Blog Archive

Tuesday, October 25, 2011

நேயர்களே காணத் தவறாதீர்கள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
தீபாவளிக்கு மழை வந்துவிட்டது.
ஐலாண்ட்  திடலில் பட்டாசுக் கடைகளுக்கெல்லாம் தண்ணீர்
வந்துவிட்டதாம்.
 பாவம் எவ்வளவு நஷ்டமோ.
ஏண்டா டிவி நியூஸ் பார்க்கறோம்னு சிலசமயங்கள் தோன்றுகிறது.

இந்தக் குழந்தைகள் எத்தனை ஆசையோடு  நேபாளுக்குப் போயிருக்கும்.ஊருக்குப் போகிறதுக்கு முன்னால்
எடுத்தபடத்தில்,

கள்ளம் கபடில்லாத சந்தோஷ முகங்களைப் பார்த்ததும்,
இங்கெருந்து அங்க போய் இப்படி ஆகணுமானு வருத்தம் தோன்றுகிறது..

இறைவன் அந்தக் குடும்பத்துக்கு மலைபோலப் பொறுமையையும்
தைரியத்தையும்  கொடுக்கவேணும்.



*******************************************
இவைகளையும்  மீறி,
எல்லாரும் ஆனந்தமாக இருக்க ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகள்  காத்திருக்கின்றன.
சினிமா சினிமா சினிமா
.
பட்டிமன்றம்.
கொஞ்ச நேரம் கடவுள் தரிசனம்.

அடுப்படியில் வேக வேண்டாம் என்று எப்பொழுதும்

வெளியில் ஆர்டர்  கொடுப்பது போல,
தீபாவளி மெனுவுக்கும் ஆர்டர்கள் வந்திருக்கிறதாம். சரவணபவன் செய்தி:)

இவ்வளவு வம்பு சொன்னால்
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் வல்லிமான்னு நீங்க கேட்கலாம்.
கண்டிப்பா  கதம்ப சாதம் உண்டு. அப்பளம் வடகம் பொரித்து,
வடை,பாயாசம் தான். சிம்பிள் மெனு.
ரெண்டு பேருக்கு இது ஏகம்.:)



12 comments:

சார்வாகன் said...

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

தீபாவளி நல்வாழ்த்துகள்...

செய்திக் கதம்பம் சுவை. பட்டிமன்றத்தில் ராஜா, பாரதி பாஸ்கர் பேச்சு மட்டும் ரசிப்பேன். எந்த சேனலும் கர்நாடிக் இசைக்கு அரை மணி கூட ஒதுக்குவதில்லை.

கதம்பசாதம்? எப்படி?

வல்லிசிம்ஹன் said...

நன்றி சார்வாகன். உங்களுக்கும் எங்களிடமிருந்து
இனிய வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம். சினிமாவைக் கட் செய்து கர்நாடில் இசை வைக்கலாம். செய்ய மாட்டார்கள். பொதிகையில் வேண்டுமானால் எதிர்பார்க்கலாம்.
கதம்ப சாதம் கொஞ்சம் பிஸிபேளா மாதிரி. ஆனால் இனிப்பு இருக்காது.ஒரு பகுதி அரி
ஒரு பகுதி துவரம்பருப்பு
ஒரு பகுதி எல்லாக் காய்கறிகளும்.
இந்த அளவுக்கு ஏத்த மாதிரி சாம்பார்ப் பொடி தேங்காயோடு வறுத்து அரைக்கணும்.
அரிசியும் பருப்பும் சேர்ந்து சமைக்கணும். காய்கறிகளைத் தனியே மஞ்சள் பொடி உப்பும் போட்டு வேகவைத்து சாம்பார்ப்பொடியோடு கொதிக்கவிடணும். கடைசியாகப் புளியைக் கரைத்துச் சேர்க்கணும்.
இதுவும் கொதிச்சதும் சாதம் பருப்பு கலவையோடு இந்தக் குழம்பைக் கலந்துவிட வேண்டியதுதான்.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் அம்மா....

ஆமினா said...

வல்லிமா நீங்க சொல்றது சாம்பார்சாதம் மாதிரி இருக்கே.......அதான் கதம்ப சாதமா :-)

உங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Matangi Mawley said...

Thamaso Maa Jyothir Gamaya...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... :)

வல்லிசிம்ஹன் said...

அமீனா அது சாம்பார் சாதம்னு எப்படி சொல்றது. சாம்பார் செய்து சாதத்தோடு கலந்தா அதான் சாம்பார் சாதம். இதுல அரிசி பருப்பு பாதிப் பாதிப் போட்டுக் கலந்து செய்யற கதம்பம்.அவியல் மாதிரி, ஏழெட்டு வகைக் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வதனாலும் இந்தப் பேர் வந்து இருக்கும்னு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதங்கி. இப்போ ஜோதிர்மயமா சூரியன் வந்தால் தேவலைன்னு சொல்ற அளவு இருட்டும் மழையும்.

ஹாப்பி தீபாவளிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணு வெங்கட் நாகராஜ் உங்கள் தீபாவளி உற்சாகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நானானி said...

தீபாவளி வாழ்த்துக்கள்!!