Blog Archive

Thursday, March 31, 2011

திருமங்கலம் 1955லிருந்து 60 வரை குடும்ப நிகழ்வுகள்

கிணறு, தண்ணீர் இறைத்து விடும் தொட்டி, பக்கத்திலேயே தோய்க்கிற கல்.

மதுரை  திருமங்கலம்  சாலை
கண்மாய்   தடாகம்
மீனாக்ஷியின்  மண்டபம்
ரோஜா  மல்லிகை வாசம்.நூறு நூறாகக் கட்டி விற்கும் லாவகம். இதெல்லாம் திருமங்கலத்துக்கே உண்டான விசேஷங்கள்.
அப்பாவிற்கு  உதவியாள் தங்கமணி என்று பெயர்.

வீட்டில்   வந்து வேண்டும் என்கிற மின்சாரம்  சம்பந்தப்பட்ட உதவிகளைச் செய்வார்.
மற்றபடி   காய்கறி,கீரை,மோர்,தயிர் வெண்ணெய் எல்லாம் வாசலில்  கூவி விற்பார்கள்.



  எல்லோருக்கும் என் இரண்டாவது தம்பியிடம் பிரியம் ஜாஸ்தி. இன்னும்  கொஞ்சம் வெண்ணேய் எடுத்துக்கோ  ராஜா என்று வேறு கொடுப்பார்கள். இதை எல்லாம் நாங்கள் பள்ளி விட்டு வந்ததும் சொல்லி
கடுப்படிப்பான்.:)

திருமங்கலம் வந்து ஒரு வருடத்தில் ஒரு  சன்யாசி ஒருவர்
வாயிலில்  தென்பட ஆரம்பித்தார். கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பார். செக்கச்செவேல் என்று ஆறடிக்கு ஒரு ஆஜானு பாகுவான தோற்றம்.
அநேகமாக விடுமுறை நாட்களில் தான் காலை வேளைகளில் வந்து
;பவதி பிக்ஷாம் தேஹி''  என்று குரல் கொடுப்பார்.
அந்த வேளையில்  வாயில் கதவைச் சாத்திதான் வைத்திருப்போம்.

திண்ணைகளில் உட்கார்ந்து பாடம் எழுதிக் கொண்டிருப்போம்.

அவர் தலையில் சிகப்புக் கலர் முண்டாசு   (நம் சாயிபாபா    மாதிரி)
வேறு கட்டி இருப்பாரா. எனக்குப் பகீர்னு பயம் பிடித்துக் கொள்ளும்.
வாயில்  ஜன்னலில் அவர் முகம் தெரிந்ததும் நான் அலறி அடித்து அம்மாவிடம் ஓடிவிடுவேன்.

அவரோ தீர்க்கமாக, தம்பி முரளியைச்  சத்தமாக விளிப்பார்.
அதென்னவோ அவன் மேல் அவருக்கு மிகவும் பிரியம்.
அம்மாவோ  அப்படியெல்லாம்  வெளியே வரும் வழக்கம் கிடையாது.
ஒரு தாம்பாளத்தில்  ஒரு ஆழாக்கு அரிசியைக் கொட்டி,
 தம்பியிடம் கொடுத்து வாசல்   கதவைத் திறந்து கொடுக்கச் சொல்லுவார்,.
அவனும் அப்படியே செய்வான்.


நாங்கள் மிச்ச   ரெண்டு பேரும் கதவுக்குப் பின்னால்  ஒளிந்து கொண்டிருப்போம்.

''நன்னா இருப்பே  முரளி. நிறையப் படி;  என்ற படி அவர் போய் விடுவார்''

பிறகு விசாரித்த போது அவர் ஒரு செல்வந்தர் குடும்பந்தைச் சேர்ந்தவர் என்றும்
மதுரையில் எம்.ஏ  படித்துக் கொண்டிருந்தவர் திடீரென  இப்படி(!!!)  ஆகிவிட்டதாகவும் சொன்னார்கள்.
அதாவது கொஞ்சம் சித்தம் கலங்கியவர்(?) என்று பேசினது காதில் விழுந்தது. அந்த நாளையக் கணிப்பு.
இப்பொழுது புரிகிறது.அவரும் ஒரு சித்தராக இருந்திருக்கணும்
இப்போதாக இருந்தால்  வேறு  பெயர் கிடைத்திருக்கக் கூடும்.
ஆனால் இன்னும் அவர் கண்களின் தீக்ஷண்யத்தை என்னால் மறக்க முடியவில்லை.

