About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Thursday, July 15, 2010

தொடரின்...3 ஆம் பாகம்

ராதாவும் பாமாவும் பேச ஆரம்பிப்பதைப் பார்த்து,சின்னப் பொண்ணு பெட்டிகளைத் தனிதனி அறைகளில் கொண்டு வைத்தாள். படுக்கை விரிப்புகளை மாற்றி, மீண்டும் அறைகளைச் சுத்தம் செய்தாள்.

'அம்மா வெந்நீர் எல்லாம் ரெடி. பிள்ளைங்க குளிக்கடுமா'' என்கிற கேள்வியோடு வந்தவள்,

பாமாவின் கண்களில் கண்ணீரைக் கண்டதும்'
அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.

பாமாவின் கைகளைப் பிடித்த வண்ணம் காவிரியைப் பார்த்தபடி இருந்த வராண்டாவுக்கு வந்தாள் ராதா,

'ஏன் இந்த மாதிரி ஆச்சு பாமா,உன் பசங்க இருவரும் மிக நல்ல பிள்ளைகளாகத்தான்
எனக்குத் தெரியும்.

பதினைந்து வருஷம் இருக்குமா திருமணமாகி.? அதற்குள் நம் வீட்டில் இத்தனை மாற்றமா.

என்னிடம் கூடச் சொல்லவில்லையே.''
எவ்வளவு ஒற்றுமையாக நாம் இருந்தோம். இப்படி ஆவதற்கு வந்த பெண்களா காரணம்?''

என்ன சொல்கிறாய்.''அடுக்கிக் கொண்டே போனாள் ராதா.

பாட்டி பசிக்கிறது,நாம போலாமா என்ற வண்ணம் வந்த பட்டுவைப் பார்த்ததும்,தன்னைச் சமாளித்துக் கொண்ட

பாமா,''பாரேன் உங்களை இப்படியே நிக்க வச்சிட்டேனே,

ஒரு நிமிஷம்..''
என்றவாறு அந்த வீட்டின் சமையலறைக்குப் போய்ப் பாலைச் சுட வைத்து ,
காஃபியும்,

சின்னப் பொண்ணுவின் உதவியோடு நிமிடங்களில் அனைவருக்கும்
ப்ரெட் சாண்ட்விச்சும் தயார் செய்துவிட்டாள் பாமா.

குளித்துவந்த கோவிந்தன், ''வாய்க்கு வாய், கைக்கு கை,''

''தான்க் யூ பாமா''
பசி வந்தாச்சு எல்லாருக்கும் ''என்றவாறு சாப்பாட்டு மேஜையருகில் வந்தார்.

கூடவே வந்த குழந்தைகளும்,கண்ணன்,க்றிஸ்டினா,ஸ்ரீராம்,கிருஷ்ணாவும்
உடனே சாப்பிட ஆரம்பித்தனர்.

பட்டம்மா, நீயும் எடுத்துக்கோடா என்று குழந்தையை விளித்தாள் ராதா.

வேண்டாம் அத்தை நான் வீட்டுக்குப் போய்த்தான் சாப்பிடணும். இல்லாட்ட அம்மா
கோவிச்சுப்பார்'' என்ற குழந்தையை,

ஒரு நிமிடம் பார்த்துவிட்டுச் சரி இந்த பிஸ்கட்டாவது எடுத்துக்கோ என்றவாறு கைப்பையில் வைத்திருந்த

பிஸ்கட்டைக் கொடுத்ததும் பட்டு அதை மறுக்காமல் சாப்பிட்டாள்.
villas apartments


சாப்பிட்டு முடித்தவுடன் குழந்தைகள் குதூகலமாகக் காரை நோக்கி நடந்தனர்.


ஸ்ரீரங்கத்து வீதிகளைக் கடந்து,கொஞ்சம் காவேரிக் கரையோரம் நடந்துவிட்டு மீண்டும்

மேற்கு உத்தர வீதியில் இருந்த தன் பிறந்த வீட்டுச் சிந்தனைகளோடு

ராதாவும்,மேற்கொண்டு என்ன செய்வது என்ற யோசனையோடு பாமாவும்

அந்தப் பெரியவீட்டை வந்து அடைந்தனர்.பெரிய முகப்போடு அழிகள் போட்ட வராந்தா,இரு பக்கத் திண்ணைகளோடு அழகிய ஓவியமாகக்

காட்சி அளித்த தன் பிறந்த வீட்டைப் பார்த்ததும் ராதாவுக்கு மீண்டும் தொண்டையில் கரகரப்பு.இரு வண்டிகளும் விருந்தாளிகளும் பெரியம்மாவும் இறங்குவதைக் கண்ட ரங்கநாதன்,அந்த வீட்டுக் காரியக்காரர்

நீண்ட பெரிய கதவுகளைத் திறந்தார்.

