Blog Archive

Tuesday, January 04, 2011

சுத்தமான கொசுவத்தி

டிசம்பர் 31 1993.
  என்று   ஞாபகம் . பிள்ளைங்கள் வீட்டில் இருந்த நேரம். அப்பொழுது வாரா வாரம் ,ஃப்லிப்ஸ்  டாப் டென் பாட்டுகள் ஒளிபரப்பாகும். வருடம் பூராவும்   மிகுந்த  மதிப்பெண்கள்


பெற்ற  பாட்டுகள் தமிழ்   சன் தொலைக்காட்சியில்     வருட இறுதி நாள் இரவு
ஒளிபரப்பாகும்.

ஒட்டகத்தைக் கட்டிக்கோவா?''(ஜெண்டில்மன்  படத்தில்)
இல்லை  திருடா திருடா  படத்தில வரும்
வீர பாண்டிக் கோட்டையிலே''வா ? எது முதலிடம் பெறும்  இது ஒரு படபடப்பு;)

இப்படித் தமிழிலும்,  பிறகு
இந்தியில்   மோஹ்ரா  படம்!  அதில் வந்த  பாடல்  ஒன்று''தூ சீஸ்  படி ஹை  மஸ்த் மஸ்த்'' பிறகு'' சுரா கே  தில் மேரா...'' ஷில்பா ஷெட்டி அறிமுகமான படம்.
ருக்கு ருக் அரே பாபா ருக்.''   இளமைக்கால தபுவின் நடனம்..

அர்த்தம் தெரியாமலேயே  வெகுவாக ரசித்து   மகிழ்ந்த காலம்:0)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
எட்டு மணிக்கு சாப்பாட்டுக் கடையை முடித்துக் கொண்டு
தொலைக்காட்சி முன் அமர்ந்துவிடுவோம்.
சன்' சானல் மட்டும்  இருந்த காலம். இந்திக்கு   zee   சானல்.
வாழ்க்கை எளிமையாக இருந்தது.  அதுவே   சந்தோஷமாகவும் இருந்தது.
12  மணிவரை   ஒரு  பிரார்த்தனைக் காலம் போல  தொலைக்காட்சி பார்த்துவிட்டு  வாசலுக்கு வந்து  ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எதிர்த்த வீட்டுச் சின்னப் பையன்  பட்டாசு வெடிக்க ஆரம்பிக்கும்.

எங்கிருந்தோ வரும் மோட்டார் பைக் இளைஞர்கள்

காற்றுக்கும் வானத்துக்கும் சுற்றி நடந்து போகிறவர்களுக்கும், இன்னும் விளக்கெரியும் வீடுகளுக்கும்   வாழ்த்த்துகள் சொல்லிப் பறப்பார்கள்.

அத்துடன்  எங்கள் புத்தாண்டு ஆரம்பிக்கும்.
வெறும் ஆங்கிலப் பத்திரிகை மட்டுமே  மாதம்   54ரூபாய்க்கு வாங்கி
வந்த காலம்.
படங்கள் போட்டுப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அறிமுகப் படுத்திய தமிழ்ப் பத்திரிகைகள் வாங்காத காலம்.

ஆனால் புத்தாண்டு அன்று வீட்டுக்கு ஒரு புது பொருள்  வாங்கும் வழக்கம் வந்தது. அப்படித்தான் முதல்  வாஷிங் மெஷின் வந்தது.

பிறகு   எல்லாம்  காலமும் புத்தாண்டும் மாறியது.
பெரியவன் வேலை மாற்றம் பெற்று மும்பை போய்விட்டான்.
சின்னவன்   ஸ்விட்சர்லாந்துக்குக் கிளம்பினான்.

பெண்ணொ திருமணம்  செய்து கொண்டு  புதரகத்துக்குக் கிளம்பிவிட்டாள்.
பிறகு  பழைய உற்சாகம்   பரபரப்பு  அவ்வளவாக இல்லை. பத்துமணிக்கேத் தூங்கப் போகும் பழக்கம் வந்தது.

செக்  புத்தகத்தில் கையெழுத்துப் போடும்போது மட்டும் கவனமா இருக்கணும்:)
2011   என்று  எழுதணும்.:)
அனைவருக்கும்   மீண்டும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

26 comments:

சாந்தி மாரியப்பன் said...

நயம் கொசுவத்தி வல்லிம்மா :-)))

இந்த புத்தாண்டுக்கும் புதுசு வாங்கினீங்களா :-))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல்.இதுதான் வடை வாங்கறதா. இன்னிகு இனிமேதான் வடை செய்யணும். அனுமனுக்குப் பிறந்த நாளாச்சே:)
இந்த வருஷம் இண்டக்ஷன் அடுப்பு வாங்கியாச்சு. காஸ் விலை 100ரூபா ஏறப் போகிறதாமே!!

உங்க ஊர்ல இந்தப் பழக்கம் உண்டாப்பா.(மும்பையில)

சாந்தி மாரியப்பன் said...

வடை நல்லா சூடா மொறுமொறுன்னு இருக்குது வல்லிம்மா :-))

எங்கூர்ல தீபாவளிசமயம் தந்தேரஸ்க்குதான் புதுசு வாங்குறது :-))

சந்தனமுல்லை said...

வாவ்....இதே பாடல்களை, இதே காலகட்டத்தை நானும் ரசித்திருக்கிறேன். டீனேஜ் துவங்கிய காலகட்டமாச்சே!! :‍) நல்லா கொசுவத்தி சுத்த வச்சீட்டீங்க வல்லியம்மா! நன்றி

துளசி கோபால் said...

//செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடும்போது மட்டும் கவனமா இருக்கணும்:)
2011 என்று எழுதணும்.:)//

துளசி கோபால் said...