திருமங்கலத்தில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள்.

இரண்டாவது சித்தப்பாவுக்கு   மிக அழகான பெண்ணை மதுரையில் பார்த்துப் பேசி முடித்தார்கள். மதுரையில் ராஜம்மாள் சுந்தரராஜன் என்று பிரபல
திருப்பாவைப் பள்ளி ஒன்றை நடத்திவந்தவரின்   தம்பி  மகள்.
மங்கம்மா  சத்திரத்தில் திருமணம் நடந்தது.


சித்தப்பா எனக்கும், என் சிறிய கசின்  சந்திராவுக்கும் இரண்டு பட்டுப் பாவாடைகள் வாங்கி வந்தார்.
மாம்பழக்கலர் பட்டின் மேல் எனக்குப் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.


எம் எஸ் ப்ளூ  பட்டுப் பாவாடையை   என் கையில் கொடுத்ததும்   முழ நீளம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது நினைத்து  சிரிப்பு வருகிறது.
நீதான் விட்டுக் கொடுக்கணும் நீதானே எல்லாருக்கும் அக்கா  என்னும் அறிவுரைகள் அப்போது கசந்தன.

அம்மாதான் இன்னும் எவ்வளவோ பண்டிகைகள் வரும் .மாமாக்கள் திருமணத்துக்கு  எல்லாம் உனக்குப் பட்டு கிடைக்கப் போகிறது. இப்படி
எல்லோர்  முன்னாலும் அசட்டுத்தனம் செய்யாதெ  என்றதும் அடங்கி விட்டேன்.
அத்தையம்மா  என்று அழைக்கப் பட்ட, சித்தியின் பாடல்வகுப்புகளில்
 என் திருப்பாவைப் பாட்டுகள்   மனனம் செய்து பாடக் கற்றுக் கொண்டேன்.

சின்னத் தம்பிக்கு    அக்ஷ்ராப் யசம்  ஆயிற்று.
வீட்டிற்கு வந்து ஆசான் ஒருவர் நெல்லில் அ,ஆ  எழுதச் சொல்லிக் கொடுத்தார்.
அன்று அம்மாவிடம் சண்டை போட்டேன். எனக்கு மட்டும் நீ இந்த மாதிரி செய்யவில்லை என்று(;) )) .





.
எங்கள் வீடு   திருமங்கலம்
மீண்டும் பார்க்கலாம்:)









.













  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

31 comments:

வல்லிசிம்ஹன் said...

கடைசிப் படம் ஒரு வரையத்தெரியாத நபரின் அமெச்சூர் வேலை. அதைக் கண்டு கொள்ள வேண்டாம்.;0)

சாந்தி மாரியப்பன் said...

அமெச்சூர் நபர் வரைஞ்ச படத்துலேர்ந்து நித்யமல்லி வாசனை இங்கேவரைக்கும் வருதுன்னு சொல்லிடுங்க வல்லிம்மா..

எவ்ளோ நினைவுகள்.. இதெல்லாம் படிக்கிறப்ப உங்ககூடவே இருக்கறமாதிரியான ஒரு உணர்வு :-))))

Geetha Sambasivam said...

ஆஹா, எனக்கு இப்படிக் கூட வரையத் தெரியாதே! நல்லாத் தானே இருக்கு! இதுக்குப் பேரு தான் தன்னடக்கம்ங்கறது! வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

இப்போ கமெண்டுக்கு வரலாம்.

