Blog Archive

Monday, January 24, 2011

காதல் என்பது காதல் மட்டுமா

நேற்று ஒரு நல்ல  படம் பார்க்க  வாய்ப்பு   கிடைத்தது.  முழுவதும் துபாயில் எடுக்கப் பட்ட படம் என்று   முன்பு    கேள்விப்பட்ட  நினைவு.  பாடல் களின் இனிமையால்  மக்களை மகிழ்வித்த ஆர்.டி. பர்மனின்   நினைவுக்குச் சம்ர்ப்பண்மாக எடுக்கப் பட்ட   படம். அவர்கள் பாடல்களை  வைத்தே  கதையை நகர்த்திச் சென்ற     அழகு   என்னை வெகுவாகக் கவர்ந்தது.
   ஒரு குத்துப்பாடல் இல்லை. ஒரு  அளவுக்கு மீறின  படுக்கை அறைக் காட்சி இல்லை.    நெளியாமல் நகராமல்  பார்க்க முடிந்தது:)

இந்தப் படம்  பார்த்ததின்  தாக்கம்   இணையத்தில்  பழைய பாடல்களைத் தேடிக் கேட்டதில்  மனதுக்கு ஒரு    நிம்மதி.
என் வயது   ஒத்தவர்கள், அநேகமாக வானொலி, ரேடியோ சிலோன்,பிற்பட்ட நாட்களில் சென்னை அலை வரிசையின்  வர்த்தக ஒலிபரப்பு கேட்டே வளர்ந்தோம்.
பாட்டின் இசை,இனிமை மட்டும் மனதில் தங்கிவிடும்.
பிறகு வந்தது தொலைக் காட்சி.
  பிடித்த தமிழ்ப் படத்தை வரிசைப் படுத்த ஆரம்பித்தால் அது   அநேகமாக  முடிவில்லாமல்   போகும்.
அதனால்  சில இந்திப்படங்கள்  அதுவும் நல்ல பாட்டுகளுக்காகவும்,கதைகளுக்காகவும்,  நடிப்புக்காகவும்  நான் தேர்வு செய்த படங்கள்.
  இது என், என்னுடைய மட்டும்  தேர்வு. அநாமிகா,ஆராதனா,ஆவாரா,சுப்கே சுப்கே,ஆந்தி மற்றும் தேவ் ஆநந்தின் சில படங்கள்,மதுபாலா,ராஜ்கபூர்,ஷம்மி கப்பூர்  இப்படி  எத்தனை தடவை கேட்டாலும் ,பார்த்தாலும் சலிக்காத  படங்களின் பாடல்கள்.
ரொம்பக் கர்நாடகமாகத் தெரியும்:)

இங்கே  இந்தப் பாடல்களை ஒரு இடுகையாக எழுதக் காரணமும்  எழுந்தது.

கொஞ்ச நாட்களுக்கு முன்   ஒரு பதிவு ,ஒரு குடிப்பழக்கத்தினால்  கடை நிலைக்கே போய்   ,மீண்ட குடும்பத்தைப்  பற்றி எழுதி இருந்தேன்.
  சிறு  குழப்பம்  அங்கே. என்னதான் பழக்கத்தை விட்டுவிட்டாலும் கண்வன் ,மனைவியரிடையே  பழைய பரிவும் காதலும் வராமல் ஏதோ அவர்களைத் தடுத்தது.
  இது போலவே சென்றால் மீண்டும் பழய நிலை வந்துவிடும் என்கிற    பயமும் ஒட்டிக் கொண்டு இருவரும் தவித்தார்கள்.

இந்த நிலையில் தான்    குடும்பத்தின்   முந்நாள் நண்பர்    தன் சொத்துகளைப் பிரித்து  உயில் எழுதும்போது, தன்    இசைத்தட்டு  கலெக்ஷன்  அத்தனையும்
ஒரு    இருநூறு பாடல்கள்    இருக்கலாம்.
பழைய நாளைய  ரிகார்டிங்   அமைப்பில்  அமைந்த  இசைத் தட்டுகள். அவைகளைக் கேட்க   70களில் வாங்கிய   ரேடியோ க்ராம்!
  நம்ப முடியாத  கண்களுடன் இந்தப் பொக்கிஷத்தை இருவரும் பார்த்ததாக  எனக்குப் பிறகு செய்தி வந்தது. 
அதற்குப் பிறகு நடந்துதான் இன்னும் திரைக்கதை போலவே இருந்தது.   பலத்த வாக்கு வாதத்துக்குப் பிறகு முதலில் கேட்ட பாடல் ''யாதோன் கி பாராத்''!  :0)

வரிசையாக  மேரே சப்னோன்கி ராணி, பாகோன்  மே சலி ஆஆஆஆ:0)
இப்படித்தொடர்ந்ததாம் அவர்கள் மீண்டும் காதல்கதை.

