About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, July 28, 2010

கண்ணனின் கனியமுது
பாபூ,
என்னம்மா'
எங்கடா  சின்னவன் சத்தமே காணோமே. கொஞ்சம் என்ன செய்கிறான்னு  பாரு ராஜா.
இந்தச் செடியை மட்டும்  உரம் போட்டுட்டு  வந்துடறேன் ப்ளீஸ்?
அவதார் கார்ட்டூனில் மூழ்கி இருக்கும் பெரியவன்,
சிறிதே அலுத்துக் கொண்டு


''கிஷா  என்ன செய்யற. ரொம்ப சைலண்டா இருக்கியே''
ஐ யாம் பெயிண்டிங் அண்ணா''

ஓ  கார்ப்பெட்ல  ஒண்ணும் கொட்டிடாதே, ஓகே.?
சரிண்ணா''

பெண் தோட்டத்துக் கதவை  சார்த்திவிட்டு உள்ளே நுழையும் போது  மாவடு வாசனை வருகிறது.


பாபு  'பாட்டி  மாவடு' எடுத்துக் கொண்டாயா. ஒரே வாசனையா வருதே.
இல்லம்மா இட் இஸ் டூ ஏர்ளீ   டு தின்க்  அபௌட்  ஃபூட்.
பின்ன  என்ன  வாசனை. சின்னவன் எங்க.

இங்க இருக்கேம்மா, ஸ்டடி ரூம்ல''
உடம்பில் ஏதோ அச்சம் தோன்ற அம்மாக்காரி அங்க போனால்....

கீழே தோட்டத்தில்   போட வேண்டிய  மரத் தூள்களால்
ஒரு படம் உருவாகிக் கொண்டிருந்தது.
நடுவில் மரங்களாக  சின்னசின்ன கம்புகள்.
மாமரம்  மா,சென்னை மாதிரி.....

நான்கு  மாவடுகள்   ஊறுகாய்  பாட்டிலிலிருந்து எடுக்கப்பட்டது.
அதாவது பரவாயில்லை.
ரியல்  ஷோவாம்.! ஊறுகாய்ச் சாறு  ஒரு சின்ன   கப்பில் எடுத்து
அந்த மரக் கம்புகள்,  தூள்கள்  எல்லாவற்றிலும்  கொட்டி வைத்திருக்கிறான்.

நீங்கள் கேட்கலாம். குழந்தையின்   கைக்கெட்டும் உயரத்தில் 
ஊறுகாய் ஏன் வைக்கணும்?

ரொம்ப்ப   உயரத்தில் வைத்தாலும்   நாற்காலியைப் போட்டு
 அலமாரியைத்   திறக்கத் தெரியுமே  எங்களுக்கு:)

இது கூடப் பரவாயில்லை.
கடிந்து கொண்ட அம்மாவின் கோபத்தைப் பற்றி சிறிதும் லட்சியமில்லை
அந்தப் பிள்ளைக்கு.
மூலையில் சுவரைப் பார்த்து  உட்கார வைத்த  அம்மாவைத் திரும்பி பார்த்து  இப்படிச் சொன்னானாம்.

''அதான்  வொர்க் ஓவராயிடுத்தேம்மா. இப்ப ஏன்   கோவிச்சுக்கறே!!! ''
முதல்லியே  சொல்லி இருக்கலாம் இல்ல.


எல்லோரும் வாழ வேண்டும்.

Posted by Picasa

16 comments:

கீதா சாம்பசிவம் said...

பொண்ணு வந்திருக்காளா?? பேரன் விஷமம் பிரமாதம்! நல்லா இருக்கு வல்லி. :))))))))))))))) எங்க அப்பு உம்மாச்சி கிட்டே ஐ ப்ராமிஸ்னு சொல்றதுக்குப் பதிலா ஐ தாமஸ்னு சொல்லும். அதுவும் அவசரமாக் கோலத்தை அழிச்சுண்டே, இன்னும் அந்தக் காட்சி கண்ணிலேயே இருக்கு! திரும்பத் திரும்ப அதே தான் நினைப்பு! :))))))))))

திவா said...