மதுரையில் ராஜம்மாள் சுந்தரராஜன் என்று பிரபல
திருப்பாவைப் பள்ளி ஒன்றை நடத்திவந்தவரின் தம்பி மகள்.//

அட??? எனக்கும் இங்கே தான் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக்கிறதுக்குனு சேர்த்துவிட்டாங்க. நான் படிச்சது தானப்பமுதலி அக்ரஹாரம் கண் ஆஸ்பத்திரினு அழைக்கப் படும் மங்கள நிவாஸில். மார்கழி மாசம் பூராவும், இந்த வகுப்புக்காகவே மதியம் இரண்டு மணியில் இருந்து ராத்திரி எட்டு மணி வரைக்கும் இலவசமாப் பெண்கள் படிக்கணும்னு விடுவாங்க. இதன் அறங்காவலர் குழுவில் என்னோட பெரியப்பாவும் இருந்தார். :))))))

அத்தையம்மா என்று அழைக்கப் பட்ட, சித்தியின் பாடல்வகுப்புகளில்
என் திருப்பாவைப் பாட்டுகள் மனனம் செய்து பாடக் கற்றுக் கொண்டேன்.

Geetha Sambasivam said...

நாங்க அத்தம்மானு கூப்பிடுவோம். அவங்களுக்கு வலது கை விசாலம் அக்கானு ஒரு பெண்மணி இருந்தாங்க அப்போ. அவங்க நடத்தும் பக்தி கலா நிகழ்ச்சியில் நந்தனார் வேஷம் போட்டுக்கிறது அவங்க தான். ராதானு ஒரு அக்காவும், மதுரம்னு ராதா அக்காவின் சகோதரியும் ராதா கிருஷ்ண நடனத்துக்கு ஆடுவாங்க. ராதா அக்கா அப்போ மருத்துவம் படிச்சுட்டு இருந்தாங்க. அவங்க கடைசித் தங்கை வைஜயந்தி என்னோடசெட். அவளுக்கு பால கிருஷ்ணன் வேஷம் போட்டிருப்பாங்க. வயசானதும், ஆண்டாளா வருவா. மதுரம் அக்காவும் ஆண்டாளா நடிச்சிருக்காங்க. இவங்களோட சகோதரன் கிருஷ்ணன் என் தம்பியின் இணை பிரியாத நண்பன். என்னோட இரண்டு பிரசவத்துக்கும் கிருஷ்ணன் உழைச்ச மாதிரி வேறே யாராலும் உழைக்க முடியாது. அதே போல் என்னைப் பெண் வார்க்க வந்தப்போ காலம்பர காப்பி எடுத்துண்டு போனது என் தம்பியோட இவன் தான். நல்ல பையர். இப்போ எங்கேனு தெரியலை! கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன். அப்புறம் நாங்க மறுபடி வடமாநிலங்கள் போக யாரோடும் தொடர்பே இல்லை! :))))))

Geetha Sambasivam said...

கூகிள் திட்டுது, சின்னதா எழுதத் தெரியாதானு! :P

வல்லிசிம்ஹன் said...

அட, நிஜம்தான் பா. இன்னும் கிணறு, தோய்க்கிற கல்லு,பக்கத்து வீட்டுப் போகிற வழிக்கதவு எல்லாம் விட்டுப் போச்சென்னு வருத்தமா இருக்கு. உறங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை உசுப்பி விட்டுட்டீங்க.;)
இனிமேல் படம் வரைந்தே கதைசொல்கிறேன் சாரல் . கூடவே வரத்துக்கு ரொம்ப நன்றி. இதில நான் செய்த சில(?)மாடிக்கு மாடி தாவல்கள் எல்லாம் எழுதாமல் விட்டு விடுகிறேன். அப்புறம் நம்ம கௌரவம் என்னா ஆகிறது.:)

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நன்றிமா கீதா.ஆமா ஆமா. தன்னடக்கம்தான்:)
மதுரையின் தெருப் பெயர்கள் எல்லாம் மறந்துவிட்டது. அவர்கள் வீடும் இந்தப் பாட்டு வகுப்புகளும் சேர்ந்தே இருந்ததோ?
அத்தையம்மா வீட்டில் ஒரு பெரிய பகீரதன் தவம் படமும் அதில் சிவனார் தலை விரி கோலத்தில் காலை அக்ட்டி வைத்துக் கொண்டு வானத்தை மேல் நோக்கி முகம் இருக்க,
கங்கை பாய்ந்து இறங்கும் காட்சி தத்ரூபமாக இருக்கும் படம் ஒன்று இன்னும் நினைவில் இருக்கிறது.அற்புதமான படம்.
நான் டிசம்பர் லீவுக்கு பழங்காநத்தம் வரும்போது சித்தி தன் அத்தை நடத்தும் வகுப்புக்கு அழைத்து வருவார். விசாலி என்ற ஒரு பெண்மணி வகுப்புகள் நடத்த்துவார்.ஆநந்தமான நாட்கள். இது 1957,58,59 வரைக்கும்.

