About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, July 03, 2010

இரண்டு நாள் தீவு வாசம்


சூறாவளி அடிக்கவில்லை.


புயல் மழை காற்று இல்லை.

பக்கத்து வீட்டுக் காரர் புது விடு கட்டிக் கிரகப் பிரவேசம் செய்தார்.செய்துவிட்டுப் பழைய தற்காலிக வீட்டுக்குப் போனார்.விட்டுவிட்டுப் போன குப்பைகளை அப்புறப் படுத்த வேண்டுமல்லவா.

கார்ப்பரேஷன் லாரி வந்தது.

செங்கல் துண்டுகள்,சரளைக் கற்கள்,சிமெண்ட், வீட்டு உதிரி பாகங்கள் .....இத்யாதிகளை

எனக்கள் காம்பவுண்டு ஓரமாகக் கொட்டப் பட்டிருந்த இலைகள் என்ற விதவிதமான

பொருட்களை மண்வெட்டியால் அகற்றினார்கள்.

குப்பை அகன்றது. வீட்டுக்காரருக்கு சந்தோஷம். லாரிக்காரருக்கு சந்தோஷம் நல்ல வருமானமல்லவா.எங்களுக்கும் சந்தோஷமாகத் தான் இருந்திருக்கவேண்டும்.

இல்லை.

ஏனெனில் மண்வெட்டியால் வெட்டும்போது,

வீட்டுக்குள் வரும் தொலைபேசி லைன்களையும் வெட்டி விட்டார்கள்.

அதிசயமாக இல்லை?

ஒரு நாகரீகமான நகரத்தில், அதி நவீன தொடர்புகள் கொண்ட கணினி

உற்பத்திசாலைகள் நிறைந்த நகரம்.

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வளர்ந்த வரும் இண்ட்டர்நெட் மையங்கள்.

வீட்டுக்கு வீடு எவ்வளவு வேகத்தில் ப்ராட்பாண்ட் வேண்duம் என்று கேட்கும் கம்பனிகள்.மேரா பாரத் மகான் என்று பெருமை தட்டும் பிசென் எல்.எல்லாம் சரிதான். கம்பத்துக் கம்பம் வயர்கள் தொங்குகிறது. கேபிள் டிவி.நான் ,எங்க வீட்டு எஜமானரிடம் கேட்டேன்.

டெலிபோன் வேலை செய்வதற்கும்,

பக்கத்து வீட்டில் குப்பை அள்ளியதற்கும் என்ன சம்பந்தம் ?

அவர் மிகப் பொறுமையாகப் பதில் சொன்னார். இப்ப எல்லாம் அண்டர்க்ரவுண்ட் இல்லையாம்மா.

அதனால் அவர்கள் மண் அள்ளும்போது நம் லைன்கள் அறுந்துவிட்டன.முன்பாவது ஒரு டெலிபோன் கம்பம் இருக்கும்.

வீட்ல அதிக்கடி ரிப்பெரான திருத்தி அமைக்க லைன் மேன் மணி வருவார்.

கம்பத்திலதாம்மா பிரச்சினை என்பார்.

அவர் ஏ\றி, எக்சேஞ் ராமன் சாரிடம் பேசி சரி செய்து விடுவார்,.ஒரு வருகைக்குப் பத்து ரூபாய்கள் கொடுத்த நாள் போய்

இப்போது ஐம்பதில் வந்து நிற்கிறது.

\

ஒன்றே ஒன்று புரியவில்லை. இரண்டு தொலைபேசிகளுக்கும் ஒரு கணிசமான

தொகை மாதா மாதம் கட்டுகிறோம்.

நான் கேட்க நினைப்பதெல்லாம் ஒன்று தான்.

ஒரு இடத்தில் தொலைபேசி லைன்கள் போகின்றது என்றால், அந்த இடத்தில் ஒரு அறிகுறி இருக்க வேண்டாமா.

ஒரு வீட்டுக்கு ஒரு இடத்தில்தான் இந்த கம்பிகள் நுழைகின்றன.

அந்த இடத்தில் ஒரு அடையாளமாக சேதமடையாத சிமெண்ட் பலகை இரண்டு அங்குலத்துக்கு இரண்டு அங்குலம் போட முடியும் என்றே நினைக்கிறேன்.

என் அறியாமையைப் படிப்பவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

எனக்கு உண்மையாகப் புரியவில்லை.

நான் சாலை நடுவெ இரண்டு அங்குல சதுரத்தைப் போடச் சொல்லவில்லை. என் வீட்டுக் காம்பவுண்டுக்குள் இந்த தொலைபெசி கம்பிகள் நுழையும் இடத்தில் போட்டுவைத்தால்

கண்ட லாரியோ, பெரியவாகனமோ ஏறி மிதித்தாலும்

அரையடிக்குக் கீழே இருக்கும் கம்பிகள் பழுதடையாமல் இருக்கும்.

