Blog Archive

Friday, September 17, 2010

பழைய டிரன்க் பெட்டி 1

இது எங்க மாமியாரின் பெட்டி யின் மாடல்
இது எங்கள் திருமண அழைப்பிதழ்
இது அம்மாவுக்கு அவங்க வீட்டில் கொடுத்த மரப் பெட்டியின் மாடல்.
***********************************************************************************************
எப்பவோ ஆரம்பித்த பதிவை இப்பதான்   எழுத தொடர்கிறேன்.
என் திருமணம் நிச்சயிக்கப் பட்ட உடனே ,நகை லிஸ்ட்,பாத்திரங்கள் வெள்ளிவகை,பித்தளை வகை ,ஸ்டெயின்லஸ்
ஸ்டீல் என்றுநீண்ட லிஸ்ட்
நகைகள் பாட்டியின் பழைய செயின் நெக்லஸ் ஆகியது.

என் அம்மாவின் மாங்காய் மாலையை
மாற்றி தோடுகளாக என் மறுத்தலையும் மீறி என் காதுகளை வந்து அடைந்து விட்டன.

அப்போது திரு.ராமனாதன் நகைக் கடை இருந்தது.
இப்பவும் இருக்கலாம்.

எப்படியோ லிஸ்ட் போட்டு நகைப் பட்டியலை
அன்பு அப்பா எழுதிவைத்தார்.
அடுத்தது பித்தளை வெங்கலப் பாத்திரங்கள்

ஒரு சின்னக் குடம்,வெங்கலப் பானை,சிப்பல் தட்டு, இரண்டு வெண்கலவிளக்குகள், கார்த்திகை அகல்கள்,சாதக் கரண்டிகள், குழிக் கரண்டிகள்,
ஊஞ்சல் சுற்றிவர தட்டும், சின்ன செம்புகளும்,ஒரு தாம்பாளமும்

(மாப்பிள்ளைக்குப் பாத பூஜை செய்ய.)

வெள்ளியில் சாப்பிடும் தட்டு,நான்கு காப்பி சாப்பிடும் டபரா தம்ப்ளர்கள்,
மன்னார்குடி சொம்பும்,குளபாத்திரமும்.
கற்பூரத்தட்டு,சந்தனக் கிண்ணம்,குங்குமச் சிமிழ்,கூஜா,பன்னீர் சொம்பு
மாப்பிள்ளைக்கு மையிட மயில் வடிவில் மைடப்பா.

அடுத்தாப்பில எவர்சில்வர் பாத்திரங்கள்.
அரிசி,பருப்பு வகையறா கொட்டி வைக்க பெரிய டப்பாக்கள்.

அஞ்சறைப் பெட்டி,
சப்பாத்தி போட்டு வைக்க வட்ட டப்பா.
பால் சொம்பு.
ஒரு கிண்டி(சாஸ்திரமாம்)

இரண்டு பேருக்கு வேண்டிய காப்பி ஃபில்டர், காப்பிப் பாத்திரங்கள்,
இப்படி நீண்டு கொண்டே போயிற்று.
தயிர் உரை குத்த கல்கத்தா மங்கு எனப்படும் பீங்கான்

பெரிய கிண்ணங்கள்.(என்ன ஆச்சு அதற்கெல்லாம்)?

சரி இதை எல்லாம் பத்திரமாக மாமியார் வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு பெட்டி வேண்டாமா.

அதை அடுத்த பதிவில பார்க்கலாம்.:)







 





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

37 comments:

துளசி கோபால் said...

WOW......

Super list !

I have seen that kind of wooden box at Chary Mama's house when they were in Poona

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகு பெட்டி ...
மலரும் நினைவுகள் ;)

Anonymous said...

//தயிர் உரை குத்த கல்கத்தா மங்கு எனப்படும் பீங்கான்//
எங்க வீட்ல கூட இருந்தது. மன்னார்குடி சொம்பு எப்படி இருக்கும். அடுத்த பதிவுல அதையும் போட்டோ எடுத்து போடுங்க

Jayashree said...

