Tuesday, June 14, 2011

இப்பா லாலாலா சூப்

டிஸ்கி
இது

 சமையல்  குறிப்பு  இல்லை
எல்லோருக்கும்
 தெரிந்தது இந்த    களிமண் விளையாட்டு பற்றி.
களிமண்ணில் பிசைந்த  வீடு,சோப்பு   எல்லாம் எங்க காலம்.
இப்பொழுதுதான் 
குழந்தைகளுக்கு இதமான ப்ளே டோ 
   வந்திருக்கே.
.

அதை  செய்யக் கற்றுக் கொண்டு செய்கிறார்கள்.  வேண்டுவதெல்லாம் மைதா மாவு, கலர் எஸ்சென்ஸ்

, உப்பு, வெந்நீர்
சப்பாத்திக்குக் கலப்பது போல
 மாவு உப்பு வண்ண எஸ்சென்ஸ்  எல்லாம் கலந்து  அடுப்பில் வைத்து வெந்நீருடன் கலந்தால்   வாசனையான வண்ணக் கலவையைச்
  செய்து விடலாம்.

அது இல்லை நான் சொல்ல வந்தது:)
பெண்ணுக்கு வெளி வேலை இருந்ததால்
இரு பேரன்களும் என் பொறுப்பில்.

அம்மா செய்து வைத்துவிட்டுப் போன 

 மாவைத் தனியாக வைத்துவிட்டுத் தாங்கள் தனியாக இதை செய்ய ஆரம்பித்தார்கள்.
என்னுடைய    பயமெல்லாம்  இவர்கள் தண்ணியைக் கொட்டித் தடியால் அடித்தால் மரத்தரை ஊறிக் கீழே 
பேஸ்
மேண்டுக்குப்
போய் விடுமே என்பதுதான்.:)
நான் செய்த கோலாகலம் ஊர் அறிந்தது.
மாப்பிள்ளை அந்தச் சம்பவத்தை மறக்கவே விடமாட்டார்:)

http://porunaikaraiyile.blogspot.com/2006/05/blog-post_10.html
இந்தப் பதிவைப் படித்தால் என் அனுபவ விபரீதங்கள் புரியும்:)

நான் தயார்  ஆவதற்குள் இருவரும் மாவு, தண்ணீர், வண்ணம், வாசனை
 எல்லாம் சேர்ந்து கலந்து ஒரு இளம் சிவப்புக் கலவையை உருவாக்கிவிட்டார்கள்.
''போர் சம்மோர் வாட்டர் அண்ணா'
 ஒ தென் இட்    பிகம்ஸ் எ லேடிஸ்   கலர்''
வி டோன்ட் வான்ட் தட் டூ வீ''
யாய்  நா''
ஆட்  சம்மோர் ப்ளூ'
ஓகே ஹியர் கோஸ்.
ஈஸ்
நவ் 

  இட் இஸ்  கூயி  gooyee.
சாம் மோர்   மாவு
ஓஓஓஓஓ
இட் லுக்ஸ்   லைக் எ சூப்.   ஒகே  பாட்டி
நீ டெஸ்ட்   பண்ணிப் பாக்கறியா.
ஆங்க்
ஒரு ஸ்பூன் கொடு.
ரெண்டு வாலும

 அடக்க முடியாத சிரிப்போடு அந்தக் கிண்ணத்தை அருகில் கொண்டுவந்தன.
கிலி
யோடு அந்த
கிண்ணத்தைப் பார்த்தேன்.
உப்பு போட்டு இருக்கு பாட்டி.  சாப்பிடு என்று அருகில் வந்தவர்கள்
ஐய யா  பாட்டி  நீ சாப்பிட வேண்டாம்.
இதன் பேரு இப்பிலாலா சூப்.

