About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, January 14, 2011

கொஞ்சும் மொழி

எங்க வீட்டின் மூன்று  வாரிசுகள் புதிதாக்ப் பள்ளிக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்கள்.
முதல் பேத்தி கிட்டத்தட்ட  6,7 மாதங்களாகப் போகிறாள்.

ஜெர்மனில் இரண்டொரு வார்த்தைகள்  சொல்ல வந்திருக்கிறது. கணினியில் என்னிடம் பெயர்களை  டைப்   செய்து அசத்துகிறாள்.  இப்ப இங்கே வந்து  சென்ற இரண்டாவது பேரன்   முதலில் மாண்டிசோரிக்குப் போக மறுத்து
இப்பொழுது பழகிக் கொண்டிருக்கிறான்.
அடுத்தாற்போல  துபாய் பேத்தி  இரண்டு வாரங்களாகப் போய்க் கொண்டிருக்கிறாள். முதல் இரண்டு நாள் அழுது புரண்டு ஊரைக் கூட்டிய குழந்தை, இப்போது  மற்றொரு பெண்குழந்தைக்கு
ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாளாம்.

ப்ளீஸ் டோன்'ட்  க்ரை. யுவர் மதர் வில்  கம் அண்ட் பிக் யு அப்'' அப்படி ன்னு!!

நம்ம அமெரிக்கப் பேரர் ,பேச்சில் வல்லவர். ஒரே ஒரு உதாரணம் கொடுக்கிறேன்.
அவனும் அவன் அம்மாவும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது யாரும் போன்  செய்து விடக் கூடாது;)
அவளைப் பேச விடாமல்  நச்சரித்து விடுவான்.
ஒரு முக்கியமான    விஷயமாக அவள் பேசும்போது   இதே போல  அராத்து செய்திருக்கிறான்.
அவள் கோபம் அதிகமாகி அவனுக்குச்  சரியானா  டோஸ் கொடுத்து இருக்கிறாள். அரைமணி நேரம் அவள் அவனைக் கோபித்துக் கொண்ட பிறகு, அவளுக்கே கொஞ்சம் வருத்தமாகி விட்டது.

என்னடா பையா  அம்மா  சாரி  சொல்லணும்னு எதிபார்க்கிறியான்னு கேட்டு இருக்கிறாள்.
 ஆமாம் யூ  ஷுட்  என்று கூலாகச் சொன்னானாம்.
இவளுக்கு இன்னும் கோபம் வந்தாலும் அவனிடமே கேட்டு இருக்கிறாள்.
நீ  நடந்து கொள்வது சரியா. என்ன  செய்தேன்னு இப்பத்   திருப்பி சொல்லு என்று கேட்க.
''நீ போன் பேசினியா, என்  வேலை எல்லாம் பாதி முடிக்காம இருந்ததா,
நான்  உன்னை நச்சரித்தேனா,
அப்புறம் கத்தினேன். அதான் நடந்தது.''
என்றானாம்.
இவ்வளவு தெளிவாச் சொல்வதைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்திருக்கிறது.
சரி இந்த ஒரு தடவை  சாரி சொல்கிறேன். இனிமே இப்படி உன்னைப் பார்த்துக்  கோபிக்கலை.
நீயும்  ஓகே மா ன்னு சொல்லிடு''என்று கேட்டு இருக்கிறாள்.
அதற்கு அந்த நண்டு சொல்கிறதாம்
''இந்தத் தடவை மட்டும் ஓகே மா. ஐ  அக்சப்ட்'' அப்படின்னு சொல்லுவேன்.
பட் நெக்ஸ்ட் டைம் , சொல்ல மாட்டேன்.'' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டானாம்.:)
:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

12 comments:

அப்பாதுரை said...

'என்னைப் பார்த்து எனை வெல்லவும்' என்ற பிள்ளைவளர்ப்பு வரியைப் பத்தி ரெண்டு நாள் முன்னால தான் எழுதினேன்... நீங்க உதாரணங்களா எடுத்து விட்டிருக்கீங்க. ஏதாவது வேலையா இருக்குறப்ப மட்டும் நச்சரிக்கிற சுபாவம் எப்படி குழந்தைகளுக்கு வருதுனு பொழுது போகலைனா யோசிப்பேன் :)

வல்லிசிம்ஹன் said...

