Blog Archive

Thursday, September 01, 2011

முப்பது வருடங்களுக்கு முன்னால் எங்க வினாயகர்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

முதல் நாளே மாலைத் தோரணங்கள் வந்தாகிவிட்டது.

பாட்டிக்கு கவலை எல்லாம்

\ யார்  பிள்ளையாரை வாங்கி வருவது. என்பதுதான்.
இதோ பால்கார  அருணாச்சலம் வந்தாச்சு.
வாசலில் மருமகள் கோலம் போட்டுவிட்டால்.
குளித்துவிட்டுத்தான் போட்டு இருப்பாள் என்று சமாஷானப் படுத்திக் கொண்டு,
ஒரு பலகை, பை, பதினைந்து   ரூபாய் பணம்
எல்லாம் அருணாச்சலத்திடம் கொடுத்து,
 வாங்கி வந்துவிடு.

''சுருக்கப் போய் பிள்ளையாரையும் எருக்க மாலை விளாம்பழம், மூஞ்சூறு,அவல்பொரி எல்லாம்.
ஒரு
 வாய்  காப்பி சாப்பிட்டுக்கோ.  
அவன் சைக்கிளில் பறக்க
 இங்கே குழந்தைகள் பால் குடித்து,
வரப் போகும் பிள்ளையாரை  எதிபார்த்து வாசலிலேயே அமர்ந்திருந்தார்கள்.
அவரும் வந்தார்.
அமர்க்களமாக பட்டுத்துணி விரிக்கப் பட்ட  நாற்காலியில் அமர்ந்தார்,

அம்மா
 அலங்காரம் செய்ய.
கம்பீரமாகப் பிள்ளையார் குடையுடன் வீற்றிருந்தார்.

 அந்த

இடமே,விபூதி,
 பழம்,கொழுக்கட்டைகள், அரளிப்பூ,அக்ஷதை என்று
வாசனையாக இருந்தது.


 பாலும் பழமும் மூஷிக வாகன  ஸ்லோகம்

தினம் தினம்  கேட்டுக் கொண்டார் விநாயகர்.

 வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கிணற்றில் ஒருவாரம் கழித்து மனமில்லாமல் தங்கள் தோழனான பிள்ளையாரைக் குழந்தைகள்
அவர் தொப்பையில் வைத்த எட்டனாவோடு
  மெதுவாக இறக்கி விட்டார்கள்.
 ஒரே குரலில் அடுத்த வருஷமும் வந்துடுங்கோ என்று
  சொல்லிவிட்டு,கொஞ்சம் வருத்ததோடு
உள்ளே வந்தார்கள்.
திருப்பி எப்பமா வருவார்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~!!!!!!
முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த விநாயக சதுர்த்தி.

9 comments:

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பதிவு படிக்க முடிகிறதா என்று பார்க்கவேண்டும்.
டெஸ்ட்:)

pudugaithendral said...

படிக்க முடியுது வல்லிம்மா.

அருமையான கொசுவத்தி பகிர்வு

சாந்தி மாரியப்பன் said...

டெஸ்டில் வலைப்பூ பாஸாகிடுச்சு வல்லிம்மா:-)

அந்தக் கால நினைவுகளை இன்னும் நிறையச் சொல்லுங்க வல்லிம்மா. கேட்க ரெடியாயிருக்கோம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தென்றல்,இந்த ஊரில் பிள்ளையாருக்கு கோவிலில் பூஜைகள் நடக்கின்றன.வட இந்திய முறையில்.
கூட்டத்துக்கு நடுவில் போகமுடியவில்லை.
வீடு மாதிரி இருக்கும் இடத்தில் ஒரு மாடியில் சிவன்,பார்வதி
சமேதராகப் பிள்ளையார், ஷீர்டி பாபா,ஆஞ்சனேயர் எல்லொரும் இருக்கிறார்கள்.
பார்க்கவருபவர்கள் பூக்களைக் கொடுத்துவிட்டு வெளியே இருக்கும் குங்குமத்தை
எடுத்துக் கொண்டு வரவேண்டியதுதான்.
அடுத்த சன்னிதி குருத்வாரா. அங்கே பிரசாதங்களும் குடிக்கத் தண்ணீரும் கிடைக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,கொழுக்கட்டை எல்லாம் தீர்ந்து போச்சா:)

நினைவுகள் நிறைய இருக்கின்றன.நினைத்து
எழுதுவதற்குள் அசதி வந்து விடுகிறது!
கோர்வையாக எழுதணும் இல்லையா.

நானானி said...

பிள்ளையார் அருளால் நானும் படிச்சிட்டேன். குட்டியானை போல குட்டியான பதிவு. ஆனாலும் அது பிரம்மாண்டம்!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானிமா
பிள்ளையார் இல்லாமல் எது நகரும். நமக்கெல்லாம்
எப்பொழுதும் துணை அவரே.நலமாப்பா.

அப்பாதுரை said...

நல்லாத்தானே இருக்கு?

நீங்க சென்னை திரும்பி விட்டீர்களா?

வல்லிசிம்ஹன் said...

இன்னும் இல்லை துரை. நாளை இரவு சென்னையில் இருப்போம்.
இங்கே ஈத் விடுமுறையின் போது சிலசமயம் நெட்
பிசியாகிவிட்டது. அதனால்தான் அந்தக் கேள்வி எழுந்தது.