W.. O..W !! திரட்டிப்பால் வைக்க வெள்ளிமுந்த்ரி கிண்ணம்னு 10/15செ. மீ உயர சம்புடம்??? அக்ஷதை கிண்ணம்????
சாமான் போட்டு வைக்கற ஒண்ணுக்குள்ள ஒண்ணு போறமாதிரி டப்பா? எங்க வழக்கத்தில் சுத்தோ சித்தோ ஏதோ ஒரு படி!:)) சுத்த ஒருமைசூர் போணி யோ என்னமோ ஒண்ணு உண்டு. உங்களுக்கு ??? புடவை லிஸ்ட் , கலர், பார்டெர் எல்லாம் பாக்க ஆசையா இருக்கு.included ஆ? வருமா?:))பொட்டி அட்டஹாஸம்.

Jayashree said...

W.. O..W !! திரட்டிப்பால் வைக்க வெள்ளிமுந்த்ரி கிண்ணம்னு 10/15செ. மீ உயர சம்புடம்??? அக்ஷதை கிண்ணம்????
சாமான் போட்டு வைக்கற ஒண்ணுக்குள்ள ஒண்ணு போறமாதிரி டப்பா? எங்க வழக்கத்தில் சுத்தோ சித்தோ ஏதோ ஒரு படி!:)) சுத்த ஒருமைசூர் போணி யோ என்னமோ ஒண்ணு உண்டு. உங்களுக்கு ??? புடவை லிஸ்ட் , கலர், பார்டெர் எல்லாம் பாக்க ஆசையா இருக்கு.included ஆ? வருமா?:))பொட்டி அட்டஹாஸம்.

ராமலக்ஷ்மி said...

ஆகா பெட்டியைத் திறந்து விட்டீர்களா? எட்டிப் பார்க்க இதோ வந்து விட்டோம். தொடருங்கள்:)!

மரப் பெட்டி மிக அழகு.

வல்லிசிம்ஹன் said...

இன்னும் நிறைய பொருட்களை விட்டு விட்டேன் துளசி.சின்னஞ்சிறு குடித்தனத்துக்கு வேணும் என்கிற இரண்டு வகை (நல்லெண்ணெய், தேங்காய் எண்ணேய்)எண்ணெய்த்
தூக்குகளைக் கூட இப்போதான் கொடுத்தேன். சாரி மாமா வீட்டில் இன்னும் இருக்கிறதா அந்தப் பெட்டி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கயல்முத்து. மரப் பெட்டி இன்னும் இருக்கிறது. அதைச் சரிசெய்யணும். இன்னும் அதில் போட்டு வைத்த புகைப்படங்களையும் புதுப்பிக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா அம்மிணி. மன்னார்குடி சொம்பு ஒரு வகை. நெல்லைப் பக்கம் சொம்பு ஒரு வகை.
படம் கிடைக்கும் அடுத்த பதிவில் பதிகிறேன்:)
நன்றிம்மா.

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு .. சீர் பாத்திர ஃபோட்டோ எங்கே..:))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ.பூகம்ப அதிர்வுகள் எல்லாம் நின்றதா. நிஜமாகவேக் கவலையாக இருந்தது.
நீங்க சொல்கிறதெல்லாம் உண்டு. திரட்டிப்பால் கிண்ணம், பால் குழம்பு வைக்கும் சம்புடம்,சந்தனக் கிண்ணம், மாம்பழ சொம்பு எல்லாம்தான்.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.
இளமைக் காலம் இனிமைதானே. வேற எந்த நினைவுகளும் இந்தப் பெட்டியைப் பொறுத்தவரை நாட் அலவ்ட்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தேன்.
சீர் வரிசைப் ஃபோட்டோவை ஆல்பத்தில தேடுகிறேன்.ரொம்பப் பழசாக இருக்கிறது. வருடங்கள் ஓடிவிட்டன இல்லையா. நன்றிம்மா. கூகிள் ஆண்டவனைக் கேக்கறேன்:)

வல்லிசிம்ஹன் said...

