Blog Archive

Monday, February 14, 2011

அன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு


  எப்பொழுதும் அன்போடும் மகிழ்ச்சியாகவும் இருப்பது சிரமமான விஷயமே.
ஆனால்  ஒருவருக்கு உடல் நலம்   கெடும்போது, பக்கத்து நெருக்கமான  எல்லோரையும் அது பாதிக்கிறது.
அப்போது  மன வித்தியாசங்கள் சட்டென்று  மறைந்து விடுகின்றன. அதுவும் அவர் ஐசியு  வரை சென்று மீண்டு வருகிறார் என்றால்
நம் இரக்கமும்,அன்பும் பன்மடங்கு பெருகுவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன் .உணர்ந்திருக்கிறேன்.

எப்போது நம்மிடம்  வெறுப்போ, இல்லை உதாசீனமோ,அக்கறை இல்லாமையோ வளர்ந்து விடுகிறதோ
அப்போது நம் இதயம் மரத்துப் போகும் நிலைமையை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை உணரலாம்.

ஒரு நெருக்கடி நிலைமையில் நாம்  பதறும் அதே நேரம்
அந்த உயிரிடம் எப்பவுமே அன்பாக இருக்கப்
பழகிக் கொள்ளலாம்.

  அந்த  நபர் உறவினராகவும் இருக்கலாம். நண்பராக இருக்கலாம். ஏன் சம்பந்தியாகக் கூட இருக்கலாம்.
வாழ்க்கை  எப்பொழுதும்   அழகான பாதையில் மேடு பள்ளங்கள்
இல்லாமல் கஷ்டம் இல்லாமல்  ஓடுவது கொஞ்சம் சிரமம்.

அவ்வப்போது மாடுகளைத் தட்டிக் கொடுக்க வேண்டும். வண்டியைச் சரி பார்க்க வேண்டும். போகும் பாதையில் இருக்கும் மரங்களையும் சோலைகளையும் அனுபவிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும்.
இது எனக்கு வெகு சமீபத்தில் கிடைத்த அனுபவம்.

யாரையும் மதிப்பிட எனக்கு உரிமை கொடுத்தது யார்.
என்னைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஈகோ  தானே காரணம்.

அதை விட்டுவிட்டால்  கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ இணைய நட்புகளுடன் அன்பு பழகத் தெரிந்த எனக்கு உறவுகளைக் குற்றம் சொல்லும் மனம் ஏன் வருகிறது.
ஆனவயதிற்கு இப்பொழுதாவது என்னை மாற்றிக் கொள்ள நல்ல சந்தர்ப்பத்தைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.
இனியாவது
தலைதூக்கும்  எதிர்மறை எண்ணங்களை அடக்கக் கற்று,
அன்பு செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.
உங்கள் எல்லோருக்கும் அன்பர் தின வாழ்த்துகள்.
அன்பைக் கொண்டாடுவோம்.














எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

30 comments:

Unknown said...

ரொம்பப் பெரிய விஷயத்தை அடக்கமாச் சொல்றீங்க! நல்ல பதிவு. உங்களுக்கும் சிங்கத்துக்கும், உறவு/நட்புக்கும் அன்பர் தின வாழ்த்துகள்:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கெ.பி.
நலமா. உங்கள் ஊரில் இறு தொடக்கமே கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருக்கும். எங்க சின்ன பேரன் இதய வடிவில் ஒரு பெட்டி தயாரித்துக் கொண்டிருந்தான்:)
அது அவனுக்கு ரிசீவிங் பாக்ஸ்.
அதே போல அவனுடைய நர்ஸரி சிநெகிதர்களும் ஒரு பெட்டி கொண்டு வருவார்களாம்.

Unknown said...

ஹை, வடை எனக்குத் தானா? :-)

ஆமா, எங்க வீட்ல ரெண்டு வாண்டும் வகுப்புத் தோழர்களுக்காக 30, 30 கார்டு, சாக்கலேட்டு, கொண்டு "வர" பை, ஆசிரியருக்கு "ஸ்பெஷல்" கார்டு/கிஃப்டுன்னு ஒரே கலக்கல். அப்பாவும் வாண்டுகளூமா வேற வெளியே போயிட்டு வந்தாங்க. எனவே, ஐ வெயிட்டிங்கு;-)

வல்லிசிம்ஹன் said...

அப்போ ஏதோ அம்மாக்குக் கிடைக்கப் போகிறது. அந்த இனிமைக்கு இப்பொழுதே வாழ்த்துகிறேன். கெ.பி.
வாழ்வின் அன்புத் தருணங்கள் வளர்ந்து கொண்டே இருக்கட்டும்.

Kavinaya said...

தேவையான, நல்ல சிந்தனை அம்மா.

அன்பர்தின வாழ்த்துகள், உங்களுக்கும்!

ராமலக்ஷ்மி said...

அன்பர் தின வாழ்த்துக்கள்.

உங்கள் அனுபவப் பகிர்வுகளில் இருந்து நாங்களும் கற்று வருகிறோம். நல்ல பதிவு. மிக்க நன்றி வல்லிம்மா.

Geetha Sambasivam said...

வாழ்த்துகள் வல்லி, எங்க அப்புவும் அவளோட நண்பர்கள்,ஆசிரியர், அம்மா, அப்பா, அக்கா எல்லாருக்குமாய் வாழ்த்து அட்டைகள் தயாரித்து வண்ணம் தீட்டியதில் என்னோட பேசக் கூட நேரம் இல்லைனு சொல்லிட்டா! பிசியாம்! :))))) மீண்டும் இங்கே வந்திருக்கும், வரப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

மாதேவி said...

