Blog Archive

Sunday, September 26, 2010

நீ சொல்வதை நாங்கள் கேட்கிறோம்.



*******************************************************

இப்ப சாண்ட்ராவின் பக்கம் வரலாம், என்னிடம்

சொல்லிவிட்டுச் சென்றவள் இரண்டு மூன்று நாட்கள்

குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு வரவில்லை.


மருமகளைக் கேட்டால் வீக் எண்டிற்கு எங்கியாவது போயிருப்பார்கள் மா
என்றாள். வீட்டுக் கதவைத் திறந்தால் நீளமான குளிர்ச்சியூட்டப்பட்ட
வராந்தா இருக்கும்.

வராந்தாவின் முடிவில் லிஃப்ட் இருக்கும்.

இது போல நான்கு ப்ளாக்கிற்கும் போய் வர
ஏதுவாக சௌகர்யம் உண்டு.

ஒரு சாயந்திர வேளை பேத்தி  வற்புத்தியதால் இன்னொரு
லிஃப்டில் கீழே இறங்கினோம்.
அது கடைகள் இருக்கும் தெருவின் நடைபாதையில்
முடியும்.

''பாப்பா இங்க கார் எல்லாம் ரொம்ப வேகமா வரும் ,நாம்
மாடிக்கே போயிடலாம்பா'' என்றாலும் அவள் கேட்கவில்லை.

'அண்ணா பாரு'' என்று கைகாண்பித்தாள்.அங்கே கெவின்!.
ஹலோ கெவின்,எப்படி இருக்கமா' என்றபடி
அவன் பக்கம் சென்றேன்.

எப்பவும் என்னிடம் மரியாதையாகவே பேசுவான். அவன்
அப்பாவின் சாயல் அப்படியே அந்தப் பிஞ்சு முகத்தில் தெரியும்.
உட்காருங்கள் க்ராண்ட்மா' என்றபடி எழுந்திருந்தான்.
''நீயும் இருப்பா. எனக்கு மீண்டும் எந்த லிஃப்டில் எங்கள்
அபார்ட்மெண்டிற்குப் போக வேண்டும் என்று தெரியவில்லை''
உதவி செய்கிறாயா'' என்று அவன் முகத்தைப் பார்த்தேன்.
முதல் முறையாக அவன் முகத்தில் புன்னகை.

அச்சொ எவ்வளவு அழகா இருக்கு இந்த பையன் சிரித்தால்!
சொல்லவும் செய்தேன். உன் புன்னகை அழகா இருக்கு கெவின், நீ நிறைய
சிரிக்கணுமென்று அவனைக் கொஞ்சம் நல்ல மூட்' உக்கு
கொண்டுவரலாம் என்று நினைத்தேன்.

ஓ தட்ஸ் ஓகே க்ராண்டமா' ஐ டூ லாஃப் அண்ட் ப்ளே.
டூ நாட் டேக் மை மாம்'ஸ் வேர்ட்ஸ் லிடரல்லி'' என்று மீண்டும் சிரித்தான்.
எனக்கு அந்தப் பிள்ளை சிரிப்பதே சந்தோஷமாக இருந்தது.


பின்னாலயே இவர் வரும் சத்தமும் கேட்டது.

''ஹலோ, க்ரான்பா' என்றபடி அவரிடம் நெருங்கி

உட்கார்ந்து கொண்டான் கெவின்.

நீ எங்கயாவது தெரியாமல் தொலைந்து விடப் போகிறாய் என்று

வந்தேன் ''என்று என்னைப் பார்த்துச் சொன்னவர்,

கெவினை நோக்கி நோக்கி,'' யூ நோ கெவின்,ஷி கெட்ஸ் லாஸ்ட் எவ்ரி

டென் மினட்ஸ்'' என்று பெரிய ஜோக் ஒன்றை உதிர்த்தார்.

