About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Monday, November 14, 2011

மாற்றாந்தாய் (கணவனின் அம்மா)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

கதவை இழுத்து மூடிய  விஜயாம்மா  தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டினாள். கையில் சாவி கனத்தது.


   இனி என்ன? இந்த 68  வயசுக்கு   இது  எனக்குத் தேவைதானா. எது நம்மை இப்படி விரட்டுகிறது.
மதிக்காதவர்கள் வீட்டில் இருக்கவும்  வேண்டுமா.
மருமகளின் வார்த்தைகள் இன்னும் காதில் அறைந்து கொண்டிருந்தன
"இருக்கிற ஒரே ஒரு பிள்ளைக்கு அந்த நிலத்தை எழுதி வைக்க முடியாத உங்களுக்கு  இங்க இருப்பதற்கு மட்டும்   என்ன பாத்தியதை. நீங்கள் சம்பாதிப்பது எல்லாம்  ரெண்டு பொண்கள் வீட்டில் ரொப்பியாறது. எனக்குத் தெரியாது  என்று நினைக்கிறீர்களா.
சமையல் செய்து பிழைக்கும் உங்களுக்கே  இத்தனை  இருக்கும் என்றால் கவர்ன்மெண்ட் சர்வந்ட்  நான்  எனக்கு எவ்வளவு இருக்கும்"

இன்னிக்கு நான்  சாயந்திரம்   திரும்பும்போது நீங்கள் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. உங்கள் பெண் வீட்டில் இருந்து கொள்ளுங்கோ.
என் வீட்டை நான் பார்த்துக் கொள்கிறேன்''

இதே வார்த்தைகளை    இதற்கு முன்   பத்து தடவையாவது  கேட்டிருந்தாலும் விஜயாம்மாவுக்கு இப்போது   மிகவும் வலித்தது.
மரமாக நின்றிருக்கும் மகனைப் பார்த்தாள்.
அவனோ தலை குனிந்தவன்  தான். நிமிரவே இல்லை. பனிரண்டு  வயது பேத்தியும் பத்துவயது பேரனும்   பள்ளியிலிருந்து திரும்பும்போது பாட்டி இருக்க மாட்டாளோ என்ற சோகத்தில்
பாட்டியின் புடவைத் தலைப்பப் பிடித்துக் கொண்டார்கள்.

தங்கைகள்   மூவரும் அக்கம் பக்கத்தில் இருந்தாலும்
அவர்கள் வீட்டில் போய் நிற்க  மனதில்லை. நாளைக்குத் தான் பெற்ற பிள்ளையின் பெயர் அல்லவா  பழுதுபடும்.

யோசித்தபடி  பர்சைக்    கையில் இறுகப் பிடித்துக் கொண்டு
கொட்டத் தொடங்கிய மழையில்
கண்ணில் வழிந்த  கண்ணீரும் ஒன்றாகப்    புடவையில் சேரத் தான் சமையல்  வேலைப் பொறுப்பு  ஏற்றுக்கொண்டிருக்கும்
ராதாகிருஷ்ணா  சாலை வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கே  வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த    ராதா''என்ன மாமி இவ்வளவு நேரமாகி விட்டதே,  சீக்கிரம் சமையலை முடித்துக் கொண்டு பக்கத்து வீட்டில் சாவி  கொடுத்துவிடுங்கள். சாயந்திரம்   ஐந்து மணிக்கு டிபன் ரெடியாக இருக்கட்டும்.
பெண் கல்லூரியிலிருந்து வந்துவிடுவாள்''   என்றவாறுத் தன் கார்சாவியை  எடுத்துக் கொண்டு   கீழே இறங்கினாள்.
ஐந்தாயிரம் சம்பளம் கொடுப்பவள் ,அவள் சொல்லை    விஜயாம்மா எப்பவும் தட்டியதில்லை.
கைப்பையைப் பிரித்து ஈரமாக இருந்த புடவையை    மாற்றிக்கொண்டு வேலையைத் துவங்கினாள்.
அடுத்து எடுக்க வேண்டிய   முடிவுகளை  யோசித்தவாறே


சுலபமாகச் சமைத்து முடித்தாள். அடுத்த வேலைக்குப் போக வேண்டியது
தேவகி ஆஸ்பிட்டல்  பக்கத்தில்.

