About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, July 24, 2010

ஆலம்விழுதுகள் போல்....முடிவுரைவயதான பெற்றோர்களின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை


இடம்,பெயர்,சூழ்நிலை எல்லாம் மாற்றி

ஒரு தொடர் பதிவு போட்டிருந்தேன்.

எப்பவும் வாழ்க்கையின் நிதர்சனங்கள் ரசிக்கக் கூடியதாக இல்லை.அதுவும் அந்தப் பதிவு இன்றைய சில இளம்பெண்களின் மனநிலையைப்

பிரதிபலிப்பதாக அமைந்துவிட்டது.

உண்மையாகவே இருந்தாலும், தங்கள் தரப்பிலும்

நியாயம் இருப்பதை எடுத்துக் காட்டி ஒருவர்

பெண்ணா,ஆணா தெரியவில்லை பின்னூட்டமிட்டிருந்தார்.நான் மறுக்கவில்லை.

அவரவருடைய லிமிடேஷன்ஸ் என்று ஒன்று இருக்கிறது. ஒருவருக்கும்

தங்கள் வாழ்க்கையில் யாரும் வந்து தினசரி ரிதம் கலைவதை விரும்புவதில்லை.அவர்கள் வயதானவர்களாக இருக்கும் போது வேண்டாத பயம்,

கற்பனை எல்லாம் வந்துவிடுகிறது.

நம் சுதந்திரம் சில நாட்களுக்காவது பறி போகிறது என்பதைப்

பொறுத்துக் கொள்ள இயலவில்லை.இந்த நடந்த சம்பவம் ஒரு பெரிய வீட்டில்,சர்வ சௌகரியங்களும்

இருக்கும் இடத்தில் நடந்தது.கொஞ்சம் அநுசரணை,அன்பு,உபசாரம் இவ்வளவே வந்தவர்கள் எதிர்பார்த்தது.

இந்த சம்பவம் முடிந்து அவர்கள் திரும்பி அவரவர்

இருக்கும் தேசத்திற்கும் போயாச்சு.ஆனால் இனி இப்படித்தான் இருக்கும் என்றும் புரிகிறது.வேறுயாரையாவது இந்தப் பதிவு வருத்தியிருந்தால்

அவர்கள் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.எல்லோரும் நல்லவரே. அவரவர் எல்லையில் நாம் நுழையாமல் இருந்தால்.:)

அன்புடன்,

வல்லிமா.
எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

14 comments:

துளசி கோபால் said...

125

துளசி கோபால் said...

//எல்லோரும் நல்லவரே. அவரவர் எல்லையில் நாம் நுழையாமல் இருந்தால்.:)//

இதுதான் உண்மை. மூக்கை நுழைக்காமல் இருப்பது உத்தமம்.

ஒவ்வொருத்தருக்கும் அவரவர் வாழ்க்கை தனி.

கூட்டுக்குடும்பங்கள் போய்விட்ட நிலையில் இதை எதிர்பார்ப்பதாலேயே நமக்குப் பல மனக்கஷ்டங்கள். இல்லையா வல்லி?

வல்லிசிம்ஹன் said...

கூட்டுக் குடும்பத்தின் சௌகரியத்தை உத்தெசித்தே அல்லவா.
குழந்தைக்கு ஒரு பாட்டி. பார்த்துக்கொள்ள தாத்தா, விளையாட இடம். இவர்கள் வெளியே போனால் வீட்டைப் பற்றிக் கவலை வேண்டாம். எத்தனையோ நன்மைகளுக்கு நடுவில் ஒரே ஒரு அத்தை குடும்பம்,வந்து இருந்துவிட்டுப் போவதில்
என்ன அசௌகரியம் இருக்க முடியும்.:(
ஏழை மனசில மாளிகை இருக்கலாம் என்கிறதுக்கு எங்க (உதவிசெய்கிற )ராணி ஒரு பெரிய உதாரணம். ஒரு படுக்கை அறையும் கிச்சனும் தான் வீடு.வாசலில் வராண்டா. வந்தவாசி ஜனங்கள் பூராவுக்கும் இடம் கொடுப்பாள்:)

வல்லிசிம்ஹன் said...

125 again? what is it Thulasi?

துளசி கோபால் said...

அதென்னவோ என் பெயரில் ஒரு 125 எப்போவும் தாமாய் வருதுப்பா.

இனிமே துளசி ஒருமுறை சொன்னால் அது 125 முறை சொன்ன மாதிரின்னு வச்சுக்கலாம்!!

அமைதிச்சாரல் said...