இப்பவும் மூட்  அவுட் '' அப்படி இப்படி என்று சின்னச் சின்ன  தகறாருக்கெல்லாம் கூட சிடுவேஷன் சாங்க் போடப் பெண்ணும் பழகிக் கொண்டு விட்டாளாம்.

அமீரகம் வரை  வந்த இதமான   பாடல்கள்,அவர்களுக்குக் கொஞ்சமாவது மாற்றம் கொடுத்திருப்பது  எனக்குச் சந்தோஷமே.
அமீரகத்தில் கிடைக்காத பாடல்களா  என்று தோன்றிய்து    எனக்கு.

 இருந்தாலும் அவர்களின் அருமையையும், உள்ள அன்பையும் உணர்ந்த ஒருவர்  கொடுத்த  பரிசு  உண்மையிலியே    பயன் பட்டிருக்கிறது.இசையின் பெருமைக்கு   என்ன பெயர் வைப்பது!  மியூசிக் தெரபி??

















எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

51 comments:

வல்லிசிம்ஹன் said...

எ.பி க்கள் இருக்க வாய்ப்புண்டு.
பொதிகையில் திருவையாறு ஆராதனைப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே எழுதின பதிவு.
எந்தரோ மகானு பாவலு பாட்டும் முடிந்து தீபாராதனையும் ஆச்சு. நானும் இந்தக் கதையை முடித்தேன்:)

துளசி கோபால் said...

ரெண்டு பேருக்கும் நடந்ததை நினைச்சு மனம் இளகி மன்னிப்புக் கேக்கலாமான்னு ஒரு கணம் தோன்றும் பாருங்க............. அப்ப பாட்டுகளைப் போட்டுவிட்டால் இந்த ம்யூஸிக் தெரப்பியால் பயன் கைமேல் கிடைக்கு(மா)ம்.

மலேசியத் தோழி ஒருத்தர் பெரிய கலக்ஷனா யாரோ கொடுத்து வச்சுட்டுப் போயிருந்த பொதியை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தாங்க. அத்தனையும் அந்தக் காலத்து எல் பி. ரெகார்டுகள். எம் கே டி கூட நாலைஞ்சு இருந்தது. நம்ம ப்ளேயரில் ஓடவிட்டதும் ஒரு பாட்டு, ஒரே ஒரு பாட்டுப் பாடுனதும் ஊசி மண்டையைப் போட்டது.

மாத்து ஊசி ஒன்னு 100 டாலர்ன்னு கடைக்காரர் சொன்னது முதல் கப்சுப் ஆகிட்டேன்:(

Geetha Sambasivam said...

ரொம்பக் கர்நாடகமாகத் தெரியும்:)//

இல்லையே, இங்கே வந்து கல்சட்டியைப் பார்த்துட்டுச் சொல்லுங்க, யார் கர்நாடகம்னு! :))))))))))கல்சட்டி இங்கே

திவாண்ணா said...

:-))
எ.பி கொஞ்சம்தான். பரவாயில்லை!
ம்யூசிக் தெரபி நல்லாவே இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி. எங்க வீட்லயும் ரொம்ப நாளைக்கு முன்னால் ரேடியோக்ராம் இருந்தது. பிலிப்ஸ் கம்பனியோடது.

ஊர் விட்டு ஊரு வரும்போது பட்ட அவதியில் கெட்டுப்போனது.இப்போது அந்த எல்.பி, தட்டுகளை என்ன செய்வது என்ற யோசனை. பராமரிப்பு இல்லாததால் அவையும் கறை படிந்து விட்டன.

வல்லிசிம்ஹன் said...

நாமெல்லாம் ஒரே இளம் வயதினர்கள் கீதா.அதனால் இவையெல்லாம் கலெக்டிவ் ஐட்டம்ஸாக வைத்திருக்கிறோம்.:) சுட்டியைப் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவன் உண்மைதான். சங்கீத சாம்ராஜ்யம் நம்மைச் சந்தோஷப் படுத்தி அமைதியாக இருக்க வைக்கிறது.

