Blog Archive

Wednesday, June 22, 2011

குழந்தைகளும்ஊசிகளும் குழந்தைகளும்

''அம்மா  உனக்கு  கோல்ட் சரியாப் போச்சா.'
கொஞ்சம் இருக்குமா.''
அப்போ டாக்டரைப் பார்த்துட்டு வா. நான் அப்பாவோட இருக்கேன்''
சரி.
அடுத்த நாள் பள்ளியிலிருந்து வந்ததும்....
அம்மா, கோல்ட் சரியாப் போச்சா?
இன்னும் இல்லைமா.
அப்ப        டாக்டர்ட்ட போய் இன்ஜெக்ஷன்
போட்டுண்டு வா. வலிக்கவே வலிக்காது.
நான் அப்பா கிட்ட இருக்கேன்.''
பேத்தி மருமகள் டயலாக் இது.

இங்க பேரனுக்கு ரத்தத்தில் ஹீமோக்ளோபின் பரிசோதனை,.
விவரம் புரியாமல் வைத்தியரிடம் போய் விட்டு அவர் கையில்

பிளாஸ்டரை

எடுத்ததுமே அலற ஆரம்பித்தவன்,
கைகளை விவேகானந்தா போஸில் வைத்துக் கொண்டு
எடுக்கவே இல்லையாம்;)

மூன்று நபர்கள் பிடித்துக் கொண்டு சாம்பிள்
ரத்தம் எடுத்து கையில்

ப்லாச்ட்டரும்
 போட்டு இருக்கிறார்கள்.


''நான் இனிமே இங்கே வரவே மாட்டேன். யூ டுக் மை  ப்ளட்


யு ஹர்ட்டட்ட்   மி.!!!:)

என்று வீர வசனம் பேசிவிட்டு வந்திருக்கிறான்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

18 comments:

pudugaithendral said...

அயித்தானின் அண்ணன் பேரனுக்கு ஜுரம் அதிகமாகி சலைன் எல்லாம் ஏத்தியதில் பாவம் குழந்தை பயந்து ” ஐ டோண்ட் லைக் இந்தியா!! ஐ வாண்ட் டு கோ பேக் டு சிகாகோன்னு” ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டது.

அந்த ஊரை விட்டு கிளம்பியதும் குழந்தைக்கு உடலும் சரியாகிடிச்சு.

ஸ்ரீராம். said...

குழந்தைகள்...! பெரியவர்களே ஊசிக்கு பயப்படும்போது குழந்தை என்ன செய்யும்?!

ராமலக்ஷ்மி said...

ஊசிகளிலிருந்து குழந்தைகளைத் தப்புவிக்கவே முடியாதிருப்பது வேதனைதான்.

திவாண்ணா said...

அக்கா நான் எப்பவுமே பசங்களுக்கு சாய்ய்ஸ் கொடுப்பேன்! "ரெண்டு பெரிய ஊசி போடலாமா? இல்லை ஒரு குட்டி ஊசி போடலாமா?"

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல், வாங்கப்பா.

குழந்தைகளுக்கும் வைத்தியர்களுக்கும் ஒற்றுமை கடினம்தான்.

இன்றும் பல் வைத்தியரிடம் அவன் போக வேண்டும்.:).

வல்லிசிம்ஹன் said...

True Sriram.poor kids.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா. அவன் கண்ணில தண்ணியைப் பார்த்தால் நம் நெஞ்சமே கலங்குகிறது.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
சாந்தி மாரியப்பன் said...

இந்த ஊசியே இல்லாம சிரப்புகளிலேயே குணமாக முடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நமக்கே இன்னும் ஊசினா பயம் தான்... சின்ன கொழந்தைக்கு சொல்லனுமா? பாவம் குட்டி பையன்... ஆனா டேஸ்ட் பண்ணாமையும் இருக்க முடியாதே... ஆனாலும் இந்த காலத்துக்கு குட்டிஸ்களை பேசி ஜெயக்கறது கஷ்டம் தான்...:)

வல்லிசிம்ஹன் said...

எங்க தம்பி டாக்டர் வாசுதேவன் நல்ல புத்திசாலி. இவனை உங்களிடம் அழைத்துக் காண்பிக்கணும்:).

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல். உடல் நலம் நல்லா இருக்கா.

ரத்தப் பரிசோதனைக்கும் ஏதாவது வழி இருக்கணும். மகள்,''இவன்கத்தின கத்தலில் கிருஷ்ண பகவானே வந்துடப் போறார்னு ninaiththen

''என்றால். கூடவே அந்த நர்சுகளும் டோன்ட் வொரி. இட்ஸ் அ லிட்டில் பின்ச் கிருஷ்ணா என்று சொல்லிக் கொண்டே இருந்தார்களாம்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க புவன்.

ஆமாம் சரியான சுட்டி. இரண்டு நாள் ஆன பிறகும் இன்னும் ப்ரோக்கன் பிங்கர்னு சொல்லித் திரியறான்.:)

நானானி said...

ஊசி..ஊசி..ஆனால் அதைப் ப்போட்டால்தானே உடனடி நிவாரணம்?
என் பேரனை என்னிடம் விட்டு விட்டு வெளியே போவதானால்,'அம்மா, ஊfi தாத்தா பாக்கப் போறேன்.'னு சொல்லானால்...'நா ஆச்சி கூட சமத்தா இருக்குவேன்.' என்பான்.

மாதேவி said...

எல்லோரையுமே கலங்கடிக்கும் சொல் இதுதான்.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

வாங்க

MAADHEVI..

வந்து படித்ததற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி. இந்த ஊசி எப்படியெல்லாம் உதவி செய்றது பார்த்தீங்களா:)