Blog Archive

Thursday, November 18, 2010

நிலவும்வானும் நிலமும் கதிரும்......1


'எப்ப பார்த்தாலும் அப்பா அப்பா!!''


நான் மனுஷியாத்தெரியலையா உனக்கு?

பேரனைக் கடிந்துகொண்ட மருமகள் சுதாவைக்

கவலையோடு பார்த்தாள் மாலதி.

'விட்டுடும்மா அவனை. மாதத்துக்கு 20 நாள் பரத்

ஊர்ல இருக்கிறதில்ல. குழந்தைக்கு அப்பா மேல

ஏக்கம் வரத்தானே செய்யும்..'

இல்ல அத்தை இதுக்கு அவரும் ஒரு காரணம்.

எப்பவும் இவனோட விளையாடறது, வெளில

அழைத்துப் போவதுன்னு இங்க இருக்கிற

நாட்களைச் செலவழிக்கிறார்.என்னிடம் கூட  நிறைய நேரம்  எடுத்துப் பேசறதில்ல

அதுதான் அவர் ஊருக்குக் கிளம்பும்போது, இவனைச்

சமாதானத்துக்குக் கொண்டு வரது படு சிரமமா இருக்கு.

அலுப்புமா... நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன்,

இவர் கொஞ்சம் அதீதமாப் பிள்ளையைக் கொண்டாடிக்கிறார்.



பாட்டியையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்த

ரஞ்சன் ஓடித் தன் அறைக்குப் போனான்.

நான் ஸ்கூலுக்குப் போமாட்டேன்.

அப்பா வந்ததான் போவேன்.

அழுகைக் குரலைக் கேட்டதும்,மாலதியின் மனம் இளகியது.



ஐந்து வயதுக் குழந்தையை இப்படிக் கணவனும் மனைவியும்

பங்கு போட வேண்டாமே என்ற வருத்தம் மேலிட்டது.

தன் மகனை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

அதை மருமகளை உணர வைக்கப் பழைய கதையை எல்லாம்

அலச வேணுமே என்ற மன அழுத்தம் தோன்றியது.



மெரினாவுக்கு நடக்கப் போயிருக்கும் கணவர் வரும்

வரைப் பேரனோடு செஸ் விளையாடி அவன் மனத்தை மாற்றினாள்.

அவருடன் பேசி இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்

குழந்தை கஷ்டப் படக் கூடாது இப்படி ஓடியது அவள்

சிந்தனை.



சொல்லிவைத்தாற்போல் கதவு திறக்கும் சத்தம்

கேட்டதும் ரஞ்சன் தாத்தாவைக் கட்டிக் கொள்ள

ஓடிவிட்டான்.

என்ன ராஜா, என்ன செய்யறே முகமெல்லாம் சிவந்திருக்கு

என்றபடி அவனை அணைத்துக் கொண்டார் ரகுநாதன்.



அவருக்குப் பருக பழரசத்தைக் கொண்டு வந்த மாலதி

'நீங்கள் வெளியே போகும் போது குழந்தையை அழைத்துப் போகணும்.

சின்னதுதானே,போரடிக்கிறது அவனுக்கு.

எங்க அவன் கொண்டு வர வீட்டுப்பாடம் முடிஞ்சத்தானே


அவன் அம்மா வெளியிலியே விடுவாள்,நம்ம காலம் மாதிரியா

என்று சிரித்தவண்ணம் சாயந்திரவேளை விளக்கு

வழிபாடு செய்யச் சித்தமானார் ரகு. நிரஞ்சனா!

நீயும் தாத்தாவோட ஸ்வாமி நமஸ்காரம்

செய்யறியா என்ற வண்ணம் அவனை

அழைத்துப்போனார்.

கொஞ்சம் அமைதி கண்டவனாக ,ரஞ்சனும்

சென்றான். மாமியாரும் மருமகளும் கொஞ்சம்

ஓய்வாக அமர்ந்து இரவு சமையலை முடித்து

தாத்தாவும் பேரனும் வந்ததும் சாப்பிடத் தயார் ஆனார்கள்.

மீண்டும் ஆரம்பிக்கப் போன மருமகளைக்

கண் காட்டி நிறுத்தினாள் மாலதி. வயிறு ரொம்பக்

குழந்தை சாப்பிடட்டும்,நானும் அப்பாவும் உன் கிட்டப்

பேசணும் என்று சைகையில் சொன்னாள்.

பள்ளியில் நடந்ததை எல்லாம் தாத்தாவிடம்

சொல்லிவிட்டுச் சந்தோஷமாகச் சாப்பிட்டு முடித்தது குழந்தை.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

24 comments:

எல் கே said...

தேவையான கதை என்று நினைக்கிறேன்

துளசி கோபால் said...

நல்ல தொடக்கம்.

ஒரு இடத்தில் நிரஞ்சனா ன்னு வருது பாருங்க.

நானானி said...

பல குடும்ப நிலவரங்களை அழகாக சொல்லி இருக்கிறீர்களப்பா!!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கார்த்திக். நடந்து கொண்டிருக்கிற பிரச்சினை தான். மாறும். நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமார். ஆரம்பித்திருக்கிற அனுபவம். கதை முடிந்த பிறகு நன்றாக இருந்ததா என்று சொல்லுங்கள்.:) நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி. பையன் பெயர் கஷ்யப் நிரஞ்சன் தான். செல்லப் பெயர் ரஞ்சன் ஆகிவிட்டது:)

துளசி கோபால் said...

