Blog Archive

Tuesday, May 03, 2011

பெண் எழுத்து

 படிப்பது எவ்வளவு பயன் தரும் என்பதை நாம் எழுதுவதைச் சிறிது நிறுத்தினால் தான் தெரிகிறது:)


நாச்சியார் பதிவில் படங்களை ஏற்றுவதில் இருக்கும் சுலபம்,

எழுதுவதில் இல்லை.

இ கலப்பையும் உதவ முடியாத இந்த நேரங்கள் மற்ற பதிவுகளைப் படிக்கத் தோதாக அமைகிறது.

முக்கால்வாசி நேரம் மழலைகளுடன் செலவாகிவிடுகிறது.

ஓய்வெடுக்க ஒரு மணி.

மீண்டும் வேலைகள். மருமகளைப் பார்த்தால் அனுதாபம்தான் தோன்றுகிறது.

நம் ஊரைப் போல இஸ்திரி செய்ய ஒரு ஆள். வீடு பெருக்கித் துடைக்க ஒரு ஆள் என்றெல்லாம் இங்கு இல்லை.

தெரிந்த விஷயமே.



இருந்தாலும் கையில் ஏழு மாதக் குழந்தையுடன் எல்லாவற்றையும் கவனிப்பது

கடினம்..

இருந்தும் எனக்குக் கிடைக்கும் சில மணித்துளிகளில் கமலா சடகோபனின்

"என் இனிய மந்திரக் கோலே" படித்தேன்.

பக்கத்துவீட்டில் நடப்பதை நேரில்பார்ப்பது போல இருக்கிறது.



எண்ணங்களில் கீதாவின்  பெண் எழுத்து படித்தேன் அருமையாக பெண்களின்  எழுத்துப் பரம்பரையையே அலசி இருக்கிறார்.

இந்தப் பதிவிலேயே     .எல்.கார்த்திக்
*********************************************அவர்கள் என்னை எழுத அழைத்த  பெண்களின் எழுத்தைப் பற்றிய என் கருத்துகளைப் பதிவிடுகிறேன்.

நாங்கள் பள்ளியில் படிக்கும் காலங்களில் எழுதிய பெண்கள் குறைவாக இருந்தாலும்  எங்களுக்குப் பழகிய சூழ்நிலைக் களமாகக் கொண்டே
கதைகள் அமைந்தன.மிகவும்...பிடித்தவர்....லக்ஷ்மி.....பிறகு///சிவசங்கரி

அதில் புதுப்பாணியைக் கொண்டு வந்தவர் ஆர். சூடாமணி.
பெண் மனசில் உள்புகுந்து அழகுகளையும் விகாரங்களையும் தைரியமாக எழுதியவர்.
பின் என்னைக் கவர்ந்தவர்  ராஜம் கிருஷ்ணன்.
முறுக்கு,சீடை,மைசூர்பாகு என்று உழலாமல்  வேறு  நிலைக்கு எடுத்துவைத்தார்.
அதற்குப் பின்னர் வந்தவர்களின் கதைகளில் , கண்ணம்மா,,டார்லிங் இவைகள் முக்கிய வார்த்தைகளாக உயர் மட்டக் காதல்களும் தியாகங்களும்
வேறொரு பார்வை பார்க்க வைத்தன.
கண்ணம்மா  என்றழைக்கும் கணவன் வேண்டும் என்று என் தோழி ஒருத்தி கனவு காணுவாள்:):சிவசங்கரி,வாஸந்தி,இந்துமதி..)

ஆறடி உயரம் ரிம்லெஸ்  கண்ணாடி,,பியட் கார் என்று வலம் வந்த கதா நாயகர்கள். படித்த காதலி, இப்படிப் போகும் கதை..
இப்பொழுது இணையத்திலும் காதல் கவிதைகளுக்குக் குறைவில்லை.

அதில்லாவிட்டால் உலகம் இல்லையோ.
இல்லைதான் என்று நினைக்கிறேன்.:)
பிறகுபடித்தவர்கள்....வித்யாசுப்ரமணியம்,உஷாசுப்ரமணியம்.
கமலாசடகோபன்.....அனுராதாரமணன்.

பாட்டியின் பார்வையில் வேறென்ன தெரியும்!
படிக்க அனைத்து எழுத்துகளுமே நன்றாக இருக்கின்றன.
நேரம் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இலவசமாகக் கரும்பு போல இனிக்கும் எண்ணங்களையும்,ஆழ் நோக்குடன் பதியப்படும் முற்போக்குக் கதைகளையும் வாசிக்கக் கிடைக்கின்ற ஒரே இடம் இணையம்.

பெண்பேசும்   தமிழுலகம் இன்னும் விரியும்.
ஆன்மீகத்திலிருந்து, ,பற்பல சுற்றுலா சென்று நம்மை மகிழ்விக்கும்
***************************************************************************
 பதிவுகளிலிருந்தும்,
படித்தாலே சிந்தனையைக் கிளரும் ராமலக்ஷ்மி போன்றவர்களின் தீர்க்கமான கருத்துகளும், லக்ஷ்மியின் மலர்வனமும்,
சித்ரா,அன்புடன் அருணா, மாதங்கி மாலி,அப்பாவி புவனா,ஹுசைனம்மா,மாதேவி,சிறுமுயற்சி   முத்துலட்சுமி,
இவர்களெல்லாம் இளைய தலைமுறை.