ஊஞ்சலுக்கு மைசூர்ப் போணியும்,அதில விளக்கும், பித்தளை சொம்பில தண்ணீர் எடுத்துவருவதும் தான் வழக்கம் இல்லையா ஜயஷ்ரீ.

Jayashree said...

நம்ப பூமாக்கு தாலாட்டணும்னு ஆசையா!? அவ எங்க வஸந்தா பொண்ணு தூளி ஆட்டறமாதிறீ ஆட்டறாளா? அது கிடந்து எல்லாரையும் அலற வச்சுடறா:))அவ ஆட்டற ஆட்டத்துல!!:((( அவ மூச்சு கூட ஒரு தினுசான சத்தமா?!! தூக்கத்துல எழுந்தா அலற வைக்கறது!cardiology full !!:((அவ கொஞ்சல்ல! இன்னும் நின்ன பாடில்லை வல்லியம்மா. ரெண்டு நாளா ரொம்ப நிறயா.நேத்து ராத்திரி மட்டும் 9 கிட்டதட்ட 4 - 4.4 ரிக்ட்டர்:((((((( இப்ப ஒண்ணு வந்துட்டு போச்சு. ah well life goes on .
ஓ !!அது ஊஞ்சலுக்கா! ஆமாம் அதுதான்.

மாதேவி said...

இனிய பொக்கிசங்கள்.:)

தொடருங்கள் காண ஆவலுடன்...

திவாண்ணா said...

எவ்வளோ நேர்த்தியா இருக்கு பெட்டி! இப்பல்லாம் அது செய்ய ஆளிருக்கான்னு சந்தேகம்!

பூமா தாலாட்டு பழகியே போயிடும் போல இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜயஷ்ரீ,
அந்த ஊருக்கே திருஷ்டி பட்டுடுத்தோ என்னவோ. தைரியமா இருங்க. பூமாதேவிக்கே உடம்பு வலிக்காதோ. அவள் குழந்தைகளை இப்படி புரட்டுவதில் அவளுக்கு சந்தோஷம் இருக்க முடியுமா. பகவான் எப்பவும் உங்களுடன் இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி.
பழைய நினைவுகளை அலசி முக்கியமானதைத் தருகிறேன் அம்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன்.
அம்மா(மாமியாரின் காஷ் பாக்ஸ் ஒண்ணு இருக்கும். திடமென்றால் அதைத்தான் சொல்லணும். என் அம்மா வீடு கேரளா பார்டர் இல்லையா. அங்கேயிருந்து செய்து வரும் மரப் பெட்டிகள் அப்ப வாங்கியிருப்பார்கள்.
இப்ப வர பொட்டிகளை என்ன சொல்லறது:(

Unknown said...

பழைய டிரன்க் பெட்டியின் நினைவுகள் நன்றாக உள்ளது வல்லிம்மா:))))

Geetha Sambasivam said...

ஓ !!அது ஊஞ்சலுக்கா! ஆமாம் அதுதான்//

பச்சைப்பிடி சுத்தறதுனு கலர் கலரா, சாத உருண்டைகள் மஞ்சள் சிவப்பிலே பிடிச்சு திருஷ்டி கழிச்சுட்டுச் சுத்துவாங்க இல்லை, அதுக்குத் தான் விளக்கை உள்ளே வைக்க மைசூர் போசினு சொல்லுவாங்களே அதுவும், அரிக்கும் சட்டியும், தாம்பாளம், விளக்கு எல்லாமும் உண்டு! பெண் வீட்டுப்பக்கம் 5, பிள்ளை வீட்டிலே 5, ஒன்பதுனு நேரத்த்துக்கு ஏற்றாற்போல் கூடும், குறையும்

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுமதி.
முடிந்தவரை கிடைத்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.நன்றி.

