Blog Archive

Monday, April 12, 2010

அது ஒரு பகல் காலம்







வெய்யில் போதுமா!! வருடா வருடம் நாம் கேட்கும் கேள்விதான். இருந்தாலும் இந்த வருடம்

ரொம்பவே அதிகமாக இருக்கு.
இதில் ஒரு நாள் முழு மின்வெட்டு.!
மின்சாரம் போவதைவிட அதோட பின் விளைவுகள் படு மோசம்.
முதலில் வருவது காத்து. .வருவதுன்னு சொல்லக் கூடாது.வராம,ஒரு இலை அசையாமல்

மரமெல்லாம் மௌனம் சாதிக்கிறது.
முன் காலம் போல வாயில் கதவெல்லாம் திறந்து வைத்து,அழியை மட்டும் போட்டுக்

கொண்டு தலைக்குசரம் வைத்துக் கொண்டு படுக்க முடியுமா. கேட்' டை யாரொ திறப்பது

போலவே தோன்றுகிறது.

கொஞ்ச நெரம் பெஞ்சில் படுத்தாச்சு. அதுவும் வியர்க்கவே தரைக்கு வந்து படுத்தால்

எறும்பார் வரிசையாகப் போகிறார்.
ஓஹோ லஸ் பிள்ளையாருக்குத் தேங்காய் சூறைவிடவில்லை.
சரி, இடத்தை மாத்திக் கொண்டு படுக்கலாம்னால், ஒரு தொலைபேசி. ரிங்.
தரையிலியே நீந்தும் திமிங்கலமாக என்னைக் கற்பனை செய்துகொண்டு, நகர்ந்து போய்ப்

போனை எடுத்தால் பக்கத்து வீட்டு அம்மா,'கரண்டு எப்ப வரும்னு தெரியுமோ' இப்ப மேகலா

முடிஞ்சிருக்குமே என்கிறார்.
அந்த நிமிஷத்தில் நான் தற்பெருமையில் ,சுய மதிப்பீட்டில் உயர்ந்து விட்டேன்.
நான் சீரியலே பார்ப்பதில்லையேம்மா, கரண்ட் 6 மணிக்குத்தான் வருமாம்ன்னு சொல்லி ,

அந்த அம்மாவின் ஆ!!! கேட்டுக்கொண்டே வைத்துவிட்டேன்.
உண்ட மயக்கத்தில் வந்த தூக்கமும் போச்சு.
இவரையாவது கேட்டு, அவர் அக்கா வீட்டுக்குப் போகலாமான்னு கேட்க வந்தால்,
ஒரு மினி பாட்டரி விசிறி காற்றில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அக்காவீட்டில் மின்வெட்டு இல்லை என்று தெரிந்துதான் இந்த யோச்னையே வந்தது.:)
''இருந்த ஒரு வேப்ப மரத்தையும் கார் நிறுத்துவதற்காக வெட்டியாச்சு. இப்போ அது இருந்தா

எவ்வளவு நிழல் இருக்கும். ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு ,ஊர்வம்பு புத்தகத்தை

நாலாவது தடவையாகப் படிக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன். இல்லை வாய்விட்டுச்

சொன்னேன்.
அதுவரை ,இவர் யோக நித்திரையில் தான் இருந்திருக்கிறார்.:)அதுதான் நான் சொன்னது

காதில் விழுந்துவிட்டது.
'கட்டிடம் கட்டினவர், வேப்ப மரத்தின் வேர் பற்றி சொன்னதுனாலதானே எடுத்தோம். அது

கூட மறந்து போச்சா? உனக்கு ஏதாவது கிடைச்சா போதும் என் மண்டையை உருட்டிடுவே

என்றபடி தன் மரநாய் ,(சிற்பம்)செதுக்கப் போனார். அப்போதுதான் அந்த மின் உளி

இயங்காது என்று நினைவு வரவே ,அவரும் மின்வெட்டு பற்றிக் காரசாரமாக நான்கு

வார்த்தைகள் சொல்லிவிட்டு ,மாமரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டார். அவருக்கு

எத்தனையோ இருக்கு தோட்டத்தில் செய்ய. நமக்கு அப்படியா. படி தாண்டி அறியோமே:0)
இவ்வளவு அலுப்பும் மணி மதியம் இரண்டு வரைக்கும் தான்.
கிட்டத் தட்ட 100 வீடுகளுக்கு ஆவின் பாலக் கொடுத்துவிட்டு, பால் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ,நம்வீட்டின் பின் பக்கத்தில் உட்கார்ந்து,கணவனுக்குக் கொண்டு வந்திருந்த சாப்பாடைக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்ட எங்க வீட்டு ராணியைப் (உதவி செய்பவர்) பார்த்ததும் 'சே' ன்னு போய்விட்டது. இதற்கப்புறம் இன்னும் இரண்டு வீட்டு வேலையை அவள் பார்க்கப் போகணும்.
என்னை நினைத்து எனக்கே இனம் தெரியாத கோபம் வந்தது!

