About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, March 10, 2010

புது வசந்தம்
!!">

பாப்பா!! ஜோ குளிக்கலாமா?
ஜோ னானா,.
மம்மு சாப்பிடலாமா மம்மு நானா.
என்ன வேணும் பாப்பாக்கு. மானுப் பாப்பா மைத்தொத்து.
என்னது???
மானுப் பாப்பா மைத்தொத்து.
பையனைப் பார்த்தேன். அவளுக்கு உன்னை மாதிரி பொட்டு வச்சுக்கணுமாம்.
மைப்போட்டு .
ஓ. அதுக்கென்ன. வச்சாப் போச்சு.


மம்மம் சாப்பிட்டுட்டு வச்சிப்பியாம்.
ஜோஜுப் புத்தாக்கு மம்மம் வேணும். சரி கொடுக்கலாம். ஜோஜுப் புத்தா பெசட்டு வேனும்.
பிஸ்கட்டாம்மா. சரி.
சிடுசிடு முகம் காட்டுகிறாள் பேத்தி.அந்த அழகில் சொக்கிப் போகிறேன்.
நானாஆஆஆஅ.
பெசட்டு .
என்னடா கேக்கறா?.
அவளுக்குப் பெசரட் வேணுமாம்மா:)
பெசட்டு இல்ல இட்லி வேணுமா பாப்பாக்கு?
ம்ம்ம்ம்.டீலி மாவு என்று எழுந்தாள். கையில் ரெண்டு பூனைப் பொம்மை.

இட்லி ஆச்சு. சுகர் வேணுமா,நெய் வேணுமா. பாப்பாக்கு.
ஜீயா வேணும்.
நான், மகன்..ஜீரக பொடிம்மா.
அதுக்குள்ள பசி முற்றிவிட்டது. ம்ம்ம் என்று சங்கு முழங்குமுன் வேறேன்னடா கொடுக்கலாம் என்றால் தக்காளி வெங்காயம் வதக்கிச் சட்டினி செய்தால் சாப்பிடுவாம்மா.
அவசரத்துக்குத் தக்காளி சாசில் சர்க்கரை போட்டு
தட்டில் வைத்தால்,
யூ டூப்...
என்னது?
கம்மி பேர் .(Gummy bear)
ஓஹோ கம்மி பேர் பாட்டை யு டியூபில் பார்த்து சாப்பிடும் வழக்கமா.
சரி வா கம்ப்யூட்டர் போலாம்.

நாற்காலியில் நான் ,என் மடியில் பாப்பா.

ஸ்பூனில் இட்லியை எடுத்தால்,
''தாத்தி நானா, கீயாம்மா வேணும்.:)


எல்லோரும் வாழ வேண்டும்.

39 comments:

பாச மலர் said...

மழலை இன்பம் அழகு...

KarthigaVasudevan said...

:)))

nice experience vallimmaa...

cute pappa.

திவா said...

பேத்தியோட ரகளையா?
எஞ்சாய்!
:-))

வல்லிசிம்ஹன் said...

மழலை அழகு. பாசமலர்,அது புரிந்தால்.
பாப்பா சொல்வதைப் புரிந்து கொள்ளாவிட்டால் அதுக்கு வரதே கோபம்!!அது இன்னும் அழகு:)ஒரு மணி நேரத்துக்கு அவளுடைய அம்மா வெளியில் போய் வருவத்ற்குள் இந்தக் கலாட்டா:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான்பா கார்த்திகா. அந்த மழலை ஊருக்குக் கிளம்பி விட்டது. அதன் பேச்சை அசை போடுகிறேன். படு சுட்டி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன்.
செல்லக் கன்னுக்குட்டி அது. கொள்ளை சமத்து.

கோவிலுக்குப் போய்விட்டு வெளியே வரும்போது கால் எதிலோ இடறி அப்படியே விழுந்துவிட்டேன்(ஒண்ணும் பிரமாத அடி எல்லாம் இல்லை)
மருமகளிடம், அப்பா, மற்றும் உன் கணவனிடம் சொல்லாதே. வம்பாகி விடும் என்று சொல்லி வைத்திருந்தேன்.

