About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Thursday, November 03, 2011

இன்று என்ன சேதி...........

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
பெண்ணிடம்   ஸ்கைப்  பேசி முடித்த கையோடு கணினியை மூடிவிட்டு
கோவிலுக்குக்    கிளம்பிப் போகலாம்
என்ற முடிவோடு   பிரபா   எழுந்தாள்.

மாடியில் தேகப் பயிற்சி செய்து கொண்டிருந்த கணவரிடமிருந்து
குரல் கேட்டது.
''ஹேய்  பா   !(பிரபாவோட  சுருக்கம்)   சம்பந்தி வருகிறார் என்று அசரீரிக் குரல் கேட்டது.
  இவர் வந்தால் சுருக்க  கிளம்ப மாட்டாரே. கோவில் கதவு சாத்திட்டால்''

என்று நினைத்தபடி வாயில் கதவைச்  சிரித்த முகத்தோடு திறந்தாள்.
வாங்கோ வாங்கோ. எங்க இந்தப் பக்கம் .?  மாமி வரவில்லையா.

என்ற படி வரவேற்பறைக்கு அழைத்து உட்காரவைத்தாள்.
அப்போதுதான் அவரது தோற்றத்தையும் கவனித்தள். முகம் நிறைய விபூதி.
கைகளில் பூமாலை. கோவில் போய் வருகிறார் என்று புரிந்து கொண்டு

வந்தவருக்கு காப்பி உபசாரம்  செய்வதற்காக  உள்ளே
சென்று அப்படியே கணவன்  சங்கருக்கும்    குரல் கொடுத்தாள்.

டீரெஸ் மாத்திண்டு வாங்கோ. அப்படியே  ஷார்ட்ஸொட  தரிசனம் கொடுக்க வேண்டாம்'' என்று சிரித்தபடி  சொல்லிவிட்டுக் கீழே இறங்கினாள்.

எல்லாம் எங்களுக்கும் எடிக்கெட் எல்லாம் தெரியும்.  என்றபடி  வேட்டி ஒன்றை இழுத்துக் கட்டியபடி படியிறங்கி வந்தார் சங்கர்.
இங்க  முப்பாத்தம்மன் கோவிலுக்கு வந்தேன்.
மாப்பிள்ளைக்கு இன்னிக்கு நட்சத்திரம் ஆச்சே
நீங்க போயிட்டு வாங்கோனு   பெட்டர்  ஹாஃப் தான்
நினைவு படுத்தினாள்.
இந்தாங்கொ அம்மன் குங்குமம்  விபூதி எடுத்துக்கோங்க. குளிச்சாச்சா''என்றபடி  தன் கையில் பிரசாதங்களை வைக்கும் சம்பந்தி குமாரை
  இன்னதென்று  புரியாத உணர்வோடுப்  பார்த்தார்.
ஓ. ரொம்ப தான்க்ஸ். உங்களுக்குத் தான் என்ன ஞாபக சக்தி''
எப்படி சார் ஒரே பொண்ணு, அதுக்கு வாய்த்த மாப்பிள்ளை. எங்க பிள்ளைதான் வர்.'' அவருக்கு நீங்கள் மறந்துட்டாக் கூட நாங்கள் மறக்காமல் கோவிலுக்குப்  போய்  அர்ச்சனை செய்து விடுவோம். கார்த்தாலயே சிங்கப்பூருக்குப் போன் பேசிட்டேன். மாப்பிள்ளைக்கு ரொம்ப சந்தோஷம்."
'' மூச்சுவிடாமல் பேசி நிறுத்தினார்   குமார்.

ஒரு தட்டில் வீட்டில் செய்த திரட்டிப்பாலையும்,  மனங்கொம்பு  முறுக்கையும்
அவரிடம் நீட்டினாள் பிரபா.
ரொம்ப உயர்ந்த சம்பந்திதான் கிடைத்திருக்கிறார் நமக்கு  இல்லையா
சங்கர்''என்று சிறிதாகப் புன்னகைத்தவாறேக் கணவனை நோக்கினாள்.