என்ன ஒரு கற்பனை! அக்கிரமமா இல்லே? அந்த குழந்தைய பிடிச்சு ரெண்டு முத்தம் கொடுங்க! அடுத்த தரம் என்னயும் கூப்பிடுடான்னு சொல்லச் சொல்லுங்க!

வல்லிசிம்ஹன் said...

கீதா, இது தொலைபேசியில கேட்ட குறும்பு.:)
பெயர் வச்ச போதே யோசித்திருக்கணும்னு சொல்கிறாள் பெண்.
மாமரம் வாசனை வரணுமாம்!!

வல்லிசிம்ஹன் said...

இல்லையா பின்ன:)
தம்பி வாசுதேவன், இது கூடப் பரவாயில்லை.
அம்மா, டாய்லெட்ல இருக்கிற டிஷ்யூவெல்லாம் எடுத்துடு. நான் பாத்ரூம் யூஸ் பண்ணப் போறேன். அப்புறம் பேப்பரைக் கிழிச்சுட்டேன்னு சொல்லாதே என்கிறானாம்:)
மார்கழியில் அவர்கள் இங்க வந்தால் உங்களிடம் சொல்கிறேன்.!!

அமைதிச்சாரல் said...

//முதல்லியே சொல்லி இருக்கலாம் இல்ல//

ஆமாமா.. முதல்லியே சொல்லவேண்டாமோ :-))))

Sumathi said...

அதான் ஒர்க் ஒவராயிடிச்சே இனி ஏன் கோவிக்கனும் இது ரொம்ப நல்லா இருக்கு வல்லிம்மா:))))

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல்:)
கொஞ்சம் கூட அம்மாகிட்டப் பயம் இல்லப்பா அந்தப் பிள்ளைக்கு!!!. அப்பப்ப வந்து யூ ஆர் மை பெஸ்ட் பியூட்டிஃபுல் ஃப்ரண்ட் அப்டீனு வேற டயலாக்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சுமதி. இப்ப வர குழந்தைகளோட நடவடிக்கை படு வேகம்.

அப்பாவி தங்கமணி said...

மழலை குறும்பு அழகா இருக்கு... என்னோட அவஸ்தை உனக்கு அழகான்னு கோச்சுக்கரீங்களோ... ஹா ஹா ஹா

அமைதிச்சாரல் said...

தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன் வல்லிம்மா..

http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_28.html

வல்லிசிம்ஹன் said...

எனக்கென்ன அவஸ்தை தங்கமணி. அதுக்கெல்லாம் பொண்ணு தான் கொடுத்துவச்சிருக்கா:)
ஒவ்வொரு தடவையும் சுத்தம் செய்யறதுக்குள்ள தாவு தீர்ந்துடும். அதுவும் மரத்தினாலான தரை. ஸ்டெயினாயிடுச்சுன்னா அசிங்கமாத் தெரியும். பாவம் என் பொண்ணு:))
அவன் குறும்பைப் பார்த்தே ஒரு வருஷமாச்சு. சூறாவளிதான்.!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் நன்றிம்மா. வந்து பார்க்கிறேன்.

சந்தனமுல்லை said...

சோ ஸ்வீட்! செம சுட்டித்தனம்...அழகா எழுதியிருக்கீங்க நேர்லே பார்த்து நாங்களும் ரசிக்கற மாதிரி!! :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு முல்லை நலமா.
தினசரி ஏதாவது வம்பு செய்தி வந்து கொண்டிருக்கிறது.:) எல்லாவற்றையும் சேமிக்க ஆசை. மறந்து போய்விடுகிறது. குழந்தைகள் உலகம் தான் எவ்வளவு அருமை!

ஸ்ரீராம். said...

மிக சுவாரஸ்யமான விஷமங்கள். கோபித்துக் கொள்ள முடியுமா என்ன?

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா ஸ்ரீராம்.கோபம் வந்தாலும்,முடியாது:)
அடுத்த விஷமத்துக்குத் தாவி விடுவான்.
அண்ணா கூட இருந்தா
கவலையில்லை.:)