Blog Archive

Monday, April 26, 2010

ஓடம் அது ஓடும்.அது சொல்லும் கதை என்ன.
























எல்லோரும் வாழ வேண்டும்.





Posted by Picasa
ஒரு ஊரில ஒரு அம்மா அப்பா இருந்தாங்களாம். அவங்களுக்குப் பிள்ளைங்களும் இருந்தாங்களாம்.
பிள்ளைங்க ஒவ்வொண்ணும் படிச்சு வேலை தேடிக், கல்யாணம் கட்டிக்கிட்டு
வெளியூருக்கும் போய்ட்டாங்களாம்.
அப்பப்போ போனு போட்டு இங்க வா,அங்க வான்னு சொல்லுவாங்களாம். அம்மா அப்பாவும் , பாவம் பிள்ளைங்க ,நாமும் தான் ஏதோ நம்மால முடிஞ்ச உதவியைச் செய்துட்டு,ஊரையும் சுத்திப் பார்த்துட்டு வந்துடலாம்னு போவாங்க,.


அப்புறம் ஒரு பயணம் முடிஞ்சு வரும்போது வீட்டில எலிகள் நடமாட்டம்+ ரெண்டு எலிகள் இறந்தே கிடந்த நிகழ்ச்சி எங்களை வெகுவாகப் பாதித்தது. கிட்டத்தட்ட பத்து மாத அழுக்கை அகற்ற வேண்டிய கட்டாயம்.
உதவி செய்ய வருபவர்களுக்கோ இப்போது வேலை செய்யாமலே பழகிவிட்டது. நமக்கோ உடல் நலமும் முன் போல் இல்லை. ஒவ்வொரு வேலையும் இமாலய முயற்சியாகப் படுகிறது.
வீடும் சிறிது சிறிதாக வேலை வாங்குகிறது.அதற்கும் வயசாகிவிட்டது இல்லையா.
அதனால் தீர்மானம் செய்தோம்.
இனிமேற்கொண்டு குழந்தைகள், பேரன்,பேத்திகள் வந்து நம்மைப் பார்க்கட்டும்.
வீட்டைப் பூட்ட வேண்டாம். என்ற தீர்மானம்.
அதுவும் நல்லபடியாகவே நிறைவேறியது.

இதில நாங்க வெளியூரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு எங்களுக்கு வராமல் போன திருமண அழைப்புகள் ,நிகழ்ச்சிகள், கோவில் பயணங்களும் விட்டுப் போயின.:)
சம்பந்தப் பட்டவங்களைக் கேட்டால் ,''நீ ஊரிலயா இருக்கே!!! அடக் கடவுளே.ஏன்பா கல்யாணத்துக்கு வரலை''ன்னு ஒரு தோழி கேட்டதும் 'சே;ன்னு போய்விட்டது.
இது முன்கதை.
இப்போ பின்னுரை.
நாங்க துபாய் போறோங்க.
ம்ஹூம் அங்கிருந்து எங்கயும் போகலை. மூணு வாரத்தில திரும்பிடுவோம்.

கடவுள் கிருபைல ஒழுங்காப் போயிட்டு, ஒழுங்கா இருந்துட்டு, ஒழுங்கா திரும்ப அந்த லஸ் விநாயகனே பொறுப்பு.
நீங்கதான் பதிவே போடறதில்லையே.அதுக்கு எதுக்கு இந்த நீட்டி முழக்கி ஒரு பதிவுன்னு நீங்க கேட்டீங்கன்னால்.,என் பதில் இதுதான்.
நாங்களும் மொக்கை எழுதுவோமில்ல:)
வருகிறேன் நண்பர்களே. எல்லாரும் பத்ரமா இருங்க.

28 comments:

எல் கே said...

பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் said...

அது என்ன அங்க மட்டும் ஸ்பெஷல்? கேட்போமில்ல!! :)

வல்லிசிம்ஹன் said...