அவர்கள் இருவரும்  அறுபதைத்தாண்டியவர்கள்.  பத்திய சமையல்.
இயந்திரமாக இயங்கி கொட்டும் ழையில் ஆட்டோவில்    வ ந்து இறங்கும்
மாமியை ப்  பார்த்த மமாத்திரத்திலயே    யேதொ  சரியில்லை என்று உணர்ந்த
சந்திரா,பேசவில்லை. குளிருகிறது  மாமி. கொஞ்சம் காஃபி  குடித்துவிட்டு
வாருங்கள்.
என்றவாறு அன்று அரிந்து வைக்கவேண்டிய காய்கறிகளையும் மற்ற சமையல் பொருட்களையும் எடுத்து வைத்தாள்.
மாமி  காப்பி கொடுத்த கையோடு, இறுகிய முகம்  சோகத்தைப் பறையடிக்க சந்திரா விடம் வந்தாள்.

''அம்மா நான் வீட்டை விட்டு வந்துவிட்டேன். இதோ இரண்டு புடவை இருக்கு. இங்க வேலை
முடிந்து தங்கை வீட்டுக்குப் போகிறேன். வீரப் பெருமாள் தெருவில் இருக்கிறாள்.

அங்கிருந்து சாயந்திரம்  வடபழனி பெண் வீட்டிற்குப் போகிறேன் மா''
உங்க வீட்டு வேலையை விடப்போவதில்லை.
நாளை வருகிறேன்''என்று அன்று நடந்த சம்பவங்களைச் சொல்லி முடிப்பதற்குள்
கட்டுக்கடங்காமல்   கண்ணீர்  வடிக்கும் அந்தச் சிறிய உருவத்தைப் பார்த்துச் சந்திராவுக்கு
அதிர்ச்சியக இருந்தது.
இதே போல எத்தனையோ நடந்திருக்கிறது.நீங்கள் இப்படி கலங்க மாட்டீர்களே
என்ன  ஆச்சு  என்றாள்.
ஒரே ஒரு வித்தியாச்ம் அம்மா. இந்தத் தடவை பையனே என்னை விலகி இருக்கச் சொல்லிவிட்டான்.
உன்னுடைய நல்லதைப் பார்த்துக் கொள் அம்மா. இந்தத் தேள் கொட்டுவதை நிறுத்தாது.
படவேண்டியதை நான் பட்டுக்கறேன்.
உனக்குப் போக இடம் இருக்கு. நீ கொஞ்ச நாட்கள் வெளியே இரும்மா''ன்னு சொல்லிட்டான்.
கொஞ்ச நாள் என்னடா, இனிமே இந்தப் படியை நான் மிதிக்க மாட்டேன்
என்று வந்துட்டேன்.
நான் தெளிவா இருக்கிறேன்.
பொன்னேரி நிலத்தை வித்துப் பாங்கில் போடப்போறேன்.
தாசில்தாரைப் பார்த்து  இன்சுரன்ஸ் பணம், என் நகைகள் (12 பவுன்  இருக்கும்)

மூன்று பங்காப் பிரித்து எழுதி வைக்கிறேன்.
 வங்கில இருக்கிற ஐம்பதாயிரம் ரூபாயும் மூன்று பங்கு.
நிலம் வித்த பணத்திலிருந்து வரும் வட்டியைப் பெண்ணிடம்
 கொடுத்து அங்க இருந்துக்கப் போகிறேன்.
அவள் என்னைக் கடைசிவரைக் காப்பத்தறேன்    என்று சொல்றாள்.
என்று ஒரு பெரு மூச்சோடு  முடித்தாள்.
ஐந்து வருடங்களுக்கு  முன்   கணவர்  ஒரு\
விபத்தில் இறந்த்ததிலிருந்து விஜயா   மாமிக்கு  சோதனைகாலம்தான்.
தைரிய சாலி. அசராத போர்க்குணம்.
தொழிலில் நேர்மை.
ஒரு நாற்பது கிலோ எடையுள்ள   சிறிய மேனியில்  லட்சணமான  முகம்.
சர்க்கரை நோய்.
யாருக்கெல்லாம் விருது கிடைக்கிறதே. இந்த விஜயாஅம்மாவைப் போல அம்மாக்களுக்கு யார் விருது கொடுப்பார்கள்.
இன்று  காலை  வேலைக்கு வரவில்லை. தொலைபேசி வந்தது.  வடபழனிக்குப் பஸ்ஸில் போகும் போது  தன் கழுத்துச் சங்கிலி பறி போனதாகவும்,  போலீசில் புகார் கொடுக்கப் போய்க் கொண்டிருப்பதாகவும் சந்திராவிடம் சொன்னார்.
சோதனைகள் தொடர்ந்தாலும்    அயராமல் சாதித்து மீண்டு வந்துவிடுவார்  என்றே நம்புகிறேன் சந்திராவாகிய நான்.