Blog Archive

Sunday, January 09, 2011

முகங்கள்

மஹாபலிபுரம்   கடற்கரையில்...
செட்டிபுண்யம் கோவிலில்  பெருமாளை அழைக்கும் கிளி.
இவங்கதான்  போட்டிக்குப் போகிறாங்க. ஜனவரியின்  பிட் போட்டிக்கு.:)
இவர் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த முகத்துக்குரியவர். மிஸ்டர் கடோத்கஜன்:)
அழகு  பாலன். முருகன் ,கணத்தில் வந்து  காப்பாற்றும் கந்தனின்  நாமம்.
பெண்ணும் அவளது நண்பிகளும்.(எனக்கும் தான்)
பெண்ணும்   அவளது குடும்பமும்  ஊருக்குக் கிளம்பியாச்சு. புது வருடம் பிறந்து  இரண்டுமூன்று  நாட்களுக்குப் பிறகு  ஒரு நாள் சுற்றுலாவாக மஹாபலிபுரம் கிளம்பினோம்.  செட்டி  புண்ணியம் கோவிலில் முதல்   நிறுத்தம்.  மார்கழிப் பொங்கலை எதிர்பார்த்து  மனம்   குதித்தது.  அங்கிருந்தவரோ ஆறுமணியோடு பொங்கல்  தீர்ந்தது என்றார்.:(




  மறுபடிக் கிளம்பி  மஹாபலிபுரம் வந்து  சேர்ந்தோம். அங்க வந்ததும்  சக்தி இழந்துவிட்டேன்  என்றது எனது காமிரா.
என்ன செய்யலாம். பேரனது  காமிராவைக் கடன் வாங்கினேன்:)
அவன் எடுத்த படங்களை  எல்லாம்   என் கணினியில் ஏற்றும் போது, ஏதோ நினைவில்

டெலிட் செய்து விட்டது குழந்தை .  தாங்க முடியாத சோகத்தோடு   இருந்தான்.

அடுத்த நிமிடம், பரவாயில்லை பாட்டி, இன்னும் எத்தனையோ இடங்கள் இருக்கு.
இன்னும் நிறைய  படங்கள் எடுப்பேன் என்று  தானே சமாதானமாகிவிட்டான்.

20  நாட்களுக்கு  வசந்தம்  வீசிய நாட்களைப் பொக்கிஷமாக்கி வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது யாரிடமாவது சொல்லி அறுவையும் போடலாம்.:)
கேட்பவர்கள் மனநிலையைப் பொறுத்திருக்கிறது:).

சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் நட்புகளுக்கும் வரும் தைப் பொங்கல்

நல்ல தருணங்களை அள்ளித்தரட்டும் என்று இறையை வேண்டுகிறேன்.













எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

22 comments:

எல் கே said...

முருகன் முகம் கொள்ளை அழகு

ராமலக்ஷ்மி said...

வடிவேலு ‘வடை போச்சே’ என்றது போல நீங்கள் ‘பொங்கல் போச்சே’ எனத் திரும்பியிருக்கிறீர்கள். அதனால் என்ன? தைப்பொங்கல் அன்று ஜமாய்த்து விடுங்கள் மணக்க மணக்கப் பொங்கலோ பொங்கல் என:)!

பொங்கல் வாழ்த்துக்கள்!

தேர்வுப் படம் நன்று.

விடுமுறை நாட்களின் பகிர்வுகளுக்குக் காத்திருக்கிறோம்.

திவாண்ணா said...

வெகு சுலபமாக டெலிட் செய்த படங்களை திருப்பி கொண்டு வந்துவிடலாம். அதுக்கும் மேலே படம் எடுக்காம இருக்கணும். பயன்படுத்தி இருக்கேன். http://www.newfreedownloads.com/download-Zero-Assumption-Recovery.html

ஹுஸைனம்மா said...

//அவ்வப்போது யாரிடமாவது சொல்லி//

நாங்க இருக்கோமே? சொல்லுங்க!!

ஸ்ரீராம். said...

இனிய நினைவுகளை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்...அவ்வப்போது பகிருங்கள். முருகன் படம் அழகு.

சாந்தி மாரியப்பன் said...

பொக்கிஷ மூட்டையை அவிழ்த்து வையுங்க.. அள்ளிக்க நாங்க காத்திருக்கோம் :-))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கார்த்திக். அவனுக்கென்ன குறைச்சல் எப்பவும் அழகந்தான்.:0)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி. பொங்கல் தானே கொண்டாடிடலாம்.
நீங்களும் வாங்களேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன்,. அந்த சைட் ஏதோ பணம் கேக்கறதாம்.

வல்லிசிம்ஹன் said...

சொல்லலாம் ஹுசைனம்மா. இப்ப உடம்பு முழுவதும் அலுப்பாக இருக்கு. :(

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் ஸ்ரீராம் உங்களிடம் எல்லாம் சொல்லாமல் வேற எங்க சொல்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஓ!அப்படியே செய்துடலாம். சாரல்.
இன்னும் அவன் நினைவாவே இருக்கு.

Unknown said...

அந்த கோலம் போடும் அம்மாவை பார்க்கும்போது ஆசை வருகிறது கோலம் போட, பொங்கல் வாழ்த்துக்கள் வல்லிம்மா.

மாதேவி said...

பொங்கல் கிடைக்காவிட்டால் என்ன பகிர்தல் இனிக்கிறதே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுமதி,
இந்த மாதிரி முகங்களைப் பார்க்கச் சென்னைக்கு வெளியே தான் போக வேண்டும்.
இன்னும் கொஞ்ச நேரம் அவங்களோடப் பேச வேணும்னு ஆசையாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் மாதேவி. தோழமையும், மனமும் இருந்தால் எல்லாமே சாத்தியம்.

கோமதி அரசு said...

கோலம் போட்டுப் பார்க்கும் அம்மா அழகு; படம் தேர்வுக்கு வாழ்த்துக்கள்.


பொக்கிஷங்களை நேரம் கிடைக்கும் போது பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

நானானி said...

நல்ல நினைவுகளை அள்ளித்தாருங்கள்!!

பொங்கல் வாழ்த்துக்கள்!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள் மா.
என்றும் இன்பம் தழைக்க வாழணும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி.
உங்க பதிவைப் பாதி படிக்கையில இங்க வந்துட்டேன்.
மனம் நிறைந்த பொங்கள் வாழ்த்துகள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையணும், பொங்கணும் என்று வாழ்த்திக்கிறேன்.

அப்பாதுரை said...

புகைப்படங்கள் பிரமாதம். முதல் படத்தில் (குட்டையில் நீர் குடிப்பது ஆட்டுக்குட்டியா?) எங்கே எடுத்தது. மிக அருமையாக இருக்கிறது.

உங்கள் பெண்/நண்பிகள் போட்டோவில் ஜன்னலோரமாக சுவரில் மாட்டியிருக்கும் சாதனம் என்னது?

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
அந்தக் குளம் செட்டிபுண்ணியம் கோவிலில் இருந்து மாமல்லபுரம் போகும் வழியில் பார்த்தேன்.ஏகப்பட்ட ஆட்டுக்குட்டிகளும் இருந்தன. இது மட்டும் தண்ணீர் குடிக்கப் போனது.

சுவரில் மாட்டி இருப்பது, எமர்ஜென்சி லைட். பவர் போனதும் தானாக ஆன் ஆகிவிடும். இப்பதான் நிறைய பவர்கட் வருகிறதே.:(