(இங்க என் பல் கடிக்கிற சத்தம் போட்டுக் கொள்ளவும்)



ரியல்லி!! க்ரான்மா டூ யூ டூ தட்?'' என்றவனைப் பார்த்து ஒரு

அசட்டுச் சிரிப்பைச் சிரித்துவைத்தேன். எல்லாம்,

அந்த நல்ல நேரத்தைக் கெடுக்கவேண்டாமே என்ற

நல்ல எண்ணம்தான்:)

இவருக்கு கெவின் பற்றின விஷயம் ஒன்றும் தெரியாது.

தெரிந்தாலும் 'ஓ பாய்ஸ் வில் பி பாய்ஸ்'' என்ற

உலகமறியாத தத்துவம் சொல்லிவிடுவார்.!!

நான் இப்படி ஒரு வாக் போயிட்டு வரலாம் என்றிருக்கிறேன்.

நீ வருகிறாயா ''என்று என்னைப் பார்த்தார்.

நான் பாப்பாவுக்கு சாப்பாட்டு நேரம் வந்துவிடும்''என்று தயங்கினேன்.

ஓ,க்ரான்பா கேன் ஐ கம் வித் யூ'

என்றதும் இவர் உன் அம்மா அப்பா கிட்டச் சொல்லிவிட்டு வா.

நாம் போகலாம்'' என்றார்.

உடனே அவன் முகம் மாறிவிட்டது. அவர்கள் டெஸ்ஸர்ட் சஃபாரி

போயிருக்கிறார்கள், நாளை சாயந்திரம் தான்

வருவார்கள்''என்றான்.

வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றதும், ஃபிலோமியும், (உதவி செய்யும் ஆயா)

ஈவாவும் தான் இருக்கிறார்கள்.

அதனால் நான் யாரையும் கேட்கவேண்டாம். உங்களுடன் வருகிறேன்,
என்று அவன் அவரைப் பார்த்ததும், ஓகே,லெட்ஸ் கோ' என்றவர்

என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு அவன் கையைப் பிடித்தபடி
நடக்கலானார்.''இல்லை ,என்று ஆரம்பித்த என்னை,நான் பாத்துக்கறேன் மா'
என்று   கையசைத்துவிட்டுக் கிளம்பினார்கள். எனக்குதான் ஏதூ கவலையாக இருந்தது.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

14 comments:

திவாண்ணா said...

// ஷி கெட்ஸ் லாஸ்ட் எவ்ரி டென் மினட்ஸ்'' என்று பெரிய ஜோக் ஒன்றை உதிர்த்தார்.

(இங்க என் பல் கடிக்கிற சத்தம் போட்டுக் கொள்ளவும்)//
ஏன் அக்கா? இன்னும் குறைச்சலா அஞ்சு நிமிஷம்ன்னு சொல்லி இருக்கணுமா? :P:P:P

துளசி கோபால் said...

உறவுகளுக்கு ஏங்கும் வயசும் மனமும்.
வெளியிலே சொல்லிக்கத்தான் அந்த வயசுக்குத் தெரியறதில்லை.

விறுவிறுப்பாப் போகுதுப்பா.

Jayashree said...

நன்னாவே கதை போயிண்டிருக்கு. மிச்சத்தை 15 நாள் கழித்து டாடா பை பை போயிட்டு வந்து படிக்கறேன்:))

ஹுஸைனம்மா said...

இண்டரெஸ்டிங்காப் போகுது கதை..

கோமதி அரசு said...

கெவினுக்கு உங்களைப் போல் நல்ல தாத்தா,பாட்டி இல்லை போல, இருந்தால் அவனுக்கு நன்றாக இருந்து இருக்கும்.

அன்புக்கு ஏங்கும் குழந்தையாக தெரிகிறான்.

வல்லிசிம்ஹன் said...

