About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Friday, December 10, 2010

மீண்ட காட்சி

வாழ்க்கைக்கு  இரு கரைகள்.
மேடும் உண்டு
பள்ளமும் உண்டு
இன்று
தொலைக்காட்சியில்  ஒரு  அதிர்வு
வேறு நினைவை மீட்டது.
வேறு குதிரைகள்
வேறு  மக்கள்
வலி தாங்காத முகங்கள்
 கொதித்து அழும் உள்ளங்கள்
தாக்கப்பட்ட  அரசு
குதிரைக் காலில் மாட்டிய வீரன்
எங்கேயோ பார்த்திருக்கோமெ
ஓ,ஜாலியன் வாலா பாக்.!!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

20 comments:

அமைதிச்சாரல் said...

உங்களோட எழுத்தின் புது ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, கவிதாயினி வல்லிம்மா..

புதுகைத் தென்றல் said...

அடுத்த கவிதையா!!! கலக்க ஆரம்பிச்சிட்டீங்க. சூப்பர்.

வீடு பாக்கணும்னு சொன்னீங்களே போட்டோ போட்டு பதிவு போட்டுட்டேன்.

ராமலக்ஷ்மி said...

மீண்ட காட்சிகளின் அதிர்வு
அப்படியே வரிகளிலே..

தொடருங்கள் வல்லிம்மா. அருமை.

சந்தனமுல்லை said...

:-(

பகிர்வுக்கு நன்றி, வல்லியம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், உங்க வரிகளைப் பார்த்ததும் சில்லுனு இருக்கு. வேற ஒண்ணும் இல்ல வெளில மழை:)
நன்றி மா. எங்க தமிழ் மிஸ்ஸைத் தான் நினைச்சுக்கறேன்.

ஸ்ரீராம். said...

நல்லாயிருக்கு. தொலைக்காட்சியின் எந்த அதிர்வு இந்த நினைவைத் தந்தது?

சுமதி said...

போன பதிவும் இந்த பதிவும் கவிதையா வல்லிம்மா நன்றாக உள்ளது.

வல்லிசிம்ஹன் said...

வாங்க தென்றல். வீட்டைப் பார்த்துட்டேன்பா. அருமையா அழகாக் கட்டி இருக்கீங்க.
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

நீங்களும் பார்த்தீங்களா ராமலக்ஷ்மி அந்தக் காட்சியை. இதுவரை இங்கிலாண்தில் நடக்காத வன்முறை நடந்தேறியிருக்கிறது.
இங்கேயும் அடிவாங்கியவர்கள் உரிமைக்குரல் எழுப்பினவர்கள் தான்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் முல்லை. தாக்குவதும் தாக்கப் படுவதும் நாகரீக சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக் நடக்கிற விஷயம். இதில் அந்த ஊரு இளவரசரும் மாட்டிக் கொண்டதுதான் அதிசயமாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
காலையில் நம்ம்ம ஊரு ஊழல் காஅட்சிகளுக்கப்புறம், லண்டனில் ,படிக்கும் மாணவர்கள் தங்கள் ,கல்வித்தொகையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு காண்பிக்க நடத்தின
ஊர்வலத்தில் போர்க்குணம் தூக்கலாகக் குதிரைப்படை உள்ளே நுழைந்தது. சரமாரியாக அடி. எத்தனையோ நபர்கள் காயம். எனக்கென்னவோ சமீபத்தில் படித்த பகத்சிங் கதையும்,ஜெனரல் டயரும் நினைவுக்கு வந்தார்கள்.
அப்ப்போது நாம் அடிபட்டோம். இப்போது அவர்கள் நாட்டு மக்களே அடிபடுகிறார்கள். அதைத்தான் சொல்ல விரும்பினேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுமதி.
கவிதை இல்லப்பா. மடக்க்கி எழுதிய வாக்கியங்கள். வேகமாக வந்ததால் கவிதை போல ஒரு தோற்றம்.
நன்றி பா.

கெக்கே பிக்குணி said...

//உங்களோட எழுத்தின் புது ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, கவிதாயினி வல்லிம்மா..//
கவிதாயினிக்கு
ரிபீட்டும்
வந்தனமும்!

வல்லிசிம்ஹன் said...

வாங்க கெபி.
நீங்களுமா:) நலமா?
அடுத்த கட்டத்துக்கு வந்துட்டேனா. !!!
எங்கியோ போயிட்டீங்க ''பாஸ்'' னு
அடுத்தாப்பில யாராவது சொல்கிறதுக்குள்ள மீ த எஸ்கேப்.:)

நன்றி மா.

துளசி கோபால் said...

அடுத்த கட்டத்துக்குப் போயிட்டீங்க!!!!!

கிருஷ்ண பிரபு said...

நிச்சயம் ஒரு முறை தக்ஷின் சித்ரா சென்று பார்த்து வர வேண்டும் நாச்சியார். தகவலுக்கு நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பதிவு பிடிச்சு இருக்கு! ரொம்ப நல்லாவே
இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

துளசி ,லேட்டா பதில் எழுதறதுக்கு மாப்பு கேட்டுக்கறேன்.
வீட்ல ஒரு விசேஷம் ஒரு ஆசுபத்திரி விசிட்னு மூணு நாட்கள் ஓடிப் போச்சு.
இதிலயும் அடுத்த கட்டத்துக்கு வந்துட்டேன் போல:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி கிருஷ்ணபிரபு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆர்.ஆர்.ஆர்.
கட்டுடைத்த கவிதைன்னு இதிச் சொல்லலாமா;0)

நன்றி மா.