//அவரவருடைய லிமிடேஷன்ஸ் என்று ஒன்று இருக்கிறது//

ரொம்ப கரெக்ட் வல்லிம்மா.. வாழ்க்கை ஒரு சீசாப்பலகை மாதிரிதான். ஒன்று உயர்ந்தால் இன்னொன்று தாழ்ந்துவிடுகிறது. அது ஜூனியர் சீனியர் உறவுகளுக்கும் பொருந்திபோகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,தலைமுறைகள் மாறும்போது எண்ணங்களும் மாறுவதில் அதிசயமில்லை. ஆனால் அன்பு மாறாமலிருக்கத்தான் நமக்குச் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. அது சில சமயம் செயலுக்கு வருவதில் சிரமங்களும் வந்துவிடுகின்றன. நன்றிமா, அதிதி தேவோ பவ, வெளிநாட்டாருக்கு மட்டுமோ:)))

Sumathi said...

ஆமாம் வல்லிம்மா நீங்கள் சொல்வது சரிதான் அன்பு என்பது தற்போது தன் குடும்பம் வரையில்தான் என சுருங்கிவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுமதி, தான் தன் குடும்பம் என்றிருப்பதில் தவறே இல்லை.
எங்கள் காலத்திலும் அம்மா அப்பா தனியாகயகத் தான் இருந்தோம். விடுமுறை நாட்களில் அத்தையும் குடும்பமும் வந்து இங்கு இருபார்கள். டெல்லியிலிருந்து வருவதால் டெல்லி அத்தை என்று பேர். .அடுத்த விடு]முறைக்கு நாங்கள் பாதி பாட்டிவீட்டிலும், மீதிப் பாதி அத்தைகள் வீட்டிலும் கழிப்போம். இந்த வயசிலும் மிச்சமிருக்கும் அந்தப் பாசம் போகவில்லை..குறைந்து வேணுமானால் இருக்கலாம்.அடியோடு போய்விடவில்லை என்றே நம்புகிறேன். நன்றிம்மா.

அமைதிச்சாரல் said...

//அதிதி தேவோ பவ, வெளிநாட்டாருக்கு மட்டுமோ:)))//

நிச்சயமாக உள் நாட்டாருக்கும் உண்டு. கையில் கொண்டுபோகும் லக்கேஜின் கனத்தைப்பொறுத்து அன்பின் கனமும் மாறுபடும். அனுபவப்பட்டு நொந்துபோயிட்டேன் :-))))

வல்லிசிம்ஹன் said...

அச்சோ!! சாரல்.:(
காலம் கண்டிப்பாக மாறிவிட்டது. உங்கள் பின்னூட்டம் காண்பிக்கறது..வேண்டாம்.நானும் இதை அனுபவித்திருக்கிறேன்.
எழுதுவது ஒன்றுதான் மிஞ்சும்.

கீதா சாம்பசிவம் said...

.நானும் இதை அனுபவித்திருக்கிறேன்.
எழுதுவது ஒன்றுதான் மிஞ்சும்.//

முழுக்க முழுக்க உண்மை, நானும் நிறையவே அநுபவிச்சாச்சு! :(((((((

Matangi Mawley said...

paatti/thaaththaa/mama/maami/ ella relations per kooda ippolaam nerayaa perukku theriyarathu kedayaathu...

kathaya padikkavey niraivaa irunthathu... romba yathaarthamaavum irunthathu.. neraya anga inga nadakkaratha paakkaratha apdiye vaartha koduththu korthaapla...

kaattazhagiya singa perumaal photo excellect!

very nice!

kathaikkaaka mattumilla.. athula irukkara soul/emotions kaakavum kooda...

very nice!

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதங்கி,
மனம் நொந்து போய்ப் பதிய ஆரம்பித்தேன்.
எழுத எழுத என் வருத்தம் மாறிவிட்டது.
யதார்த்தத்தை நேரில் பார்க்கும்போது கோபித்து என்ன பலன்.
எது கிடைக்கணுமோ அது கட்டாயம் கிடைக்கும்.

காட்டழகிய சிங்கரைக் கண்டுகொண்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்:) மேட்டழகிய சிங்கரைத் தேடினேன். இவர் நான் இருக்கேன்னு வந்துட்டார்.

த்வமெவ மாதா,பிதா த்வமேவ,த்வமேவ பந்துஸ்ச,சகா த்வமேவ'' என்பதை மறக்கக் கூடாது. அவன்தான் நமக்குச் சகலமும்.
இவ்வளவு ரசிச்சு நீங்க எழுதி இருப்பது, எனக்கு மனம் நிறைந்துவிட்டதுமா.
மனப்பூர்வமான நன்றி.