About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Tuesday, November 09, 2010

மழலைகளின் சாம்ராஜ்யம்


நம் தீபாவளி வார நாளில் வந்தது.


எங்கள் குழந்தைகள் இருக்கும் இடங்களில் சனிக்கிழமைதான்எல்லா வைபவங்களும்.

பெரிய பேரனுக்காக பக்கத்துவீட்டு வெடிச் சத்தங்களை

தொலைபேசியில் கேட்க வைத்தேன்.தாத்தா கையிலியே வெடி வைத்துக் கொண்டு

வெடிப்பாரா பாட்டி என்று கேட்டான்.

''அப்போ எல்லாம் வெடி வெடிப்பது ஜாக்கிரதையாகத் தான்

செய்வோம்பா. தாத்தா ஓரிரண்டு சின்ன வெடிகளை

அப்படி வேடிக்கைக்காகத் தூக்கிப் போடுவார்.

இப்ப அதெல்லாம் செய்யக் கூடாதும்மா''என்று

எச்சரித்து வைத்தேன்.:)அவர்கள் ஒரு பத்துப் பதினைந்து அந்தக் காலனியில்

ஒன்று சேர்ந்து கொண்டாட நினைத்த பட்டாசு

வெடிக்கும் கும்மாளத்தை மழையும் பனியும் வந்து கெடுத்துவிட்டன.

அதில் ஒரு தம்பதியாரால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவில்

இருக்கும் ஒரு வயதானஅத்தை இறைவனடி அடைந்ததால் அவர்களால்

வர இயலவில்லை.

சின்னவனுக்கு அந்த ஆந்டியை ரொம்பப் பிடிக்கும்.

அம்மாவை நச்சரித்திருக்கிறான், ''ஏம்மா வரல லக்ஷ்மி ஆந்ட்டி''என்று.

ஏதோ முடியவில்லைமா என்று அவன் கவனத்தைத் திருப்பி இருக்கிறாள்.
அவன் சும்மா இருப்பானா.மற்ற தோழர்கள் தோழிகள்
உடன் கலந்து விளையாடி விஷயத்தை வாங்கிக் கொண்டான்.

அடுத்த நாள் பெண்ணும் மாப்பிள்ளையும் லக்ஷ்மி

ஆந்ட்டி வீட்டுக்குப் போய் விசாரித்து

விட்டு வரணும் என்று பேசிக் கொண்டிருக்கும் போது,

பெரியவன் 'ஏம்மா தே ஆர் ஓகெ நோ?'

என்று கேட்டபோது, பெண் 'நேத்திக்கே அவர்கள் விருந்துக்கு

வரவில்லையேமா நீ பார்க்கவில்லையா.''

என்று கேட்டதும்,

சின்னவன் உள்ளே புகுந்து''அண்ணா ஒண்ணுமே பார்க்கலைமா''

தீபக்கோட வளவளான்னு பேசினான்''என்று ஓடிக்கொண்டே சொல்ல

இவர்கள் சிரிப்புக்கு நடுவில் அவர்கள்

பெரியவனுக்கு அவர்கள் வீட்டு, நடந்த துக்க சமாசாரத்தை விளக்க

முற்பட்டதும்,பெரியவன் அந்த உறவு முறை புரியாமல் விழித்திருக்கிறான்.

சின்னத் துடுக்கு உடனே' '' Anna!, V.K.uncle's very old athai gone forever''

so they could not come'' என்று அண்ணாவுக்கு

விளக்கம் சொன்னானாம்.:)

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தூக்கிவாரிப் போட்டு இருக்கிறது.
உனக்கு யாரு சொன்னா? என்று கேட்டால், மனு(அந்த வீட்டுப் பெண்)
தான் சொன்னா.

ஓல்ட் பிப்பில் கோ டு காட் மா''

என்று மீண்டும் விளையாடப் போய்விட்டானாம்.!!


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

24 comments:

LK said...

நாம்தான் பலவற்றையும் மனதில் வைத்து குழப்பிகொள்கிறோம். குழந்தைகள் அப்படி அல்ல

ராமலக்ஷ்மி said...

குழந்தைகளின் சாம்ராஜ்யத்தை குறைத்து மதிப்பிடுவது நம் இயல்பாகி விட்டது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கார்த்திக்.
டேக் இட் ஈசி பாலிசி அவர்களுக்கு.
உணரும் நேரம் வர நாளாகும் இல்லையா.

எங்கள் காலம் வேறு. இவர்கள் அணுகுமுறை வேறு.!நன்றாக இருக்க வேண்டும், கபடில்லாத குழந்தைகள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராமலக்ஷ்மி.

சின்னப் பேத்தி, தீபாவளிசமயம் இங்க இருந்தாள். டில்லியிலிருந்துவிட்டு இங்கே வந்ததால் உடனே சளி பிடித்துக் கொண்டது.பட்டாசுப் புகை ஒத்துக் கொள்ளவில்லை.

நான் அதற்கு வேடிக்கை காட்ட மட்டாப்புக்களைத் தள்ளி நின்று ஏற்றினேன்.
அதற்கு அந்த வாண்டு சொல்கிறது, ''கம்பி மத்தாப்பு ஒண்ணும் செய்யாதாம். நீ தள்ளிப் போகாத பாட்டி. இங்கயே வை''என்கிறது.:)

LK said...

/அதற்கு அந்த வாண்டு சொல்கிறது, ''கம்பி மத்தாப்பு ஒண்ணும் செய்யாதாம். நீ தள்ளிப் போகாத பாட்டி. இங்கயே வை''என்கிறது.://

so sweet

வல்லிசிம்ஹன் said...

