Blog Archive

Thursday, October 28, 2010

ஹேலொவீன் வந்தாச்சு















மீண்டும் அக்டோபர் மாசம். சிகாகோ  திமிலோகப்படுகிறது.
பெண்வீட்டில் சின்னவன் பல பல காச்டியூம்களைப் பார்த்துவிட்டு. ஸ்பைடர் மேன்
வாங்கி வந்திருக்கிறான்.
அண்ணாவின் பழைய உடைகள் அவனுக்குப் பொருந்தவில்லை. உடலமைப்பில்
அண்ணா பெரிய அளவு. இவன் இன்னும் சதை போட்டால் நன்றாகப்  பொருந்தும்.
எங்க !!சாப்பிடற சாப்பாடெல்லாம் ஓட்டம் விளையாட்டுல  கரைந்துவிடுகிறது:)

கடைக்கு அழைத்து போய் ,அவனை  தேர்ந்தெடுக்கச் சொன்னதும் ,பலவற்றையும் அணிந்து பார்த்து விட்டு,
ஒ ஐ கிவ் அப் மா. நத்திங் பிட்ஸ் மி''  ன்னு    கண் கலங்கியிருக்கிறான்.(டிராமா பாதி)
கடைசியாக் ஸ்பைடர் மேன் கிடைத்திருக்கிறார்.
இப்ப எல்லாம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது. தானே எல்லாம் செய்து கொள்ளவேண்டும் என்ற கொள்கை.
வாங்கின  உடையை  அதற்கான அறையில் உள்ளே போய்க் சார்த்திக் கொண்டுவிட்டானாம் . எப்படியோ வளைந்து நெளிந்து  போட்டுக் கொண்டு விட்டான். ஜிப்  மட்டும் எட்டவில்லை. அம்மாவை அழைத்து அதையும் சரி
செய்துகொண்டுவிட்டான். இப்போது ஸ்பைடர் மேன் மாஸ்க் போடணுமே.

அதைப் பிரித்தபோது  தான்  ஒரு பிரச்சினை .அதில் கண்களாக  இரு நீளக் கோடுகளே இருந்தன.
சின்னவனுக்கு மூக்கை மூடினாலே பிடிக்காது. என்னதான் வலைமாதிரி  போட்டு இருந்தாலும் ,இந்த உடுப்பையும் வேண்டாம் என்று சொல்லப் போகிறான் என்று பெண் நினைத்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.
''அண்ணா ஐ ஆம் கோயிங் டு பி ய  ஹெட்லஸ்   ஸ்பைடர்மேன் '' என்று வருத்தப் பட்டு இருக்க்கிறான்.:(
பெரியவன் அந்த மாச்கைப் பார்த்துவிட்டு, இவ்வளவு தானா.நான் சரிசெய்து விடுகிறேன் என்று  அந்த  முகமூடியின் முன் பாகத்தை வட்டமாகக் கிழித்து எடுத்துவிட்டான்.
ஒரு புது விதமான,   ஸ்பைடர் மாஸ்க் போடாத ஸ்பைடர் குட்டியை  சின்னவன் பள்ளியில் நாளைக்குப் பார்க்கப் போகிறார்கள்.:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

18 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

'அண்ணா ஐ ஆம் கோயிங் டு பி ய ஹெட்லஸ் ஸ்பைடர்மேன்// அட அட.... :)

துளசி கோபால் said...

//நத்திங் பிட்ஸ் மி'' ன்னு கண் கலங்கியிருக்கிறான்.(டிராமா பாதி)//

ஹாஹாஹாஹா

இந்த ஹாலோவீனை மறந்தே மறந்து இந்தியப்பிரஜை ஆகிட்டேன்ப்பா!

குமரன் (Kumaran) said...

அம்மா, சேந்தனும் இந்த வருடம் ஸ்பைடர்மேன். :-)

நானானி said...

இந்த, ஹாலொவீன் போது சன்னிவேலில் வீடு வீடாகப் போய் பார்த்து, பயந்து(ச்சும்மா!), சாக்லேட் வாங்கிக் கொண்டு, உடனே வீட்டுக்கு வந்து நம் வீட்டுக்கு வரும் “பேய் பிசாசுகளுக்கு” சாக்லேட் வழங்கியது எல்லாம் நல்ல ‘ஊதுபத்தியாக’ சுழன்று எழும்பியது.