என்றவர்கள், ஆளுக்கொரு அட்டைக் கத்தியை எடுத்துக் கொண்டார்கள்.
என்னைச் சுற்றிச் சுற்றி  வந்து.
''  இப்பிலாலா  ஓஹோ
இப்பிலாலா  ஹாய் ஹாய்!

இப்பிலாலா   வாவ் வாவ்
இப்பிலாலா கூ  கூ
 என்று ஒரு சிகப்பு இந்தியன்   வார் டான்ஸ் ஆட ஆரம்பித்தார்கள்.:)
சிரித்து முடியவில்லை என்னால்.
அதற்குள்   வாசலில் கார் சத்தம் கேட்டதும்.
 இரண்டுமாகச் சேர்ந்து அந்த இடத்தைச் சுத்தம் செய்த வேகத்தைப் பார்க்கணுமே. என்ன ஒரு ரோல்
  பவுண்டி
டிஷ்யூஸ்  காலி.
:)))
பெண் வந்து ரொம்ப ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்தாள். என்னம்மா
சவுக்கியமா.
சண்டை கிண்டை  இல்லையே.
என்றவாறு வந்தவள் பசங்களைச் சந்தேகக் கண்களோடு   நோக்கினால்
அவர்கள்  முகம் ஒன்றும் காண்பித்துக் கொடுக்கவில்லை.
கையிலிருந்த குப்பையைப் போடா  குப்பைத் தொட்டியைத் திறந்தாள்
ஒரே வண்ணக் குவியல்.
என்னடா
 பண்ணீங்க
நத்திங்
அடுத்த வினாடி எழுந்து அதே  பாட்டு அதே  நாட்டியம்.
பெண்ணுக்கு முதலில் கோபம் வந்தாலும்
மகிழ்ச்சியுடன்
  வீடியோ  எடுக்க    தொடங்கினாள் ....
எழுத்துப் பிழைகளை மன்னிக்கணும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


6 comments:

நானானி said...

வடை வடையா சாப்ட்டு போரிங்.
கிவ் மி சமதர் திங்.

எழுத்து பிழைகள் இருந்தாலும் ஒரு பாட்டியின் மழலை....ஒரு கீழவியின் கிழலை ரசிக்கும் படியிருந்தது.

அம்மா முன்னால் மறுபடி 'இப்பாலாலா..'நடனம்...ரசித்தேன்,சிரித்தேன்.
குழந்தைகள் கொண்டாட்டம் சூழ இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். எஞ்ஞ்ஞ்ஞ்சாய்ய்ய்ய்ய்!!!!

ஹுஸைனம்மா said...

அந்த சுவையான சூப்பை படம்பிடிச்சு போட்டிருந்தா நாங்களும் டேஸ்ட் பண்ணிருப்போம்ல!! அப்படியே அந்த ரெட் இண்டியன் டான்ஸூம்... ப்ளீஸ்!!

//லேடீஸ் கலர்...//
க்க்ர்ர்ர்ர்... ;-))))))

அப்புறம் நீங்க கிச்சன் தரையை அலம்பிவிட்ட கதையையும் பாத்தேன்!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி, இன்னிக்கு

தேங்காய் பர்பி செய்தது. அதை அனுப்புகிறேன்:௦)

செரியா.

அவங்க சூப் செய்ததை விட க்ளீனிங் செய்தது தான்

அதிசயம்.
thanks ma.

வல்லிசிம்ஹன் said...

கிச்சன் தரை சுத்தம் செய்ததைப் படிச்சீங்களா ஹுசைனம்மா:))

அவங்க அம்மா காமிரால

பிடிச்சிருக்காங்க.;)

என் கைக்கு வந்ததும் உங்களுக்கு அனுப்புகிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

"இப்பாலாலாலா சூப்" சுவையாக இருக்கிறது. ம்றுபடி செய்தால் அந்த நிறம் வருமோ என்னவோ.

மாதேவி said...

ஆகா சூப் :)

ரசம் சுனாமி படித்தேன் ஹா..