சொல்ல மாட்டீங்களா தம்பி வாசுதேவன்.)இதுவும் சொல்வீர்கள் இன்னமும் சொல்வீர்கள். :))))
தொலைவில போகிறவர்களுக்கு நிற்கிறவர்கள் தொலைந்து போன மாதிரிதான் தெரியும். அதே தான் எங்க எஜமானரும் சொல்கிறவிஷயம்:))))

வல்லிசிம்ஹன் said...

அதே தான் துளசி. பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவில்லை. அமெரிக்காவில் இருப்பது போலவே இருந்தார்கள். இந்தப் பையன் இங்க வந்து மத்த பசங்கள் வீட்ல விடுமுறையைச் சந்தோஷமாகக் கழிப்பதைப் பார்த்திருக்கிறான். அங்கே என்றால் ஒரு தாத்தா வீட்டுக்காவது போகும் சுகம் கிடைத்திருக்கும்.பாவம் பிள்ளை

வல்லிசிம்ஹன் said...

சரி ஜயஷ்ரீ.எஞ்சாய் யுவர் டைம் ஆஃப்..:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஹுசைனம்மா. அம்மா அப்பாவோட அரவணைப்பு எவ்வளவு வேண்டும் என்கிறதை இந்தச் சம்பவத்தில் கண்கூடாகப் பார்த்தேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தங்கச்சி கோமதி.
கட்டி வைத்த பசு போல இவருடன் அவன் நடந்த காட்சி மனசை ஏதோ செய்தது

Unknown said...

அச்சோ பாவம் குழந்தை:-( அப்புறம் என்ன ஆச்சு?

//தொலைவில போகிறவர்களுக்கு நிற்கிறவர்கள் தொலைந்து போன மாதிரிதான் தெரியும்// ஹாஹா! சூப்பர்:-)

அப்புறம்..., இங்க என்னோட பழகற அமெரிக்கர்கள் குழந்தைகள் மேல பாசமா இருக்காங்க; எது வேணும்னு பாத்துப் பண்றாங்க... குழந்தைகள் தப்பு செய்தால் அடி விழும் (ஓபனா ஒப்புக்க மாட்டாங்க - "புறங்கையால் அடித்துத் தள்ளிடுவேன்" என்றார் என்னுடன் பணிபுரியும் நண்பர்). யுஎஸ் ஓபன் டென்னிஸ்க்கு நியுயார்க்குக்கு பெற்றோர் ரெண்டு பேரும் போன போது, பாட்டி தாத்தா வெளி மாநிலத்திலிருந்து வந்து குழந்தைகளைக் கவனிச்சிட்டாங்க... எல்லாரும் ஒரே மாதிரின்னு சொல்ல முடியாது.

வல்லிசிம்ஹன் said...

நீங்க சொல்கிறது நல்ல விஷயம் கெ.பி.

இது ஒரே ஒரு துளி தான் சம்சார சாகரத்தில். யாரையும் குற்றம் சொல்லணும்னு எழுதவில்லை.
அங்கே நாங்கள் இருக்கும்போது நடந்து நல்ல விதமாக முடிந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளணும்னு நினைத்தேன்:) நன்றிம்மா.

Unknown said...

குத்தம் கண்டுபிடிக்கணும்னு சொல்லலை, ஸாரி. நம்மூர் மாதிரி தானே இங்கியும் (விவாகரத்து விழுக்காடு தான் வேற). இங்க திருமணங்களில் 50% விவாகரத்துன்னா, மத்த 50% அனுசரிச்சுட்டுப் போற குடும்பங்கள் தானே. அதைத் தான் சொல்ல வந்தேன்...

நீங்க அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லுங்க. நான் ம் மட்டும் போட்டுக்கறேன்:-)

வல்லிசிம்ஹன் said...

ஐய்யே கெ.பி.இதில சாரி க்கு என்ன வேண்டி இருக்கு. யாருடைய கதையையோ நாம பேசறோம். அதில கருத்துச் சொல்லலைன்னால் அதில் எப்படி சுவாரஸ்யம் வரும். ஸொ நோ வொர்ரீஸ்:)))))