Blog Archive

Saturday, September 25, 2010

நீ சொல்வதை நாங்கள் கேட்கிறோம்----2

முதலில் சாண்ட்ராவின் குடும்பத்தைப் பார்க்கலாம்.


சாண்ட்ராவுக்கு வட அமெரிக்காவின் டென்னசியில் அம்மா

இருக்கிறாள். வயது 70 அப்பா ஃப்லாரிடாவில் முதியவர்களுக்கான

விடுதியில் இன்னோரு மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறார்.

சாண்ட்ராவின் அம்மா அப்பா அவளுடைய 15 ஆவது வயதில்

விவாகரத்து செய்துவிட்டு சாண்ட்ராவின் அண்ணனை

அப்பாவும்,சாண்ட்ராவை அம்மாவும் பிரித்துக் கொண்டார்கள்.

அவ்வப்போது குடும்பமாக ஒன்று சேர்ந்தாலும் சாண்ட்ரா தன் அம்மாவை மன்னிக்கவே இல்லை.
கல்லூரியை முடித்ததும் தன்னுடன் படித்த கோல் விட்மன்.
என்ற தோழனைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டாள்.


இருவருக்கும் பயணம் செய்வதில் ஆசை இருந்ததால்
விமான பைலட்டுக்கான பயிற்சியையும் கோல் எடுத்துக் கொண்டான்,.

திருமணமாகிய நான்கு ஆண்டுகளில்
துபாய் வந்துசேர்ந்தார்கள். கோல் வேலை பார்த்த கம்பெனி அவனிடம்
மிகுந்த நம்பிக்கை வந்திருந்தது,
அதனால் அவன் வேலைப் பளுவும் அதிகமாக இருந்தது.

சாண்ட்ராவும் வானொலி நிலையம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தாள்.
கெவின் பிறந்தான்,. வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றது.

கெவின் அவர்களின் அருமைச் செல்லமாக இருந்தாலும்,


அவர்கள் இருந்த இடத்தில் அவனுடைய சிநேகிதர்கள்

பெரும்பாலும் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளின் நட்பு கொஞ்சம்

தடுமாற்றத்தைத் தான் சந்தித்தது. அளவுக்கு மீறிய பணப்புழக்கம்,சாப்பாடு,

சப்தமாகப் பேசுவது என்று கெவினும் கொஞ்சம் கொஞ்சமாக மாறினான்.

இந்த நிலையில் ஈவாவும் பிறந்தாள்.

இரண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வீட்டோட இருக்கும்படி ஒரு

ஃபிலிப்பினோ பெண்ணையும் உதவிக்கு வைத்துக் கொண்டாள் சாண்ட்ரா.
அந்தப் பெண்ணும் கண்ணும் கருத்துமாக ஈவாவைப் பார்த்துக் கொண்டாள்.
வாழ்க்கை முறை எல்லாம் மாறியது. குடும்பமாக ஒன்றாக
இருப்பதே குறைந்தது.
கெவின் தனியாக உணர்ந்தான்.
சகவாசம் மாறியது. பார்ப்பத்ற்கும் பெரியவனாக இருந்ததால்
வெளியே போய் வர, மால்களில் பொழுது போக்கப்
பழகிக் கொண்டான்.
துன்புறுத்துவது என்பது உடல் பலத்தோடு வளர்ந்தது.

அது வாய்ச் சொல்லாகவோ,பலப் பரிட்சையாகவோ வெளிப்பட்டது.
அதற்கு முதல் குறி சாண்ட்ராதான்.
சாண்ட்ராவும் அவனை அடக்குவதில் காட்டிய தீவிரம் அவனிடம் பேசிப்
பார்ப்பதில் காட்டவில்லை.
இணையதளம்தான் ஒன்று இருக்கிறதே. அதில் தேடி, மகனுக்கு
மனநல மருத்துவர் தேவை என்று அவளே தீர்மானித்தாள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

17 comments:

எல் கே said...

hmmm todarnungal

துளசி கோபால் said...

சம்பவங்கள் சூடு பிடிக்குது. அப்புறம் என்னாச்சு? காத்துருக்கோம்

திவாண்ணா said...

பெண்கள் கரீர் ஐ தேர்ந்தெடுக்கறது கொஞ்சம் பிரச்சினையா இருக்குபோல இருக்கே! குழந்தைகளை உருப்படியா வளத்தா அதுவே பெரிய விஷயம் ன்னு தோணுது!

வல்லிசிம்ஹன் said...

முடிச்சுடலாம்.ரெண்டெ சம்பவம்கள் பாக்கி எல்.கே. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா துளசி,அப்புறம் எல்லா ஒழுங்கா ஆகிவிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

பெண்கள் வேலை பார்ப்பதில் தவறு இருக்காது தம்பி வாசுதேவன்.
வீட்டைப் பார்ப்பதில் ,கணவன் மனைவி இருவரும் ஒரே சீராக இருந்தால் நன்றாகத்தான் நடக்கும் என்று நினைக்கிறேன். நான் இங்கே சொல்கிற மாதிரி ,,குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டால் வம்புதான் .

Jayashree said...