Thenammai Lakshmanan said...

இசை தெரஃபி.. இது கூட நல்லா இருக்கே.. யாராவது க்ளினிக் திறந்து விடப்போறாங்க..:))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. பழைய காலத்தில் இந்த ஜூக் பாக்ஸ் முறை இருக்கும் தேன்.
நாம் விரும்பும் பாடலை எட்டணா போட்டு நாம் விரும்பும் பாடலுக்கான பட்டனையும் அந்தப் பெட்டியில் அழுத்தினால், நம் முறை வரும்போது அந்தப் பாடலைக் கேட்கலா./
நம் மெரினாவில் புஹாரி ரெஸ்டாரண்டில் இருந்தது என்று நினைக்கிறேன். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.:)

துளசி கோபால் said...

ஆமாம்ப்பா. புஹாரியில்தான்.

ஒரு சமயம் நான் என் தோழி சாவி கூட அங்கே போயிருந்தப்ப.....

ஒரு ஆள் (நல்ல குடி போல இருக்கு)கையில் புகையும் சிகெட்டு வேற.

தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம்.... பாட்டை செலக்ட் பண்ணி போட்டார்.
நமக்குத்தான் ஓசைப்படாமப் பேசத்தெரியாதே!

'ஹை...!.எனக்கு ரொம்பப் பிடிக்கும்' ஒலிபரப்ப...........
அந்தாளு விடாம ஒரு பத்துமுறை இருக்கலாம் திரும்பத் திரும்ப காசு போட்டுகிட்டே இருந்தார்.

நாங்களும் போரடிச்சுருச்சுன்னு எழுந்து வந்துட்டோம்.

நோ ஐ காண்டாக்ட்:-))))))))

Unknown said...

உங்களின் பழைய நினைவுகள் நன்றாக உள்ளன வல்லிம்மா,எனக்கு தமிழ் பாடல்கள்தான் புரியும் என்பதால் பிடிக்கும்.

pudugaithendral said...

ஆந்தி படத்தோட தேரேபினா ஜிந்தகிசே கோயி ஷிகுவா நஹி என்னோட ஃபேவரீட் பாட்டு வல்லிம்மா

அப்பாதுரை said...

ஆகா, நூதன்! வோ சாந்த் கிலா பாட்டின் ஸ்டில். திருநெல்வேலி அல்வா ரெண்டு கிலோ பார்சல் அனுப்புகிறேன் - ரொம்ப தேங்க்ஸ்.

அந்தப் பாட்டைப் படமாகியிருக்கும் விதம் பற்றி ஒரு பதிவே போடலாம். நிலவின் ஒளியலை பற்றிய பாடல் காட்சியில் நிலவையே காட்டமாட்டார்கள். நூதனின் முகமும், முகம் நிறையப் புன்னகையும் குறும்பையும் மட்டுமே காட்டி, அருமையான பாடலுக்கேற்ற மிக அற்புதமான படப்பிடிப்பு. ஞாபகப்படுத்தினீங்க.

முதல் பாட்டு கோரா காக்ஸ்? மரமூஞ்சி கன்னா (முதல் படமென்பதால் மன்னிப்போம்) பாடலைக் கொலையே செய்தார். ஷர்மிளா தாகூரின் கண் சுழற்சிகளுக்காகவே இந்தப் பாட்டைப் பலமுறை பார்த்திருக்கிறேன் - ஆனால் கேட்பது இன்னும் சுகம். எனக்கு மிகமிகமிகப் பிடித்த இந்திப் பாடல். இதையும் ஞாபகப்படுத்தினீங்க. இந்தப் பாடலுக்கான ராகத்தை/மெட்டை பர்மன் குடும்பம் திரும்பத்திரும்பத்திரும்ப பயன்படுத்தியிருக்கிறார்கள். இதையும் பதிவாகப் போடலாம் :)

(திருநெல்வேலி அல்வா சாப்பிட்டதேயில்லை; எல்லோரும் சிலாகிப்பதால் பிரமாதமாக இருக்கும் என்று நம்பி அனுப்புவதாகச் சொன்னேன் - வேணும்னா ரொசகுல்லானு மாத்திக்குங்க. சொல்றதுதானே? :) :)

அப்பாதுரை said...