வல்லிசிம்ஹன் said...

கீதா, நம்ம வீட்ல அடுத்த கல்யாணம் வர பத்துவருஷமாவது ஆகும். அப்போ உங்களை நாலு நாள் முன்னாடியே வந்து இருந்து எல்லாத்தையும் விதரணையா நடத்திக் கொடுக்கணும்.
இவ்வளவு விஷயங்கள் தெரிந்தவர் என் தோழி என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்,

Jayashree said...

பெண் வீட்டுப்பக்கம் 5, பிள்ளை வீட்டிலே 5, ஒன்பதுனு "Nrs Shivam !!?? நான் தான் கணக்குல குண்டுனு நெனைச்சேன்:))))

Geetha Sambasivam said...

grrrrrஜெயஸ்ரீ, 5+5 9 என்ற கணக்கில் சொல்லலை, குறைந்த பக்ஷமாய் 5 பேரில் ஆரம்பித்துச் சில வீடுகளில் நெருங்கிய உறவினர் நிறைய இருக்கும் பட்சத்தில் ஒன்பது பேர் சுற்றுவது வரை போய் முடியும். பெண் வீட்டுப்பக்கம் ஒன்பது, பிள்ளை வீட்டுப்பக்கம் ஒன்பது என்று சுற்றி முடியறதுக்குள்ளே நேரமும் ஆகும். அந்தக் கணக்கில் சொன்னேன். ரேவதிக்குப் புரிஞ்சதுனு நினைக்கிறேன். மற்றபடி கணக்கில் நான் பாரதி வம்சம் தான்! கணக்கு மணக்கு எனக்கு ஆமணக்கு! :)))))))))))))))

ஹுஸைனம்மா said...

சுவாரசியமான புது விஷயங்கள் - படத்துடன் இருந்தால் இன்னும் புரிந்து ரசிக்க ஏதுவாக இருக்கும்.

அப்புறம், பூகம்பம் - பூமாவின் தாலாட்டு & மற்ற உரையாடல்கள் சுவை!! (சின்ன வயசிலயும் பெரியவங்ககிட்ட உக்காந்து, புரிஞ்சும் புரியாமையா அவங்க பேச்சைக் கேக்கீற பழக்கம், ரிபீட்டிங்க்!! )

;-)))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா,
ஜயஷ்ரீக்கு பூமி ஆடறதில கணக்கு விட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்:)
இந்தப்பக்கம் அஞ்சு,ஏழு,ஒன்பதுன்னு நம் வீட்டுக்குப் பெண் வரும்போது பிடி சுத்தறதும்,உன்னைக் கூப்பிட்டார்கள் என்னைக் கூப்பிடலை வம்பு வேண்டாம்கறத்துக்காகத்தானே:) அதே போல ஊஞ்சல் போதும் அதே கணக்குத்தான்.

Geetha Sambasivam said...

ஜயஷ்ரீக்கு பூமி ஆடறதில கணக்கு விட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்:)//

ஆமா இல்ல???? அதை நினைச்சா ரொம்பக் கஷ்டமாத் தான் இருக்கு. சீக்கிரம் சரியாகி பூமா மனம் சமாதானம் அடையப்பிரார்த்திப்போம்.

ah well life goes on//

இந்த மனோதிடம் எப்போதும் இருக்கவும் பிரார்த்திப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா,எல்லா வீட்லயும் இது நடக்கற விஷயம் தானே:)
அதுவும் பாட்டிகள் ஒண்ணு சேர்ந்தால் பாதிவிஷயம் புரியாவிட்டாலும் கூடவே சிரிக்கறதும் வழக்கமே. அப்புறமே சின்னப் பசங்களா ஓடுங்க வெளில போங்கன்னு துறத்துவதும் வழக்கம்.:)
இங்கே ஜயஷ்ரீ, நியூசிலாண்ட் பூகம்பத்தைக் கவிதையா பூமாதேவி தாலாட்டறதாகச் சொல்றாங்க:) அவ்வளவுதான். இங்க திருமணத்துக்கு முன்னால் ஊஞ்சலில் உட்கார வைத்து பெண்ணையும் மாப்பிள்ளைக்கும் பாலும் பழமும் கொடுத்து,வீட்டுப் பெண்கள் அவர்களுக்கு இந்தஉபசாரம் செய்வார்கள்.பிறகுதான் திருமணம்.
வீடியோ கிடைத்தால் திரு.ரஜினி சார் பெண்கல்யாணத்தப் பாருங்கள்:)