ஓக்கேய்:-))))))))))))

சாந்தி மாரியப்பன் said...

நல்ல தொடக்கம்.. ஒரு பருவத்தில் எல்லாக்குழந்தைகளுக்குமே இப்படி ஒரு நிலை வந்திருக்கும், கொஞ்சம் வளர்ந்தபின் அப்பா ஏக்கம் தானாகவே குறைஞ்சுடும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு தொடருங்க.. வருகிறோம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா நானானி.
கடவுள் பாதி மிருகம் பாதின்னு வேளுக்குடி ஸ்ரீநரசிம்ஹ அவதாரத்தைப் பற்றி சொன்னார். அதற்கு முந்திய நாள் ''கண்ணாடி'' என்ற டாக் ஷோ 'ஜயா டிவியில் பார்த்த போது அமைந்த கற்பனை இது.கொஞ்சம் கதை கொஞ்சம் கற்பனை:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல்.இது வழக்கத்துக்குக் கொஞ்சமே மாறான கதை.படித்துவிட்டு அப்புறம் கண்டிப்பாக உங்கள் கருத்தைச் சொல்லணும்.நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முத்து.நீங்க எல்லாம் தொடர்ந்தால் தான் என் எழுத்தே பரிணாம வளர்ச்சி அடையும்.மனசை ரொம்ப பாதித்த விஷயத்தைக் கேட்டதில் இருந்து இதை எழுதியே ஆகணும்னு நினைச்சேன். சரியாச் செய்தியைக் கொடுக்கிறேனான்னு சொல்லுங்க.

ஸாதிகா said...

அருமையான கதை.நிகழ்வுகளை கண் முன் கொணர்ந்து நிறுத்தி விட்டீர்கள் சகோதரி.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா,சகோதரி என்னும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது ஸாதிகா. நன்றிமா. ட்ராஃப்ட் ரெடியாகி கொண்டிருக்கிறது.
நிதானமா கவனமாக எழுதணும்.

Matangi Mawley said...

nijam... en case kooda oralavu itha pola thaan irunthathu! appa/amma rendu perum velapaakkarathunaala- enna chinna vayasula paatti aaththula vitturuppaa.. en amma kitta enakku phone-la kooda pesa pidikkaama irunthathu...

romba kashtapattu enna amma/appa kooda irukka pazhakka vendiyathaapla pochchu!

apram avaa enakku neraya time kodukka aarambichchu sariyaayuduththu! kozhanthaikalku thaan sambaathikkarom... athukal kooda irunthu athukal santhoshap padaratha paakkaatha irukkarathukkilla!

beautiful mam!

Unknown said...

கதை தொடக்கம் நல்லாருக்கு வல்லிம்மா தொடருங்கள்.

சுந்தரா said...

பலர் வீடுகளில் நடக்கும் விஷயம் வல்லிம்மா.

பிஞ்சுகளின் விஷயத்தில்,புரிதல் ரொம்ப அவசியம்.

சங்கரியின் செய்திகள்.. said...

நல்ல கதை தோழி, தொடருங்கள், வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மாதங்கி. குழந்தைகள் டியூஷன்,பாட்டு,டான்ஸ் அப்படீனு போயிண்டே இருக்கும். அம்மா அப்பாவோட அருகாமை இல்லைன்னால் நஷ்டம் தான். உங்க பெற்றோர் உங்களை அழைத்துக் கொண்ட போது (நேரம் கடந்து கிடைத்தாலும்)உங்களுக்கு என்ன சந்தோஷம் கிடைத்திருக்குமோ அதை நான் இப்ப அனுபவிக்கிறேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சுமதி ,நான் எழுதும் கதையில் வரும் நாயகனும் அந்த மாதிரித் துயரத்திலிருந்து மீண்டவன்.
இன்று எழுதிவிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுந்தரா,
பிஞ்சுகள் தான் அவைகள் தான் அவஸ்தைகளுக்கு உள்ளாகின்றன.

சரியாகட்டும். இன்றைய மகிழ்வு நாளைய சமுதாயத்துக்கு நல்லது இல்லையா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நித்திலம்-சிப்பிக்குள் முத்து,என்ன அழகான பெயர் உங்களுக்கு. முதல் வருகைக்கு மிகவும் நன்றி. கவனமாக எழுத வேண்டி யிருப்பதால் இன்று நாளைக்குள் முடிக்கப் பார்க்கிறேன். ரொம்ப நன்றிப்பா.

திவாண்ணா said...

//கொஞ்சம் கதை கொஞ்சம் கற்பனை:)//
ஏங்கா கதைனாலே கற்பனைதானே? :-)
அதனாலதானே உண்மை கதைன்னு சில சமயம் சொல்லறோம்?

வல்லிசிம்ஹன் said...

அன்பு தம்பி வாசுதேவன், கொஞ்சம் கதை கொஞ்சம் நிஜம்னு எழுதறதுக்குப் பதிலா தப்பா எழுதிட்டேன்மா:0)
கதையும் ஒருகாலத்தில் நடந்தது தானே!