About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, February 17, 2011

கனக துர்கா, தொடர்ந்தாள்

கங்கையில் கலந்த துர்கா.
  இரண்டு மூன்று  வருடங்கள் முன்னால்  இந்த துர்கா அம்மா   
பற்றீ   பதிவிட்டிருந்தேன்.  வேறு எதையோ தேடப் போனபோது இந்த படம் கிடைத்தது. அவளை என் நாச்சியாரில் பதிவதில் மிகவும் நிம்மதி.

இந்தத் தாயைப் பார்க்கும்போதெல்லாம்

மனசில் சாந்தம் மகிழ்ச்சி ஆறுதல் எல்லாம் கிடைக்கும்.

எங்கள் மகன் வெளியூரில் வடக்குப் பக்கம் வேலை செய்யும்போது அவனிடம் போய் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது ஒரு சமயம் நம் பிள்ளையார்(!) சதுர்த்தி வந்தது. இங்கே இருந்தால் காலையில் எழுந்து பிள்ளயார் வாஙி வந்து தோரணம் கட்டிக் குடை வைத்து எருக்கமாலை போட்டு,விளாம்பழம், நாவல் பழம்,அருகம்புல் மூஞ்சூரு எல்லாம் அமர்க்களப்படும்.

அங்கே தேடியும் களிமண் பிள்ளயார் அகப்படவில்லை.

ஆதி ஹூம், ஜாதி ஹூம், நாம்,தும்,ஆப் கஹான், வஹான் இதெல்லாம் நம்ம பள்ளீக்கூடப் பாட இந்தியை ஒரு அம்மா புரிந்து கொண்டு " மாதா பூஜா கரொ" என்று இந்த துர்கா அம்மா படத்தைக் கொடுத்து விட்டாள்

கணேஷ் ! கணேஷ்! என்று நான் கேட்க உஸ்கி மாதா என்று அவள் சொல்ல ,சரிஎன்று பணம் கொடுத்துவிட்டு, மஞ்சள் ,சிவப்பு கலர் பூக்களை (பேர் தெரியாது)யும் வாங்கிக் கொண்டு,

என்னடாப்பா பிள்ளயாரைத் தேடி அம்மாவைக் கொண்டு வந்தாச்சே என்று யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

அடுத்த நாள் பிள்ளயாரை வழிபடப் படத்தை வைத்து மலர்கள் சூட்டி, பால்,தேன்,அவல், அதிரசம்,சுண்டல் என்று நைவேத்யம் செய்யும் நேரம் எங்களுக்கு உதவி செய்யும் சீதாம்மா வந்தாள்.

ரொம்ப கவனமாகப் பார்த்தவள் துர்காம்மா படத்தைப் பார்ததும், அப்படியே கீழெ விழுந்து மாதா தீ !ஜேய் மாதா 1 என்று கன்னத்தில் போட்டூக் கொண்டாள்.

அவள் பேசினதிலிருந்து நாங்கள்

வாங்கி வந்த படம் ஸ்ரீ வைஷ்னோ தேவியின் படம் என்று தெரிந்தது.

அவளிடம் விவரம் கேட்டதில் வைஷ்ணோ தேவியின் இருப்பிடம் போய் வந்துவிட்டால் வாழ்வில் குறையே கிடையாது என்று சொன்னாள். உனக்கு எப்படி இந்தப் படம் கிடைத்தது/? என்று என்னை வேறு விசாரித்தாள்.

என் பதிலைக்கேட்டுக் கொண்டு நீ இந்த மாதாவை மறக்கக் கூடாது. யே க்ஷேராவாலி தும்கோ ஞான் தேகி'' என்று வேறு ஆசீர்வாதம் செய்தாள்.(இந்தி தெரிந்தவர்கள் என் எழுத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)

புலி மீது இருக்கும் அம்மாவை நானும் விடுவதாக இல்லை.இவள் புலி ,சிங்கம் என்று இரண்டு வாகனம். வேறு பெயர் இருக்கலாம். இவளை நான் துர்காம்மா என்று தான் நினைப்பேன்.

அத்தோடு விட்டாங்களா இந்த அம்மா.

அடுத்த நவராத்திரிக்கு காதி கிராமாத்யோக பவனம் போகும்போது,

அங்கு நின்று கொண்டு இருக்காங்க!!

முகம் அழகி, நகை அழகி, கை அழகி என்று ஒரு இடம் சொல்ல முடியாமல் எல்லாம் நிறைந்த பரிபூரணமான

அன்னை.

எதன் மேல் நின்றாள் தெரியுமா? மகிஷத்தின் மேல்!!