குழந்தைகளை கவனிக்காம விட்டு வரது ஒருபக்கம்னா, நன்னா கவனிச்சு பாத்துண்ட பேரண்ட்ஸ்க்கும் problematic குழந்தைகள் அமைவது ஒருபக்கம் .ஆனா எதுவா இருந்தாலும் outside the square இருந்துண்டு பேசறது ஈஸி.. அதை படும் பெற்றோர்களின் நெஞ்சில் ரத்தம் வழியாதது ஒன்றுதான் குறை . இந்த ப்ரொப்ளம் மாத்திரை கொடுத்து குணபடுத்த முடியாது, தெரப்பி யோ problematic and challenging.சாண் ஏறினா முழம் சறுக்கும் ரெண்டு பார்ட்டி கிட்டையும்:((. குழந்தைகள் மனதில் empathy யை வளர்க்கணும். பெற்றொர்கள் குழந்தைகளின் நடத்தைக்கு ஒரு boundry வைத்தும், misplaced value யோட வளக்காம,குழந்தைகளுக்கு ரோல்மாடலா இருக்கறதும் உதவும்.ம்.. எல்லாம் கஷ்ட்டம் தான்!! பாவம்:(

சாந்தி மாரியப்பன் said...

பாவம்தான் :-((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\துளசி கோபால் said...

சம்பவங்கள் சூடு பிடிக்குது. அப்புறம் என்னாச்சு? காத்துருக்கோம்//
வழிமொழியறேன்..
அப்படியே பின்னூட்டங்களும் நல்லா வந்திட்டிருக்கு ..உங்க பதிலும் ஜெயஸ்ரீ யோடதும்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,கட்டாயம் கஷ்டமான விஷயம் இது. ரொம்ப நாசூக்கா கையாளணும். ரொம்ப இடத்தில இருக்கு. நம்ம குழந்தைகள் ஒரு கட்டத்தைத் தாண்டிதான் பெரியவர்கள் ஆகிறார்கள். அதுவரை சிரமம்தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜயஷ்ரீ,நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான். நாங்கள் அங்க இருந்த நாட்களில் அவளும் அந்தப் பையனும் பட்ட பாடு விவரிக்க முடியாது. அவுட்சைட் த ஸ்குவேர் என்னால் இருக்க முடியவில்லை.நானும் இன்வால்வ் ஆனதால் தான் இப்ப எழுதறேன். பிரச்ச்சினையை அழகாக அணுகி இருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கயல்.எப்படியெல்லாம் சிரமங்கள் ஆரம்பிக்கின்றன பார்த்தீர்களா. இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் சொன்னபடி கேட்டு இருக்கும்னு யாரோ சொன்னாங்க. பெண்ணோ பிள்ளையோ அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் இல்லையா.:(

Jayashree said...

என் நிலமை எப்பவுமே inside the square தான். அதுல எங்க பாடு மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் உதை கதை .ஒண்ணை பணிய வைக்க முடியாது . பணிய வைத்தது ப்ரொஜெக்ட் பண்ண ஆரம்பிக்கும். எமொஷன், பயஸ், கௌன்டெர் ட்ரான்ஸ்ஃபெரென்ஸ் இல்லாம நடக்கறது எட்ஜ் ஆஃப் தெ ப்லேட் ல நடக்கறதுக்கு சமானம். it all comes with the part of the trade. சில வழக்குகள் சட்டையை கழட்டி வைக்கறமாதிரி வைக்க முடியாது . திணறியிருக்கேன்.

Jayashree said...

Techincally யாருக்கு ப்ரொப்லமோ அந்த நபர், அவரால் பாதிக்கப்பட்ட குடும்பம், mostly parents caregiversor foster parents பிறகு
தெரபிஸ்ட்/ கிபி/ சைகியாட்றிஸ்ட்
இவர்களை inside the square நு கொள்ளறது வழக்கம். ஏன்னா வெளியதெரியறதுக்கும் மேல complex history and details இவாளுக்குத்தான் தெரியும் .at the end of the day இவா மூணு பேரும் தான் deep pool of mud la இருப்பா:((( . CLIENT CONFEDENTIALITY னால அந்த விஷயங்கள் அதுல INVOLED PSYCHODYNAMICS மற்றபடி உதவற வெளிமனுஷாளுக்கு தெரியற வாய்ப்பு கம்மி . நான் அந்த அர்த்தத்தில் எழுதினேன் வல்லியம்மா.

Unknown said...

//\துளசி கோபால் said...

சம்பவங்கள் சூடு பிடிக்குது. அப்புறம் என்னாச்சு? காத்துருக்கோம்// நானும் வழிமொழிகிறேன்.

அப்பா, அம்மா ரெண்டு பேருமே குழந்தையோட வாழ்க்கைக்கு தூண். வெறும அம்மா வீட்டுல இருந்து குழந்தையை 100% கவனிச்சாலும், அப்பாவுடைய கவனிப்பும் தேவைப் படுகிறது. என் பார்த்த வரையில், அப்பாவோட கவனிப்போட வளரும் குழந்தைகள் உலகத்தைப் பத்தின உண்மையான பார்வையோட வளர்றாங்க.

குழந்தைகளை உருப்படியா வளக்கிற கடமை பெற்றோர் ரெண்டு பேருக்கும் உண்டு.

Unknown said...

ஃபாலோஅப்க்கு...

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஜயஷ்ரீ. உங்கள் தொழில் வழி அனுபவங்கள் எப்பவும் மனதப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் சிரமம்.உங்களால் நலமடைந்த குழந்தைகள் நன்றாக இருக்கட்டும்.