அவர் முகம் சிவப்பதைக் கண்டு திடுக்  என்றிருந்தது.
கணவருக்கு க் கொஞ்சம்  ஷார்ட் ஃப்யூஸ் என்று தெரியுமாதலால். அவர் கையிலும்   காப்பித் தம்ப்ளரைக் கொடுத்துவிட்டு அருகிலியே
உட்கார்ந்தாள்.

குமார் விடுவதாக இல்லை. நீங்கள் கோவிலுக்குப் போகலை.?
சுதா(அவர் மனைவி, எங்கள்   மருமகளின் அம்மா)  சொன்னாள்  உங்களுக்குக் கோவிலுக்குப் போவதில் அவ்வளவு நாட்டம் கிடையாது என்று''  என்று ஒரு கேள்விப் பார்வையை வீசினார்.

இன்னும் இரண்டு கேள்விகளில் கணவனின் இரத்த அழுத்தம் எகிறி விடும் என்று உணர்ந்த   பிரபா,''அவர் ராமர் கோவிலுக்குப் போகத்தான்  தயார் ஆகிக் கொண்டிருந்தார், நீங்களும் வந்தீர்கள்.
இங்க ஏது  ராமர் கோவில்?...குமார்.

நாங்கள் எப்போதும்    மதுராந்தகம் போவோம்''
இப்ப மணி எட்டாகிறது.
எட்டரைக்குக் கிளம்பினால்  சரியாக இருக்கும்.
வர வழியில் சிங்கப்பெருமாளையும் தரிசித்துவிட்டு வருவோம் என்றாள். 
நல்லவேளை இன்னிக்கு ஞாயிறு  இல்லையா.  ரோடு  காலியாகவே இருக்கும். நேரம் பிடிக்காது. ''
என்று முடித்தாள்.
அப்ப  நான் கிளம்பறேன். ரொம்ப சந்தோஷம் . உங்களுக்கு மறந்து போயிருக்குமோனு ஒரு    சம்சயம். என்று சிரித்தவாறே(இளிப்பு என்று சொல்லலாம்)
கிளம்புபவரைப்  பார்த்துப்  பெருமூச்சு விட்டாள்.

என்ன  அழுத்தம் இந்த மனுஷனுக்கு  என் பிள்ளை நட்சத்திரம் எனக்கு மறந்து போய்விடுமா.  இங்கிதம் இல்லாத  ஆளாயிருக்காரே ' என்று கொதித்தக் கணவனைச்   சிரித்தவாறே  கேட்டாள் பிரபா.
சரி இன்னிக்கு என்ன  நட்சத்திரம் என்று.
யார் கண்டா. காலண்டரைப் பார்த்தால் தெரிகிறது.
என்ன இருந்தாலும் நாம்  பிறந்ததேதியைத் தானெ கொண்டாடுவோம்.
எதுவாக இருந்தால் என்ன. என்ன தைரியம்  இருந்தால்
நான் கோவிலுக்குப் போக மாட்டேன்னு சொல்வார்' என்று
ஆரம்பித்தவனைக் கையமர்த்தினாள் பிரபா.


ஏதோ உரிமை எடுத்துக் கொண்டு விட்டார்.  விடுங்கள் . கல்யாணம் நடந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. புது மாப்பிள்ளை மோகம்    இருக்கும்.

நாம் வழக்கம் போல  உங்கள் ராமரையே பார்த்துவிட்டு வரலாம். நேரமாகை விட்டால் சாநோனடோரியம்  ராமாஞ்சநேயரைப் பார்த்தால் போகிறது. அங்கே தானெ   மகனுக்காக  முழுத்தேங்காய்  கட்டி வைத்தோம்.

நல்லபடியாக இருக்கட்டும். இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்போ  போய் சம்பந்தி சண்டை ஆரம்பிக்கலாமா என்று    முடித்து வைத்தாள்.


சரியான விவஸ்தை இல்லாத மனிதராக இருக்கிறாரெ.
நல்ல வேலை செய்துவிட்டு வாயால் கெடுத்துக் கொள்ளுகிறாரே!
இப்படியும் ஒரு சம்பந்தி!!!!  என்ற வண்ணம்  கோவிலுக்குக் கிளம்பத் தயார்   ஆனாள்.:)))