தொலைபேசி எக்ச்சேஞ்ஜில் போய்ச் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன்.இதா வருவாங்கம்மா.'' பதில்.பாதிப்புகள்.

அவசரத்துக்கு,

அவசியத்துக்கு

போன் இல்லை.

இணையத்துக்குப் போக முடியவில்லை.

இரண்டு நாட்கள் ஆகின்றன,. பொறுக்கத்தான் வேண்டும்.

பொங்கி எழவா முடியும்!!

இந்தப் பதிவைச் சேமித்து வைக்கிறேன்.எப்போது நெட் கனெக்ஷன் கிடைக்கிறதோ அப்போது பதிவிடுகிறேன்.

கிடைத்த நன்மைகள்.

புத்தகம் படிக்க முடிந்தது

கைபேசி உபயோகமானது.

அதில் நான் பணம் போடாததால்

மற்றவர்கள் பேசினால் நான் பதில் சொல்ல முடியும்.

நான் யாரையும் கூப்பிட முடியாது.

சிங்கத்துக்கு ஏதாவது தொந்தரவா...... இல்லை.

அவர் செயல் வீரர் ! யாருடனாவது பேச வேண்டுமானால் மோட்டார்பைக்கும் ,காரும் இருக்கவே இருக்கு

எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

18 comments:

sury said...

அன்று
தொலை பேசிஇல்லை. கைப்பேசி இல்லை. , டி.வி, கேபிள் டி.வி. என்றெல்லாம் இல்லை.
இவை இல்லாதிருந்தாலும் அமைதி இருந்தது.
இன்று
இவையெல்லாம் இருக்கிறது.
இவையெல்லாம் தரும் டென்ஷனும் இருக்கிறது.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

துளசி கோபால் said...

அதான் காரணமா?

என் ஃபோன் லைனில்தான் தகராறுன்னு நினைச்சேன்.

இதெல்லாம் இருந்தும் தொல்லை இல்லைன்னாலும் தொல்லை.

கீதா சாம்பசிவம் said...

அது சரி, காணாமல் போன பதிவைக் கண்டு பிடிச்சாச்சா?

கீதா சாம்பசிவம் said...

ஒரு வருகைக்குப் பத்து ரூபாய்கள் கொடுத்த நாள் போய்

இப்போது ஐம்பதில் வந்து நிற்கிறது.//

ரொம்பவே சீப்பா இருக்கே? இங்கே விலைவாசி அதிகம். :))))) நூறு, இருநூறு ஆகும். ஆனால் இப்போல்லாம் பி எஸ் என் எல் காரங்க எதுவும் வாங்கறதில்லை. எனக்கு இந்த டாட்டா இண்டிகாம் தான், கேபிள் நல்லவேளையா மேலே கம்பத்திலே கட்டப் பட்டு வருதுனு சந்தோஷப் படமுடியவில்லை. தினம் ஒரு லாரி, எர்த் மூவர் வருது. கேபிள் அறுந்து போகும். அப்புறமா அவங்களைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கூப்பிட்டு அலுத்துத் தான் போகும்.

இப்போல்லாம் கனெக்ஷன் வர நேரத்திலே நெட்டிலே உட்காருவதுனு வச்சுட்டேன்! அலட்டிக்கிறதே இல்லை.

போனால் போகட்டும் போடா!

தக்குடுபாண்டி said...

நல்ல கார்யம் வல்லியம்மா, நிறைய புஸ்தகம் வாசிங்கோ! எங்களுக்கும் சூப்பரா ஒரு படிவும் கிட்டும்...:)

தக்குடுபாண்டி said...

@ கீதா பாட்டி - //ரொம்பவே சீப்பா இருக்கே? இங்கே விலைவாசி அதிகம். :))))) நூறு, இருநூறு ஆகும்.// சிட்டிக்கு உள்ள இருக்கும் ரேட் பத்தி வல்லியம்மா சொல்றா பாட்டி! எஸ்டேடுக்கு எல்லாம் தனி ரேட்டுதான்...:)

//அலட்டிக்கிறதே இல்லை. //இப்பவாவது உங்க வாயாலையே ஒத்துன்டேளே! இத்தனை நாளா அலட்டிண்டு தான் இருந்தேள்!னு...:P

சின்ன அம்மிணி said...

//புத்தகம் படிக்க முடிந்தது//

அப்ப நல்லா பொழுது போச்சுன்னு சொல்லுங்க ம்:)

ப்ரியமுடன் வசந்த் said...