துளசி காமென்ட் சூபர். எனக்கும் அந்த அனுபவம் உண்டு. எழுபதுகளின் முடிவில் டில்லி நிருலாஸ் என்று நினைக்கிறேன் (இப்போது அந்த ரெஸ்டரான்ட் இருக்கிறதா என்று தெரியாது - அந்த நாளில் கனாட் ப்லேஸ் என்றால் நிருலாஸ்). இன்டர்வ்யூ கும்பலோடு போயிருந்தோம். முதல் முதலாக ஜூக் பாக்ஸ் பாத்து பாட்டு கேட்ட அனுபவம். கையில் காசில்லை. உடன் இன்டர்வ்யூவுக்கு வந்திருந்த பெண் (பெயர் கூட விசாரிக்கவில்லை) நான் தாளம் போட்டு ரசிப்பதைப் பார்த்துவிட்டுத் தானாகவே நாலைந்து முறை பாட்டைப் போட்டார். முடிவில் கிட்டே வந்து 'குட் லக்' என்று சொல்லிப்போனார். ஒரு நாசூக்கு பொருட்டாவது நன்றி சொல்லத் தெரியாமல் விழித்தேன். 'கோயா கோயா சாந்த்' பாட்டு. ஹ்ம்ம்ம்ம்.

சாந்தி மாரியப்பன் said...

இசையால் ஆகாததும் உண்டோ வல்லிம்மா :-)))

எங்க வீட்டுல எல்லோருமே பாட்டுக்கிறுக்குகள்தான் :-))

வல்லிசிம்ஹன் said...

பாருங்களேன் துளசி, அப்போதே நாம் சந்திச்சிருக்கலாம்:)
அவர் செலவில நீங்க கேட்டீங்களா:)
அந்தத் தயாளு வாழ்க:)இதில நோ ஐ காண்டாக்ட் வேற.:)))))))))))))))நான் சொன்ன காலம் 1963 இருக்கும். எஸ்கார்ட்டா மாமா தான் வருவார். சொன்ன இடத்தில உட்காரணும். நோ நக்ரா:)பீச் மட்டும்தான் பார்க்கலாம். சாவி எங்க இருக்காங்களோ!

ஜோதிஜி said...

பதிவு பிடிச்சுதா இல்லையா.சொல்லிட்டுப் போகவும்:)

என்ன் இப்பூடி கேட்டுப்புட்டீக?

அன்றைய நல்லகாதல் முதல் இன்றைய இன்றைய க காதல்வரைக்கும் உள்ள தொகுப்பை நினைத்துப் பார்க்க உதவிஇருக்கீங்களே?

அப்புறம் டீச்சர் சொன்ன மண்டையைப் போட்ட ஊசி அதுக்கு அப்புறம் என்னாச்சாம்?

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சுமதி. எனக்கும் இந்திப் பாடல்கள் முழுவதும் புரிந்து கேட்டேன் என்று சொல்ல முடியாது. எங்க வீட்டு எஜமானருக்கு இந்தி நல்ல பழக்கம். மருமகளும் அப்படியே.
மேலும் கேட்டுப் பிறகு பிடித்த பாடல்கள் எத்தனையோ!!தென்றல் சொன்ன பாடல் எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தென்றல்.இனிமை இனிமை அப்படியொரு இனிமை. இழந்த இளமையின் அருமையை திரும்பப் பெற முடியாத அந்த தம்பதியர்களின் சோகம் மனதைப் பிழியும். என்ன ஒரு பாடல்மா அது!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல்.
பாட்டுப் பைத்தியம் இல்லாமல் இருந்தால் தான் கஷ்டம்:)
இசைக்கு இளகாத மனசு ஒரு விஷயத்துக்கும் பிரயோஜனம் இல்லைன்னு எனக்குத் தோன்றும்.

நிறையப் பேர் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். எஸ்பெஷல்லி எங்க பாட்டி. ''அதென்ன பைத்தியம். ரேடியோவோட ரேடியோவா நிக்கறது.'':))))

வல்லிசிம்ஹன் said...