இதென்னடா இந்த அம்மா இப்படி வெற வேஎற மாதிரி வராங்களே என்று அங்கிருந்த பெண்களைக்கேட்டபோது

ஓ, அந்த அம்மா பட்டிச்வரம் துர்க்கை என்றார்கள்.

இதிலே விஷ்ணு துர்க்கை வேறாம்.

இவங்க ஒரு மூணூ அடி உய்ரம். தங்க நிறம். பேபர் மஷெ.யாலே ஆன பொம்மை என்று சொல்ல மனம் வரவில்லை.

அவங்க நின்ன கோலம் என்னைக் கூப்பிட்டு அழைத்தது.

வாங்கலாமா வேண்டாமா? கொலுவின் போது எல்லாரையும் கவர்ந்து இழுக்கும், உண்மைதான்.

பூஜை செய்யலாம். மாலை போடலாம்.போட்டொ எடுக்கலாம்..

எல்லாம் சரிதான்.

அதற்குப் பிறகு? எப்படி வருடக் கணக்கில்; பாதுகாப்பது.?

அவங்களைப் பொட்டியில் வைக்க முடியுமா/ இல்லை மனசு தான் வருமா?

மனசு வரத்தான் இல்லை.

ஆட்டொவில் குழந்தை மாதிரி கொண்டு வந்த நாளில் இருந்து இந்த அம்மா கொலு வீற்றிருக்க ஆரம்பித்தஆள்.

எனக்கு இருந்த பாசத்தில் இவங்களை ஹாலில் வைக்க(கொலுவுக்குப்

பிறகு) மனம் வரவில்லை.

சாமி ரூமுக்கு வந்துட்டாங்க. அங்கெ நடக்கும் பாராயணம்

,விளக்கு பூஜை, சும்மா

ஒண்ணுமே செய்யாத நாட்கள், ஒவராகப் பக்தி செலுத்தும் நாட்கள் எல்லாவற்றையும்
அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு கார்னரில் தான் இருந்தார்கள். அங்கே அவளை வைக்கக் காரணம்,
 யாராவது அசப்பிலே தட்டி விடக்கூடாதே என்பதற்காகத் தான்.

அதுவும் அழகாகத் தான் இருந்தது.

எட்டு கைகள். ஒட்டியாணம், கிரீடம், புன்னகை,விரிந்த காதளவோடு ஓடிய கண்கள்.
அதில் வழிந்த கருணை, செவியும், அதில் சூட்டப்பட்ட குழையும் நேரில் பார்த்தால் தான் தெரியும் அவள் அழகு.

இந்த அழகான அம்மாவை வீட்டில் விட்டு விட்டு,

வெளி நாடு போக வேண்டிய வாய்ப்பு வந்தது.

மாரிக்காலம். ஒரு மாதமே பொனாலும் மனசு கொஞ்சம்

சிரமப்பட்டது.

அந்த வருடம் அவ்வளவு மழை கூட இல்லை.

வீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லி ஒருவரை

நியமித்து விட்டு ஒரு 30 நாட்கள் போய் வந்தோம்.

மிக அருமையான பயணம், மிகுந்த மன நிறைவோடு

இந்தியா , சென்னை வந்தோம்.

வீட்டு வரும்போது மழை பெய்து கொண்டு இருந்தது.

இடி மின்னல் மழை.

மோஹினி தான் வரவில்லை.

வாசல் கதவைத் திறந்ததும் நேரே அப்பா கடவுளே என்று போனேன்.

கைகால் கழுவி சாமி அறைக் கதவைத் திறந்தால்

அங்கே துர்காம்மா கீழெ முகம் படிய இருக்கிறாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன் ஆச்சு? எப்படி ஸ்டூலில் இருந்து வந்தாள் கீழே?

சரி நிமிர்த்தி வைக்கலாம் என்று தொட்டால் .,.,.,.,

சரி அதை சொல்லவில்லை.

பிறகு அவளை குறைபாடோடு வைக்க மனமில்லாமல்

பிள்ளயாரை வருடா வருடம் சேர்க்கும் எங்க வீட்டுக் கிணற்றிலேயே , திருப்பி வரும்படி சொல்லித் தண்ணீருடன் கலக்க விட்டேன்.

அதற்குப்பிறகு இதே நினைப்பாக கொலுபொம்மை வாங்கப் போகும்போதெல்லாம் தேடுவேன். அவள் மீண்டும் வரவில்லை.

இந்த வருஷம் வருவாளோ?

படங்கள் இருக்கின்றன.

