About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Monday, December 13, 2010

விடுமுறையில் இருக்கிறேன்:)

டிசம்பர் மாதம் பிறந்தது. வேடந்தாங்கலில்   பறவைகள் கூடின.
பாட்டும் பரதமும்     , காண்ட்டீனுமாக அலையும்   மக்கள்.

அவசியத்துக்காகவும், ஆதரவுக்காக்கவும் சில விருந்தாளிகள் வரவு.
இவையெல்லாம் செய்திகள்.

இவையெல்லாம்  நம்ம வீட்டுக்கும் பொருந்தும்.
முக்கியப்பட்டவங்க ஒரு மூணு வாரம் தங்குவதற்கு வரோம்
அப்படீனு சொன்னதும்
நாம   தட்ட ஆரம்பித்த தூசி  வெளில  போகிற மாதிரி போயிட்டுத் திரும்ப வந்து உட்கார்ந்து கொள்ளுகிறது.

இப்பதான் கொசுக்களும் சொந்தம் கொண்டாட ஆரம்பிக்கின்றன. என்ன இருந்தாலும் சென்னை ரத்தத்துக்கும், சிகாகோ ரத்தத்துக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க வேண்டுமே:)

பாதி படித்த  புத்தகங்களை எல்லாம்  ஒரு பெரிய பையில் போட்டு   கட்டிலுக்கு அடியில் தள்ளியாச்சு.

நாலு வாரம் கழித்துத் தேடும்போது மறந்து தொலைக்கும்.

வரவங்களுக்கு   கெமிக்கல்ஸ் நெடி ஆகாது.
அதனால இரண்டு நாட்கள் முன்னாடியே பேகான்  ஸ்ப்ரே  அடித்து
அவங்க தங்குமிடத்தைச் சுத்தம் செய்தாச்சு.ஓடாத ட்ரெட்மில்லை ஓரம் தள்ளி  அதன் மேல் பாய் படுக்கைகளைச் சுத்தி வச்சாசு.
பேரன் அது மேல ஏறி தேகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தால்...அந்தப் பயம்தான்.!!
தாஜ்மகால்   பார்க்க அழைச்சுண்டு போறியா பாட்டி?
 நம்ம ஊர்லியே நிறைய இடங்கள் இரூக்குப் பா. அதைப் பார்க்கலாம்.
ஓகே.


இஸ் இட் ஸ்டில்   ரெயினிங் பாட்டி.?
சின்னவனின் ஆசை. தண்ணீரில் ஆட.


 இல்லை ராஜா.
ஒ:)
அதனால இன்னும் மூணு வாரத்துக்கு உங்க எல்லாருக்கும் என்  கவிதை,கதை,கட்டுரை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை கொடுக்கிறேன்.

எஞ்சாய்  மக்களே:)                                                               


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

19 comments:

சந்தனமுல்லை said...

:-))) enjoy....happy hols!

துளசி கோபால் said...

ஆஹா.... வந்துட்டாங்களா!!!!!

எஞ்சாய் எஞ்சாய்.

பதிவு எங்கே போயிடப் போகுது?

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்:-)))))

சுந்தரா said...

பேரக்குழந்தைகளுடன் பொழுது சந்தோஷமாய்க் கழியட்டும் :) இன்னும்சிலநாட்கள் மழை இருந்திருக்கலாமோ,சின்னக்குழந்தைகளைச் சந்தோஷப்படுத்த...?

புதுகைத் தென்றல் said...

3 வாரம் ப்ரேக்கா எஞ்சாய். கண்டு, ரசித்ததை, பகிர்ந்ததை பதிவாய் போடுங்க.

திவா said...

வாசப்படியிலே மாவிலை கொத்தா? பெரிய சைஸ் மிளகாய் மாதிரி இருக்கு!
ஹேவ் அ நைஸ் டைம்!

வல்லிசிம்ஹன் said...

:) நன்றிப்பா முல்லை. நாளையிலிருந்துதான் ஹாலிடே:)

எல்லோருக்கும் ஹாப்பி ஹால்ஸ் நானும் சொல்லிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வந்துக்கிட்டே இருக்காங்க.
அதுக்கு முன்னாடி நான் தொலைபேசிக்காரரைப் பார்த்து சம்சாரிச்சுட்டு வந்தேன். இப்ப ஃபோன் ஓகே.

வல்லிசிம்ஹன் said...

மழையில் நனைந்தால் தாக்குப் பிடிக்கிற மாதிரி உடம்பில்லப்பா சுந்தரா.
நல்லபடியா சந்தோஷமா இருந்துவிட்டுப் போகணும் அவ்வளவுதான்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தென்றல், சின்னவனுக்கு மழலை கொஞ்சம் இருக்கு ரசிக்கலாம். ஷ னா வரலை ஸ தான் வருது. கிஸ்னாயில் கதைதான்:)
மத்தபடி அம்மா தலைப்புதான் அவனுக்கு.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...

உறவுகளுடன் பொழுதை உற்சாகமாகக் கழிக்கவும், களிக்கவும் வாழ்த்துக்கள்.

சுமதி said...

விடுமுறையை மகிழ்வுடன் கொண்டாட வாழ்த்துக்கள் வல்லிம்மா:))))

Agila said...

இதைப் படிச்சப்போ எங்க அம்மா நாங்க வரும் போது பண்ணுவதெல்லாம் ஞாபகம் வந்தது. வீட்டை , விடுமுறையை , அம்மாவை ஞாபகப் படுத்திடிங்களே :-(

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவன்,
அந்த மாவிலையும் பூவும் என் சின்னத் தம்பியின் பெண் புதுவீடு கிரஹப் பிரவேச தோரணம்.வீடு வந்துவிட்டது. கல்யாணமும் வரணும் நீங்கதான் ஆசீர்வாதம் செய்யணும்.
குழந்தைகள் வந்துவிட்டார்கள். பெரியவன் பெருசும் இல்ல ,சின்னதுமில்ல என்கிற ஸ்டேஜில் இருக்கிறான்.
சின்னவன் ஜெட் லாகில் இருந்து மீடு கொண்டு இருக்கிறான்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
மீண்டும் கணினி தகறாரு. உடனே பதில் போட முடியவில்லை.குழந்தைகள் உலகம் ரம்யமானது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சுமதி. நீங்களும் இந்த ஜூன் ஜூலையில் வரப் பாருங்கோ.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் அகிலா. புது வரவா எங்க வீட்டுக்கு?. வணக்கம் பா.
நீங்க சொல்றது உண்மைதான். வருகின்ற விருந்து மகிழ்ந்தால்தானே
நாம் மகிழ முடியும்.
சீக்கிரம் ஊருக்க்கு வர வழியைப் பாருங்க.:)

மாதேவி said...

பேரக்குழந்தைகளுடன் இனிதாய் பொழுதுகள் களிந்து கொண்டிருக்கும்.

பிற்பொழுதுகளில் நாங்களும் மகிழக் காத்திருக்கின்றோம் :)

நானானி said...

வல்லி,
நல்லா எஞ்ஜாய்! குட்டிகளோடு பொழுது நல்லாவே போகும்.
விருந்தாளிகள் வரும் போது வீட்டை தயார் செய்வதே பெரிய போராட்டம்தான். எதை எங்கே ஒளிச்சு வச்சோம்முன்னே மறந்துபோகும்.