உங்களுக்கும் நண்பர்களுக்கும் அன்பர் தின வாழ்த்துகள்.

நானானி said...

'அன்பர் தினம்' நல்லாருக்கே...!

அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்பர் தின வாழ்த்துக்கள்!!!

வாழ்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்களை அழகுற சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பகிர்வு.

ஸ்ரீராம். said...

அன்பர்தின வாழ்த்துக்கள்...
ஐ...அழகிய வார்த்தை...!
எனவே எங்கள் சார்பிலும்
அன்பர்தின வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

அன்பர் தினம் - இது நல்லாருக்கே!!

கருத்துகளும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கவிநயா.
எப்போழுதும் அன்பு சாதிக்கும் அதிசயங்கள் அநேகம், அதைக் கொண்டாடலாம்னு தான் இந்தப் பதிவு.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி, உங்கள் 'குழந்தைப் பிஞ்சின்' கவிதையைப் படித்துவிட்டு வந்தேன். இதுதான் உண்மையான காதல். இது எப்பவுமே நிலைக்கட்டும்பா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. பெரியவனுக்கு இந்தத் தொல்லை இல்லை.
சின்னவனுக்கு ஒரே ஆசை. எத்தனை லாலி பாப் வரும்.எத்தனை கார்சுகள் வரும்னு. நாலு வயசில என்ன எழுதிக் கொள்ளுங்களோ:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.புத்தரைக் கொண்டாடும் பூமி உங்க ஊரு.
அங்கே அன்பே தெய்வமா இருந்து எல்லோரையும் காப்பாற்றணும்.

வல்லிசிம்ஹன் said...

வாழ்க்கை அப்பப்போ அனுபவப் பாடங்களைக் கொடுக்கிறது ஹுசைனம்மா. அது நமக்கு மனதில் அழுத்தமாகப் பதிந்தால் நம் நடவடிக்கைகளில் பொறுப்பு அதிகரிக்கும்.இதையே நான் நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி. நமக்கெல்லாம் காதலர்தினம் கண்டிப்பாத் தேவைப்பா.
பழைய நாட்களை அசை போடலாம் இல்லையா.:)

sultangulam@blogspot.com said...

A very good resolution Amma.

Unknown said...

அன்பர் தினம் நன்றாக உள்ளது வல்லிம்மா வாழ்த்துகள்:))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுல்தான். அம்மாவுக்கு இப்பவாவது தெளிவான சிந்தனை வரணும்னு நீங்களும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
அன்பர் தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சுமதி இன்று கொண்டாட்டம் தான் இல்லையா உங்க ஊரில்? எங்க பார்த்தாலும் ஒரே இளஞ்சிவப்பு வண்ணம் தான்:)
வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். நல்ல பெயர் தானா வாங்கிக் கொண்டுவிட்டது இந்த தினம்.:)
உங்களுக்கும் குடும்பத்துக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.

கோமதி அரசு said...

நல்ல பதிவு அக்கா.

அன்பு செய்து வாழ்வோம்.

கோமதி அரசு said...
This comment has been removed by a blog administrator.
அப்பாதுரை said...

'அன்பர் தினம்' - நீங்க மட்டும் தான் சொல்லியிருக்கீங்க. இந்த தினம் பிடிச்சிருக்கு.

கெபி உருப்படியா எதுனா கெடச்சிருக்கும்னு நம்புவோம். என் பையன் காலைல எழுந்ததும் வயித்து வலினு ஒரே துடியா துடிச்சான்; சரி, ஸ்கூல் போக வேண்டாம்னு சொன்னேன். இரவு படுக்கையில் கதை படிக்கும் போது மெள்ள சொன்னான்: "dad.. i hate valentines day. that's why i made up stomach ache.. sorry". என்ன சொல்ல?! "you'll grow up to be a good actor" என்றேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கை கோமதிக்கு வாழ்வில் எல்லா வளமும் பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, அன்பைத்தான் நாம்வேறு பெயர் வைத்து அழைக்க வேண்டாம். தானாகவே பரவிவிடும்.
உங்கள் பிள்ளையும் வயிற்றுவலி சொல்கிறானா.:)
இந்தப் பசங்க டாக்டிக்ஸை மாற்றவே செய்வதில்லை. இது எங்க பெரியவன், சின்னவன் பள்ளி நாட்களிலிருந்து வருகிறது.
யோசித்துப் பார்த்தால் நானே செய்திருப்பேன் என்றே நினைக்கிறேன்.:)
எங்க அம்மா ஒரு அப்பாவி. நம்பி விடுவாள். பாவம்.

Geetha Sambasivam said...

@ அப்பாதுரை, fyi please see here also இங்கேபார்க்கவும்.

Asiya Omar said...

அன்பானவர்கள் அன்பிற்கு அடிமையாகிவிடுவார்கள்,அருமையானபகிர்வு.வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆசியா உமர், வருகைக்கு நன்றிமா.
என் தோழி, ஆசியா நினைவு வரும் எனக்கு உங்கள் பெயரைப் பார்க்கும்போது. அவர்கள் வீடு எங்கள் தெருவிற்குப் பின் தெருவில் இருந்தது.
நிறைய பாய்கள் தொங்க விட்டிருப்பார்கள். அது மட்டும் நினைவில் இருக்கிறது. பால்ய சிநேகிதி.:)