இருந்தாலும் எனக்கு அவங்களைத் திருப்பிப் பார்த்துவிடுவேன் என்று திட்டம்.

இந்த அம்மாவுக்குத்தான் திருப்பி வர மனம் வர வேண்டும்.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

32 comments:

ராமலக்ஷ்மி said...

இந்த வருடம் கண்டிப்பாக உங்களைத் தேடிவந்தடைய் என் பிரார்த்தனைகள் வல்லிம்மா.

துளசி கோபால் said...

தேடல் வெற்றி அடையட்டும்.

கிடைச்சால் விடமாட்டீங்கன்னு தெரியும். ப்ளீஸ் டபுள் டபுள்:-)))

அமைதிச்சாரல் said...

மாத்தா சீக்கிரமே உங்க வீட்டுக்கு வரணும்ன்னு நானும் பிரார்த்திச்சுக்கறேன். அவ்ளோ அழகா இருக்காங்க :-))

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, நானும்நம்புகிறேன்.
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா, பேணி வளர்க்க வேணும் த்ரியுமா'' அப்படீன்னு ஒரு பாட்டு வரும்.
மேலே பெய்த மழை டெர்ரஸ்ல தேங்கி, சுவற்றில் ஊறி அம்மாவையும் பிடித்துக் கொண்டு ஊறியதால் அம்மாவுக்கு இந்த நிலை.
இப்படி நடக்கும்னு தெரியாமல் போனது என் தவறு.
பார்க்கலாம்.அவள் மனம் வைப்பாள்.

மாதேவி said...

வைஷ்னோ தேவி எங்கும் இருப்பவள்.

விரைவில் உங்கள் கண்களுக்கு அகப்படுவாள்.

வல்லிசிம்ஹன் said...

நிச்சயமா அவள் கிடைத்தால் தங்கச்சிக்கும் உண்டு:) துளசி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சாரல் அவளை வடித்தவனுக்கு எத்தனை பரிவு அவள் மேல். அத்தனை கச்சிதம் அவள் மேனிஅழகு. அவ்வளவு தெய்வீகம் அவள் பார்வையில். இந்த புரட்டாசி வரட்டும். என் தேடலில் உண்மை இருந்தால் அவள் வர சந்தர்ப்பம் உண்டு.நன்றி மா.

ஸ்ரீராம். said...

எங்கள் பிரார்த்தனைகளும்..

சுமதி said...

பட்டீஸ்வரம் துர்கை கோவிலில் பார்க்கும்போது நேரில் நின்று பேசுவது போல் இருக்கும் வல்லிம்மா, கும்பகோணம் சென்றால் கும்பேஸ்வர்ன் கோவிலில் தேடிப்பாருங்கள் கிடைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, உங்கள் வார்த்தைகள் ஆறுதலான நம்பிக்கையைக் கொடுக்கின்றன. மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் சீக்கிரம் கண்ணில் படுவாள் எனே நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

சுமதி நான் கும்பேஸ்வரர் கோவிலில் எல்லா சந்நிதிகளையும் பார்க்கவில்லை. ரொம்பப் பெரிய கோவில் இல்லையா.

நம்ம துர்கா அம்மாவையும் பார்க்கும் சந்தோஷம் சீக்கிரமே கிடைக்கட்டும்.

சுமதி said...

கும்பேஸ்வரர் கோவிலின் முன்பு சன்னதிக்கு நேராக உள்ள கடைகளில் கொலு சமயம் தேடிப்பாருங்கள் வல்லிம்மா.

நானானி said...

மனமார்ந்த தேடலுக்கு கண் முன் வந்து நிற்பாள் அம்மா!!!இம்முறை பேப்பர்மேஷாக இல்லாமால் செப்பு சிலையாகவோ கற்சிலையாகவோ கிடைப்பாள்.

பிள்ளையின் தேடலுக்கு ஓடோடி வருவாள்!

இராஜராஜேஸ்வரி said...

படமே ரொம்ப அருமையா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

anbu sumathi, thakavalukku mikavum wanRi.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நானானி அப்படி வந்து விட்டால் ஆநந்தத்துக்கு அளவே இல்லை.
உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

கோமதி அரசு said...

மனசில் சாந்தம் ,மகிழ்ச்சி ஆறுதல் தர விரைவில் வரட்டும் தேவி கனக துர்கா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி,
மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி கோமதி,
நம் துர்காவை நாச்சியார் கோவிலில் தேடினால் கிடைக்கச் சான்ஸ் இருப்பதாகச் சொல்கிறார்கள்.இல்லை ஸ்வாமிமலையிலும் தேடலாம்.
அவள்னா மனம் வைக்கணும்.

