About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, February 12, 2011

தேடித் தேடி...

சட்டத்துள் அடங்கியோ அடங்காமல் உலகம் எங்கும் சுற்றி டூயட் பாடி ஆடி வருபவர்களிடம் எனக்குக் கேட்க ஆசையாக இருக்கிறது. உங்களுக்கு விசா கொடுப்பது யார்.:)  நாங்கள்  ஸ்விட்சர்லாண்ட்  போவதற்கு எங்கள் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க வேண்டுமாம்.  தத்கல் என்று சொன்னார்கள் 7200  அழுதாச்சு.   இன்னும் புதுப்பிக்கச் சொல்லி பத்து டாக்குமெண்ட்  கேட்கிறார்கள்.  இத்தனைக்கும்  1996  லிருந்து இதே வழியாகப் பறந்து  கொண்டேதான் இருக்கிறோம்.  யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். ஸ்விட்சர்லாண்ட் போவதற்குப் புது பாஸ் போர்ட் வேணுமா.  


   


  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

14 comments:

துளசி கோபால் said...

அடடா......

'எனக்கு' வேணுமுன்னுதான் தோணுது. என்னோடது செப்டம்பர் 2011 வரைதான் செல்லும்.

ஆனால் விஸா வேணவே வேணாம்.

எனிவே கவலைப்படாதீங்க.

குட்லக்.

ஸ்ரீராம். said...

சுவிஸ் பேங்கிலிருந்து உங்கள் கணக்கை மாற்றி விடுவீர்களோ என்று பயந்து தொல்லைப் படுத்துகிறார்களோ என்னமோ...!!!

அப்பாதுரை said...

தெரியலியே! (சத்தியமா சினிமா வசனம் இல்லை)

அப்பாதுரை said...

சாதாரணமாவே 'i don't know'னு தோளைக் குலுக்கிச் சொல்லுறவன் கிட்டே இப்படியெல்லாம் கேட்டா எப்டீ?

வல்லிசிம்ஹன் said...

நானும் இரண்டு மூன்று ஏஜென்சிக்குப் போன் பேசிட்டேன்.
இரண்டு பேர் வேண்டாம்னால் இரண்டு பேர் வேணும் என்கிறாங்க.
திங்கள் தெரியும்னு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

இருக்கும் ஸ்ரீராம்.நம்ம பணம்தானே அங்க போயி உட்கார்ந்திருக்கு. நான் போய்க் கேட்டால் கச்டமாப் போயிடுமே:)

வல்லிசிம்ஹன் said...

துரை அங்கதான் ஹிட்ச். யுஎஸே, துபாய் இதற்கெல்லாம் இந்தப் பாஸ்போர்ட் போதும்.
schengen countries need this .

2πR said...

Hi, Maybe, though your passport has not been expired, there may not be enough white pages to stamp the swiss visa and arrival, departure stamps. This could also be the reason why they are asking for a new passport though the one you currently have has not expired yet.

நானானி said...

அடடா...!பிரச்சனை சீக்கிரம் சரியாகணும். நீங்க சுவிஸ் போணும், அங்கிருக்கும் நம்ம பணமெல்லாம் வாரிண்டு வரணும். எதுக்கும் நிறை கோணிப்பைகள் கொண்டு போங்க. சேரியா?

வல்லிசிம்ஹன் said...

துரை, தோளைக் குலுக்கறதெல்லாம் சும்மா:)மெய்ப்பொருள் காணணும்னால் கேட்கணும் இல்லையா!!!

வல்லிசிம்ஹன் said...

ஹெல்லொ 2 பை ஆர்!! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
நீங்க சொல்கிறது பாதி சரி. பக்கங்கள் குறைந்துதான் இருக்கிறது.
ஆனால் அது காரணம் இல்லை.
26 நாடுகள் கொண்ட சமஷ்டி குழு ஷெங்கன் நாடுகள். ஐரோப்பாவில் மட்டும் இந்தச் சட்டம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி. ஆளுக்கொரு பொட்டி போறும்னு நினைச்சேனே:)

கோணியாகிவிட்டதா:)
அதுவும் சரிதான். பத்து பதினைந்து எடுத்துண்டு போறேன். சேரியா அக்கா.:)

ஹுஸைனம்மா said...

அடடா, இதுக்காக டூயட் பாடறவங்க மேல ஏன் கண்ணு வைக்கிறீங்க? ;-))))) அவங்க இல்லைனா தமிழ் சினிமா இல்லை!! :-)))))

புது பாஸ்போர்ட் ஏன் கேட்கிறாங்கன்னு சொல்லலையா? பாஸ்போர்ட் ஆறு மாச வேலிடிட்டி வேணும், வெளிநாட்டுப் பயணங்களுக்கு. அதுக்காகவா?

எல்லாம் நலமே முடிஞ்சதும் விவரம் சொல்லுங்க!!

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹுசைனம்மா.
அவங்க பாடட்டும் ஆட்ட்டும். அதுவேற கதை. என்னோட ஆதங்கமெல்ல்லாம் அவங்களுக்கு சுலபமா முடிகிற வேலை நம்மை பெண்டெடுக்கிறதே என்பதுதான்.:)
விசா எல்லாம் கிடைச்சுடும். இந்த பாஸ்போர்ட் புதுப்பிக்கிறதுல தான் பிரச்சினையே. சால்வ் ஆகும்போது சொல்லிடறேன்.