பெரியவர்களாக நம் துளசி,கீதா,நானானி,கோமா,கோமதி அரசு, திருமதி
************************************************** லக்ஷ்மி பூனாவிலிருந்து
***************************************************************** எழுதும் பதிவுகள்
***********************************************
 எல்லாமே அள்ள அள்ளக் குறையாத இன்பம் தரும்  எழுத்துகள்.

இவர்களைப் பற்றி  மதிப்பிடவோ,கருத்துக் கூறவோ
 நான் இன்னும் நிறைய தொலைவு கடக்க வேண்டும்.
தெரிந்ததை எழுதி

விட்டேன் கார்த்திக்.!!
 நேரக் குறைவு காரணமாக நிறைய
பதிவர்கள் விட்டுப் போயிருக்க வாய்ப்பு அதிகம்
நம் சின்ன அம்மிணி அகிலா மாதிரி.:)
மற்றவர்கள் மன்னிக்கணும்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

23 comments:

எல் கே said...

ரொம்ப நன்றிமா. பழைய எழுத்தாளர்களில் ராஜம் கிருஷ்ணன் கேள்விப் பட்டிருக்கிறேன். மற்றவர்களை கீதா அவர்களின் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன் .

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசித்தவற்றை அருமையாக எழுதியுள்ளீர்கள். தற்கால பெண் பதிவர் எழுத்தில் என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி.

//பெண்பேசும் தமிழுலகம் இன்னும் விரியும்.//

நிச்சயமாய். நல்ல பதிவு வல்லிம்மா.

Unknown said...

பெண் எழுத்தைப் பற்றிய தங்களது பதிவு நன்றாக இருக்கும்மா.இந்தக் கால எழுத்தாளர்களாக நமது பதிவுத் தோழிகளையும் சேர்த்திருப்பது மிக்க மகிழ்ச்சி.திரு.ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்களின் பின்னூட்டங்களில் இருந்துதான் உங்களது வலைப் பக்கத்தைத் தெரிந்து கொண்டேன். நீங்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்.நானும் அந்த ஊர் தான்.உங்களது வலைப பக்கத்தைப் பற்றி இவ்வளவு நாளாக தெரியவில்லையே என்பது வருத்தத்தை அளிக்கிறது.நன்றிம்மா.

கோமதி அரசு said...

மழலை மொழியை ரசித்துகொண்டு எங்களையும் மறக்காமல் இருக்கும் உங்களுக்கு என் நன்றிகள்.

ஏதோ எனக்கு தோன்றியதை எழுதி கொண்டு இருக்கிறேன். உங்களின் ஆதரவால்.

மந்திரகோல் படிக்க ஆவல்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\கண்ணம்மா என்றழைக்கும் கணவன் வேண்டும் என்று என் தோழி ஒருத்தி கனவு காணுவாள்:)/
வல்லி அந்த தோழிக்கு அப்படி கணவர் கிடைச்சாராமா .. தெரியுமா ?
:))

\\பெண்பேசும் தமிழுலகம் இன்னும் விரியும்// சிறக்கட்டும் .. நன்றி.

ஸ்ரீராம். said...

பெண் எழுத்தில் பதிவர்களையும் இணைத்துச் சொன்னது நல்ல விஷயம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு

கார்த்திக்
என்னை எழுதுவதற்கு தூண்டின நல்ல பொருள் அமைந்தது. உங்க உதவியால்.
மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி
நம்மை நாமே வளர்த்துக் கொள்ளவேண்டும்.
எழுத்து என்பதே நம் சிந்தனை மற்றவரை அடைவதுதானே.
நம் முன்னோடிகள் எழுத்தாளர்கள். இப்போது நாம் (பதிவர்கள்)மற்றவர்களுக்கு ஒரு வழி காட்டலாம்
.அதுவும் பதிவுலகில் வரும் உயர்ந்த எழுத்துகள் என்றும் அழியாது.
கணினியின் மகிமை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜிஜி ,
மற்றுமொரு நட்பு கிடைத்தது எனக்கும் மகிழ்ச்சியே.
நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் எட்டு ஆண்டுகள் தங்கி இருந்தோம். மாறாத பால் வாசனையும், சைக்கிளில் பால்கோவா விற்று வருபவரும், ஆண்டாலும் என் மனதில் பதிந்த பிம்பங்கள். ஒரு அழியாத காதல்.:)
வருகைக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி

நல்ல எழுத்து எல்லோரையும் சென்றடைய வேண்டும்.
அந்த வழியில் உங்கள் மொழிகள் நம்மை வளப்படுத்தும் என்பதில் எனக்குத்துளிக்கூட
சந்தேகம் இல்லை.-- வாழ்வோம் வளர்வோம்.

வல்லிசிம்ஹன் said...