ஹாஹா, வாங்க ஜோதிஜி. ரொம்ப மிரட்டறது இல்ல இந்த வார்த்தைகள்:)
மாற்றிடலாம்.
இந்தக் காலத்துத் தமிழ்ப் பாடல்கள் கண்கள் இரண்டால், விழிகளின் அருகினில் வானம்,முன்பே வா என் அன்பே வா இன்னும் இப்படியே இன்னோரு லிஸ்டே இருக்கு.ரகசியமாய் ...''டும் டும் டும்''
படத்தில வர பாட்டு.
@ துளசி வாங்கப்பா. ஜோதிஜி கேட்கிறார் மண்டையைப் போட்ட ஊசிக்கு வைத்தியம் செய்தீங்களான்னு:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை. இவர் இந்த நூதன் வந்தால் அந்தப் படத்தை முழுசாப் பார்க்காம விடவே மாட்டார்.
நூதன் மாதிரி ஒரு கௌரவமான நடிகை இன்னும் நான் பார்க்கப் போகிறேன்.
அது எந்த ஹீரொ வாக இருந்தாலும் நூதனுக்கு ஒரு பயமோ தயக்கமோ இருக்காது.அந்த முகத்தில் தெரியும் டீசிங் ...ராஜ்கபூரின் திகைப்பு எல்லாவற்றையும் நான் மீண்டும் மீண்டும் மீண்டும் ரசிப்பேன். மிக மிக நன்றி.என்றாவது ஒரு நாள் நாமெல்லாம் சேர்ந்து இந்த இசைஇனிமைப் பாடல்களை ரசிக்க வேண்டும்:)
சிகாகோவில் தான்சேன் குழுவைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா.
அவர்களில் விஜயா சுனில் தம்பதியினர் கச்சேரிக்கு ஒரு தடவை போயிருந்தேன்.இருவரும் மும்பையிலிருந்து அங்கே வந்தவர்கள்.விஜயா தமிழ்ப் பெண்.

வல்லிசிம்ஹன் said...

எனக்குத் திருநெல்வேலி அல்வா கிடைத்தாலும் நல்லதுதான். வில்லிபுத்தூர் லாலா கடை பால்கோவா கிடைத்தாலும் சரிதான். மனதிலியே ரசிக்கிறேன்.:)

நீங்கள் என் தம்பியை நினைவுக் கொண்டு வருகிறீர்கள். அவனும் ஐ ஐ டி யிலிருந்து பாட்டா கம்பனிக்கு செலக்ட் ஆகி டெல்லிக்கு முதல் தடவையாகப் போனபோது கிடைத்த சம்பவங்களை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறான்.:)
இப்போதான் ரிடயரானான்.

வல்லிசிம்ஹன் said...

முதல் பாட்டு கோரா காக்ஸ்? மரமூஞ்சி கன்னா (முதல் படமென்பதால் மன்னிப்போம்) பாடலைக் கொலையே செய்தார். ஷர்மிளா தாகூரின் கண் சுழற்சிகளுக்காகவே இந்தப் பாட்டைப் பலமுறை பார்த்திருக்கிறேன் - ஆனால் கேட்பது இன்னும் சுகம். எனக்கு மிகமிகமிகப் பிடித்த இந்திப் பாடல். இதையும் ஞாபகப்படுத்தினீங்க. இந்தப் //
உண்மைதான் ஷர்மிளாவின் கன்னக் குழிவுக்கும், கண்களில் தெரியும் உணர்ச்சி வேகத்துக்கும் கன்னாவால் ஈடு கொடுத்திருக்க முடியாது:)

துளசி கோபால் said...

எனக்கு நூதன் நடிச்ச படத்தில் பிடிச்சது (பழைய )சௌதாகர். அதுலே அமிதாபும் அந்த பத்மா கன்னாவும் கூட அருமையா நடிச்சு இருப்பாங்க.

மண்டைவெல்லம் காய்ச்சுற படம்ப்பா:-))))

ரெண்டு வருசம் முன்னாலே ஃபிஜி போனப்ப டிவிடி வாங்கியாந்தேன்.

சாந்தி மாரியப்பன் said...

@ துளசியக்கா..

'sajna hai mujhe.. sajnaa ke liye'

அருமையான பாட்டு இல்லியா.. நெறைய விளம்பரங்களுக்கும் இந்த பாட்டை உபயோகப்படுத்தினாங்க :-)

அப்பாதுரை said...

நூதன் ரசிகர் மன்றத்துக்கு ஆளிருக்குனு சொல்லுங்க.
வில்லிப்புத்தூர் லாலா கடை சும்மாவா இல்லை நிஜமாவே பேமஸா? கேள்விப்பட்டதில்லை.