திவாண்ணா said...

//உறங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை உசுப்பி விட்டுட்டீங்க.;)//

ஹிஹி! சிங்கம் கணினி பகக்ம் எல்லாம் வராரா என்ன?

// இதில நான் செய்த சில(?)மாடிக்கு மாடி தாவல்கள் எல்லாம் எழுதாமல் விட்டு விடுகிறேன்.//
எதை எழுதறீங்களோ இல்லையோ இதை எல்லாம் நிச்சயம் எழுதணும். கௌரவம் எங்கே போகும்?
:-))))

துளசி கோபால் said...

முற்றத்துக்குள்ளே வந்தததும் இருந்த ரெண்டு பக்கத் திண்ணையையும் பார்த்த ஞாபகமே இல்லையேப்பா!!!!

படம் வரைந்து பாகங்களைக் குறி.

அருமையா வந்துருக்கு!!!!!

அதென்ன 32 வயசுலே...... ப்ச்:(

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவன் ,எல்லாரும் என்னை நல்ல பாட்டி என்று மதிப்பு வைத்திருக்கிறார்கள். தாவின , விழுந்த கதையெல்லாம் ஹநுமார் ஜாதில நம்மளைச் சேர்த்து விடாதா.:0
அட்டுத்த அத்தியாயத்தில் எழுதினால் போச்சு:)
சிங்கத்துக்கு என்னோட இந்த மறுபக்கம் தெரியாது!!

வல்லிசிம்ஹன் said...

கீதா எங்க சித்தி பெயர் பங்கஜி ராஜகோபாலன்.. இப்ப்போதும் மதுரை வானொலியில்
அவரது குரல் கேட்கலாம்.
அவரும் தங்கை ரங்கநாயகியும் ராதா கிருஷ்ண வேஷம் போட்டிருப்பதாகச் சொல்வார்,. திருமணத்திற்குப் பிறகு நின்றுவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

நீங்க வந்தபோது திண்ணை இருந்ததே. அதில் ஏறிக் குதித்து விளையாடினோமே;)
சித்தப்பாவுக்குச் சின்ன வயசில் ஏதோ பாலாரிஷ்டமோ என்னவோ இருந்ததாம். எப்பவும் அசதியாக இருப்பார். திருமணத்துக்குப் பிறகு ஆரோக்கியமாகவே இருந்தார்,.
என்ன செய்யலாம் துளசி.

ஸ்ரீராம். said...

மதுரை - திருமங்கலம் சாலை....என்ன ஒரு ரம்யமான புகைப் படம்? எவ்வளவு மரங்கள்?

Unknown said...

தேர்தல் ஜுரத்துல வந்தேனா, "திருமங்கலம்", "குடும்ப நிகழ்வு"ன்னு பார்த்தவுடன், 'ஹாய், நம்ம வல்லிம்மாவும் தேர்தல்ல குதிச்சுட்டாங்க்களோ'ன்னு பதிவைப் படித்தேன்.

வரைபடம் நல்லாவே வந்திருக்கு. படிக்கிறப்போ, எங்க ஊர் பூ, ஆறு, அத்தைன்னு நினைவுக்கு வருது.. ம், அப்புறம் என்னாச்சு?

ஜோதிஜி said...

