Blog Archive

Friday, December 24, 2010

மறந்த சங்கதிகள்

இலந்தைப் பழமும்  கொடுக்காப்புளி மரமும்
அமீரகம்  போயிருந்தபோது   பார்த்த கொடுக்காப்புளி  மரத்தைப் பார்க்கச்  சந்தர்ப்பம்
கிடைத்தது.  கீழே கிடந்த பழுப்புத் தோலும் சிவந்த பழமுமாகக் கிடந்த கொடுக்காப்புளி  

பழங்களைப் பார்த்த போது தோன்றிய  நினைவுகள்  பல.
பள்ளிக்கூட வாயிலில் விற்கும் இலந்தப் பழம், ஐஸ் குச்சி,கமர்கட்,கடலை  மிட்டாய்,எள்ளுப் புண்ணாக்கு மிட்டாய்  எல்லாம்  நினைவில் நடனமாடின.

கொடுக்காப்புளிக்காவது அம்மா ஓரணா கொடுப்பார்.  மற்றவை வாங்கவே கூடாது:)
என்ஜிரண சக்தியின்  மேல் அத்தனை  நம்பிக்கை அவர்களுக்கு.


தங்கமணியும், சீதாலக்ஷ்மியும் வாங்கும் நெல்லிக்காயும்,இலந்தம்பழமும் 
பண்டமாற்று  முறையில் என் தோள் பையில் வந்து சேரும்:)
அதற்கு நான் மாற்றாகக் கொடுப்பது, அம்மா   இடைவேளை போது சாப்பிடக் கொடுக்கும் தட்டையும், முறுக்கும்  தான்.

அந்தத் தோழிகளைத்தான்   சிநேகத்தோடு   நினைக்கிறேன். எந்தக் குடும்பத்தைக் கட்டி மேய்த்துக் கொண்டிருக்கிறார்களோ:)
என் பெண்ணிடம் இந்தக் கண்டிஷன்   எல்லாம் நான் போடவில்லை.
உனக்கு  என்ன விருப்பமோ அதை  , சுத்தமா   இருக்கா என்று    பார்த்துவிட்டு வாங்கிக் கொள் என்றும் சொல்லிவிடுவேன்.


  பிள்ளைகள் இருவருக்கும்  இந்த ஆசை வந்ததில்லை. அது என்ன  விஷயம் என்று தெரியாது:)நிறைய விளையாடத்தான் ஆசை காட்டுவார்கள்.
மாடவீதியில் வள்ளிக்கிழங்கும்,நெல்லியும் மாங்காய் இஞ்சியும் கொட்டிக் கிடக்கிறது.

ஆசைக்கு   ஆறே  எண்ணம்  நெல்லிக்காய் வாங்கி வந்தேன்.

இதெல்லாம் எழுத   ,கருத்து கிடைத்த இடம் ஒரு பள்ளிக்கூட வாசல். அரைப் பரீட்சை முடிந்து பிள்ளைகள் களிப்புடன் ஓடி வந்த    வேகம்.
 கிளிகளும்,குயில்களும் ஒன்று சேரக் கூடிக் குலவுவது போல   ஒரு கலவையான ஒலி.
சந்தோஷத்தின் பிரதிபலிப்பு.

அனைவருக்கும்  இனிய க்றிஸ்துமஸ் திரு நாள்   நல் வாழ்த்துகள். 






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

15 comments:

சாந்தி மாரியப்பன் said...

கொடுக்காப்புளி எனக்கும் ரொம்ப பிடிக்கும்..

மாதேவி said...

என்றும் இனித்திடும் இனிய நினைவுகள்.

உங்களுக்கும் கிறிஸ்மஸ்ற் புதுவருட வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

கொடுக்காப்புளி, புளியங்காய்...குழந்தைப் பருவத்தில் எவ்வளவு பெரிய விஷயங்கள்...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

வல்லிசிம்ஹன் said...

மும்பையில் கிடைக்குமா சாரல்?
ஊருக்கு வரும்போது சாப்பிடலாம்:)
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மாதேவி. பள்ளிக் கூடம் கலப்படமில்லாத இன்பம் தரும் இடமாக இருந்தது அந்தக் காலத்தில். உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மை ஸ்ரீராம்.
பாடல்,ஆடல்,கொஞ்சமே தேடல்,நாக்குக்குச் சுவை ,நட்பு இவ்வளவுதான் அப்போது வேண்டி இருந்தது,.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா.

துளசி கோபால் said...

Good one!

Sorry no tamil font:-(

Merry XmaS.

Matangi Mawley said...

neenga mention paaniruukara ethume naan saapta thilla.. en amma/appa solli kettirukken! :) kidaichchaa saappdanum! :D

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எதையும் எடுத்துக் கொள் என்றால் சாப்பிடத் தோன்றாது..சாப்பிடக் கூடாது என்று சொன்னால் தான் ஆசை வரும் போல இருக்கிறது..


அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
https://twitter.com/sridar57#

வல்லிசிம்ஹன் said...

துளசி, புத்தாண்டு நல்வாழ்த்துகள்:)

வல்லிசிம்ஹன் said...

உங்க அம்மா அப்பா தான் என் ஜெனரேஷன் மாதங்கி:)
ஆனால் கொடுக்காப்புளி நிஜமாவே ரொம்ப நன்றாக இருக்கும்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அதே அதே சபாபதே ராமமூர்த்தி.
விரும்பி வந்தால் ருசிக்கும். வரலைன்னால் அது மெல இன்னும் நாட்டம் அதிகப்படும். மறுக்கப் பட்டாலும் அதே கதிதான்.:)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நானானி said...

வல்லி,

கொடுக்காப்புளி பிடிக்கும் அதுவும் நன்கு பழுத்த சிவந்த கொ.புளி...அதன் சுவைவே தனி.
அப்புரம் ‘கமர்கட்டு!’ அத்த வுட்டுட்டீங்களே!!

நானானி said...

கிறிஸ்மஸ்..புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!அனைவருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி.இந்த ஊர்ல எங்கயாவது கொடுக்காப்புளி கிடைத்தால் சொல்லுங்கப்பா.
கமர்கட் படம் தேடினேன் , கிடைக்கலை. அதை எழுத வும் மறந்துவிட்டேன்!!