About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, June 06, 2011

பயணங்களில்...... மாந்தர்கள் மாதர்கள்

நாம்  விதவிதமாக

விட்டு
 சொல்லும் பெருமூச்சுகள்
அலையாகின்றன்வோ
பயணத்தில் ஒரு பகுதியான  படகு
நெடுமரம்
வந்த இடம் எதுவானால் என்ன!!. துணை சரியாக இல்லாவிட்டால்..


காடு இங்கேதான்.....................வானப்ரஸ்தம்

***********************************
இரண்டுவாரங்களுக்கும் முன்னால் நாங்கள் எங்கள் மகனோடு ச்விட்சர்லாண்டின் ஒரு அழகிய நகரமான
இன்டர்லாகன் எனும் இடத்திற்குப் பயணம் மேற்கொண்டோம்.

எங்களுக்குக் கிடைத்த நேரம்   ஏழு மணித்துகள் தான்.

பேத்தி பள்ளியில் இருந்து வருவதற்குள்
திரும்ப வேண்டும்.
-ரயிலில் ஏறியதும் இன்னொரு இந்திய தம்பதியினரின்   அறிமுகம் கிடைத்தது.
புத்திரப் பேறு கிடைக்காதவர்கள் என்றும் நல்லவசதி படைத்தவர்கள் என்பதும் புரிந்தது.
இருவரும் சென்னையில் ஒரு டூரிஸ்ட் கம்பெனியில்  பாக்கேஜ் டூர் எடுத்துக் கொண்டு
இருபது நாட்கள் ஐரோப்பியப் பயணமாக வந்திருக்கிறார்கள்.


எரிய பெரியவருக்கு ௭௫ வயதிருக்கும் .  நல்ல திடகாத்திரமான் உடல். கம்பீரத்தைப் பார்த்தால் எதோ பெரிய அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பாளராக   இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
மனைவிக்கு அறுபத்தெட்டு வயது என்று சொன்னார்..
ஆளுக்கொரு ஜன்னலோரத்தை அவர்கள் பிடித்துக் கொண்டதால்
நாங்கள்  அடுத்த இருக்கைகளைத தேடி  அமர்ந்துகொண்டோம்.

பரஸ்பர அறிமுகத்தை அடுத்து நான் மௌனமாக இயற்கைக் காட்சிகளைப் பார்த்துகொண்டு ரசித்தவாறு
வந்தேன்.
எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத பசுமை. அது.
அந்த அம்மாவோ வெறித்த
 நோக்கோடு எல்லோரையும் கவனித்துவந்தார்.
 கணவரோ..  திரு  ரவிச்சந்திரன்.
எங்கள் வீட்டுக்காரரிடமும் மகனிடமும் தான் தலைமை வகித்த   உலோகங்கள் சம்பந்தப்பட்ட  கம்பெனி யில் தன
தனிமனித சாதனைகளை
 விஸ்தாரமாக எடுத்து  உரைத்துக் கொண்டு வந்தார்.

என் அருகே இருந்த   அம்மா

...வசந்தா ரவிச்சந்திரன்
கூடக் கூட  எதோ முனு முணுத்தவாறு வந்தார்.

எப்பப்   "பார்த்தாலும்" நான் நான்"  தான். மத்தவாளைப் பத்தியும் கேக்கணும்,

கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு வரக் கூடாதோ'

'நான் ''அவர் எதோ சுவையாகத்தானே சொல்கிறார்."

இல்ல,
" நான் இந்தக் கதையை பத்துவருஷமாக் கேக்கறேன்.
விடவும் முடியலை. சேரவும் முடியலை "என்றவள்
 கண்ணில் தண்ணீர்.
சங்கடமாக இருந்தது.நீங்களாவது தமிழ் பேசறவர்களாகக்   கிடைத்தீர்கள்.

இல்லாவிட்டால் நான் பேசவே முடியாது."

எப்படி இந்த வயதிலும் உங்களுக்குக் கருத்து வித்தியாசம் இருக்கிறது. ?

இது   நான்.
(என்னவோ சம்சாரக் கடலில் சாதித்துவிட்ட  தொனி வந்துவிட்டதோ?)

''எங்கள் திருமணம் நடந்து நாற்பத்தி ஐந்து  வருடங்கள் ஆகின்றன. முதலில் குழந்தை பிறக்கப் போகும் சந்தோஷத்தைப் பகவான் கொடுத்தான்.

அது இல்லாமல் போயிற்று.
அதன் பிறகு என்ன  முயற்சி மேற்கொண்டும் ஒன்றும் பயனில்லாத நிலையில்

தம்பி மகனைத் தத்தெடுக்கலாம் என்று நான் சொல்ல, உங்கள் பிறந்தகம் வந்து

சாப்பிட, நான் சம்பாதிக்க முடியாது. நாம் இருவர் போதும் என்று ஒரே உறுதியாக இருந்துவிட்டார்.

கொஞ்சக்காலம்
தனிமையில் வருத்தப் பட்டேன்.
பிறகு வேறு விஷயங்களிலும் ஆன்மீகத்திலும்
மனதைச் செலுத்தி விட்டேன்."

என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே நாங்கள் இறங்கும் இடம் வந்தது. அங்கிருந்து
படகுப் பயணமாகக் கடைசி நிலையத்தை
அடைவதாக ஏற்பாடு.

திருவாளர்களும் திருமதிகளுமாக  அந்த அழகான  படகில் ஏறி உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம். .எங்க
மகன் அனைவருக்கும் காபி, கேக்  என்று வரவழைத்து உற்சாகமான சூழ்நிலையை ஏற்படுத்தினான்.

அவனையே கண்ணிமைக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தார்  வசந்தா.