வல்லிசிம்ஹன் said...

துளசி! உங்களுக்கு சௌதாகர் பாடல் அனுப்பினேன் வந்ததா.
ஆமாம் நினைவிருக்கிறது.
பாவம் நூதன் வறுமை வறுமை. அந்தத் தோட்டம் துறவு, நதி,படகு பாட்டு எல்லாம் ஞாபகம் வருது.

வல்லிசிம்ஹன் said...

சாரல், ஸ்மாஷ் ஹிட்ல எல்லாப் பாடல்களையும் நேற்று ரசித்தேன்:)

வல்லிசிம்ஹன் said...

துரை, நிஜமாவே லாலா கடை உண்டு. போன வாரம் கூட என் கசின் பால்கோவா வாங்கி வந்தார். அஃப்கோர்ஸ் எங்க எஜமானர் சாப்பிட்டார்.:)
நூதன் க்ளபுக்கு மெம்பர்ஸ் வாங்கோ.

ஸ்ரீராம். said...

பலப் பல பழைய பாடல்களை நினைவு படுத்தியுள்ளீர்கள். ஜுக் பாக்ஸ் தஞ்சாவூரில் இருக்கும்போது பார்த்திருக்கிறேன். பஸ் ஸ்டேண்ட் பக்கத்தில் ஒரே ஒரு கடையில் இருக்கும்.ஆந்தி, ஆராதனா, அபிமான், அஜ்நபி, மவுசம், நினைவுகழிலோ இன்னும் பல தளும்பி வருகிறது...

அப்பாதுரை, ஆராதனா ராஜேஷ் கன்னாவின் முதல் படமஅல்லவே...அதற்கு முன்பே அவர் பகரோன்கே சப்னே அவுரத் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்று நினைவு! சவுதாகரில் வரும் தேரா மேரா சாத் ரஹே பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்...என்ன ஒரு இனிமையான பாடல்...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்,எனக்கு கடிபதங்க் ராஜேஷ் கன்னா ரொம்பப் பிடிக்கும். அதே போல அமர்ப்ரேம் அண்ட் ஆனந்த்.
தேவ் ஆநந்த் சாயல் அடிக்கும் அவரது மூவ்மெண்ட்ஸில்:)

சஞ்சீவ்குமார் ஜெந்டில் மேன்,பாவம்.ஆனாலும் அவரது முகபாவத்தை யார் காப்பி பண்ணமுடியும்! தர்மேந்த்ரா. இன்னோரு எங்க கால ஹார்ட் த்ராப்:)
சரி சரி நிறுத்திக்கறேன். எபி மட்டும் இல்லாம மொழி ஆக்கமும் மாறிவிட்டது. ஆங்கிலம் அதிகமாக விளையாடிவிட்டது இந்தப் பின்னூட்டத்தில்.

ஹுஸைனம்மா said...

அடேயப்பா, எவ்வளவு கூட்டம் இங்கே!! உண்மைதான், அந்தக்கால பாடல்களுக்குள் இருக்கும் ’தெரபிஸ்ட்’ இப்பவும் ஓய்வு பெறவில்லை. கேட்டால், கேட்டுக் கொண்டே இருக்கலாம். தூர்தர்ஷன் (மட்டும்) இருந்தபோதுதான் இந்தப் பாடல்கள் அறிமுகம். இப்ப விட்டுப் போச்சு. எஃப்.எம்.களின் புண்ணியத்தில் எப்பவாவது கேட்க நேரும்போது.... ஆஹாஹாதான்..

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஹுசைனம்மா. உண்மையான வார்த்தைகள் பாடல்கள், அதுவும் இரவு நிசப்தத்தில் ஒலிக்கும் பழைய பாடல்கள், பூலே பிஸ்ரே கீத் ''எல்லாமே தூக்க மாத்திரைக்கு மேலான மருந்து.
காதுகள் எப்பொழுதும் நன்றாகக் கேட்க வேண்டும் !நன்றிப்பா.

கோமதி அரசு said...

ஹீஸைனம்மாவை வழி மொழிகிறேன்.

தூர்தர்ஷ்ன் மட்டும் இருந்த போது நல்ல பழைய இந்தி பாடல்கள், பழைய இந்திபடங்கள், மற்ற மொழி படங்கள் எல்லாம் பார்தோம். பாடல்களை ரசித்தோம்.
விவிதபாரதியில் இந்திபாடல்கள் கேட்போம் சிறுவயதில்.

