About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Thursday, March 04, 2010

சிந்தாகூலம் ,கலக்கம்,நிவர்த்தி.பிறகென்ன. கவலை அதிகமானது. ஒரு மணி நேரம் மாறி மாறி இரண்டு நம்பர்களையும்
அழைத்துக் கொண்டு இருந்தேன்.

திடீரென பெண்ணின் தோழிகள் கிட்டக் கேட்கலாம் என்று
நினைத்தேன். ஒரு நம்பரும் தெரியாதே.
கூகிளைச் சரணடைந்து ,அவர்கள் பெயரையும், இருப்பிடத்தையும் குறிப்பிட்டேன்.

வரிசையாக அந்த ஆறு தெருக்களில் இருக்கும் அத்தனை பேர்களோட
விவரம் வந்தது. நான் அழைக்க நினைத்த தோழியின் நம்பர் அன்லிஸ்டட் என்று வந்தது.
பெண்ணின் அடுத்த காம்பவுண்டில் இருக்கும் ஆண்ட்ரூ நம்பர் கிடைத்தது. இவர்கள் வீட்டுக்கும் அவர்கள் வீட்டுக்கும் ஒரே ஒரு வேலிதான் நடுவில் இருக்கும்.

சென்ற தடவை அங்கே தங்கி இருக்கும் போது கொஞ்சம் பழக்கம் உண்டு.
அமெரிக்கன். பெண்டாட்டி ஹெதர்,பெண்கள் கரோலின்,இலியானா.

சந்தேகம் என்ன வென்றால்,அவர்களுக்கு என்னை நினைவு இருக்குமா என்பதே.

துணிந்து ஆண்ட்ரூவுக்குப் போன் செய்ஹ்தேன்.

''ஹை நான் ஸோ அண்ட் ஸோ.

''ஓ'
உங்க பக்கத்துவீட்டுக்காரப் பெண்ணின் அம்மா.
ஓ'
யூ ஆர் கால்லிங் ஃப்ரம் இந்தியா!!!
யெஸ், நான் என் பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்.
பதிலே இல்லை.
உங்களிடம் ஒரு உதவி கேட்க முடியுமா.
சில செகண்ட் மௌனம்.
ஒகே டெல் மி.

நீங்க அவர்களைப் பார்த்து சொல்ல முடியுமா.
அவர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
மேலும் உளறாமல் நான் போனை வைத்துவிட்டேன்.

அந்த ஆண்ட்ரூ, எங்கள் பெண் வீட்டை அணுகவும் ,
வெளியில் சென்றவர்கள் திரும்பவும் சரியாக இருந்தது.
,'' யுவர் மாம் கால்டு.
ப்ளீஸ் கால் ஹர். ''

என் பெண்ணிற்கு முதலில் அதிர்ச்சி. எப்பவுமே ஒரு புன்னகையோடு
.

அந்த ஆண்ட்ரூ பெண் வீட்டை அணுகவும் ,
வெளியில் சென்றவர்கள் திரும்பவும் சரியாக இருந்தது.
அந்த ஆண்ட்ரூ , யுவர் மாம் கால்டு.
ப்ளீஸ் கால் ஹர். ''

என் பெண்ணிற்கு முதலில் அதிர்ச்சி. எப்பவுமே ஒரு புன்னகையோடு
நிற்கும்,
ஹை ,பை சொல்லும் பக்கத்துவீட்டுக்காரர்
திடீரென்று வந்து சேர்ந்தாற்போல் பத்துவரிகள் பேசுவது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டு,.
''ஷ்யூர் ஆண்ட்ரூ, ஐ வ்வில் கால் ஹர் இம்மீடியட்லி'' என்று அவருக்கு நன்றி சொல்லி அனுப்பி விட்டு என்னைக் கூப்பிட்டு விட்டாள்.'

