Blog Archive

Friday, June 11, 2010

என்றும் வசந்தம்

''பாட்டி,நான் உனக்கு காயெல்லாம் கட் செய்து கொடுக்கிறேன்.
காஃபி கூட மைக்ரொவேவ்ல போடுவேன்.
உன்னோடயே இருந்துடறேனே. அம்மா அப்பா மட்டும் போட்டும்''
இது ஸ்விஸ் பேத்தியின் கொஞ்சல்.
''இந்த ஊர்ல கொசு இருக்குடா,, கால் வைக்கிற இடமெல்லாம் அழுக்கு இருக்கும்,
தோட்டத்திலிருந்து பூச்சியெல்லாம் உள்ள வந்துடும்''
நீதான் அந்த பெரிய புஸ் புஸ் வச்சிருக்கியே, நாம அதெல்லாம் விரட்டிடலாம்.
நான் சமத்தா சாப்பிடறேன்.

அப்புறமா புதுப் பாப்பா வந்தாட்டு நாம ''பாசல்'' போகலாம்.

இப்படி விதமா விதமாகப் பேசி இங்கேயெ இருக்கேன்னு சொன்ன குழந்தை இதோ கிளம்பப் போகிறது:)

நீ கோவிந்தா உம்மாச்சி,சாயித்தாத்தா உம்மாச்சி எல்லார்கிட்டயும் பெசிண்டிரு பாட்டி.
நான் அப்புறமா வரேன்.
அப்பா பாவம் ,தனியா இருக்கப் பயமா இருக்கும். நான் அவாளோடயே போகிறேன் என்று
''டோரா'' பையையும் தூக்கிக் கொண்டது.

வசந்தமெல்லாம் கொஞ்ச நாட்கள் தான் என்று நமக்குத் தெரியாதா என்ன!!!



எல்லோரும் வாழ வேண்டும்.

20 comments:

ராமலக்ஷ்மி said...

//அப்பா பாவம் ,தனியா இருக்கப் பயமா இருக்கும். நான் அவாளோடயே போகிறேன் என்று
''டோரா'' பையையும் தூக்கிக் கொண்டது.//

என்ன பக்குவம் பாருங்க:)!

எல் கே said...

குழந்தைகள் பேசி தனி சுகம். இதையும் பாருங்க வல்லியம்மா

http://lksthoughts.blogspot.com/2010/06/blog-post_10.html

துளசி கோபால் said...

உம்மாச்சிகள் கூட்டம் நிறைய இருக்குன்னு சின்னக்குட்டிக்கு(ம்) தெரிஞ்சுருச்சு:-))))))


சிலசமயம் நினைச்சுப் பார்த்தா...... குழந்தைகளுக்கு இருக்கும் பக்குவம் நமக்கு இல்லைப்பா.
வயசாக ஆக எல்லா நற்குணங்களும் சுருங்கிக்கிட்டே போயிருதோ!!!!!!

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்:( என்ன செய்யறது?? நமக்குக் கொடுத்து வச்சது தான் கிடைக்கும்.

pudugaithendral said...

நானும் நேத்து புலம்பியிருந்தேன்.
http://pudugaithendral.blogspot.com/2010/06/blog-post.html

வல்லிசிம்ஹன் said...

வரணும் எல்/கே. கட்டாயம் உங்க மழலையின் பேச்சையும் கேட்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி, ஒரு காலத்தில் நாம் நம் பெற்றோர் சஞ்சலப் படுவதைப் பார்த்தோம். அப்போ என் மகன் மகள் எல்லோரும் அடுத்த லீவுக்கு வரேன் பாட்டி என்பார்கள். இப்போது நான் அந்தப் பேச்சைக் கேட்கிறேன்:)
நாந்தான் பக்குவப்படணும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி நிஜம்தான். நான் விளக்கேத்தும்போது கூட நிக்கும். ஸ்தோத்ரம் சொல்லும்போதும் ஏதோ பாடும். திருப்பதி சானல் என்னோடயே பார்க்கும். அம்மாவை விட்டுவிட்டு என்னோடவே இருந்துடுத்தே!!
ஊருக்குப் பாக் செய்ய ஆரம்பித்ததும் சட்டுனு பேச்சு என்னைச் சமாதானப் படுத்துகிற மாதிரி பேச ஆரம்பிச்சாச்சு:)

வல்லிசிம்ஹன் said...