எல்லோரும் வாழ வேண்டும்.


Posted by Picasa

29 comments:

geethasmbsvm6 said...

இதைவிட அருமையாக எளிமையாக யாராலும் சொல்ல முடியாது. கடைசி வரிகள் நச்!!!! கண்ணீரே வந்துடுத்து. இங்கே எங்களுக்குத் திடீர் மின்வெட்டுப் பழகிவிட்டது. :))))))))

எல் கே said...

கொடுமைதான். சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் தினமும் மூன்று மணி நேரம் மின்வெட்டு உள்ளது, அதை நினைத்து சந்தோஷ பட்டுக்கனும். பகல் முழுக்கு ஆபீஸ்ல ஜிலுஜிலுன்னு இருக்கறேன் . நைட்ல கரண்ட் கட் ஆனாதான்பிரச்சனை

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
உண்மைக்குத் தான் சக்தி அதிகம்:)
மின்சக்தி குறை நமக்கு என்னவெல்லாம் கஷ்டம் தருகிறது!
இன்னும் வரப்போகிற நாட்களை நினைத்தால் பயமாகத்தான் இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் எல்.கே.
நமக்காவது கடற்கரை காற்று வந்து புழுக்கத்தைப் போக்கிவிடும்.
இன்னும் உள்ளே மற்ற மாவட்டங்களை நினைக்கவே வருத்தமாக இருக்கிறது.வெயிலும் நிறைய . மழையும் இல்லை.
நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் தான்.

pudugaithendral said...

இதைவிட அருமையாக எளிமையாக யாராலும் சொல்ல முடியாது. கடைசி வரிகள் நச்!!!! //

நானும் வழி மொழிகிறேன் வல்லிம்மா. இங்கே 41 டிகிரியாம். தாங்க்க்க்க்க்க்க்க முடியவில்லை. இதில் 2 மணிநேரம் அறிவிக்கப்பட்டு அறிவிக்கப்படாமல் ஒரு மணிநேரம் என மின் வெட்டு.

சாந்தி மாரியப்பன் said...

நல்லா சொல்லியிருக்கீங்க வல்லிம்மா.. அதிலும் கைக்குழந்தைகள் பாடு ரொம்ப கஷ்டம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல், ஹைதையைப் பற்றி நினைக்கவே பயமாக இருக்குப்பா.
கவனமாக இருங்கள்.
.பக்கத்தில் வீடு கட்டுகிறார்கள். சித்தள்கள் சிமெண்ட் எடுத்துப் போவதும் வருவதும், நம்வீட்டில் தண்ணிருக்காக வருவதும் ரொம்ப மனசைக் கஷ்டப் படுத்துகிறது. என்றுதான் இவர்களுக்கெல்லாம் விடுதலை என்று தோணுகிறது.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல். கைக் குழந்தைகள், கர்ப்பிணிகள் இவர்கள் பாடு மிகக் கஷ்டம்.
மின் வெட்டைத் தளர்த்தினால் நன்றாக இருக்கும்.
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள் மா.

துளசி கோபால் said...

தரையில் நீந்தும் திமிங்கிலம்!!!!!!!!!!!

ஹைய்யோ:-)))))))))

நம்ம வீட்டுக்குப் பின்புறம் வீடு கட்ட ஆரம்பிச்சுருக்காங்க. வெய்யிலில் அவுங்க வேலை செய்வதைப் பார்த்தால்.......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்... அரைமணி குழந்தையக் கூப்பிட வெளியே போகும்பொதே தலை சுத்துது.. மத்தவங்க எப்படித்தானோன்னு எனக்கும் பாவமா இருக்கும்.. நல்லா சொன்னீங்க..

ஆமா வேப்பமரம் ஏன் வெட்டினாங்கன்னு நிஜம்மாவே மறந்து போயிட்டா கேட்டீன்க ;)

ராமலக்ஷ்மி said...

ஒரு பகல் உங்களுடன் கழித்தது போல அழகாய் சொல்லியிருக்கீங்க வல்லிம்மா. படங்கள் அருமை. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி, பின்ன என்னப்பா. தரையில படுத்துட்டா திமிங்கலம் தான்.:)
கொஞ்சமா நகருவேன்னு சொல்றதா உடம்பு.!!
இப்ப மதியம் இரண்டு மணி நேரம் வேலையை நிறுத்தறாங்கப்பா. நல்ல வேளை.