வீட்டுக்குள்ள வந்ததும், தாத்தி!! என்று அழைத்து அமைதியாக ஒரு காலை மடித்து, கீழே மெல்ல அமர்ந்து,தலையைச் சாய்த்துக் கொண்டு,டொம் என்று சத்தம் போட்டுக் காண்பிக்கிறது.

என் மகனுக்கும் இவருக்கும் புரியாதது நல்லதாகிப் போச்சு:)

Anonymous said...

:) ...
எங்க வீட்டுலையும் ஜோ ஜோ, மம் மம் தான் குளியலும் சாப்பாடும் :)
என் பொண்ணுக்கு இவ்வளவு பேச்சு இன்னும் வரலை, ஆனா இங்க கமென்ட்டுல போட்டீங்களே அதே மாதிரி ஆக்ஷம் போட்டு அழகா அப்பாக்கிட்ட காமிக்கும், - இரண்டு நாள் முன்னாடி மத்தியான லன்ச்சுக்கு வந்தபோது சொல்லிட்டுருந்தேன், இன்னைக்கு இவ விழுந்துட்டான்னு உடனே எப்படி விழுந்தான்னு ஆக்ஷன் போட்டு காட்டுது!
பதிமூணு மாசம்தான் ...
உங்க பேத்திக்கு ஒரு இரண்டு வயசு கிட்ட இருக்குமா?
எப்படி கூட்டிக்கிட்டு வந்தாங்க ஃப்லைட்டுல - அப்ப்பாடியோ!!!

பாட்டி பேத்திக்காக எவ்வளவு செய்ய வேண்டி இருக்கு! கவலையே படாம கலக்கமே வராம சந்தோஷம் வேறையா? இதுனாலதான் அம்மாவோட எப்பவுமே பாட்டிதான் செல்லம்! :)

அமைதிச்சாரல் said...

மழலைமொழி வெகு அழகு வல்லிம்மா.
செம லூட்டி அடிச்சிருப்பீங்க போலிருக்கே
:-))

துளசி கோபால் said...

அச்சச்சோ..... அடி பலமா?

போட்டுக் கொடுக்க பேத்தி வந்துட்டாள். கவனமா இருங்கப்பா.

சந்தனமுல்லை said...

சோ க்யூட்! நீங்களும் சமமா நின்னு சமாளிச்சிருக்கீங்களே..பாப்பாவை தூக்கிட்டு வந்துடலாம் போல இருக்கு! :-))


அப்புறம், ஹெட்டர் செம! போஸ்ட்லே போட்டிருக்கிற flame of the forest முன்னாடி ஹெட்டரா இருந்ததா?

பகிர்ந்து எங்களையும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனதுக்கு நன்றி வல்லியம்மா!

கோபிநாத் said...

சூப்பரு...அது படம்தான் பாப்பாவா!??

செல்வநாயகி said...

அழகு...

வல்லிசிம்ஹன் said...

அன்பு மதுரா,பாப்பாக்கு இரண்டரை வயசாகிவிட்டது. அவசர அவசரமாக அவள் தான் நினைப்பதைச் சொல்ல வேண்டும்னு நினைக்கிறாள். அவளுடைய அம்மா அப்பாக்கு மத்திரம் தான் அது புரியும். ஃப்ளைட்ல தச்சி மம்மம் தான் வேணும்னு அடம் பிடிக்க,அவள் அம்மா கொடுத்த ரசம் சாதம் நானா ஆக,வீட்டுக்கு வந்து தயிர்சாதம் சாப்பிட்டாள் ராத்திரி மணி பத்து!!
உங்க பசங்களும் ஆக்ஷன் கிங் அண்ட் க்வீன் ஆக வருவது மகா சந்தோஷம்:)ஒளிவு மறைவில்லாத குழந்தைகளாக வளரும்.நன்றி ,மதுரா.

வல்லிசிம்ஹன் said...