ஒண்ணும் இல்லமா துரை. என்னை மாதிரி பாட்டியோட பேரன் பேத்திகள் ப்படித்தான் இருப்பார்கள்.:)
அதுகளோட கவனம் நம்மிடம் இருக்கிற மாதிரி நம் கவனம் அதுகள் மேல மட்டும் தான் இருக்கணும்கற பெரிய எண்ணம்:)

சுமதி said...

போன் பேசும்போது கேட்டது கிடைக்கும் என்பது எல்லா குழந்தைகளும் தெரிந்து வைத்திருக்கின்றன வல்லிம்மா:))))

நானானி said...

//அதுகளோட கவனம் நம்மிடம் இருக்கிற மாதிரி நம் கவனம் அதுகள் மேல மட்டும் தான் இருக்கணும்கற பெரிய எண்ணம்:)//
சரியாகச் சொன்னீர்கள்! அதுவும் போன் பேசும் போது....அவன் அம்மாவை பேசவிடாமல் செய்யும் அலம்பல் இருக்கிறதே....ரசிக்க வேண்டிய ஒன்று.
‘யூ ஷுட்!’ என்னவொரு கம்பீரம்!!

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ. இப்படி ஒரு காரணம் இருக்கோ:)
சுமதி சரியாகச் சொன்னீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நானானி.
இன்னிக்குப் பால் பொங்கி நல்ல பொங்கல் அமைய என் வாழ்த்துகள் மா.
நாலு வயசுக்கு ,தீர்க்கமான யோசனைதான் அந்தப் பிள்ளைக்கு.;)

ஸ்ரீராம். said...

அடேடே வாண்டு...!

தொலைபேசிப் பேச்சில் அந்த வாண்டின் பெருமைகளை அவ்வப் போது தவணை முறையில் எடுத்து விட்டுக் கொண்டிருந்தால் பேச விட்டிருப்பானோ என்னமோ...! அவர்களையும் 'ஆட்டத்தில்' சேர்த்துக் கொள்ளும் போது இந்த மாதிரி 'கவன ஈர்ப்பு' செய்ய மாட்டார்களே...!

வல்லிசிம்ஹன் said...

அதுவும் சரிதான் ஸ்ரீராம்.
ஆனால் மற்ற பேச்சும்போது சரி .அவசர வேலைகள் சம்பந்தமாகப் பேசும் போதெல்லாம் இதைப் போல செய்தால் , ஒன்று அவனுக்குப் பசி, இல்லாட்டா தூக்கம்:)
கேட்கவில்லைன்னால் ரகளைதான்:)

துளசி கோபால் said...

இப்பெல்லாம் சின்னப் பிள்ளைகளிடம் இருந்து நாம் படிக்கவேண்டியவைகள் ஏராளம்.

தயாரா இருக்கணும் நாம்:-))))

நினைவுப்பெட்டகத்தில் வைக்கவேண்டிய முத்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி,
எதிர்பார்க்காத நேரத்தில் முத்துகள் வந்து விழும்:)
ஸ்பைடர்மேன் வேஷம் போட்ட்டுக் கொண்டு போடும் சத்தம் இருக்கே....
வீடியோ எடுத்துவைத்திருக்கிறேன்.:)

திவா said...

:-)))
சங்கரி வரும் வரை ஏன் இப்படி எல்லாரும் பேரன் பேத்தி மீது இவ்வளோ க்ரேசியாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டதுண்டு! பேத்தி ஏன்னு கத்து கொடுத்து இருக்கிறாள்!
இன்று இரண்டாம் வயசு முடிந்து ஆயுஷ் ஹோமம். வயதானவர்களுக்கு பேரன் பேத்திகள் வரப்ரசாதம்!

வல்லிசிம்ஹன் said...

செல்லம் சங்கரியை நான் பார்க்க முடியவில்லையே என்றிருக்கிறது.

தம்பி வாசுதேவன்,குழந்தையைப் பகவான் பிரம்மேந்த்ராள் நன்றாகப் பார்த்துக் கொள்வார்.
எல்லா வளமும் பெற்று நன்றாக இருக்கவேண்டும்.