அப்பாதுரை said...

எதையோ சொல்லி எங்கியோ கொண்டு போயிட்டீங்களே? அற்புதம். வாழ்க்கையிலும் உதிரிகளா தோன்றும் நிகழ்வுகளை உதிரிகளாகவே விடுவது உள்ளத்துக்கு நல்லதோ?

'உஸ்கி மா' ரொம்ப ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, வாழ்வில் உதிரிகளாக வரும் சம்பவங்களை உதிரியாக விட எங்க வீட்டில் இருக்கார்:)
அவரும் தனக்கு வேணும்கற விசயத்தில தேடித்தான் பிடிப்பார்.

எனக்குத்தான் இந்த விஷயத்தில் பூனையிடம் அகப்பட்ட நூல்கண்டாகச் சுற்றி வருகிறது. விடலாம் தப்பில்லை.கோவிலில் இல்லாத துர்காம்மாவா. அவளும் மகிஷத்தின் மேலதான் நிற்கிறாள். யோசிக்கிறேன். நன்றி மா.

கவிநயா said...

துர்காம்மா ரொம்ப அழகு. மீண்டும் உங்களிடம் வருவாள் அம்மா. கவலைப்படாதீங்க.

சிவகுமாரன் said...

என்ன அழகு அந்த அன்னை.
கடைசிப் பாரா படிக்கும் போது எனக்கு ஏன் கண்ணீர் வந்தது?
அன்னை மீண்டும் வருவாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா. நன்றிமா. இந்தப் பதிவு எழுதியபிறகு வீட்டிற்கு வந்த ஒருவர் ஏதோ கோவிலில் கிடைத்ததாக ஒரு படம் ,சிங்கத்தின் அருகில் கம்பீரமாக நிற்கும் துர்க்கையின் படத்தைக் கொடுத்தார். ஏதோ ஒரு ரூபத்தில் அவள் வந்திருக்கிறாள்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் சிவகுமாரன்.
தீராத நினைவாக மனத்தில் அமர்ந்துவிட்டாள். அன்னை,அம்மா இல்லையா.
எனக்கு அந்தத் தகுதி இருந்தால் அவளே வருவாள். மிகவும் நன்றி.

கவிநயா said...

//ஏதோ ஒரு ரூபத்தில் அவள் வந்திருக்கிறாள்.:)//

இதைப் படித்ததும் சந்தோஷமா இருந்தது அம்மா :)

Narasimmarin Naalaayiram said...

சரி நிமிர்த்தி வைக்கலாம் என்று தொட்டால் .,.,.,.,

சரி அதை சொல்லவில்லை.//

இந்த அம்மாவுக்குத்தான் திருப்பி வர மனம் வர வேண்டும்.//
:


துர்க்கை அம்மன் படம் பார்த்த பிறகு ஏதொ செய்யுது .
எனக்கே கொஞ்சம் கஷ்டமா இருந்தது .
ம் :(

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜேஷ், முதல் வருகைக்கு நன்றி. உங்கள் பதிவையும் பார்த்தேன். பெருமாள் தரிசனம். பிரபந்த தரிசனம் இரண்டும் கிடைத்தன. மிகவும் நன்றிமா.

Sri Kamalakkanni Amman Temple said...

முதல் தடவை இல்லமா ! ஏற்கனவே வந்திருக்கேன் இந்த பெயர் மூலமா:)

Sri Kamalakkanni Amman Temple said...

இந்த அம்மாவை பார்த்த பிறகு கமலக்கண்ணி அம்மனாகவே எனக்கு தெரிஞ்சாங்க! கைகள் முகத்தில் ஒரு கருணை ஒரு புன்னகை என்ன ஒரு கலை அருமை . அதான் இன்னும் இந்த பதிவிலேயே பின்நூதம் இட்டு கொண்டிருக்கிறேன் . அப்படியே படத்தை கோபியும் பண்ணியாச்சு

வல்லிசிம்ஹன் said...

அப்படியா மா. ஓ நினைவு இருக்கு. உங்களுக்கு இவ்வளவு ஈடுபாடு வந்துவிட்டதோ, அப்போது முயற்சியில் ஈடுபடலாம். பண்ருட்டியிலிருந்து இந்தப் பொம்மை செய்து வந்ததாகச் சொன்னார்கள். விசாரியுங்கள் கிடைப்பாள். மகிழ்ந்திருங்கள் பா. கமலக் கண்ணி அம்மன் படமும் போடுங்கள். நானும் சேவித்துக் கொள்கிறேன்.