Blog Archive

Thursday, December 16, 2010

மார்கழி வந்தது.துதி பாடும் மாதமும் வந்தது

மார்கழி மாதத்தின்   தனித்துவம் மனம் விழிப்பது. நேற்று வரை  அதிகாலை என்றால் ஐந்தரை மணி.





இந்த உடலுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது.

இன்றோ நான்கு மணிக்கு விழிப்பு வந்தாச்சு.கண்ணனையும் கோதையையும் நினைக்க 
  மனதூசு அகற்றி, தீப மங்கள ஜோதியில் லயித்து அனைவரும் இனிதே  வாழப் பிரார்த்திக்கலாம்
.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

26 comments:

ராமலக்ஷ்மி said...

மார்கழி முதல் நாள் மலர்ந்திருக்கும் கோலம் அருமை.

இம்மாதத்தின் மேன்மையை அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

துளசி கோபால் said...

உண்மைதானோ?
தினம் 7 மணிக்கு முழிக்கும் நான் இன்னிக்கு அஞ்சே முக்கால்!!!!!!


மார்கழித் திங்கள் மதி நிறைந்ததாக இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ராமலக்ஷ்மி, முழங்கால் இதற்கு மேல் ஒத்துழைக்கவில்லை:)
இருள் பிரியும் முன் தீபங்கள் வைக்க வேண்டும், அம்மாவின் வழக்கம்.
இன்று இருக்கும் உற்சாகம் முப்பது நாளும் தொடரவேண்டும்:)
கோதை நினைத்தால் நடத்தி முடிப்பாள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துளசி. நேற்று படுக்கப் போகும்போது கூட யோசிக்கவில்லை. சின்னவனுக்குக் கதை சொல்லிக் கொண்டே தூங்கி விட்டேன்.

மறதி, மருந்து எல்லாவற்றையும் மீறி மனசு விழித்துக் கொண்டுவிட்டது:)
தூக்கம் வரலைப்பா!!!
மதியும் மனமும் நிறைந்திருக்கட்டும்.

கோமதி அரசு said...

//இருள் பிரியும் முன் தீபங்கள் வைக்க வேண்டும்,அம்மாவின் வழக்கம்//

ஆமாம்,அக்கா என் அம்மாவும் அப்படித்தான் சொல்வாரகள்.

உற்சாகம் முப்பது நாளும் தொடர வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

உண்மைதான்....கோலத்தில் பூசணிப் பூவைக் காணோமே...!!

Unknown said...

மார்கழி மாதம் அதிகாலை கோலம் போடுவது ஒரு மகிழ்ச்சியான விசயம் வல்லிம்மா:))))

நானானி said...

நேற்றுத்தான் மதினி சொன்னார்கள், அதிகாலையில் கோலமிட்டு விளக்கும் வைக்க வேண்டுமென்று. என் சார்பாகவும் நீங்கள் வைத்து விட்டீர்கள். நன்றி!

சேரி....நீராட எங்கு போதுவதாக உத்தேசம்?
மாதங்களில் மார்கழியாக இருப்பவனின் அருள் என்றென்று கிட்டட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,மனம் நிறைய கண்ணனை நினைத்து மாதம் முழுவதும் அவனைக் கொண்டாட அவன் அருள் தான் வேணும். கார்த்திகைக்கு மாலை, மார்கழிக்குக் காலை என்று சொல் வழக்கு. முன்னிருள் பின்னிருள் என்பதற்காகவும் இருக்கலாம்.எப்படியானாலௌம் தீப ஒளி நன்மையும் மகிழ்ச்சியின் அடையாளம்தானே. மார்கழி சிறக்கட்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். எனக்கும் ஆசைதான். பூசணிப் பூவைத் தேடிப் போன காலமும் உண்டு. தெருவோடு கிடைக்கும் சாணத்தை, கழுநீர் எடுக்க வரும் அம்மா கொண்டு வந்து தருவார்.
ஒவ்வொரு வீட்டு வாசலில் எத்தனை பெரிய கோலம் ,எத்தனை பூக்கள் என்றேல்லாம் போட்டி உண்டு:)
இப்ப நான் எங்க அதுக்கெல்லாம் போறது.:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சுமதி.
உங்க ஊரிலெல்லாம் இந்தநேரம் வெளியில் வந்தால் பல்லே கிட்டிவிடும்:)

வல்லிசிம்ஹன் said...