அதுக்கு அவள் அம்மா, தன்னைத் தூக்கிக் கொண்டு உள்ள போய்விடப் போகிறாள்,
என்ற பயம். சம்த்துக் குடம்.நன்றி கார்த்திக்.

சுந்தரா said...

இந்தக்காலத்துக் குழந்தைகள் ரொம்பத் தெளிவுதான் வல்லிம்மா...
எவ்வளவு அழகாப் புரிஞ்சுக்கிறாங்க பாருங்க :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மழலைகள் சாம்ராஜ்யத்துல நாம அடிமையா வேணாலும் இருக்கலாமே..:)

சந்தனமுல்லை said...

:-) எவ்வளவு தெளிவு...!!

திவா said...

டேக் இட் ஈஸி இல்லைக்கா! அவங்களை பொருத்த வரை புதுசு புதுசா ஏதாவது கத்துக்கறாங்களா, அதனால் இதெல்லாம் மேடர் ஆப் ஃபாக்ட்!

ஹுஸைனம்மா said...

குழந்தைகள் வளர்ந்து பிள்ளை பெற்ற பின்னும் நமக்கு அவர்கள் இன்னும் ‘ஒன்றுமறியா குழந்தைகள்’தான்!! :-)))))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சுந்தரா.ஆமாம் முகத்தைப் பார்த்தால் இந்தப் பிள்ளையா இப்படிப் பேசுகிறதுன்னு தோன்றும்:) அவங்க அவங்க தேவைகளில் தெளிவுதான்!!

வல்லிசிம்ஹன் said...

ஓ, நான் தயார் முத்து.:)
ஒரு கள்ளமில்லாத அரசாங்கத்தில சேவகம் செய்வது எத்தனை இன்பம். ஒரே ஒரு தரம் நம் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டால் போதும் .இனிமையின் எல்லைக்கேப் போய்விடலாம்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை. இப்பதான் சித்திரக்கூடத்துக்குப் போய் வந்தேன். அங்க சின்னம்மா வெளிய கிளம்பலாமா,வேணாமான்னு யோசிச்சுக் கொண்டு இருந்தாங்க:)
தெளிவுதான்பா. இவங்களுக்கெல்லாம். நாமதான் குழம்பறோம்!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன்.
ஆமாம் அதுக்கென்ன தெரியும். ஒன் மோர் நியூஸ்.

இன்னிக்குத் தூங்கும்போது ஹே ராம் 'பாட்டுப் போடச் சொல்லி
விட்டுக் கூடவே அவனும் பாடும்போது,டிங்,டிங் அப்படீனு
சத்தம் போடுகிறானே என்று, யோசித்தேன்.
நானும் அந்தப் பாட்டை யூ டியூபில்(ஜக்ஜித் சிங்)
கேட்டேன்.பாட்டோடு அந்த கிங்கிணிச் சத்தம் கேட்கிறது!!

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹுசைனம்மா.
நீங்க சொல்கிற உண்மையை என்னால் மறுக்கவே முடியாது.:)
மனசளவில் நானும், என்னைப் பொறுத்த வரையில்
எங்க குழந்தைகளும்
குழந்தைகள்தான்:) இதுவும் ஒருவிதமான பழக்கம். மாற்றிக்கொள்ளவேண்டும்.!!

சுமதி said...

குழந்தைகள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள் வல்லிம்மா.

ஸ்ரீராம். said...

நிகழ்வுகளின் கனம் உணர முடியாத வயசு என்று சொல்லலாம். குழந்தைகள் குழந்தைகள்தான்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். அதுகளுக்கென்ன தெரியும்.
புரிதல் என்பது வர நாளாகும். குழந்தைகளாக இருப்பது ஒரு அருமையான
காலம்.
நான் சொlla நினைத்தது அவனுடைய பேச்சு ஜாலத்தை:)
இன்னும் நாலு வயதே நிரம்பாத குழந்தைக்கு
என்ன தெரியும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க சுமதி. தெளிவு இருக்கோ இல்லையோ
பேச்சு ரசிக்க முடிகிற காலம் குழந்தைப் பருவம். நன்றிம்மா.

மாதேவி said...

:) இப்போதைய குழந்தைகள் நல்ல விபரத்துடன் இருக்கிறார்கள்.

அப்பாதுரை said...

மனசை லேசா உலுக்கி விட்ட பதிவு. மழலைப் பேச்சில் மகேசனைக் காணலாம்.
ரைட்டு. எங்க மாமா சஷ்டியப்தபூர்த்தியை சனிக்கிழமை வச்சுக்கோனு சொன்னப்ப அவர் முகம் எப்படிப் போயிருக்கும்னு போன்ல தெரியாம போச்சு (நல்லது).
>>>சனிக்கிழமைதான் எல்லா வைபவங்களும்.

வல்லிசிம்ஹன் said...

விவரம் சீக்கிரம் கிரஹித்துக் கொள்ளுகிறார்கள் மாதேவி.
அடுத்தது என்ன என்று அவர்கள் அறிவு ஓடுகிறது:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.

என்ன செய்வது. இன்னிக்குத் தீபாவளின்னு சொல்லி லீவு கொடுப்பார்களா என்ன:0)எங்களுக்குத் தான் அவர்களது ஓட்டம் பிடிபட நேரமாகிறது.
மாமா இந்தியால இருக்கிறாரா:)