அச்சச்சோ.......... போன பின்னூட்டத்தை முடிக்குமுன்னே என்ன அவசரம் பாருங்க! தானே அனுப்பிக்குது!

சூப்பர் வரி. 2011 னு மனசுலே வச்சுக்கணும்:-)))))

கோமதி அரசு said...

நினைவுகள் அற்புதம்.

வல்லிசிம்ஹன் said...

இத்தனை சுருக்கா மும்பைக்கு வந்திடுத்தா வடை:) சாரல்!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை.
இப்ப சுவை குறைந்து போய் விட்டதாகத் தோன்றுகிறது. அப்போ சாய்ஸ் கம்மி. அதனால் சுவாரஸ்யம் அதிகம். தூர்தர்ஷன்ல வேற செயற்கையாக ஏதோ நாடகமெல்லாம் அரங்கேறும். அதுவும் இந்தியில்:) நிறைய தூரம் வந்துவிட்டோம் ஒளிபரப்பில்!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி.
நம்ம கையெழுத்தோட, தேதியையும் சேர்த்து வருடத்தை கூட்டிப் போடணும்னு எழுத மறந்துவிட்டேன்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி.
அப்பப்போ பழைய டயரியையும் பார்க்கணுமில்லையா:)

ஸ்ரீராம். said...

குறைவாக சேனல்கள் இருந்த போது பார்க்கும் ஆர்வம் இருந்தது. வாய்ப்புகள் அதிகமாகும்போது பார்க்கும் சுவாரஸ்யம் குறைகிறது. மொஹ்ரா பாடல் நல்ல டான்ஸ் பாடல்.

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அந்த பாடல் வரிசை பார்ப்பது ஒருவிதமா த்ரில்லா இருந்ததுல்ல.. நான் கூட இந்த ந்யூஇயர் ராத்திரி என் மகளிடம் சொல்லிட்டிருந்தேன்.. புகை சாஸ்தி தான் :)

Unknown said...

இந்தபாடல்யெல்லாம் பார்க்கும் போது பள்ளிகால நினைவு வருகிறது வல்லிம்மா நல்ல கொசுவத்தி:))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

arumayaana kosuvathi... enakkum amma veettu puthandu ninaival vandhuduchu... adhu oru vasantha kaalam thaan...ungalukkum iniya 2011 vaalthukkal

திவாண்ணா said...

:-))
ஆமா, இன்னும் அது புதரகம் தானா?

திவாண்ணா said...

ஏடிஎம்! இப்பவே அந்த வசந்த கால நினைவு"களா? அவ்வளோ வயசாயிடுச்சு?

திவாண்ணா said...

ஏடிஎம்! இப்பவே அந்த வசந்த கால நினைவு"களா? அவ்வளோ வயசாயிடுச்சு?

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். உண்மைதான் . எதுவுமே அளவோட இருந்தால் நன்றாக இருக்கும். இப்ப திகட்டிப் போகிற மாதிரி தடுக்கிவிழுந்தால் பாட்டு,போட்டி,படம்ம்ம்ம்ம்....நான் ப்பதில் எழுதுவதற்குள் பொங்கலே வந்துவிட்டது போல இருக்கு.:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கயல்.எதுக்கெல்லாம் த்ரில் அனுபவிச்சோம்னு நினைத்தால் சிரிப்பு வருகிறது.
அடுத்த கொசுவத்தி எதைப் பத்தின்னு யோசிக்கறேன்:)

வல்லிசிம்ஹன் said...

சுமதிக்குப் பள்ளிக்குப் போகிற வயசு, முல்லைக்கு டீனேஜ்,கயலுக்கும் அதே
போல, அப்பாவி தங்கமணிக்கும் அதே.
ஸோ நாம் எல்லோரும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அலைவரிசையில் சேர்ந்திருக்கிறோம்.
நினைக்கவே சுகமக இருக்கு.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தம்பி வாசுதேவன்,
பெண் போகும்போது க்ளிண்டன் அகமாக இருந்ததோ ?நினைவில்லை:)

நானானி said...

//சன்' சானல் மட்டும் இருந்த காலம். இந்திக்கு zee சானல்.
வாழ்க்கை எளிமையாக இருந்தது. அதுவே சந்தோஷமாகவும் இருந்தது.//

அப்போ...’பினாகா கீத் மாலா’ காலம்?

அர்த்தம் தெரியாமலே ரசித்த காலம்!!!

Matangi Mawley said...

:) beautiful mam!!

ungalukkum Happy Happy New Year!! :)



PS: Shilpa Shetty intro movie baazigar.. :) "Churaake dil mera"- paattu irukkara cinema vanthapram Akshy-Shilpa "jodi"--"popular" aachchu.. y me telling naa- en school-la appo laam, boys laam shilpa shetty fans.. girls laam akshay kumar fans! :) i just remembered! :D

வல்லிசிம்ஹன் said...

வரணும் நானானி. அது நம்ம காலமாச்சே,. பினாகா கீத் மாலா புதன் கிழமை எட்டரை மணிக்குஇல்லையா. அமீன் சயானி:)
அதுவே சிபாகாவா மாறியது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதங்கி.
ஓஹோ தப்பா சொல்லிட்டேனா:)

அப்புறம் அக்ஷயோட நம்ம ஜோதிகாவோட அக்கா பேரு மறந்து போச்சு, ஒரு நடந்துண்டே பாட்டு பாடுமே. அக்ஷய் அண்ட் சாயீஃப் கான் சேர்ந்து நடித்த படம்.ஆங்! நினைவு வந்துடுத்து. ஏதோ கிலாடின்னு பேரு வரும்:)
ரொம்ப அவசியம் பாரு எனக்கு:)