நானானி உண்மையைச் சொல்லட்டுமா.
மீண்டும் தாமிரபரணிக்கரைக்கே போய் விடணும் என்று ரொம்ப ஆசையாக இருக்கிறது.
இன்னோரு நெல்லை அம்மாவைச் சந்தித்தேன். அவர்கள் மாதத்துக்கு ஒருதடவை திருநெல் வேலிக்குப் போவார்களாம். கொடுத்துவைத்தவர்கள்.

துளசி கோபால் said...

நானானி,

நீராடப்போவது எங்கா????????

சிங்காரச் சென்னையின் 'கூஊஊஊஊவம்'தான்!

என்னை வந்து எழுப்ப வேணாம்.

ஏமப்பெருந்துயிலில் இருப்பேனாக:-))))

வல்லிசிம்ஹன் said...

ஆஹா துளசி(மாலை) மந்திரப் பட்ட மங்கை இல்லையா!
மாமாயன் மாதவ(கோபால)ன் உடன் துயில்கையில் நாம் எழுப்புவதில் அர்த்தமில்லை நானானி.:)

துளசி கோபால் said...

ரொம்பச்சரி.

தூங்குனால்தானே எழுப்பணும்? அதான் மாமாயனின் குறட்டை தாலாட்டுதே:-))))))

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டது போது(மா)ம்.

வல்லிசிம்ஹன் said...

குழலூதுவதை நிறுத்தினதால் குறட்டை வருகிறதோ என்னவோ துளசி:)

ராமலக்ஷ்மி said...

ரசித்துக் கொண்டிருக்கிறேன் வல்லிம்மா:))!

தொடருங்கள் துளசி மேடம்:)!

நானானி said...

//மீண்டும் தாமிரபரணிக்கரைக்கே போய் விடணும் என்று ரொம்ப ஆசையாக இருக்கிறது.//
ஆஹா..! போலாமே. போகும் போது என் வீட்டுக் கதவையும் தட்டி
துயிலெழுப்புவீர்களாம்...சேரியாப்பா?

நானானி said...

// அவர்கள் மாதத்துக்கு ஒருதடவை திருநெல் வேலிக்குப் போவார்களாம். கொடுத்துவைத்தவர்கள்//

ஆத்தீ....அதாரு?

நானானி said...

துள்சி,

//என்னை வந்து எழுப்ப வேணாம்.

ஏமப்பெருந்துயிலில் இருப்பேனாக:-))))//

அதா எனக்குத் தெரியுமே!!!

நானானி said...

வல்லி,
//(கோபால)ன் உடன் துயில்கையில் நாம் எழுப்புவதில் அர்த்தமில்லை நானானி.:)//

நல்லாச் சொன்னீங்க. அர்த்தமுமில்லை நாகரிகமுமில்லை.

மாதேவி said...

கண்ணன் வரும்பொழுதில்....
உங்கள் அழகிய மார்கழிக் கோலம் மனத்தில் மகிழ்ச்சியை தொற்ற வைக்கிறது.

நானானி said...

துள்சி,
//அதான் மாமாயனின் குறட்டை தாலாட்டுதே:-))))))//
அப்படியும் தூக்கம் வருதா?


//குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டது போது(மா)ம்.//

அப்ப பாட்டு இப்படித்தான் இருக்கோணும்

“குறட்டை ஊதி மனமெல்லாம் கொள்ளை.....”

இது எப்படி?

நானானி said...

//குழலூதுவதை நிறுத்தினதால் குறட்டை வருகிறதோ என்னவோ//

அப்படின்னா...தூங்கும் போதும் வாயில் குழலை வைத்துக்க் கொள்ளச் சொல்லுங்கள்.

குறட்டைக்கு குழல் தேவலை!!!!

நானானி said...

வல்லி,

மார்கழி மாதம் பஜனைதான் உண்டு.
கும்மியும் கூட உண்டுமா என்ன?

நல்லாவே கும்மிட்டோம். பாவம் துள்சி!!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நானானி, கும்மிக்கு ஆள் வந்து சேரலியேப்பா.

ராமலக்ஷ்மி ஜஸ்ட் ஜாலி பேச்சு.:)
நானனி ஊருக்குப் போகும்போது உங்க
கதவைத் தட்டாமல் போவேனோ:)