்களுக்குப் பிடித்திருந்தது என்றால் சந்தோஷம் தான்.:)

அப்பாதுரை said...

ஓஹோ..அப்படி சொல்றீங்களா! பாம்புக்கிரகமே நல்லா இருக்கு.

geethasmbsvm6 said...

ஆஹா, விஞ்ஞானமயமாக எழுதிட்டீங்க போலிருக்கே! நான் ரொம்ப வீக் விஞ்ஞானத்தில். அந்தப் பக்கமே தலை வைச்சுப் படுக்கிறதில்லை! :))))))

வல்லிசிம்ஹன் said...

சரி பாம்புக் கிரகமாவே இருக்கட்டும் துரை!!

வல்லிசிம்ஹன் said...

விஞ்ஞானமா. வெறும் காதுவழி செய்திதான் இந்த ஓசோன் எல்லாம்.
கீதா , எதையாவது சொல்லி இந்த ராஜகுமாரனை மீட்டுக் கொண்டு வரணும்.:)
திடீர் கற்பனையாக இந்த ஐடியா தோன்றியது:)

மாதேவி said...

நன்றாக இருக்கின்றது.

வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
கலந்து கொள்ளுவதில் மகிழ்ச்சி. என்னைவிட எழுத்து ஜாம்பவான்கள் நிறைய இருக்கிறார்கள்.
நல்ல எழுத்து வெற்றி பெறட்டும்பா.

Anonymous said...

சுவாரசியமான கற்பனை.
கலக்கிடீங்க! :) வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரத்னவேல் சார். ரொம்ப நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மீனாக்ஷி நிஜமாவே பிடிச்சுதா:)

ரொம்பவே நன்றி.

Anonymous said...

நிஜமாவே ரொம்ப பிடிச்சுது! :)