அதுதானே உண்மை கீதா. நம்ம நிழல் அதுகளுக்கு கிடைத்தால், நமக்குத் தான் சந்தோஷம்.

சமயம் வந்ததும் திண்ணையை விட்டுக் கிளம்பும் விருந்தாளிகள்:)

வல்லிசிம்ஹன் said...

அடடா:)
தென்றல் நீங்களுமா. ஓ! இது மறுபக்கம் . இல்லையா.!!பார்க்கிறேன்.

Unknown said...

வணக்கம் வல்லிம்மா, ஊருக்கு வந்துவிட்டு செல்லும்போது இருவருக்குமே கஷ்டம்தான், ஆனால் குழந்தைகள் போற இடத்திற்கு ஏற்றமாதிரி பழகிக்கொள்கின்றன.

சாந்தி மாரியப்பன் said...

//''பாசல்''//

இதுக்கு என்ன அர்த்தம் வல்லிம்மா?..

வல்லிசிம்ஹன் said...

வாங்க சுமதி,உண்மையான வார்த்தைகள். இன்று காலை எழுந்திருக்கும் போதே, நான் இங்கியே இருக்கேன்னு ஒரெ... அப்புறம் வறுவல், சாகலேட் எல்லாம் உள்ள போனாட்டு, நீயும் தாத்தாவும் அடுத்த பிளேன்ல வாங்க பாட்டின்னு சொல்லிவிட்டுக் கிளம்பியாச்சு:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், பாசல் என்பது அவர்கள் இருக்கும் ஊரோட பேரு.
சில சமயம் ஏண்டா இந்தக் குழந்தைகளை இப்படி வெளியூர் போக சம்மதித்தோமுனு
இருக்கு.
கொலுசு சத்தம் கேட்கிற மாதிரியே பிரமை.
இதோ அடுத்த வருடம் வந்துவிடும் .தம்பியோடு வந்துவிடுவாள் பகவான் கிருபையில்.:))

Matangi Mawley said...

cha! sweet! :D :) ரொம்ப அழகு!

வல்லிசிம்ஹன் said...

ஹை மாதங்கி மாலி,
யெஸ் !!ரொம்ப சமத்து. டிச்கெட் வாங்கிண்டு அடுத்த ப்ளேன்ல வரேன்மான்னாதும்,
அவளோட அப்பா ஃபோனிலிருந்து என்னைக் கூப்பிட்டு, பாட்டி பின்னால ரெட் ப்ளேன் வரது அதுல வரயா நீ? அப்படீன்னு கேக்கறது:)

கோமதி அரசு said...

அடுத்த வருடம் பகவான் கிருபையில்
தம்பி பாப்பாவுடன் வரும் பேத்திக்காக வாழ்த்து சொல்ல காத்திருக்கும் கோமதி பாட்டி.

உங்களுடன் சேர்ந்து நானும் வசந்தத்தை
வரவேற்கிறேன்.

ஹுஸைனம்மா said...

அப்ப இனி பதிவுகள் அடிக்கடி வரும் இல்லியா?

:-))))))

வல்லிசிம்ஹன் said...

சித்திப் பாட்டி கோமதிக்கு நன்றி.
உங்கள் வீட்டிலயும் நிறைய வசந்தங்கள் வர இந்தப் பாட்டி வாழ்த்துகள் சொல்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா, கட்டாயம் பதிவுகள் உண்டு. இனிமேல் பதிவுலகத்தையும் வலம் வரலாம்:)