நன்றி எல்.கே. அங்கயும் முடிந்தால் எழுதுகிறேன். கட்டாயம் பஸ்ஸுக்கு வருவேன்:)

எல் கே said...
This comment has been removed by a blog administrator.
வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கொத்ஸ். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இப்போதைக்கு இந்தப் பயணம் போதும்னு தோன்றுகிறது. ஐபிஎல் சமாசாரங்கள் அங்கயும் வரும். அதுக்கப்புறம் பயணத்தை நீட்டிக்க இப்போதைக்கு வேண்டாம்னு தோணிப்போச்சு. நீங்க எல்லாம் இங்க வாருங்கள்.:0) நல்லா இருங்கோ கொத்ஸ்.

வல்லிசிம்ஹன் said...

appadiyaa Karthik. I thought

I saw you in Buzz !

ராமலக்ஷ்மி said...

முக்கிய முடிவெடுத்த கதையை சூப்பரா ஆரம்பிச்சு ஊருக்கு போறதைச் சொல்லி முடித்த விதம், ஆகா அருமை:))!! இதுவா மொக்கை:)? ஒரு எலி கூட வீட்டுக்குள்ளே நுழையாதிருக்கவும், பயணம் இனிதே அமையவும் வாழ்த்துக்கள் வல்லிம்மா.

ஹுஸைனம்மா said...

உங்களின் வருத்தங்கள் என் பெற்றோரையும் ஞாபகப்படுத்தி, ஒரு குற்ற உணர்வை வரவழைக்கிறது.

நேத்துதான் அநன்யா சொன்னாங்க, நீங்க இங்க வர்றீங்கன்னு. வந்தப்பறம், உங்களுக்கு வசதிப்பட்டா நாம சந்திக்கலாமா?

வந்துட்டு மெயில் அனுப்புங்க (hussainamma@gmail.com). அநன்யாவிடம் என் ஃபோன் நம்பர் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ராமலக்ஷ்மி,
கிட்டத்தட்ட 2 வருஷம் சமாளிச்சுட்டோம். இப்பப் போக வேண்டிய சூழ்நிலை.
கட்டாயம் அங்க நம் பதிவர்களைப் பார்க்கணும்னு நினைச்சிருக்கேன்.

உங்கள் நலத்துக்கு கடிதம் எழுதவும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஹுசைனம்மா, கட்டாயம் நாம சந்திக்கலாம். இத்தனை அழகா எழுதற இருவரையும் ஒரு வடை மீட்டிங் போட்டாவது சந்திக்க வேண்டாமா. :)
அநன்யா கிட்ட போன் நம்பர் வாங்கிக்கிறேன்.பார்ப்போம் கடவுள் கிருபையில்.

சந்தனமுல்லை said...

Safe Journey வல்லியம்மா! நல்லபடியா போய்ட்டு வாங்க..:-) உங்க முன்கதை சுருக்கம் - சூப்பர்!

கோமதி அரசு said...

//கடவுள் கிருபைல ஒழுங்காப் போயிட்டு,ஒழுங்கா இருந்துட்டு,
ஒழுங்கா திரும்ப அந்த லஸ் விநாயகனே பொறுப்பு.//

பயணம் நல்ல படியாக அமைய லஸ் விநாயகர் அருள்வார்.

வாழ்த்துக்கள்.

ஓடம் சொல்லும் கதை அருமை.

துளசி கோபால் said...

பயணம் இனிதாக அமைய இனிய வாழ்த்து(க்)கள்.

துபாய் கதை கேக்க நாங்க ரெடி:-)

Geetha Sambasivam said...

விநாயகன் அருளால் பயணம் இனிதே முடியவும், நல்லபடியாத் திரும்பவும் பிரார்த்திக்கிறோம். வாழ்த்துகளும் கூட!

சாந்தி மாரியப்பன் said...