என்னம்மா ஆச்சு.?
''ஒண்ணும் இல்ல''. பின் ஏன் பக்கத்து வீட்டுக் காரனைக் கூப்பிட்ட? அமமா. உனக்கு அவன் நம்பர் எப்படித் தெரிந்தது.
ஏன்மா இப்படி கவலைப் படற ?
நான் எங்க போயிடப் போறேன்.
உனக்குத்தானம்மா பிரஷர் ஏறும்.??
''இல்ல மொபைல் கூட எடுக்கலியே''
இது நான்.
மறந்து போய் வச்சிட்டுப் போயிட்டேன்மா. அவசரமாகப் பால் தயிர் வேண்டி இருந்தது .
அதுதான் போனேன். என்னம்மா நீ!!! என்று அவள் அங்கலாய்க்கவும்
எனக்கு ஒரு நிமிடம் என்னடா செய்தோம் இப்படி என்று வெகு யோசனையாகப் போய்விட்டது.

எல்லாத் தொல்லைக்கும் காரணம்
மனதைக் கலங்க விடுவது,
ஏதாவது ஆகி இருக்குமோ என்கிற வேண்டாத சிந்தனை.

ஒரு நிமிடம் சாந்தமாக உட்கார்ந்து யோசித்து இருக்கலாம்.
கடவுளைப் பிரார்த்தித்து இருக்கலாம்.
பைத்தியம் பிடித்துப் பாயைப் பிராண்டாத குறையாக இவ்வளவு டென்ஷன் அவசியமா.

மாற்றிக்கொள்ளவேண்டும், மாற வேண்டும். சேதி ஒண்ணும் இல்லையா ,அதுவே நல்ல செய்திதான் என்று தோழி சொன்னார்கள். அதைப் போல வாழ்க்கையை எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்!

எல்லோரும் வாழ வேண்டும்.

35 comments:

ஆயில்யன் said...

//எல்லாத் தொல்லைக்கும் காரணம்
மனதைக் கலங்க விடுவது,
ஏதாவது ஆகி இருக்குமோ என்கிற வேண்டாத சிந்தனை.//

அவ்வப்போது வீட்டு நினைப்பு வருகையில் ஏற்படும் மனத்தடுமாற்றம் :((

சில நொடிப்பொழுதுகளில் ஏகப்பட்ட கேள்விகள் மனதினை துளைத்துவிடுகின்றன !

//சேதி ஒண்ணும் இல்லையா ,அதுவே நல்ல செய்திதான் என்று தோழி சொன்னார்கள்.// - முயற்சிக்கவேண்டும் !

வடுவூர் குமார் said...

இப்படி பலரை பார்த்துள்ளேன்.இது உங்களை மீறிய செயல். உங்கள் மூளை/மனது சொன்னாலும் ஏதோ ஒன்று பிடித்து ஆட்டிப்பார்க்கும்.
அவஸ்தை தான்.

அமைதிச்சாரல் said...

//எல்லாத் தொல்லைக்கும் காரணம்
மனதைக் கலங்க விடுவது,//

ரொம்ப கரெக்ட் வல்லிம்மா..எங்க வீட்டுல ரங்க்ஸ் ஆபீஸ் போய் சேர்ந்தபிறகும், கிளம்பும்முன்னும் போன் செய்யச்சொல்லி உத்தரவே போட்டிருக்கேன். நாடே கெட்டுக்கிடக்கு,மும்பை அதை விட மோசமா இருக்கு. மனசை கட்டுப்படுத்துவது எப்படின்னுதான் கைவர மாட்டேங்குது.

LK said...

//எங்க வீட்டுல ரங்க்ஸ் ஆபீஸ் போய் சேர்ந்தபிறகும், கிளம்பும்முன்னும் போன் செய்யச்சொல்லி உத்தரவே போட்டிருக்கேன். //
ella vetlayum appadithana chee

LK said...

கலைமகளில் வந்ததற்கு வாழ்த்துக்கள் . அது என்னமோ சரிதான் , நமது பாசத்துக்கு உரியவர்கள் நாம போன் பண்றப எடுகாட்டி நமக்கு கோபம் + பதட்டம் + கவலைதான் .