இசை என்பது வெறும் பொழுது போக்காக இல்லாமல் மனிதனின் உடலில் கணும் வலிகளை, மனவலிகளை, நீக்கும். உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகம் அளிக்கும். செவிக்கு விருந்து, உடலுக்கு மருந்து.

Jayashree said...

http://www.youtube.com/watch?v=jVyI7C0xy78
இந்த பாட்டையும், ஜோடியையும், படத்தையும் எப்படி மறந்தீர்கள் நாச்சியாரம்மா?
"ஓ மேரே ஜீவன் ஸாதி...ஈஈ , பியா தூஸே .., காதா ரஹே .. மேரா தில்!!!


நூதன் க்ளபுக்கு மெம்பர்ஸ் வாங்கோ"
வந்தேன்!!:))
பிள்ளை ஜொலிக்கலைனாலும் நீஸ் க்யூட்டா வெளுத்து வாங்கறா!!
பழைய ரெகொர்ட்ஸ் ஐ சிலசமயம் இளக்கி fruit bowls , tray மாதிரி செஞ்சு paint பண்ணலாம். என்னோட ஓல்ட் டைம் ஹாபி அதுல பெயின்ட் பண்ணி சுவற்றில் மாட்டறது. லாஸ்ட் ஆ பெய்ன்ட் பண்ணினது பழைய ஏர் இண்டியா தீபாவளி க்ரீடிங்க்ஸ் லேடி!! -38 வருஷத்துக்கு முன்னாடி:((((

அப்பாதுரை said...

ஆராதனா ராகவின் முதல் படம்னு நெனச்சேன்.. ஸ்ரீராம் எப்படி உங்களுக்கு இத்தனை விஷயம் தெரிஞ்சிருக்கு? அதுவும் ராஜேஷ்கன்னாவைப் பத்தி!

Jaleela Kamal said...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

படிக்கவே ரொம்ப நல்ல இருக்கு

பாடல் அந்த காலத்து தமிழ் பாடலும், ஹிந்தி பாடலும் காதுக்கு தேன் தான் போங்க.
படஙக்ள் சூப்பர்

மாதேவி said...

'இசைகேட்டால் புவி அசைந்தாடும்..'

நானானி said...

அட! நா வராம...? எப்படி?
சொன்னாப்ல மெரினா புகாரியில் ஜூக் பாக்ஸ்ல காயின் போட்டு ‘ஜிஸ்தேஷ் மே கங்கா பெஹதி ஹை’ கேட்டதெல்லாம் நினைவுக்கு வருது. கொசுவத்தீம்பிங்க..அப்படித்தான் வெச்சுக் கோங்க.

பழைய 78, 45, 33 எல்பி ரெக்கார்ட்ஸெல்லாம் அக்காலத்தில் பொங்கி வழியும். ஒரு ரெக்கார்ட்க்கு ரெண்டு பாட்டுத்தான் என்பதால் ஆளாளுக்கு வாங்கி வருவார்கள்.
அப்படி கோமாவின் கலெக்‌ஷன் 45 எல்பி , அத்தனையும் 70-களின் ஹிட்ஸ், இப்போது என்னிடம் இருக்கிறது. மியூசிக் இண்டியாவில் ‘எம்பி3-ஆக பண்ண முடியுமா?’ என்றதுக்கு ‘முடியும்...ஊசிதான் கிடைக்கணும்’ என்று பதில் வந்து.
துள்சி போல் கப்சிப் ஆகாமல், ஆயிரம் ரூபாயானாலும் வாங்கலாமா என்றொரு யோசனை வந்தது. அவ்வளவு வெறி!!! ஊசி கிடைத்ததும் சொல்லுங்கள்’ என்று வந்துட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோமதி. மூணு நாளா ஊர்ல இல்லம்மா. உடனெ பதில் இட முடியவில்லை.
வாழ்க்கை எளிமையாக இருக்கும் வரை எல்லாமே இனிமை. கொஞ்சம் வசதி எல்லாம் பெருகிவிட்டதால் எதைக் கேட்பது எதைப் பார்ப்பது என்பதே பெரிய குழப்பமாகி விடுகிறது.:)இனி மீண்டும் எளிமைக்கே போய் விட வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

