About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Sunday, August 29, 2010

குழலின் குறும்புமஞ்சுக்கொம்மா !
என்பா..
அங்க தண்ணி கொட்டிட்டேன் மன்சிக்கொமா
என்னடா இது என்ன சொல்ற. சாரி சொல்றேன்மா.

''மஞ்சுகோ'' அப்டின்னால்?
அவசரமா ,மன்னிச்சுகொனு   சொல்றேன்.!!ஒ!!
பரவாயில்லை. சின்ன சின்ன சமாசாரத்துக்கு மன்சிகோ வேணாம்:)
ஒகே மா  டன்!!

மைக்கேல்ஸ்   கடை. காய்கறி எல்லாம் வாங்கியாச்சு. சார் பொறுமையா ஒவ்வொரு ஷேல்பிலிருந்தும்   எட்டினதைஎல்லாம்  எடுத்து அம்மாவிடம் கொடுக்குறார். அம்மாவும் அதைத் திருப்பி வைத்த படி
பணம் செலுத்தும்   இடத்துக்கு  வந்தது,
அங்க இருக்கும் சேல்ஸ் பெண்,  இவன்  செய்யும் அட்டகாசத்தைக் கண்டு ரசித்தவள் ,
ஒ சோ யு ஆர் கிருஷ்ணா என்றிருக்கிறாள்.  என் பெண்ணிடம்
 யு ஹேவ் ஒன் மோர் ?

என் பெண்ணும்;''; எஸ் ஐ ஹாவ்  2 சன்ஸ்'' என்று சொல்லி இருக்கிறாள்.
பின்னாலயே   இந்த ச் சின்னப் பெரியவர் சொல்கிறார்,

ஈவன் மை அப்பா  ஹாஸ்  2  சன்ஸ்!!!
:))
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
Posted by Picasa

22 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

அமைதிச்சாரல் said...

குறும்பு :-)))

ஹுஸைனம்மா said...

//மஞ்சுக்கொம்மா//

நான்கூட ஏதோ மஞ்சுவின் அம்மா என்று நினைத்துவிட்டேன்!! ஸ்வீட் மன்னிப்பு!!

அடடே, அப்பாவுக்கும் அம்மாவைப் போல ரெண்டு மக்களாமா - நல்ல கண்டுபிடிப்பு!! :-)))))

ஸ்ரீராம். said...

:)))))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முத்து,எனக்கு இதைக் கேட்டதிலிருந்து சிரிப்புத் தாங்கவில்லை.
அவனிடமே ''மஞ்சுகோப்பா'' என்றேன்.மன்சிக்க முடியாதுன்னுட்டான்:)தன் மழலையைக் கேலி செய்கிறா பாட்டின்னு குழந்தைக்குத் தோன்றிவிட்டது.!!

வல்லிசிம்ஹன் said...

படு சாமர்த்தியம் சாரல், இந்தக் காலத்துப் பசங்க. நாம பக்கத்தில இருந்து பார்க்க முடியலையே ன்னு இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
குழந்தைகள் மழலை அமிர்தம் தான். அவர்கள் எண்ணங்களோ எங்க பாய்கிறதுன்னும் சொல்ல முடியவில்லை.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஹுசைனம்மா.
எதிர்பாராமல் வந்து விழும் முத்துகளைப் பொறுக்கி வைக்கச் சொல்லி இருக்கிறேன் பெண்ணிடம்.
அப்பப்போ இங்க பதிந்து விடணும். என் குழந்தைகள் செய்த கலாட்டா நினைவிருக்கிறது. அவர்களின் மழலையை எல்லாம் மறந்துவிட்டேன். ஒரு வேளை என் அம்மாவிற்கு நினைவிருந்திருக்கலாம்!!

சின்ன அம்மிணி said...

hahaa
:)

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ரொம்ப நல்லா இருக்கு

கோமதி அரசு said...

திகட்டாத குழலின் மழலை குறும்பு அருமை.

வல்லிசிம்ஹன் said...

வாங்க அம்மிணி. ரசிச்சீங்களா;)

வல்லிசிம்ஹன் said...

வாங்க, ராமமூர்த்தி.
முதல் விசிட்:) இன்னும் அவன் சொல்வதை எல்லாம் எழுத நினைக்கிறேன். மறந்துவிடுகிறது:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சின்ன அம்மிணி. ரசிப்புக்கு நன்றி:)

Jaleela Kamal said...

ஹா ஹா மஞ்சுக்கோமா

துளசி கோபால் said...

//
ஈவன் மை அப்பா ஹாஸ் 2 சன்ஸ்!!!//


ha ha ha ha:-)))))))))))))))

Sumathi said...

நல்லாருக்கு வல்லிம்மா:)))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் தங்கச்சி கோமதி.நம் குழந்தைகள் குறும்பு செய்யும்போது வந்த ஆதங்கம் இப்பொழுது இவர்களைப் பார்க்கும்போது ரசிக்கத் தோன்றுகிறது. நாம் பாட்டிகள் எல்லாம் சேர்ந்து சங்கம் வைத்துவிடலாமா:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி,,
இன்னும் அவன் செய்கிற, பேசுகிற எல்லாத்தையும் குறித்து வைக்கச் சொல்கிறேன். அவளுக்கு அலுப்பா கூடப் போய்விடும்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஜலீலா. களங்கமில்லாத குழந்தைகள் சாம்ராஜ்யம்,நாமும் மெம்பராகிவிடத்தோன்றுகிறது.
நீ ப்ளேன்ல ஏறினா இங்க வந்துடலாம்னு வேற அழைப்பு விடுக்கிறான்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா. சுமதி.

நானானி said...

//ஈவன் மை அப்பா ஹாஸ் 2 சன்ஸ்!!!//

யப்பா!!!என்னவொரு சிந்தனை!!யாருக்குக்கும் தோணாதது. ரொம்ப ரசித்தேன்.