இனிய பயணத்துக்கான நல்வாழ்த்துக்கள். அப்படியே புள்ளையார், தன்னோட வாகனத்தோட சொந்தக்காரங்களை, கட்டுப்படுத்தி வைக்கணும்ன்னு வேண்டிக்கிறேன் :-)))

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,அங்க போகிறதில ஒரே ஒரு சங்கடம்,பக்திசானல்,விஜய்,பொதிகை பார்க்க முடியாது. அதனால் என்ன மனசில இருக்கார் பகவான். அதுதான் ஆறுதல். ரொம்ப நன்றிப்பா. நீங்களும் பத்திரமா இருங்கோ.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, நீங்களும் கோபாலும் சௌக்கியமா இருக்கணும். இன்னும் வேற ஊர்களுக்குப் போய் பயணத்தை நல்லபடியாகத் தொடருங்கள். எங்களுக்கும் கதைகளைக் கொடுக்கத் தாமதிக்க வேண்டாம்.வரேன் பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, நீங்களும் கோபாலும் சௌக்கியமா இருக்கணும். இன்னும் வேற ஊர்களுக்குப் போய் பயணத்தை நல்லபடியாகத் தொடருங்கள். எங்களுக்கும் கதைகளைக் கொடுக்கத் தாமதிக்க வேண்டாம்.வரேன் பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முல்லை, அங்கயும் போய்,பப்புவோட ஆட்டாம் பாட்டம் கொண்டாட்டத்தைத் தேடுவேன்:)
பின்னுரை நாளைக்காலை ஆரம்பம். நல்ல படியா சாமிதான் எழுதக் கொடுக்கணும்:)
ஒரு மாசத்துக்கு இன்னா பில்ட் அப் கொடுக்கறாங்க பார்த்தீங்களா இந்த வல்லிம்மா!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,கோடை வெய்யில் இங்க சுடுகிறதுன்னு நினைத்துக் கொண்டு அங்க போனால் காற்றே சுடும்.
குழந்தைதான் என்னுடைய அமைதிச்சாரல்:)
நன்றிமா. நீங்களும் பத்ரமா இருங்கோ.

பாரதி மணி said...

நல்லபடியா போயுட்டு வாங்க. துபாய் வெய்யிலை நெனச்சாத்தான் பயமா இருக்கு.

God bless you both.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
நன்றிப்பா. இந்த வெய்யில் தாங்க முடியவில்லை. அங்கயும் வெய்யில்தான். இருந்தாலும் நாட்கள் குறைவாகத்தானே இருக்கப் போகிறோம்.
அங்கே எப்படி வசந்தம் வருகிற காலமா.
டெல்லிப் பேரன் செய்யற கூத்தைப் பார்த்தீங்களா.:)

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் பாரதி மணி சார். இவ்வளவு கவனமாகப் பதிவுகளை நீங்கள் படிப்பது அதிசயமாக இருக்கிறது.
வெய்யிலில் போக மாட்டோம். மகன் அலுவலக லீவு நாட்களில் வெளியே போவோம்.
நிறைய புத்தகம் எடுத்துக் கொண்டு போகிறேன்.
பேத்தி இருக்கிறாள். உங்கள் ஆசிகளுக்கு மிகவும் நன்றி.

மதுரையம்பதி said...

நல்லபடியா போயிட்டு வாங்க வல்லியம்மா....குழு மீட்டிங்குக்கு வந்துடுவீங்க போல தெரிகிறது :)

மாதேவி said...

சந்தோசமாய் போய்வாங்க.

பயணம் இனிதாய் இருக்க வாழ்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி, கட்டாயம் வந்துடணும்.
துபாய் வெய்யிலே இல்லைம்மா. அதிசயமா. சென்னைக்கு துபாய் தேவலை.
நன்றி மௌலி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,

நன்றிப்பா. இப்போதுதாம் கலப்பை எழுத்துரு கிடைத்தது. நன்றிம்மா.

நானானி said...

பத்திரமா போய்ட்டு பத்திரமா வாங்க.
நல்ல எஞ்சாய் பண்ணுங்க.