லூட்டிக்குக் குறைவே இல்லை சாரல்.அவளுக்குப் பிடிக்காத எதையும் செய்ய முடியாது.சப்பிட வைக்க முடியாது. உகத்தைப் பார்த்தால் தேவதை மாதிரி. கத்த ஆரம்பித்தால் காது ஜவ்வு பிச்சுக்கும்.
அதிசயம் என்ன என்றால் உடனே மறந்து சிரிக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

ஹா ஹா!!
துளசி வாங்கப்பா.சண்டி தேவி விட்டாளா உங்களை!குழந்தை எப்படியாவது தாத்தாவிடம் சொல்லிவிட முயற்சி செய்தாள். அவர்களுக்குப் புரியவில்லை. பேத்தி ஏதோ பாலே ஆடுவதாக நினைத்துக் கொண்டுவிட்டார்கள்.:)
அடியெல்லாம் ஒண்ணுமில்லப்பா.ச்சும்மா விழுந்து எழுந்தாச்சு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முல்லை, இந்த ஃப்லெம் ஆஃப் ஃபாரஸ்ட் போட்டேனான்னு ஞாபகம் இல்ல.
நல்ல படம் கிடைச்சதும் போட்டுட்டேன்,.மகள் வீட்டுப் பக்கத்தில் 2007ல எடுத்த நினைவு.

சாரிப்பா பதிவில் இருக்கும் பாப்பா, கூகிளுக்குச் சொந்தம்.
அப்புறம்,,
பாப்பாவைச் சமாளிப்பதற்கு வித்தை ஒண்ணும் கட்டவேணாம். பலிக்காது. அவள் போகும் வழியில் நாம் போனால் இரு கட்சிக்கும் நிம்மதி.:)

இவள் அக்கா இன்னும் முன்னேற்றம். கேட்டதுக்குப் பதில் சொல்லு பாட்டி!
அப்படீம்பாள்.:

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கோபிநாத். பாப்பா படம் கூகிளார் கொடுத்தது.
குழந்தைகள் படங்களைப் பதிய எனக்கு பர்மிஷன் கிடையாது!!

வல்லிசிம்ஹன் said...

எவ்வளவு நாளாச்சு செல்வா உங்களைப் பார்த்து.!!ரசித்ததற்கு மிகவும் நன்றி.

ஆயில்யன் said...

//பேத்தியோட ரகளையா?
எஞ்சாய்! //

ரிப்பிட்டேய்ய்ய் :)))

கூகுளார் கொடுத்த பாப்பா படமும், நீங்களும் பாப்பா பேசிக்கிட்ட மழலை மொழிகளும் சூப்பரேய்ய்ய்ய்ய் :))

கோமதி அரசு said...

நம்மை போன்றவர்களுக்கு குழந்தைகளும்,பேரன் பேத்திகளும் வருவது தானே புது வசந்தம்.

குழந்தையின் மழலை திகட்டாத தெள்ளமுதம்.

அடுத்து வரும் வரை படு சுட்டியின் பேச்சை அசை போடுங்கள்.

உங்கள் கணவர் நலமா?

கோமதி அரசு said...

கீழே விழுந்து விட்டீர்களா? அடியில்லையே,குழந்தைக்குத் தான் பாட்டியின் மீது என்ன கரிசனம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி கோமதி, நான் கீழ விழ்ழாமல் இருந்தால் தான் அதிசயம். மனம் ஒரு புறம், பார்வை ஒரு புறம், கால்கள் ஒரு புறம். ஒருங்கிணைக்காத மனம் நடை பிறழ வைக்கிறது:) நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோமதி. மாசில்லாத அன்பு குழந்தைகளிடம்தான் நமக்குக் கிடைக்கும்.
அந்த மனசில நான் விழுந்தது எப்படிப் பதிந்திருக்கிறது பாருங்க. எனக்கு அதைப் பார்க்கும்போது எங்க அம்மாவை மீண்டும் பார்ப்பது போலத் தெரிகிறது.
நான் நன்றாக இருக்கிறேனம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆயில்யன்,
செல்வம் என்பதே மழலைச் செல்வம்தான். நன்றிம்மா.

LK said...

avanga pesara alage thani., en ponuku kaarama chutney venum appathan sapiduva. biscuit(bissi) koduta paathi biscuti kakkau poidum :)

ஹுஸைனம்மா said...

மழலைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கமுடியாம நாம திணற, புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்களேன்னு அவங்க கத்த, அது ஒரு சுகம்தான்!! நல்லா எஞ்சாய் பண்ணீருக்கீங்க, சந்தோஷம்!!