உங்கள் + சிங்கத்தின் உடல்நிலையை கவனித்து கொள்ளவும்

கீதா சாம்பசிவம் said...

தனிமை கொஞ்சம் கலக்கத்தைத் தான் தரும். இல்லைனு சொல்லமுடியாது. தைரியமும், நம்பிக்கையும், மன நிம்மதியும் பெறப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகள்.

கீதா சாம்பசிவம் said...

//மாற்றிக்கொள்ளவேண்டும், மாற வேண்டும். சேதி ஒண்ணும் இல்லையா ,அதுவே நல்ல செய்திதான் என்று தோழி சொன்னார்கள். அதைப் போல வாழ்க்கையை எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்!//

நல்லவேளை, இப்படியெல்லாம் தோணினதில்லை! :)))))))) வாய்ஸ் மெசேஜில் செய்தி கொடுத்துட்டு வச்சுடுவேன். அவங்களே கூப்பிடட்டும்னு. எப்படி இருந்தாலும் யாரானும் கூப்பிடுவாங்களே. என்ன? குழந்தைக்கு உடம்பு சரியில்லையோனு கொஞ்சம் கவலை வரும். அதுக்குத் திடீர்னு எமர்ஜென்சிக்குப் போற அளவு உடம்பு வரும். அப்படி இருக்குமோனு நினைச்சுண்டு காத்திருப்பேன். இந்த விஷயத்தில் நம்ம மறுபாதி ஸ்திதப்ரக்ஞர். கூப்பிட்டால் தான் கவலையே, கூப்பிடலையா, கவலையே படாதேனுடுவார். :)))))))))))))))

துளசி கோபால் said...

ரொம்பச் சரி.

NO NEWS IS GOOD NEWS!

அஞ்ஞானம் போனால் 'தானே' ஞானம் வரும்!

மதுரையம்பதி said...

நான் ஆன் - சைட் போகும் சமயங்கள் இந்தமாதிரி சில நேரங்கள் என் தாயும் அனுபவித்திருக்கிறார். தனியாக இருக்கையில் சிந்தனை குதிரை நம்மை அதிக தூரம் இட்டுச் செல்வதே காரணம் என்று தோன்றுகிறது....இன்னும் 20 வருஷங்கள் கழித்து நானும் இப்படித்தான் இருப்பேனோ என்னமோ ? :))

கோமதி அரசு said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி வல்லி அக்கா,நம்மை நிறைய மாற்றிக் கொள்ள வேண்டும்.

என் பெண் எனக்கு தரும் அட்வைஸ்:

இப்படி ஆகி இருக்குமோ ,அப்படி ஆகி இருக்குமோ என்பதை முதலில் விடு.
என்பது தான்.நாம் பித்து,அவர்கள் திடம்.

அவர்கள் நலமாக வாழ பிராத்தனை, நம் மனதை திடப்படுத்த பயிற்சி என்று நாம் பழகி கொள்ள வேண்டும்.

வாழ்க வளமுடன்

புதுகைத் தென்றல் said...

