Blog Archive

Thursday, November 11, 2010

துள்ளி வருகிறது வேல்!

எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காட்சி

ஏதாவது உண்டு என்றால் அது தெய்வ சக்தி

அசுரனை வெல்வதுதான்.

அதிலும் இன்றைய சூரசம்ஹாரக் காட்சிகள் அருமையாக

விவரிக்கப் பட்டு மனசுக்கு ஆனந்தத்தை அள்ளிக் கொடுத்தது.



ஒரு பக்கம் முருகனைத் தொழும் ஆனந்த நீலக் கடல்

மறுபுறம் முருகனின் ஒளி வீசும் அழகைக் காண வந்த பக்திக் கடல்.



முதலில்சூரனின் இரு தம்பியர்களையும் வதைக்கும் அழகே அழகு.

கஜமுகசுரனன்ம் ,தாருகாசுரனும் மேலும் கீழும் நடை போட,

முருக வேள், கையில் அன்னைதந்த வேலும் முகத்தில் முறுவலும்

கொப்பளிக்கக் காத்திருந்த எழில்.

மக்களின் ஆரவாரம்.



இறுதியில்சூரபத்மனும் வந்தான்.

சரவெடி கொளுத்தப்பட்டது. முருகனின் கைவேல்

அவனுடலைத் தொட அவன் தலை சாய்ந்தது.



மயிலாகவும் சேவலுமாக மாறிக் களிப்படைந்தான் சூரபத்மன்.

எதையும் அழிக்காத அஹிம்சாவாதி முருக வள்ளல்.

தீமையை அழித்து நல்ல ஆத்மாக்களாக மாற்றிய

கதையைச் சொன்ன முனைவர்களுக்கும், ஒவ்வொரு வருடமும் தவறாமல்



ஷஷ்டி விரதத்தின் ஆறாவது நாளை,சூரசம்ஹாரத்தைப் பக்தி

சிரத்தையோடு ஒளிபரப்பும் பொதிகைக்கு நம் நன்றி.



திருச்செந்தூர் வேலா,

தேவயானை வள்ளி மணாளா

எம்மைக் காப்பாய்.
என் உரையில் தவறு இருக்க வாய்ப்புண்டு.
பொறுத்தருளணும்.

4 comments:

ஸ்ரீராம். said...

"......எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவள் நீ குரு பொறுப்பதுன் கடன்....."

இரண்டு பதிவுகளாக முத்தாய்ப்பாய் சொல்லும் உங்கள் வழக்கமான வரிகளை விட்டு விட்டீர்களே...!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், வரணும்.
கணினியில் என்ன தவறு என்று தெரியவில்லை.
பதிவை நோட்பாடில் எழுதிவிட்டு காப்பி பேஸ்ட் செய்கையில், ஏற்கனவே இருந்த ''எல்லாரும் இனிதாக வாழ வேண்டும்' வரி இல்லை.
முருகன் தான் வரும்போது ,அடியேன் வாசகம் எதற்கு என்று நகை செய்திருக்கிறான்.:)
நன்றிமா.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!


அன்பன்,

” ஆரண்ய நிவாஸ்”
http://keerthananjali.blogspot.com/

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமமூர்த்தி ஜி..