Jayashree said...

அட!! காணாம போய்ட்டாங்களேனு தேடிண்டு இருந்த வல்லியம்மா திருப்பி கிடைச்சுட்டாங்கப்பா!!!!:)) beautiful!!happy Vishu Mrs Simhan!!!!

வல்லிசிம்ஹன் said...

இல்லை மறக்கலை. முத்து. சண்டை போடணும்னு நினைச்சா வேப்ப மரத்தை தான் இழுப்பேன்:)
நான் வேற மாதிரி ,செய்யலாம். வேப்பமரம் வெட்ட வேணாம்கற கட்சி.
அவர் இங்க இந்த ஸ்பாட்ல தான் கார் நிறுத்தணும்கற கட்சி. அவ்ளோதான் மேட்டர்:)

நானானி said...

//தரையில் நீந்தும் திமிங்கிலம்!!!!!!!!!!!//

நானும் இதையேதான் நோட் செய்தேன்.

வெயிலின் கொடுமையையும் மின்வெட்டையும், ஒன்று ஆண்டவன் கொடுத்தது, இன்னொன்று ஆள்பவன் தந்தது.இருவரையுமே நான் நோகமுடியாது. காரணம் இயலாமை.

இதமாக இருந்ததுப்பா!!!

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ. அதான் திமிங்கலம்னு எழுதிட்டேனே. மூழ்கி மூழ்கி வெளில வரவேண்டியதுதான்:) நன்றிம்மா. உங்களுக்கும் எங்கள் இனிய நல் புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நானானி. நம்மளை ஜெயிக்கறது இந்த வெய்யில்.
நமக்கு இது ஒரு நாள் மிஞ்சிப் போனால் மாதத்தில் ஒரு நாள்.

தபால்காரர்,கொரியர் பையன், இன்னுமெத்தனையோ பேருக்கு இது ரொம்பப் பாவப்பட்ட காலமாகிவிடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி, பங்களூரில் கூட வெய்யிலாமே.
நீங்க நம்ம வீட்ட்ல ஒரு பகல் என்ன ஒரு நாளே தங்கலாமே:)

குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

எல் கே said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
http://lksthoughts.blogspot.com/2010/04/blog-post_13.html

Ezhilarasi Pazhanivel said...

தரையில் நீந்தும் திமிங்கிலம்!!!
கலக்கிட்டீங்க! உங்கள் வார்த்தைகளிலேயே
வெயில் கொடுமையை உணர முடிகிறது.
கீப் ரைட்டிங்!
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன், எழிலரசி பழனிவேல்

வல்லிசிம்ஹன் said...

நன்றிமா எல்.கே. உங்களுக்கும் இப்போ மீண்டும் நல் வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா எழிலரசி. வாழ்த்துகளுக்கு நன்றி. அப்போ என்னமோ திமிங்கல ஐடியா தோன்றியது. திருப்பி படிக்கறப்போ எனக்கே சிரிப்பாப் போச்சு.உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஹ்ம்ம். உங்க ஊரு கூலா இரூக்கும்.:)

வல்லிசிம்ஹன் said...

மிக்க நன்றி போகி.இன். உங்க வலைத்தளத்துக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மாதேவி said...

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். இறுதியில் கனத்தது.
இந்தவருடம் இங்கு மின்வெட்டு இல்லை.சில வருடங்களுக்கு முன் இருந்தது.
சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

வல்லிஅக்கா,
உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
.
வெயிலின் கொடுமையை நினைத்தால்
கஷ்டமாய் உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு எனக்கு நன்றாக
இருக்கும். பிறகு கஷ்டம் தான்.

இங்கு வசந்தகாலம் என்பாதால் நன்றாக
இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி நலமா. ஊரில் அனைவரும் நலமா. பேரன் என்ன சொல்கிறான். எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, உங்களுக்கும் குடும்பத்துக்கும் என் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்மா. நலமே நடக்கட்டும்.

கோமதி அரசு said...

அன்பு அக்கா,நான் நலம். இங்கு எல்லோரும் நலம். பேரன் நன்றாக ஒட்டிக் கொண்டான். நலமாக இருக்கிறான். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

அன்பு அக்கா,நான் நலம். இங்கு எல்லோரும் நலம். பேரன் நன்றாக ஒட்டிக் கொண்டான். நலமாக இருக்கிறான். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.