நீங்க சொல்லியிருப்பது சரிதான். மனதைக் கட்டுப்படுத்த கற்றால் போதும்.
நானும் மகளை கடைக்கு அனுப்பிவிட்டு தவிச்சுகிட்டு இருப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆயில்யன். இந்தப் பிரச்சினை எல்லாருக்கும் பொதுவாகத் தான் இருக்கிறது. கவலையைத் தான் அடக்கி வைக்க முடிவதில்லை. பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை. ரெண்டு பசங்களை மேய்ச்சுக் கட்டி,வீட்டைப் பராமரிச்சு,இவ்வளவு வேலைகள் இங்க இல்லை.இன்னும் கொஞ்ச ஆண்டுகள் போனால் அவர்கள் வாழ்க்கையும் ஸ்திரப்பட்டுவிடும்.
பொதுவாகவே எனக்குத்தான் பொறுமை போதாதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. புரிந்து கொண்டீர்கள். மிக மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா அமைதிச்சாரல்.
ஆஹா நீங்களுமா. உங்க கவலை மிகவும் நியாயமானதாச்சே.
93 கலவரத்துக்கப்புறம் எங்கள் பெரிய பையன் மும்பைக்கு வேலை ஏற்றுக்கொண்டு போனார்.
அப்போதெல்லாம் தொலைபேசி கணக்கெல்லாம் ரொம்பச் சிக்கனமா இருப்பேன். இணையமும் கிடையாது.அவனிடமிருந்து தினம் இரவு 8 மணிக்குப் போன் வந்தாக வேண்டும் என்று சொல்லிவைத்திருந்தேன். அதுவும் நல்ல பிள்ளையாக அலுவல்களுக்கு நடுவில் செய்துவிடும்.
இப்ப அவங்க அவங்களுக்குக் குடும்பம் வந்துவிட்டதால் ஒரு மாதிரி நான் தலையிடுவதில்லை.

சிலசமயம் இப்படிச் செய்துவிடுகிறேன்.:)நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

ஆட்டிப் படைப்பது என்பதுதான் சரியான வார்த்தை.
தொலைபேசியில் பேசினாலும் ஒன்றும் பெரிய அரட்டை கிடையாது. நீ சௌக்கியமா. நான் சௌக்கியம். குழந்தைகள் குரல் கேட்கணும் அவ்வளவுதான்.
அதுவும் இப்போது செலவில்லாத வகையில் இணையத் தொடர்புகள் வந்துவிட்டன.
நானும் கைபேசி எடுத்துப் போகாமல் இருந்து ,
பெண்ணும் ஆவளுடைய தோழிவீட்டுக்க்ப் போன் செய்த நிகழ்ச்சிகளும் உண்டு:)
தோழியின் அம்மா என் தோழியானதாலும் ,அவருக்கு என் நடபிக்கைகளும் டொயீனாகத் த்ரியும் என்பதாலும், சமாதானக் கொடி பறந்தது.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி எல்.கே. பகவான்தான்
பார்த்துக் கொள்ளுகிறார் சிங்கத்தை.:)

உண்மைதான் எல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படி கதைதான்.:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா.
என் பெண்ணுக்குத்தான் அடிக்கடி இந்த சளித் தொந்தரவும், சைனசும் சேர்ந்து அவளை ஒரு வழி பண்ணிடும்.
என்ன கவலைப் பட்டு என்ன. நாம என்ன உடனே னஸ் பிடிச்சுப் போகிறதூரத்திலியா இருக்கிறார்கள்:)

வல்லிசிம்ஹன் said...

நானும்தான் பார்க்கிறேன். அஞ்ஞானம் இன்னும் ஜாஸ்திதான் ஆகிறது:)
துளசி!!

வல்லிசிம்ஹன் said...

பெஸ்ட் என்ன தெரியுமா மௌலி? ஆன்சைட் அனுப்பாதீங்கோ:)
ஏன்னெனில் நாம் மாறப் போவதில்லை. கவலை என்பது பெரியோர்கள் நமக்குக் கொடுத்த சொத்துக்களில் ஒன்று.
எங்க அப்பாவுக்கு,தினம் என்னை விசாரிக்காவிட்டாஅல் பொழுதே விடியாது.
அதோட இன்னோரு வார்த்தையும் சொல்வார். உங்க அம்மாதான் உன்னிடம் பேசணும்னு சொன்னாள்'' என்று:)))

வல்லிசிம்ஹன் said...

வாங்க தங்கச்சி கோமதி.