கொலு பாக்க வரும் சிறுவர்களுக்கு சுண்டல் கொடுப்பது போல அங்கு சாக்லேட்!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் கயல். இப்படித்தான் ஏதாவது பாம்ப்ஷெல் மாதிரி சொல்லுவான்.
குடி பாக்கில் நேற்று அவனே ஒரு பென்சில்,ஒரு ரப்பர்,ஒரு இனிப்பு எல்லாம் ஸ்பைடர் வடிவில !!!, எடுத்துப் போட்டான்.நானும் ஸ்கைப்பில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்:)

வல்லிசிம்ஹன் said...

அடடா, துளசி,சண்டிகர்லயும் ஏதாவது இருக்கலாம். நீங்களே எழுதுவீங்க பாருங்க. இப்பதான் எல்லாமே க்ளோபல் ஆகிவிட்டதே.சென்னையில் நிறைய விளம்பரம் பார்க்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமரன்.சேந்தனும் மாண்டிசோரி சேர்ந்து
விட்டானா.
காலம்தான் சீக்கிரம் ஓடிவிட்டது.
பெண் எந்த மாதிரி வேஷமோ:) வந்து படித்ததற்கு ரொம்பவும் நன்றிம்மா.

மாதேவி said...

ஓ...வெரிநைஸ்.

Unknown said...

இங்கு பள்ளியில் ஹாலோவின் கொண்டாட்டம் இல்லை என அறிவித்திருக்கிறார்கள் வல்லிம்மா.ஆனால் தெருவில் கொண்டாட்டம் உண்டு வல்லிம்மா:))))

ராமலக்ஷ்மி said...

//'அண்ணா ஐ ஆம் கோயிங் டு பி ய ஹெட்லஸ் ஸ்பைடர்மேன் '' என்று வருத்தப் பட்டு இருக்க்கிறான்//

:))!

ஸ்பைடர் குட்டி ஸ்கூல் போய் வந்ததும் ஒரு அப்டேட்ஸ் தாருங்கள்:)!

குமரன் (Kumaran) said...

ஆமாம் அம்மா. சேந்தனும் பள்ளிக்கூடம் செல்கிறான் - Preschool. தேஜஸ்வினி இராணி வேடம் போடுகிறாள்.

திவாண்ணா said...

முதல் படத்துல இருக்கீற வாண்டுதானா அக்கா?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நானானி அவங்க ஊர் கொலுக் கொண்டாட்டம் இதுதான் போலிருக்கு. எனக்கும் நாங்க 2008ல இந்தக் குழந்தைகளோட சந்தோஷமாகப் பொழுது கழித்தது நினைவு வந்தது.கூடவே அந்தக் குளிரும்:)

வல்லிசிம்ஹன் said...

@குமரன், தேஜஸ்விவி ராணி வேடத்தில் எப்படி இருப்பாள் என்று யோசிக்கிறேன்.:)அருமையாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.
நன்றி சுமதி. ஏன் இப்படிச் செய்து விட்டார்கள்.
குழந்தைகள் ஆனந்தமாகப் பொழுது கழிப்பார்களே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,ஸ்பைடர் குட்டி, நன்றாக எஞ்சாய் செய்துவிட்டு வந்துவிட்டது. என்னடா நடந்ததுன்னு கேட்டால் சொல்ல வில்லை. இரண்டு நாட்கள் கழித்து சொல்லுவானாயிருக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி திவா. படத்தில் இருப்பது கூகிளில் கிடைத்த குழந்தை. வீட்டுக்குழந்தைகளின் படங்களை வெளியிடுவதில் எங்கள் பிள்ளைகளுக்கோ ,பெண்ணுக்கோ சம்மதம் கிடையாது.

கோமதி அரசு said...

பேரன் ஸ்பைடர்மேனா !

அங்கு பேரன் கவ்பாய் டிரஸ்.இன்று அவர்கள் செயவதை ஏற்றுக் கொள்கிறான்.நாளை அவ்னும் தான் சொல்லும் டிரஸ் தான் போட்டுக் கொள்ளவேண்டும் என்பான்.