அவரது கவனத்தைக் கலைக்கும் வண்ணமாக அவர்களது பயண விவரங்களைக் கேட்டேன்.

இங்கேயே  முடிந்தாலும் சரி என்று அவர் சொன்னது ,எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

'உடனே  அவர் முகத்தில் சிரிப்பு. அப்படியெல்லாம் செய்யமாட்டேன். ஜஸ்ட்   ஒரு நினைப்பு. என்றார்.
படகின் ஓரத்தில்   நின்று அலைகளின் அழகைப் பார்த்தவாறு வந்தோம்.
காற்று அதிகமாகவே
இருந்ததால்.நான் உள்ளே செல்ல முற்பட்டேன்.
தடால் என்ற சத்தம்.
என்னவோ எதோ என்று மீண்டும் வெளியில் வந்தால் ,

 மாமி அங்கேதான் இருந்தார்.

மாமாவைக் காணோம்.

அதற்குள் படகின் அடித்தளத்தில்
 சலசலப்பு.
திரு. ரவிச்சந்திரன் அவர்கள் படிகளில் சறுக்கி ,கழிப்பறைக்குச் செல்லும் இடத்தில் விழுந்திருந்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.
வசந்தா மாமியின் முகத்தில்   கலவரம் கூடிக்  கொண்டே சென்றது.

'பாவி மனுஷன். பக்கத்துக் கைப்பிடியப் பிடித்துக் கொண்டு இறங்கக் கூடாதோ." என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தார்.

அதற்குள் அந்தப் படகின்   முதலுதவி  டாக்டர் வந்து. மாமாவின்  உடல் நிலையைப் பரிசோதித்துக் காலில் சிறிய காயம் மட்டும் பட்டிருப்பதாகவும், மற்றபடி அவருக்குக்  கவலைப் பபும்படியாக
அடி படவில்லை என்று
கைத்தாங்கலாக   அவரை

 மேலே அழைத்து வந்தனர்.
'ஏனன்னா, என்றபடி அருகில் விரைந்த
வசந்தாவை அவர் பக்கத்தில் அணுக விடவில்லை.
ஐ ஆம் ஒகே.
நீ விழாமல் போய் வா., என்றபடி எங்கள்

மகனின் உதவியோடு   இருக்கையில் அமர்ந்தார்.

நான் கீழே சென்ற வசந்தாவுடன்
 கொஞ்ச நேரம் இருந்து ஆறுதல் சொல்லிவிட்டு, மேலே வந்தோம்.

'நாம் ஊருக்குத் திரும்பி விடலாமா. பாஷை தெரியாமல் அவஸ்தைப்

படவேண்டாமே என்றவளை எரிப்பது போலப் பார்த்தார் அந்த மனிதர்.''

ஊரிலிருந்து கிளம்பும்போதே உன் அபசகுனப் பேச்சை ஆரம்பிச்சையே.

இப்ப எனக்கு ஏதாவது ஆகணும்னு காத்துக் கொண்டிருந்தியாக்கும்

என்று''படபடத்தார்.
மற்ற பயணிகள் வசந்தா வடித்த கண்ணீரைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் , அருகில் வந்து ஆறுதல் சொன்னார்கள்.
எனக்குத்தான் கவலை
 அதிகமானது.

அப்பொழுது வாய மூடியவர்தான்  வசந்தா.. படகு விட்டு இறங்கி   சக்கிர
 வண்டியில் கணவரை ஏற்றிக் கொண்டு,  பக்கத்தில் இருக்கும
 அவசர வைத்திய உதவியை  நாடிச் சென்றனர்..

விடைபெறும்போது வசந்தாவின் கண்கள் என்னைப் பார்க்கவில்லை.

உலகத்தில் மனைவிகளாகப் படைக்கப் பட்ட எத்தனையோ மரக்கட்டைகளைப் போல நடந்து கொண்டிருந்தார்.

**************************************************************************
டிஸ்கி
எல்லா  மனைவியரும் எல்லாக் கணவர்களுக்கும் இது பொருந்தாது.நமக்குத் தெரியும் தானே.:)
 அனுபவம் பலவிதம்!!
-


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்6 comments:

இராஜராஜேஸ்வரி said...

நான் இந்தக் கதையை பத்துவருஷமாக் கேக்கறேன்.
விடவும் முடியலை. சேரவும் முடியலை "என்றவள்
கண்ணில் தண்ணீர்.//

தண்ணீரில் படகு.
கண்ணீரில் கண்கள்...
சம்சாரக்கடலில் சாதித்து..
அனுபவம் பலவிதம்.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

SRINIVAS GOPALAN said...

It is true, the steps in these boats are narrow especially for elders. One has to be really careful. Good to hear Mr. Ravichandran didnt have major injuries.

வல்லிசிம்ஹன் said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்க்கைக்கு மட்டும் எவ்வளவு அனுபவம் இருந்தாலும் போதாது.தாம்பத்யம் சங்கீதமாவது சிலருக்கு. நாராசமாவது பல பேருக்கு.என்ன

செய்யலாம்.:(

வல்லிசிம்ஹன் said...

Yes Srinivas Gopalan. steps were narrow but not slippery or anything.
he could have gotten hold of the rails.
well end result he is fine..thank you ma.

அப்பாதுரை said...

தம்மினும் மெலியார்... சரியாத்தான் இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துரை. எங்கே அதிகாரம் செல்லுமோ அங்கே அதைக் காட்ட அவர்கள் தயங்குவதில்லை.

எங்கே அந்த அம்மாதண்ணீரிலேயே குதித்து விடுவாரோ என்ற பயம் என்னைப் பற்றிக் கொண்டது.