சூடான அரசியல் களத்தில் திருமங்கலம் என்றவுடன் ஆச்சரியமாக இருந்து உங்கள் அனுபவங்களை படிக்கும் போது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம், ஒரு காலத்தில் திருப்பரங்குன்றம் வழியே செல்லும்போது திருமங்களத்துக்கு முன்னால் இந்தக் கண்மாய்க் கரையும் மரங்களும் மிக இதமாக இருக்கும். இப்போது எப்படியோ.
பசுமலை வயல்கள்,இரயிலடி எல்லாமெ இனிமைதான்.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கெ.பி.
சீக்கிரம் தெர்தலில் இருந்து வெளிவந்துவிடுகிறேன். நாங்கள் இருந்த திருமங்கலம் 50 வருடங்களுக்கு முந்தியது. அவ்வளவாக அரசியல் கறை படவில்லை. திரு.காமராஜரின் எளிமைப் பேச்சைக் கேட்க முடிந்த காலம். நாலணாவுக்கு பத்து ரோஜாக்கள் அதவும் பன்னீர் ரோஜாக்க்கள் கிடைத்த காலம்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஜோதிஜி. அந்த வரிகளை நான் தவிர்த்திருக்கலாமோ. அவசியமில்லாமல் அரசியலை இழுப்பானேன்:)நன்றி மா.

Jayashree said...

இப்ப திருமங்கலம் விருதுநகர் ரோட் எல்லாம் ஹைவே!! Canopy of trees இந்த தடவை ஜனவரில கண்ணுல படல . அப்பெல்லாம் அம்மன் கோவில் முன்னால ஐயனார் சாமி தானே பெருசா அருவாள தூக்கிண்டு !! இப்ப குதிரை இருக்கு!! முக்தி நிலயம் அடுத்த தடவை போணூம்

Jayashree said...

எங்க திருமங்கலம், திண்டுக்கல் , காந்திக்ராமம் சோழவந்தான் வீடுகள் நயாபகம் வரது !! அப்பா திண்ணை தூண் மரம் எப்படி மொழு மொழுன்னு தேக்கு !! எல்லாமும் திண்ணை ரேழி தாவாரம் நடுவுல முற்றம் அதுல ஓரமா தவலை தண்ணீ, சொம்பு காலலம்பிக்க!! நடுவுல துளசி மாடம் அது பக்கம் வத்தல் வடாம் அப்பளம் காய வச்சிருக்கறது .மேல குரங்கு காக்கா வராம இருக்க இரும்பு அழி . சுத்தி இருக்கற தாவாரத்திலேந்து ஒவொரு ரூமும் , சமையல் உள்ளை ஒட்டி சாமான் ரூம் சமையல் ரூமுக்கு வெளிப்பக்கமா தேங்கா உறிக்கற ரூம் வெளில தொட்டி முத்தம் கிணறு. நெடுக தென்னமரம் பவழமல்லி பருத்தி செடி ஆத்திகீரை கனகாம்பரம் பப்பாளி !!. ஒருபக்கம் மாட்டு கொட்டகை அதையும் தாண்டி டாய்லெட் !! அதுக்கு போறவழில் பெரீ….ஸ கப்பறை மாதிரி கங்காளம் தண்ணி வெச்சு – ராத்ரி போணும்னா திகில்

பாச மலர் / Paasa Malar said...

மலரும் நினைவுகள்தான் வாழ்வை எப்போதும் மலர வைக்கும்..
அடர்த்தியான மரங்களுடனான சாலை அழகு வல்லிமா..

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ. பேசாம நீங்க ஒரு பதிவு தொடங்கலாம். உங்க மெமரீஸ் புதுசாக இருக்கு. என்னுது எல்லாம் பழசு.;(

நான் சொல்கிற இந்த முனீஸ்வர கோவில் ஊருக்குள் இருக்கு. நீங்க சொல்கிற அம்மன் கோவில் எதுன்னு தெரியலையே. மீனாட்சி அம்மன் கோவிலோடு போனால் ஆத்தங்கரை வரும். அதுக்கப்புறம் மின்சார சப் ஸ்டேஷன் வரும். அதுவரை தான் எனக்குத்தெரியும்.
அங்க இருந்த ரஜினி என் தோழி .அதனால் அவ்வளவு தூரம் போக அனுமதி உண்டு:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மலர். ஊருக்குப் போயிட்டு வந்துட்டீங்களா,.
அந்த மரங்கள் அடர்ந்த சாலை இப்பப் பாதியாகக் குறைந்துவிட்டது.

மாதேவி said...