//புத்தகம் படிக்க முடிந்தது

கைபேசி உபயோகமானது.

அதில் நான் பணம் போடாததால்

மற்றவர்கள் பேசினால் நான் பதில் சொல்ல முடியும்.

நான் யாரையும் கூப்பிட முடியாது.

சிங்கத்துக்கு ஏதாவது தொந்தரவா...... இல்லை.
//

நல்லதுதானேம்மா நடந்துருக்கு...எதுக்கு கவலைப்படறீங்க?

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சுப்புரத்தினம் சார்.கடிதங்கள் நிறைய விஷயங்களைக் கொண்டு சேர்க்கும். மஞ்சள் தடவின கடிதங்களைக் கண்டாலே மனம் குதூகலிக்கும். ஏதோ விசேஷம்,நாம் எல்லோரையும் பார்க்க ஒரு சந்தர்ப்பம் என்று ஆசையாக இருக்கும்.
போன் மதிய நேரத்தூக்கத்துக்கு எதிரி. அதிகாலை அழைப்பும் சில சமயம் கலங்க வைக்கும்.
இருந்தும் வெளியுலகத்தோடு உலவ வேறு ஏது கதி நமக்கு?உணர்ந்து, பின்னூட்டம் இட்டதற்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அதே அதே துளசி.மிகவும் நெருங்கியவர்கள் தொடும் தூரத்தில் இல்லை.தொலைவில்தான் இருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

கீதா,சின்ன வேலைதான்.
ஆனால் அவரும் கேட்டு வாங்கிக்கவில்லை. முன்னால் இருந்த வழக்கப்படி நானே கொடுத்தேன். ரெண்டு பேர் வந்திருக்கோம்மா என்றார்..கொடுத்ததை மகிழ்ச்சியாகவே வாங்கிக் கொண்டார்.
எப்படியோ தொலைபேசிக்கு உயிர் கொடுத்த மகானுபாவனாச்சே:)

வல்லிசிம்ஹன் said...

தக்குடு,தக்குடு.
அம்பியின் வாரிசா நீங்க.
அப்படியே கீதாவை கால்வாருவதில்தான் எத்தனை சந்தோஷம்:))
பதிவு பற்றின கருத்துக்கு நன்றிம்மா.
ரொம்ப சூடா எழுதி இருக்கவேண்டாமோ என்று இப்போது தோன்றுகிறது.

வல்லிசிம்ஹன் said...

இல்லை கீதா போனது போனதுதான். அப்ப அப்ப இப்படி ஏதாவது நடந்தால் எனக்கு தலைக்கனம் வராமல் இருக்கணும்னு பதிவு நினைக்கிறதோ:))

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் நல்ல பொழுதுதான் சின்ன அம்மிணி.
எத்தனை புத்தகங்கள் பிரிக்கப் படாமல் இருக்கிறது:(

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா வசந்த்.
நல்லதுதான் நடந்திருக்கு.

ஒரு அவசரம்னால் தொலைபேசி வேண்டுமே.. அநேகமாக வைத்தியரை அணுகத்தான் தொலைபேசி அவசியம். மற்றபடி எங்க அம்மா அப்பாவைக் காணம்னு பிள்ளைகள் கம்ப்ளேயிண்ட் கொடுக்காம இருக்கணுமேன்னு கவலை:)

கீதா சாம்பசிவம் said...

//அலட்டிக்கிறதே இல்லை. //இப்பவாவது உங்க வாயாலையே ஒத்துன்டேளே! இத்தனை நாளா அலட்டிண்டு தான் இருந்தேள்!னு...:P//

தாக்குடு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் எப்போவுமே அலட்டிக்கிறதில்லைனு தான் சொன்னேன். மனசிலாச்சா???

ராம்ஜி_யாஹூ said...

இரண்டு நாட்கள் இணையம் இல்லாவிடில் சென்னை பெரு நகர வாழ்வு தீவு வாழ்க்கை ஆகிறது நமக்கு

இனைய ஜன்னலை மூடி இல்லது ஜன்னலை திறந்து விடுங்கள்

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராம்ஜி யாஹூ.
இணையத்தை மட்டும் நான் சொல்லவில்லை.

நீங்கள் சொல்வதில் இருக்கும் உண்மை எனக்குப் புரிகிறது.

ஜன்னலைத் திறந்தால் மனத்தூசு போகலாம். கொசுக்களும்,சாலைத் தூசியும் கூடவே நுழைந்து நுரையீரலைத் தாக்குகின்றன.
நன்றி.வருகைக்கும் புரிதலுக்கும்.