வாங்க பசங்களா பாட்டிதாத்தா வீட்டைப் பார்க்கலாம் என்றபடி கோவிந்தன் உள்ளே நுழைந்தார்.

சத்தம் கேட்காததால் திரும்பிப் பார்த்தார்.நிகிலும் நிதினும் அந்தப் பெரிய வேலைப்பாடுகள் கொண்ட கதவுகளையே பார்த்தவண்ணம் இருந்தனர்.

அவர்களை ரசிக்க விட்டு விட்டு குளிர்ந்த பெரிய கூடத்தில் நுழைந்தனர் மற்றவர்கள்.
எல்லோரும் வாழ வேண்டும்.


Posted by Picasaஒரு எண்பதாண்டு சரித்திரம் கொண்ட வீடு அது.


கூடம் அதைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் நடமாடும் இடம். கூடத்தின் நடுவே நல்ல ரோஸ்வுட் ஊஞ்சல்.

பளபளக்கும் பித்தளைச் சங்கிலிகள்.

கூடத்திலிருந்து பிரியும் அறைக்கதவுகள். கதவுகளுக்கு மறைக்காமல் தொங்கும் திரைச்சீலைகள்.

கூடத்தின் கடைசியில் ஒரு வாயில் ,அங்கு நுழைந்தால் பக்கத்துக்கு இரண்டு வாசல். ஒன்று ஸ்டோர் ரூம், இன்னொன்று சமையலறைக்குச் செல்லும்.

அந்தக் காலத்துத் தொட்டி ஒரு சுவற்றோடு ஒட்டிக் கட்டப் பட்டிருக்கும். கம்பிகள் இல்லாத ஜன்னல் வழியாகக் கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவார்கள்.ராதா பார்த்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து நாணிப்பாட்டி வந்தார். ஒரு எண்பது இருக்குமா மாமிக்கு!

ராதாவுக்கு இன்னோரு வியப்பு. இவர்களுக்கு எல்லாம் உழைப்பைத் தவிர வெறொன்றும் தெரியாதா' என்று நினைத்தவாறு,

அந்த மாமியின் அருகில் சென்றாள்.

ராதாக் குட்டி எத்தனை நாளாச்ச்சு பார்த்து,எப்படிடா கண்ணு இருக்கே.

உனக்குப் பிடிச்சதெல்லாம் பண்ணி வச்சிருக்கேன் வா வா. ''என்று உச்சி மோந்தார் அந்த மூதாட்டி.பாமாவைப் பார்த்தாள் ராதா. ரிடையராகலியா மாமி? எலும்பும் தோலுமா இருக்காளே

என்றாள்.

உனக்காக வந்திருக்கிறார். இப்போ சமையல் செய்வது அவருடைய மருமகள் தான்

என்று புன்னகை காட்டினாள் பாமா. அப்புறம்''எங்க உன் பையன்களும் மாட்டுப் பொண்களும்

என்று சுற்றுமுற்றும் கண்ணைச் செலுத்தினாள் ராதா.

''அத்தைப் பாட்டி ! பெரியப்பா பெரியம்மா ரெண்டு பேரும் காலேஜில வேலை செய்கிறா.

''அம்மாவும் அப்பாவும் சி.ஏ வகுப்புகள் எடுக்கிறார்கள் அடுத்த தெருவில''

என்று சொல்லிவிட்டுத் தன் சிநேகிதர்களை அழைத்துக் கொண்டு

புழக்கடைத் தோட்டத்துக்கு ஓடினாள் பட்டு.

''அண்ணா எங்க பாமா? ஏன்   வரலை எங்களைப் பார்க்க என்றபடி அண்ணா, என்ன உனக்கும் வயசாயிடுத்தா

இங்க வா''என்று கூவினாள்.
ராதா அண்ணாவால வர முடியாதும்மா. போன வாரம்தான் பக்கவாதம் மாதிரி வந்துட்டது. வயல் பக்கம் போனவர் வெய்யிலில் ரொம்ப நேரம் நின்றிருந்திருக்கிறார்.

இரத்த அழுத்தம் அதிகமாகி இப்படி ஆகிவிட்டது.
இப்போ பரவாயில்லை.
ப்ரைவேட் நர்ஸ் போட்டு இருக்கு.
அவர் குளித்து சுத்தமானதும் நாம் வாசல் அறைக்குப் போகலாம்,''என்ற தன் அண்ணியைக் கலக்கத்துடன் பார்த்தாள் ராதா.