கயல் முத்து,
அவள் கல்லூரிக்கு போனதும்
அவர்கள் வீட்டில்
பண்ணையார் ஒருத்தரைப் பார்த்துத் திருமணம் முடித்துவிட்டார்கள்.
எனக்கு அதற்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டது.
அதனால் திண்டுக்கல் போக முடியவில்லை.
அப்போது வழங்கிய சினிமாப் பாடலை மறைமுகமாக எனக்கு எழுதி அனுப்பி இருந்தாள்
"எனக்கு மாலை போடும் மாப்பிள்ளை பேரு சிதம்பரம்னு" முடியும்

சாந்தி மாரியப்பன் said...

//பெண்பேசும் தமிழுலகம் இன்னும் விரியும்.//

நிச்சயமா.. பதிவிகளையும் இந்த வரிசையில் இணைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு :-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
எழுத்தின் மீது ஆசை இருந்ததால் தானே நாம் இணையத்துக்கே வந்திருக்கிறோம்.
நாம் பத்திரிக்கை எழுத்தாளர்களுக்கு இளைத்தவர்கள் இல்லை:)

அதனால் தான் தெரிந்தவர்களைக் குறிப்பிட்டேன்.
ரைட்டர் சுஜாதா சொல்வது போல
தினமும் நான்கு வரிகளாவது ஒரு கதை எழுத வேண்டும்.
பிறகுதான் சிறுகதைக்குப் போகமுடியும், என்று எழுதி இருப்பார்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல்,
எழுத்தும் தமிழும் எல்லோருக்கும் பொது
இதில் பத்திரிகைக்கு மகத்துவம்
இணையத்துக்கு இல்லை என்று சொல்ல முடியுமா.

எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. இணையத்தில் இணையில்லா சுதந்திரம் பத்திரிகையில் கிடையாது.
இல்லையா மா:)....

ஹுஸைனம்மா said...

//படிப்பது எவ்வளவு பயன் தரும் என்பதை நாம் எழுதுவதைச் சிறிது நிறுத்தினால் தான் தெரிகிறது//

மிக உண்மை வல்லிமா.

என் பேரும் உங்கள் அன்பார்ந்தவர்களின் லிஸ்டில் பார்க்கும்போது, நெகிழ்கிறேன். நன்றி மட்டுமே சொல்ல முடிகிறது.

ஸ்விஸ்க்கு, ஒன்று ஹனிமூனுக்கு அல்லது விடுமுறைக்குச் செல்வார்கள், இல்லை ஸ்விஸ் பேங்குக்காகப் போவார்கள். ;-)))
நீங்க ஆல்-இன் - ஒன் -ஆக போயிருக்கீங்க. ;-)))))))))

ஆமா, பேரப்பிள்ளைகளப் பார்த்து rejuvenate செஞ்சுகிட்டா, மேலேயுள்ள எதிலயும் கிடைக்காத புத்துணர்ச்சி கிடைக்குமே!! வாழ்த்துகள்.

நானானி said...

மழலை மொழியோடு எங்கள் கிழலை மொழியையும் ரசித்தமைக்கு எங்கள் அன்பான நன்றிகள்!!!
எங்கள் = துள்சி, நான், கோமா, கோமதிஅரசு

Matangi Mawley said...

romba nalla pathivu...

nammaiyum kandundathukku- thanks! but didn't think i deserve it, though! :)

geetha mam ezhuthinathaiyum naan padichchen... thanks for mentioning about it! :)

அப்பாதுரை said...

படங்கள் பிரமாதமென்றாலும் உங்கள் nostalgic reportsம் அதைவிட பிரமாதம். விவரங்களை நினைவில் நிறுத்தி பகிரும் சுகம் புகைப்படத்தில் வருமா தெரியவில்லை.

பெண் எழுத்து - சுவாரசியம். இப்போது தான் கவனித்தேன். இது chain பதிவா? நிறைய பேர் இது பற்றி எழுதியிருக்கிறார்களே?

இந்துமதி பிடிக்குமா?

வல்லிசிம்ஹன் said...

Dear Naanaani,

Have you written abt this subject.
If not why dont you start.
I shd like to see your ideas.
thanks pa.

வல்லிசிம்ஹன் said...

Dear Mathangi,
ofcourse u needed to be mentioned.
any writing that makes you think is laudable.
and u are such one.
So keep writing ma. allthe best.

வல்லிசிம்ஹன் said...

Dear Hussainammaa,

I am not visiting most blogs now. because of Paappaa"s schedule.

I know you and others have lots of potential to share with others.

keep writing ma. my best wishes are always with you.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
பேசச் சொன்னால் நிறையச் சொல்லி இருப்பேன்:)
நேரம் குறைவாக இருப்பதால் கொஞ்சமா சொல்லிவிட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.
இந்துமதி பிடித்தது. கொஞ்ச காலத்துக்கு.
புக் fபேர்ல சந்தித்தும் இருக்கேன்.

எதோ மாஜிக் மிஸ் ஆகிவிட்டது அவர்கள் எழுத்தில்.
இல்லாட்ட என் எண்ணங்கள் மாறிவிட்டதோ தெரியவில்லை.:)

இராஜராஜேஸ்வரி said...

பெண் எழுத்துக்களைப் பற்றி அருமையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.