அவங்க வாழ்க்கைத் தனியா அமைஞ்சாலும் மூலபந்தம் நம்மிடம் தானே ஆரம்பிக்கிறது.
அது நம்மை எப்போதும் ஆட்டி வைக்கிறது. அவர்கள் பெரியவட்களாகி, குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது அந்தப் பாசம் வெளிவரும்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா தென்றல்.
இத்தனைக்கும் உங்க குட்டிப் பொண்ணு ரொம்ப சமத்து ஆனால் சாது.
நல்லா இருக்கணும்.நல்ல இருப்பாங்க.

சுல்தான் said...

அன்பின் ஆழம். நாட்டு நடப்புகளை காண்பதால் நெஞ்சில் நிரடும் வலி. எல்லோருக்கும் உள்ளதுதான் அம்மா. அடுத்த முறை அருகில் போய் வர நாடினாலும் கைப்பேசி எடுத்துப் பேவார். நல்லதுதானே. அவர்களுக்கும் பாதுகாப்பு.

மதுரையம்பதி said...

//பெஸ்ட் என்ன தெரியுமா மௌலி? ஆன்சைட் அனுப்பாதீங்கோ:)//

இப்போதிருந்தே மாப்பிளை பார்க்கச் சொல்றீங்களா வல்லியம்மா :)). பேசாம மாப்பிள்ளையையும் கண்டுபிடித்து நமக்கு ஏற்றவாறு வளர்த்துடலாமோ? :))

//ஏன்னெனில் நாம் மாறப் போவதில்லை. கவலை என்பது பெரியோர்கள் நமக்குக் கொடுத்த சொத்துக்களில் ஒன்று.//

ஹிஹிஹி...நான் அப்படி நினைக்கவில்லை...நமது வாழ்க்கை முறை அந்தந்த நேரத்தில் அவ்வாறு நினைக்க/செயல்பட பழக்கியிருக்கிறது.

எங்க அப்பாவுக்கு,தினம் என்னை விசாரிக்காவிட்டாஅல் பொழுதே விடியாது.
அதோட இன்னோரு வார்த்தையும் சொல்வார். உங்க அம்மாதான் உன்னிடம் பேசணும்னு சொன்னாள்'' என்று:))//

இப்போதே இங்கு அப்படித்தான், நடக்கிறது :)..நான் கூப்பிடா விட்டாலும் குழந்தையே போனில் கூப்பிட்டு எப்போ வருவேனென்று விசாரிக்க ஆரம்பித்துவிடுகிறாள். :))

Jayashree said...

CBT என்பது நம்ப என்ன செய்கிறோம் என்பதை awareness க்கு கொண்டு வரச்செய்து நம்முடைய REPETITIVE ACTION ஐ படிப்படியா திருத்துவது.ANXIETY எப்படி நம்மை AFFECT பண்ணறதுன்னு ஒரு நிமிஷம் பார்த்து புரிந்துகொண்டு (HOW IT RAISES OUR PULSE, BREATHING, BP, IMPAIRS THINKING ABILITY,LEADS TO NEGATIVE THINKING AND MORE PANIC என்பதை) , என்ன நடக்கிறதுன்னு AWARENESS க்கு கொண்டுவந்துட்டா தானே அடங்கிவிடும்.வயது செல்ல செல்ல குழந்தைகள் வெளியே இருக்க நாம் வேறிடத்தில் இருக்கும் போது இந்த மாதிரி insecurities வருவது சகஜம் தான்.ஆனா ஆசுவாசபட பழக்கப்படுதினால் நாமே நம்மை வீணா அடித்துக்கொள்ள மாட்டோம்.

கீதா சாம்பசிவம் said...

//இப்போதிருந்தே மாப்பிளை பார்க்கச் சொல்றீங்களா வல்லியம்மா :)). பேசாம மாப்பிள்ளையையும் கண்டுபிடித்து நமக்கு ஏற்றவாறு வளர்த்துடலாமோ? :))//

ஹிஹிஹி, நல்ல ஐடியாதான், முன்னாடியே தெரியாமல் போச்சே! :P:P:P

வல்லிசிம்ஹன் said...