திருமங்கலம் நேரடியாகப் பார்த்தநினைவைத் தருகிறது.

Jayashree said...

ரெண்டோ மூணோ பாத்த ந்யாபகம். சரியா நினைவில்லை. ஒரு கோவில் உசிலம்பட்டியோ பள்ளபட்டியோ அந்த ரோட்ல. அது பஸ்லேந்தே வேண்டிக்கறது தான்.அது ஊருக்கு எப்பவாவது போறச்சே பாக்கறது
இன்னொண்னு ஒரு ?முருகன் கோவில் பக்கத்துல இருக்கும் ISOLATED ஆ .அது பக்கத்துல ஐயனார் பாத்த ந்யாபகம் . .
இன்னொண்னு ரெயில் லைனை ஒட்டி வரும் அது காமாக்ஷினு நினைக்கிறேன் .ரொம்ப வருஷம் ஆச்சு . இந்த ஜனவரில தேக்கடி போறச்சே உங்க ஊர் pass பண்ணி போனோம். modern ஆ ஆயிட்டமாதிரி இருந்தது. !!அப்புறம் வத்தலக்குண்டு பெரியகுளம் பாதைல தான் கொஞ்சம் இன்னமும் மரம் இருக்கு .

ராமலக்ஷ்மி said...

வாயிலில் வரும் சிலருக்கு தங்கை இதே போல பயப்படுவாள். சித்தப்பா மறைவு, குழந்தைகள் பிரிந்து வளர்ந்தது கனமான நினைவுகள். மாம்பழப் பாவாடை அனுபவம் அநேகமாக எல்லா அக்காக்களும் கடந்து வந்ததாகவே இருக்கும்:)! ட்ராயிங் அருமை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி,தாத்தா பாட்டி அப்பா, இன்னோரு சித்தப்பா எல்லாரும் அவதிப் பட்டார்கள்.
அதுவும் அப்பா மிகவும் மென்மையானவர். முடிந்தவரை செய்தார். புரிதலுக்கு மிக மிக நன்றிம்மா.

Geetha Sambasivam said...

ரேவதி, இன்னிக்குத் தான் பார்த்தேன், பங்கஜி அக்கா உங்க சித்தியா?? அழகா இருப்பாங்க நிஜம்மாவே. எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும். அவங்க க்ளாஸ் எடுத்தா எல்லாப் பெண்களும் சந்தோஷமா இருப்போம். விசாலி அக்காவை அவ்வளவாப்பிடிக்காது எங்களுக்கெல்லாம். அப்போ பங்கஜி அக்காதான் ஹீரோயின்! :)))))))அத்தம்மாவின் சொந்தம்னு தெரியும். தம்பி மகள்னு இப்போப் புரிஞ்சுண்டேன்.

அவங்களுக்கு அப்புறமா நான் சொன்னவங்க ராதா கிருஷ்ண வேஷம் கட்டி இருக்கலாம். நான் சொல்றது 60களின் நடுவில். 60-க்கு முன்னால் எனக்குத் தெரியாது! :)))))கிளாஸுக்குப் போனாலும் அவ்வளவா நினைவில் இல்லை.

Geetha Sambasivam said...

பரிசுப் பொருட்கள், புத்தகங்கள் , நிகழ்ச்சிக்குத் தேவையான உதவிப் பணம் எல்லாம் சிருங்கேரி மடமும், காஞ்சி மடமும் கொடுத்தது நினைவில் இருக்கு. அந்த வருஷப் பாடம் முடியும்போது எல்லாப் பெண்களுக்கு வெள்ளிக்காசு கொடுப்பாங்க. எனக்கு எட்டோ ஒன்பதோ வெள்ளிக்காசுகள் கிடைச்சிருக்கு. :))))))) வளையல், ரிப்பன், குங்குமம், மஞ்சள், னு கை நிறையக் கிடைக்கும்.:D

வல்லிசிம்ஹன் said...

சித்திக்கு எழுதிப் போட்டிருக்கிறேன் கீதா.
இவ்வளவு சத்சங்கம் மதுரையில் நடக்கிறது.
இப்பொழுதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. சித்தியின் கலைத்திறனுக்கு அளவே இல்லை.