Geetha Sambasivam said...

வீடியோ கிடைத்தால் திரு.ரஜினி சார் பெண்கல்யாணத்தப் பாருங்கள்:) //

ஹிஹிஹி, ஓடிடலாம் போலிருக்கே! விஜய்??? தெரியலை, ஏதோ ஒரு சானலில் திரும்பத்திரும்பத்திரும்பதிரும்பத்திரும்ப அதே தான்! அலுத்துப் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

வல்லிசிம்ஹன் said...

விஜயே தான். நானே இதுவரை மூணு தடவைப் பார்த்துட்டேன். பார்க்க ஆரம்பித்து சானலை மாற்றிவிட்டேன்:) ஒரேயடியா பாயாசமா இருந்தாலும் சாப்பிடவா முடியும்:) Geetha.

Indira Ravi said...

முதல் தடவை உங்களது பிளாக் படித்தேன் - அழகு !
உங்கள் பழய அற்புதமான பெட்டி மற்றும் கல்யாண invitation சூப்பர் !

கீப் அப் த குட் ஓர்க்!

அன்புடன் இந்திரா

வல்லிசிம்ஹன் said...

வரணும் இந்திரா ரவி.

பதிவுலகத்துக்கும் நல் வரவு.
பதிவை ரசித்ததற்கும்
நன்றீமா.
சீக்கிரம் பதிவுகளை ஆரம்பியுங்கள்.

அப்பாதுரை said...

எல்லாத்தையும் ஞாபகம் வச்சுருக்கீங்களே? ஆச்சரியம் தான்.
Saving your wedding invitation - very romantic.

இந்த மாதிரி மரப்பெட்டி என் பாட்டி கிராமத்தில் பார்த்திருக்கிறேன்; பெட்டி மூடியைத் திறக்கவே தனியா சாப்பிடணும்.
லிஸ்ட்லே சுதிப்பெட்டி காணோமே? பாட்டு தெரியுமோ தெரியாதோ சுதிப்பெட்டி சீர் லிஸ்ட்ல இருக்கும்னு தேவன் கதைகள்ல படிச்சிருக்கேன். என் சொந்தக்காரர் ஒருத்தருக்குத் சீரா தரப்பட்ட சுதிப்பெட்டி எங்க வீட்டுல வந்து சேந்த கதையும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணும் துரை.அ டச் ஆஃப் ரொமான்ஸ்னு பெயர் வச்சிடலாமா:) இப்ப ட்ரங்க்ப் பெட்டியை த் திறந்ததும் தான் நான் எதையெல்லாம் தொலைத்திருக்கிறேன்னு நினைவு வருகிறது. நினைவு நல்லது வேண்டும் என்பதற்காகவும் இந்தப் பதிவு பிரயோஜனப்படும்னு நினைக்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

ஸ்ருதிப் பெட்டியெல்லாம் வேண்டாம்னு எங்கள் சிங்கம் சொல்லிவிட்டார்.:)
வாய்ப்பாட்டு என்றால் ஹிந்தியும் ,பாட் பூன்,ராஜர் விட்டெக்கர், வில்லி நெல்சன்,
எட்டிகால்வெர்ட்(ட்ரம்பெட்) இப்படிப் போகும் அவரது ஈடுபாடு.
நானும் மாறிவிட்டேன்..