இப்பவே நடக்கிறதா மௌலி:)
இது ரிவர்ஸா இருக்கே!! சுல்தான் சரியாச் சொல்கிறார் பாருங்கோ. உலகம் அப்படி இருக்கு.
உங்கப் பொண்ணுகிட்ட சொல்லிவைக்கிறேன் அப்பாவை ரெண்டு தடவை கூப்பிடுடான்னு!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுல்தான் வாங்கப்பா. நல்லா இருக்கீங்களா.
அங்க நடக்கும் பல நிகழ்ச்சிகளை பெண் சொல்லாமலே விட்டு விடுவாள்.

எல்லாம் இறைவன் சித்தம் என்பதுதான் நமக்குப் போதிக்கப் பட்ட கருத்து. சில சமயம் பயம் எல்லா அறிவு பூர்வமான சிந்தனைகளையும் தள்ளி விட்டுவிடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஆமாம் கீதா அதேதான்.
மலையாளத்தில ஒரு பகுதிக் காரார்கள் வீட்டோட மாப்பிள்ளையை வைத்துக் கொள்வார்கள். பெற்ற பிள்ளை மாமியார்மானார் வீட்ல இருப்பாராம்.
மாமனார் மருமகன் சண்டையே வராதாம்.
அதிசயமா இருந்தது!!

வல்லிசிம்ஹன் said...

நிறையப் பயிற்சி மேற்கொண்டு மனசைத் தியான வழி திருப்பணும் ஜயஷ்ரீ.

பயங்களுக்கு ரூட் காஸ் எத்தனையோ என்னிடம் இருக்கிறது. மனம் பலவீனப் பட்டுப் போனதே அதற்கு உண்மையான காரணம்.
இப்போது நான் எவ்வளவோ தேறிவிட்டேன். அக்கறையோடு
அருமையான கருத்துகளைச் சொல்கிறீர்கள்.
ரொம்பவும் நன்றி.

தக்குடுபாண்டி said...

இந்த குட்டிக்குழந்தையோட பதிவுக்கும் நீங்க அடிக்கடி வரலாம்....:)

தக்குடுபாண்டி said...

//சேதி ஒண்ணும் இல்லையா ,அதுவே நல்ல செய்திதான்//

எங்கம்மாட்ட நான் அடிக்கடி சொல்லும் வாக்கியம்..:)

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் வரேன் கணேசரே. வீட்ல விசேஷம். இன்னும் ஒருவாரம் பாட்டி பிசி. குழந்தைகள் கிளம்பியதும் பதிவு விஜயங்கள் தொடரும்.சரியாம்மா.

Anonymous said...

:))) ...
ரொம்ப தூரம் போயிட்டு கதவு மூடுணமா, கேஸ் அணைச்சமான்னு பயம் கூட வரும் எனக்கு... இப்பதான் பிள்ளை பிறந்து ஒரு வருஷம் ஆகுது, என்னன்ன ஆன்க்ஸைட்டி அட்டாக் வந்து என்ன ஆட்டம் போடப் போகுது என் மண்டைக்குள்ள!!!
எப்பவும் பரிட்சை ராத்திரி, எக்ஸாமுக்கு லேட்டா முடிஞ்சப்புறம் போனதாகவும், தப்பான ஸப்ஜக்ட் படிச்சதாகவும் கரெக்டா கனவு வந்து கலங்கடிக்கும்!!! :)

LK said...

@mathura

same pinch here also

நானானி said...

கலங்காதிரு மனமே - உன்
கவலைகள் யாவும் தீரும் ஒரு தினமே!!

கண்மணி/kanmani said...

//எல்லாத் தொல்லைக்கும் காரணம்
மனதைக் கலங்க விடுவது,
ஏதாவது ஆகி இருக்குமோ என்கிற வேண்டாத சிந்தனை.//

எல்லாவற்றுக்கும் அப்படித்தான் ஆகிவிடுகிறது மனது...மீளனும்.ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் தேவை