மறக்கவில்லை ஜயஷ்ரீ விட்டுப்போச்சுமா. கைட் பாடல்கள் எல்லாமே ஹிட் தானே.வஹீதாவின் அழகு, தேவ் ஆனந்தின் தீராக் காதல் சோகம் எல்லாமே மறக்கக் கூடியதே இல்லை. மீண்டும் காதே ரஹே ஆரம்பிக்கலாம்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஜலீலா.
ஒரு இசை நம் எல்லோரையும் ஒரே தளத்தில் சந்தோஷப் படுத்துகிறது.அதற்கு மொழியும் இல்லை. காதுக்குத் தேன் போல பொழிந்து மனசையும் நெகிழ்த்திவிடுகிறது. நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மாதேவி, என் வலைப்பூ
கட்டாயம் அசைந்தாடிவிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் நானானி.
நீங்க இல்லாம இந்தப் பதிவு களைகட்டவில்லை :)

நீங்களும் மெரினா ஜ்யூக் பாக்ஸ் காரரா.!! ஏன்பா நம் அப்பவே பழகி இருந்தா இப்ப ஒரு அந்தாக்ஷரி க்ரூப் ஆரம்பித்திருக்கலாம்.
இந்தத் தடவை துளசி வரட்டும் நம்ம ப்ரோக்ராம்ல அந்தாக்ஷரி உண்டு.
நன்றிப்பா.

Matangi Mawley said...

music therapy irukkaa nnu unmelaye nnu enakku theriyala.. but it's a great idea!

antha kaala songs ellaam- oru 'innocence'/'romance'... kaavyathanmai irunthathu... ippolaam-- naanga cinema paaththa pin thaan appa ammava koottindu polaamaa-nnu yosikka vendirukku ;)

o.p. nyyar music la oru 'kushi'... roshan music la irukkum 'classicism'... madan mohan music oda 'divinity' nnu appo irukkara music directors music la namma classify panna mudinjuthu... oru unique quality irunthuthu!

ippo-- ellaame sound thaan!

nalla pathivu! :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதங்கி,
நீங்கள் சொல்லும் அத்தனை பேருடைய தீவிர ரசிகை நான். தேவ் ஆநந்த்+கொயாகொயா சாந்த்,
ஜிந்தகி பர் நஹி...பர்சாத் கி ராத், ராஜ் கபூர் ,நர்கீஸ் யே ராத் பீகி பீகி.
ஆர் பார் குருதத் ஷாமா,,ஜானெ க்யா கைசே...சாஹிப் பீபி குலாம்னு நினைக்கிறேன். இப்படி நகரும் லிஸ்ட்:)
தமிழிலேயும் இசைக்கு க் கொடுக்கப்பட்ட மகத்துவம், சில பாடல்களில் நெஞ்சில் நிற்கும்.அது அந்த ஜோடியைப் பொருத்து அமையும். அதற்குத் தனிப் பதிவுதான் போடணும்.:)

Eidhima said...

you all make me very jealous. Sorry thamizh font illai. Paattuna adhuvum hindi paatuna rombavey paithiyam, but time is my enemy. Any ways glad that you folks are atleast enjoying .

chintu's amma

வல்லிசிம்ஹன் said...

வரணும் சிண்ட்டு அம்மா. முதல் வருகைக்கு மிகவும் நன்றி. என் அருமையான இன்னோரு(தம்பியின்) குழந்தைக்கும் சிந்ட்டுனு பெயர் உண்டு.
உங்களுக்கும் பாடல்கள் பிடிக்கும் என்றால் அதை அனுபவிக்கும் வேளையும் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். காதுகள் கிடைத்தது நல்லவற்றைக் கேட்கத்தானே.
எனக்குத் தெரிந்த ஒரு அம்மா அண்மையில் ஒரு அறுவை சிகித்சை செய்து கொண்டவர், தன் வலியை மறக்க எம்.எஸ் அம்மாவின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே உறங்கியதைப் பார்த்தேன்.
உங்களுக்கும் காலம் வரணும். அமைதியாகக் கேட்க என் வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

நம்ம வீட்டிலும் சிண்ட்டு உண்டு கேட்டோ!!!!

வல்லிசிம்ஹன் said...

இந்தச் சிண்ட்டுவும் நம்ம வீட்டுதுதான்:)