அப்றம், நீங்களும் பேத்திய இமிடேட் பண்ணி கீழே “சும்மா” விழுந்து எந்திச்சீங்களாக்கும்!! :-))

Jayashree said...

"அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுறா
மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னைக் கூவுகிறான்
குழகன் சிரீதரன் கூவக்கூவ நீ போகுதியேல்
புழையயிலவாகாதே நின்செவி புகர் மாமதீ "
பெரியாழ்வார் வந்தாரா மனதில்? சந்தோஷம் தெரியறதே !:)))

வல்லிசிம்ஹன் said...

அடடா ஜயஷ்ரீ.
அழகான பெரியாழ்வார் பாசுரத்தை என் பதிவில் இட்டதுக்கு மிகவும் நன்றி.
அவருடைய பக்தியின் ஆழமும் ,உணர்ச்சிப்பிரவாகமும் வேறு யாருக்கு வாய்க்கும்.

இன்னும் கொஞ்ச நாட்கள் குழந்தை இங்கே இல்லையே என்று நினைத்தேன்.
எதுவுமே கொஞ்சமாக இருந்தால் தான் ருசி என்பதும் புரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா. ஹுசைனம்மா. ஏதாவது ஒரு அக்கேஷன்னு வந்தால் யோசிப்பிலயே மனம் போயிடுமா. அதனால் கால் வைக்கிற இடத்தைப் பார்த்து வைப்பதில்லை.
நிஜமாவே விழுந்தாலும் , ச்சும்மா விழுந்த மாதிரி சொன்னா மற்றவங்களுக்கு மனச் சுமை இருக்காது இல்லையா:)
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

காரம் பிடிக்குமா எல்.கே.
அதிசயமா இருக்கே. ஒரு வேளை உங்களைக் கொண்டுவிட்டாளோ:))
பத்ரம்பா. மிதமாச் சாப்பிடப் பழக்கிவிடுங்க. எதிர்காலத்துக்கு
நல்லதாய்ப் போகும்.

LK said...

//. அவளுடைய அம்மா அப்பாக்கு மத்திரம் தான் அது புரியும். //

சில நேரத்துல அவங்களுக்கும் புரியாது :D

//ஒரு வேளை உங்களைக் கொண்டுவிட்டாளோ:))
பத்ரம்பா. மிதமாச் சாப்பிடப் பழக்கிவிடுங்க. எதிர்காலத்துக்கு
நல்லதாய்ப் போகும்.//
சரிதானம். ஒருவகைல நீங்க சொன்னது சரி. சென்னை வாரத்துக்கு முன்னாடி நெறைய காரம் சாப்பிடுவேன். இப்ப குறைச்சுட்டேன்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் என்னையும் கொண்டிருக்கலாம் எல்.கே.:)
பல சமயம் சொற்களின் கூட்டுக்களூள் நான் மாட்டிக் கொண்டது உண்டு.!காரம் தேவைதான். அதீதம் வேண்டாம். அனுபவப் பாடம்:)

தக்குடுபாண்டி said...

அருமையான பகிர்வு வல்லியம்மா!!....:)

கண்மணி/kanmani said...

கொள்ளை அழகு பாப்பாவும் பேச்சும்...சுத்திப் போடுங்க

ராமலக்ஷ்மி said...

பாப்பாவும் அழகு. பேச்சும் அழகு. பாட்டியின் பாசமான பகிர்வு அழகோ அழகு.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கண்மணி.உண்மையான தெய்வம் குழந்தைகள்தான்.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி நம்ம பாசங்களுக்கு வடிகால் இந்தப் பேரன்களும் பேத்திகளும்தான்:)

மாதேவி said...

மழலை கொஞ்சுகிறது.

நன்றாக பேத்தியுடன் என்ஜோய் பண்ணியுள்ளீர்கள்.

நானானி said...

அதென்ன..எல்லாக் குழந்தைகளின் மழலை டிக்‌ஷனரியிலும் “ஜோஜோ” என்றால் குளிப்பது என்றுதான் அர்த்தமா?

அந்த மழலை மழையில் ஜோஜோ பண்ணுவதுதான் நமக்கும் சுகம்!